சாப்பாட்டுக்கடை – சென்னை ஜூனியர் குப்பண்ணா மெஸ்
ஒவ்வொரு ஊருக்கு போகும் போது அங்கேயிருக்கும் உணவகங்களில் போய் சாப்பிடுவது மிகவும் பிடித்த விஷயமாகும். அவ்வூரின் சிறப்புகளையும், முக்கிய இடங்களையும், சாப்பாட்டுக்கடைகளையும் பார்த்துவிட்டு வந்தால்தான் ஊர் சுற்றிய திருப்தியே இருக்கும். அப்படிப்பட்ட சாப்பாட்டுக்கடைகளில் உணவுகளில் சுவைக்கு முக்கிய காரணம் என்று நான் நம்புவது அவ்வூரின் தண்ணீர். என்னதான் ஒவ்வொருவரின் கைப் பக்குவம், என்று சொன்னாலும், அதனுடன் கலக்கப்படும் தண்ணீரின் சுவைதான் அவ்வுணவுக்கென்று ஒரு தனி சுவையை அளிக்கிறது என்பேன்.
ஏற்கனவே ஜூனியர் குப்பண்ணா மெஸ்ஸின் சுவையைப் பற்றி ஈரோட்டு சாப்பாட்டுக்கடையில் எழுதியிருந்தாலும், சென்னையில் அவர்களின் கிளை ஆரம்பித்ததும் அவர்களின் ரசம் மற்றும் கிரேவிக்களின் சுவை என் நாவில் ரீகலெக்ட் ஆக ஆரம்பித்துவிட்டது.
நார்த் உஸ்மான் ரோடின் முடிவில் இருக்கும் ரங்கராஜபுரம் ஓவர் பிரிட்ஜுக்கு கீழே யு டர்ன் எடுத்து இரண்டாவது இடது தெருவான கன்னையா தெருவில் நுழைந்தால் அருமையான பார்க்கிங்குடன், ஒரு பெரிய பில்டிங்கில் செயல்படுகிறார் நம்ம குப்பண்ணா. வழக்கம் போல ஈரோட்டைப் போலவே வாசலிலேயே நல்ல வரவேற்பு லிப்டில் ஒரு வணக்கம், உள் நுழைந்ததும், ஈரோட்டைப் போல இடம் பார்த்து உட்கார வைக்கத்தான் ஆளில்லை என்றாலும் உடனடியான கவனிப்பு, நடு நடுவே ஒவ்வொரு கஸ்டமர்களிடமும் அவர்களின் தேவையை பற்றி கேட்டு, அறிந்து உடனடியாய் கவனிக்கும் சரவணனின் கொங்கு மண்டல விருந்தோம்பல், விஸ்தாரமான, நல்ல குளிரூட்டப்பட்ட ஏஸி என்று அடி தூள் பரத்தியிருக்கிறார்கள்.

வழக்கம் போல சாப்பாட்டுடன், ஒரு பொரியல், கூட்டு, முட்டை மசாலா, மட்டன், சிக்கன், மீன் குழம்புகள், நல்ல சுடச்சுட இலை பார்த்து ரிபில் செய்யப்படும் சாதம். அருமையான அதே ஈரோட்டு சுவை ரசம். மிஸ் செய்யவே கூடாத ஒன்று. அதே போல மட்டன் கிரேவியும், மீன் குழம்பும் உங்கள் சுவை நாளங்களை தூண்டிவிடும். பள்ளிப்பாளையம் சிக்கன், நாட்டுக்கோழி பிச்சிப் போட்டது இங்கே வேறு விதமான சுவையில் அவ்வளவாக காரமில்லாமல். முட்டைகைமா என்று ஒரு அயிட்டம் தருகிறார்கள். நல்ல சின்னச் சின்ன பீஸாக்கின மட்டனையும்,முட்டையையும் சேர்த்து பொடிமாஸாய். ம்ஹும்.. அட்டகாசம். இரவுகளில் நல்ல டிபன் வகையாராக்களும், கட் ரொட்டி போன்ற அயிட்டங்களையும் தருகிறார்கள். இன்னும் சாப்பிட்டு பார்க்கவில்லை. சுவையில் குறையென்றால் கிரேவிக்களில் இருக்கும் மணம். நம்ம சென்னை கார்பரேஷன் தண்ணீரின் மணம் கொஞ்சம் தூக்கலாய் இருந்தது. மேனேஜர் சரவணனிடம் சொல்லியிருந்தேன். விரைவில் அது பற்றி கவனிப்பதாய் சொன்னார். அடுத்த முறை சென்ற போது அந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது. இங்க தான் நிற்கிறது குப்பண்ணாவின் விருந்தோம்பல். Dont Miss the Divine Rasam.
ஜூனியர் குப்பண்ணாகன்னையா தெரு
திநகர்
அட்ரஸ் மற்றும் மற்ற தொடர்புகளுக்கு சரவணன் :9884418110
கேபிள் சங்கர்
Comments
A jokes
எவ்வளவு பாஸ் கொடுப்பாங்க? இதில
டிவைன் வேற விட்டு போச்சு?
எவ்வளவு பாஸ் கொடுப்பாங்க? இதில
டிவைன் வேற விட்டு போச்சு?//
எதையும் குறை கண்டு பிடிக்கறதுக்கு முன்னாடி சரியா படிக்கணும் இதில டிவைன் இருக்கு.
அப்புறம் தொடர்புக்கு கொடுத்தது அட்ரஸ் தெரியாம நிறைய பேர் அல்லாடுறாய்ங்க அப்படியே காசு வாங்கிட்டு எழுதினாத்தான் உங்களுக்கு என்னா? நீங்களும் ரெக்கமெண்டேஷன் செய்து எழுதி சம்பாதிக்க முடிஞ்சா சம்பாதியுங்களேன். குமார். ஆக்க மாட்டாதவனுக்கு மித்தம் கோணல்னு சொல்வாங்களாம்.அ து போல இருக்கு.. உங்க பேச்சு.
நான் அங்கே சாப்பாட்டைப் பற்றி தான் நலலயிருக்குன்னு சொல்லியிருக்கேன் பிரியாணியை ரெகமெண்ட் பண்ண மாட்டேன்.