Posts

Showing posts with the label சென்னை

சாப்பாட்டுக்கடை - ஹோட்டல் அம்சவள்ளி பவன்

Image
மதுரை சிந்தாமணி அருகில் 1952 முதல் இந்த சீரக சம்பா பிரியாணிக்கடை செயல்பட்டுக் கொண்டிருக்கிறதாம். சென்னையில் அவர்களது ப்ராஞ்சை திறந்திருக்கிறார்கள். நண்பர் பத்திரிக்கையாளர் கெளதம் சொன்னார். முதல் முறை போகும் போது இரவாகிவிட்டதால் அவர்களது ஸ்பெஷல் பிரியாணியை சூடாக சாப்பிட முடியவில்லை. பரோட்டா, அதற்கான சிக்கன், மட்டன் சால்னாவுடன், நல்ல கிரிஸ்ப் கோலா உருண்டையோடு கிளம்பிவிட்டேன். இன்று மதியம் அண்ணாநகர் வரை வேலை. நல்ல பசி என்றார் நண்பர். சரி நல்ல சீரக சம்பா பிரியாணி சாப்பிடுவோமா? என்று வண்டியை கட்டினோ இந்த அம்சவள்ளியை பார்க்க. அப்போதுதான்  தம் உடைத்திருப்பதாகவும் சற்றே காத்திருங்கள் என்றார்கள். தலை வாழை இலை போடப்பட்டு, கால் லிட்டர் வாட்டர் பாட்டிலை வைத்தார்கள். சிக்கன், மட்டன் கிரேவி, வெங்காயப் பச்சடி என வரிசைக்கட்டிவிட்டு, சுடச்சுட பிரியாணி பரிமாறினார்கள். பிரியாணியின் கலரே ஆர்வத்தை தூண்டியது. நல்ல சீரக சம்பா அரிசியின் மணமும், மசாலாவின் மணமும் நாசியிலிருந்து மனசுக்குள் போனது. முதல் பிடி எடுத்து வாயில் வைத்தேன். வாவ். நல்ல மணம், குணம், காரத்துடன், சரியான விகிதத்தில் கலக்கப்ப...

சாப்பாட்டுக்கடை - குமார் மெஸ் - சென்னை

Image
வடபழனி லஷ்மண் ஸ்ருதி சிக்னலை க்ராஸ் செய்யும் போதெல்லாம் சென்னையில் வாழும் 80 சதவிகித மதுரைக்காரர்களும், சாப்பாட்டுப் பிரியர்களும், எப்படா கடை திறப்பீங்க?ன்னு எதிர்பார்த்த மதுரை புகழ் குமார் மெஸ் ஒரு வழியாய் ஆரம்பித்தே விட்டார்கள். ஆரம்பித்த நாளிலிருந்து கூட்டமான கூட்டம். க்யூ கட்டி நிற்கிறது என்றும். டோக்கன் போட்டெல்லாம் சினிமா பிரபலங்கள் காத்திருக்கிறார்கள் என்று பேச்சாய் இருந்தது.

பகல் கொள்ளையும் அதற்கு துணை போகும் அரசாங்கமும்.

இந்தியாவிலேயே விலைவாசியை காட்டி, பெட்ரோல் விலை ஏற்றத்தை காட்டி கொள்ளையடிக்கும் கும்பல் எதுவென்றால் அது சென்னையின் ஆட்டோக்கள் தான். ஆம் பகல் கொள்ளைதான். இந்தக் கொள்ளையை தடுக்க, முந்தைய அரசும் சரி, இந்த அரசும் சரி எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

சாப்பாட்டுக்கடை – சென்னை ஜூனியர் குப்பண்ணா மெஸ்

Image
ஒவ்வொரு ஊருக்கு எப்படி ஒரு பெருமை உண்டோ அது போல ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உணவகம் பிரபலமாகவும், பெருமை சேர்ப்பதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட உணவகங்களில் ஈரோட்டுக்கென்றே ஒரு தனிப் பெருமை சேர்த்ததில்  ஜூனியர் குப்பண்ணா மெஸுக்கும் ஒரு பங்கு உண்டு.

