Thottal Thodarum

Nov 7, 2013

கலிகாலம்.

நீ எதை விதைக்கிறாயோ அதுதான் முளைக்கும் என்று சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டது என்பதுதான் விதி என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் இது கலிகாலம் நல்லதுக்கு காலமில்லை போல.. 


சிவகுமார் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் இரவு அண்ணாசாலை புகாரி ஓட்டலுக்கு முன் வண்டியிலிருந்து கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு சுயநினைவு இழந்து காணப்பட்டிருக்கிறார். பொது மக்கள் இவரை கண்டெடுத்து அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ரெண்டு நாட்கள் சுயநினைவின்றி மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் யாருமற்ற அநாதையாய் இறந்து போனார்.  சரி இதிலென்ன கலிகாலப் புலம்பல் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சிவகுமார் எனும் இவரை பற்றிய பின்புலம் தான் இப்படி புலம்ப வைத்திருக்கிறது. சவக்கிடங்குகளில் கேட்பாரற்று கிடக்கும் உடல்களை கோர்ட்டில் அவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்து வழியனுப்பி வைக்கும் உன்னத கடமையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தவர் இவர். விபத்துகளில் ஆள் அடையாளம் தெரியாமல் மரணத்தருவாயில் இருப்பவர்களின் பின் புலத்தை தேடி பிடித்து அவர்களின் குடும்பங்களுக்கு தெரிவித்து இறந்தவரின் கடைசிக் கால காரியங்களை அவர்கள் குடும்பத்துடன் செய்தவர். இந்த சேவைக்காக அரசு மருத்துவமனை டாக்டர்களால் பாராட்டுப் பெற்றவர். யாருமற்ற அநாதையாய் தெருவில் வீழ்ந்து, கேட்பாரற்று மரணித்து, அவர் உடலை யாரும் கோராமல் அநாதை பிணமாய் அடக்கமானார். கலிகாலம் என்று புலம்புவதை தவிர வேறென்ன செய்வது. ஒரு வேளை அவர் விதைத்தது தவறாய் முளைத்துவிட்டதோ..?
கேபிள் சங்கர்

Post a Comment

12 comments:

bandhu said...

அவருக்கு இது போல நேரலாம் என்பதை உள்ளுணர்வால் அறிந்தே அந்த சேவை செய்தது போல இருக்கிறது. முடிவு நல்லதாக இருந்திருந்தால் இது ஒரு ஐரனி. ஆனால் இப்போது நடந்திருப்பது கொடுமை! என்ன சொல்வது!

rajan said...

bandhu comment is true.

பாவா ஷரீப் said...

கேபிள் அண்ணா

என்ன விதி இது
அடுத்தவன் சாப்பாட்டில் மண்ணை அள்ளி போடுறவன்,
எல்லாம் நல்ல இருக்கான்

நல்லது செஞ்ச மனுசனுக்கு ரொம்ப ஆண்டவன் சோதனையை
கொடுத்திட்டான்

Unknown said...

இங்கே மதுரையில் நேற்று நடந்த கூத்து ...ஆண் பாடிக்கு பதிலாய் பெண் பாடியை அரசாங்க பிணவறையில் இருந்து கொடுத்த கொடுமை நடந்து உள்ளது !
ஆனால் நல்ல சேவை செய்துவந்த சிவகுமார் அனாதைப் பிணம் ஆனது வேதனைக்குரியது !

Ganesh kumar said...

இது மாதிரியெல்லாம் நடக்கும் போதுதான் என்னடா வாழ்க்கைன்னு நினைக்க தோணும்...

k.rahman said...

times of india has a different story. it seems his relatives in kerala were informed about his death and they have come to collect the body.

anyway RIP for a good soul.

Unknown said...

அவரது உன்னத சேவை பாராட்டுக்குரியது .

சிவகுமாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Unknown said...

Correct. Today TOI even published a picture of his wife and children receiving the body. Its another great gesture of Shri Shivakumar that he had willed (not legally) to donate his body for medical college. Accordingly done. Nothing to grouse. Shivakumar's services has been recognized.

Budget4U said...

Cable Sankar Sir - Any comments on Swaminathan Elangovan's Comment Pls?

sethu said...

கடமையை செய்
பலனை எதிர்பார்க்காதே

saravanan selvam said...

இதை படிக்கும்போது மனச என்னவோ பண்ணுது...

மாதேவி said...

தொண்டுசெய்த அவரின் இறுதி நிலை வேதனைதான்.