Posts

Showing posts with the label தேர்தல்.

கொத்து பரோட்டா - 07/04/14

தேர்தல் நெருங்க.. நெருங்க.. எல்லா இடங்களிலும், அவரவர் ஆதரவு கட்சிகள்தான் பெரும்பான்மையான இடங்களை வெல்லும் என்ற பேச்சுக்கள் சண்டைகளாய் மாறிக் கொண்டிருக்கிறது. யார் எவ்வளவு ஜெயிச்சா என்ன நாம இப்படியேத்தான் இருக்கப் போறோம்னு புலம்பிட்டிருக்கிறவங்க ஒரு பக்கம் இருந்தாலும், இவர்களுடய பேச்சும் சண்டையும் தான் மக்களின் மனநிலையை வெளிக் காட்டிக் கொண்டிருக்கிறது. எனக்கென்னவோ இவர்களின் பேச்சின் வழியாய் புரிவது தமிழ் நாட்டை பொறுத்த வரை முதலிடம் அதிமுகவும், இரண்டாவதாக ப.ஜ.க கூட்டணியும், மூன்றாவதாய் தான் திமுக வருமென்று தெரிகிறது. நாற்பதும் நமதே என்பதெல்லாம் எந்த கட்சிக்கும் உய்யலாலாதான். இங்கே யாரும் ஒழுங்கில்லை என்பதையும், பப்ளிக் மெமரி இஸ் ஷார்ட் என்ற ப்ளஸ் பாயிண்டை எல்லா அரசியல் வாதிகளும் தெளிவாய் உபயோகிக்கிறார்கள்.  இல்லாவிட்டால் எந்த தேசிய கட்சியுடனோ, அல்லது திராவிட கட்சிகளுடனோ கூட்டணி வைக்க மாட்டேன்னும், என் வீட்டுலேர்ந்து யாராச்சும் அரசியலுக்கு வந்தா என்னை சாட்டையால அடிங்கன்னு சொன்ன ராமதாஸ். மின் வெட்டேயில்லை என்று மாறி மாறி கூறினாலும், தொடர்ந்து தமிழகத்தில்  பல இடங்களில் மின் வெட்ட...

இதை பார்த்துட்டு ஓட்டு போடப் போங்க…

Image
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்