சிங்கார சென்னை

Image

சென்னை மால்கள்

Image
ஒரு பக்கத்தில் சிங்களில் ஸ்கிரீன் தியேட்டர்கள் எல்லாம் பெரிய படங்களின் ஓப்பனிங் வரை தாக்கு பிடித்துவிட்டு காற்றாடிக் கொண்டிருக்க, மால்களில் அமைக்கப்பட்டிருக்கும் உயர்தர சொகுசு மல்ட்டிப்ளெக்ஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டேயிருக்கிறது. சென்னையில் மட்டுமில்லாமல் தமிழகம் எங்கும் நிறைய காம்ப்ளெக்ஸ் தியேட்ட்ர்கள் மல்ட்டி ப்ளெக்ஸாக மாற்றப்பட்டு வருகிறது. சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் எல்லாம் இரண்டு தியேட்டர் மாறி வருகிறது. இப்படி மாற்றம் ஏற்படுத்தாத தியேட்டர்கள்  சீக்கிரமே பிட்டு பட தியேட்டராகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிற நிலையில். சென்னையின் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டரான ஐடிரீம்ஸ் கிட்டத்தட்ட சத்யமின் பாதி அளவு வசதியுள்ள அரங்காக இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை. நிலைமை இப்படியிருக்க ,சென்னையில் விரைவில் வரப்போகும் திறக்கப்பட்டிருக்கும், படப்போகும் மல்ட்டிப்ளெக்ஸுகளும், மால்களும் 1.எக்ஸ்ப்ரஸ் அவுன்யூ சவுத் இந்தியாவிலேயே மிகப்பெரிய மால் இது. எக்ஸ்பிரஸ் அவின்யூ. சமீபத்தில் தான் திறந்திருக்கிறார்கள். பெரிய புகழ்பெற்ற பிராண்டட் கடைகள் இங்கே நிரம்பியிருக்கிறது. உ...

சாப்பாட்டுக்கடை

Image
அசைவ உணவு வகைகளுக்கு நிறைய உணவகங்கள் இருக்கிறது. ஆனால் சைவ உணவகங்களுக்கு நிஜமாகவே டிமாண்ட் தான். அதிலும் வெறும், தோசை, இட்லி என்று தேடினால் நிறைய கிடைக்கும். ஆனால் பொதுவாக நல்ல மெனு, நல்ல சாப்பாடு, சைட் டிஷ், நியாயமான விலை என்று தேடினால் கிடைப்பது அரிது. அதுவும் சைவ உணவகங்களில். அந்த வகையில் எல்லா வகையிலும் சிறநத உணவகம் சென்னை, சாலிக்கிராம,  அருணாச்சலம் ரோடில் மோகன் ஸ்டூடியோ எதிரிலுல்ள, கருணாஸ் சைவ உணவகம். மாலையில் சுடச்சுட, இட்லி, தோசை, அடை, ரவா தோசை, கொத்து பரோட்டா, என்று கலந்து கட்டி அட்டகாசப் படுத்தும் மெனு. சம்பார், சட்னி, கார சட்னி, இத்துடன் காரக்குழம்பு ஒன்று இவர்கள் ஸ்பெஷாலிட்டி. அதே போல மதிய சாப்பாடு. பொரியல், கூட்டு, அப்பளம், வத்தக்குழம்பு என்று நியாயமான விலையில் சுவையான சாப்பாடு, நிச்சயம் அடுத்த நாள் காலையிலோ, இரவிலோ வயிற்றை கெடுக்காத சாப்பாடு. இட்லி காரக்குழம்பு காம்பினேஷன் அடிச்சிக்க முடியாது. விஜய் டிவியின் நீயா நானாவில் கலந்து கொள்ள போய்விட்டு, நேரமாகும் என்பதை தெரிந்து கொண்டு, நான், அப்துல்லா, தண்டோரா மணீஜி, நர்சிம், சூர்யா ஆகியோர் கிளம்பினோம். அவர்களுக்கு ந...