
கடந்த இரு முறையும் க்ரைம் கலந்த திரில்லரை அளித்தவர் இம்முறை ஜேம்ஸ்பாண்ட் கதையை எடுத்திருக்கிறார். ஏஜெண்ட் விநோத் இந்திய உளவுத்துறையின் முக்கியமானவன். ஜேம்ஸ்பாண்ட் படமென்றால் ஒரு அதிரடியான ஓப்பனிங் இருக்க வேண்டும், மார்பகங்களை கிட்டத்தட்ட திறந்து போட்ட ஹீரோயின்கள், பின்னணியில் அரை குறை உடைகளோடு, உதட்டு சாயம் மட்டும் அவுட்டாப் போகஸிலும் தெரியும் படியாய் போட்ட சரியான சைஸ் பெண்கள் இருக்க வேண்டும், பாகிஸ்தான், ரஷ்யா, போன்ற நாட்டுக்காரர்கள் நம் நாட்டுக்கு எதிரியாய் இருக்க வேண்டும் என்பது போன்ற எல்லா வேண்டும்ங்களையும் கொண்ட அக்மார்க் இந்திய ஜேம்ஸ்பாண்ட் படமாய் இருக்கிறான் இந்த ஏஜெண்ட் விநோத்.

லண்டன் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டு, 39 பேரைக் கொன்று அதில் அவரும் இறந்ததாய் கருதப்படும் பெண்ணாய் கரீனா கபூர். மேடம் சைஸ் ஜீரோவிலிருந்து நம்ம ஊர் சைஸுக்கு வந்து கழுத்துக்கு கீழே முழுதும் மார்பகமாய் வளைய வருகிறார். ஆங்காங்கே தான் ஏன் இப்படி ஆனேன் தனக்கென எல்லா பெண்களைப் போல குடும்பம் குட்டி, என்று இருந்திருக்க கூடாதா? என்று ஏங்கி அழுவது எல்லாம் இந்தக்கதைக்கு ஒத்து வரவில்லை. என்ன தான் கல்ட்டாய் ஏன் ஜேம்ஸ் பாண்ட் பட நாயகிகளூக்கு எல்லாம் செண்டிமெண்ட் இருக்கக் கூடாதா? என்று கேட்டால் இருக்கும்தான் ஆனால் இதுக்கு அது சரிப்படாது என்றே தோன்றுகிறது. அதற்கு சாய்ப் தான் என்னவாக இருக்க ஆசைப்பட்டேன் என்று சொல்லும் கதையும் படு சொதப்பல்.
ப்ரீதமின் பின்னணியிசை பெரிதாய் கவரவில்லை. முரளிதரனின் ஒளிப்பதிவு வேர்ல்ட் க்ளாஸ். எடிட்டிங் மற்றும் மற்ற டெக்னிக்கல் விஷயங்கள் எல்லாமே ஒலகத் தரத்திலிருந்தாலும் ஸ்கீரீனில் நடிகர்கள் பேசுவதைவிட பின்னணியிசை அதிகமாயிருப்பதால் பல இடங்களில் வசனங்களை ஃபாலோ செய்ய முடியவில்லை.
எழுதி இயக்கியவர் ஸ்ரீராம் ராகவன். வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் விஷயங்கள் அனைத்தும் வைத்துவிட்டு அதில் தன் திறமையை அழகாய் புகுத்தியிருப்பதிலாகட்டும், முக்கியமாய் ஹோட்டல் ஆக்ஷன் ஒன்றில் தமிழ் பேசும் ஆள் ஒருவனை காட்டிவிட்டு அவனை அடையாளம் கண்டு அவனை துறத்தும் போது நடக்கும் சண்டைக் காட்சியில் அவனுடன் திரிகோணமலை விபசார விடுதியில் சண்டையிட்ட காட்சியோடு சிங்க் செய்து, பின்னணியில் “ராக்கம்மா கையைத் தட்டு” பாடலை ஓடவிட்டிருப்பது க்ளாஸ். அக்காட்சியை விஷூவலாய் பாருங்கள் அப்போது புரியும் படம் முழுக்க இவர் செய்திருக்கும் ஸ்டைலான, அட்டகாசமான மேக்கிங்கை. அதே போல ஒவ்வொரு ஊரின் பின்னணியில் ஒலிபரப்பப்படும் பாடல்கள். சின்னச் சின்னதாய் ஆச்சர்யங்களை ஏற்படுத்தும் நிகழ்வுகள், அற்புதமான விஷுவல்கள், நாடு விட்டு நாடு வினோத்தின் பின்னாலேயே அலையும் சுவாரஸ்ய திரைக்கதை, என்று எல்லாமிருந்தும் ஏதோ ஒன்று குறைந்திருப்பது போன்றே ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது இந்த ஏஜெண்ட் வினோத்.


கேபிள் சங்கர்
Post a Comment
7 comments:
vanakkam thala...
i am a big fan of this writer director. i loved both ek haseena thee and johny gaddar. apart from many things the hotel room fight was one of the best action sequences in ek haseena thee.saif ali khan had done a very good job.yet to see this movie
cable, director sriram ragavan is a tamilan?
yes..chennaitie
nice review
எனக்கும் பார்க்க ஆர்வம்தான். ஆனால் நாயகன், நாயகி இருவரும் எனக்கு பிடிக்காதவர் பட்டியலில் இருக்கிறார்கள் :(
முடிந்தால் நீங்கள் எனது பதிவை பாருங்கள் :)
//ஆனால் நாயகன், நாயகி இருவரும் எனக்கு பிடிக்காதவர் பட்டியலில் இருக்கிறார்கள் :(//
on the contrary, இருவருமே எனக்கு பிடித்தவர்கள், ஓம்காரா பார்த்ததில் இருந்து. விமர்சனம் ரத்ன சுருக்கம். படம் பார்க்க தூண்டுகிறது, குறைந்தது எது என்பதை கண்டுபிடிக்கவாவது!
விர்மசனம் படிச்சா இவரு travel agent வினோத் மாதரி இருக்கு
Post a Comment