Thottal Thodarum

Mar 6, 2012

கர்ணன் சொல்லும் செய்தி

11264334650 என்ன கர்ணனின் செய்தியா? எந்த கர்ணன்? மகாபாரதக் கர்ணனா? இல்லை? ஒளிப்பதிவு மேதை கர்ணனா? அல்லது சமீபத்திய பரபரப்பான நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பழைய கர்ணன் படத்ததைப் பற்றியா? என்று கேட்பீர்கள். இந்த செய்தியை சொல்வது சிவாஜிகணேசனின் கர்ணன் திரைப்படம் தான். ஆம் இது ஒரு முக்கிய செய்தி தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே மிக முக்கியமான செய்தியை சொல்லியிருக்கிறது இப்படம். வருகிற பதினாறாம் தேதி மீண்டும் கர்ணன் வெளியாகவிருக்கிறது


கர்ணன் பட ட்ரைலைரை புதிய பட வெளியீட்டைப் போல பெரிய அளவில் கொண்டாடி வெளியிட்டார்கள். ட்ரைலரும் மிகப்பிரம்மாண்டமாய் இருந்தது. முழு நீள சினிமாஸ்கோப்பில், டிடிஎஸ் ஒளிப்பதிவில். டிஜிட்டல் க்ரேடிங் செய்யப்பட்ட ட்ரைலர். பார்க்க கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருந்தது. .ஆனால் இதை இவ்வளவு தூரம் நல்ல தரத்துடன் கொண்டுவர சுமார் அறுபது லட்சங்கள் செலவு செய்திருக்கிறார் திவ்யா ப்லிம்ஸ் சொக்கலிங்கம். இந்தப்படத்தின் நெகட்டிவை எடுத்துப் பார்த்த போது மனம் பதைத்துப் போனாராம். சுமார் 30 சதவிகிதம் சேதாரத்துடன் தான் நெகட்டிவ் இருந்ததாம். அதை மீண்டும் செப்பனிட்டு, டெக்னிக்கலாய் அதை எப்படி சரி செய்ய முடியுமோ அவ்வளவு மெனக்கெட்டு செலவு செய்து கர்ணன் என்கிற தமிழின் முக்கியமான படத்தை டிஜிட்டலாக்கி அப்படத்தை காப்பாற்றியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

சரி இதிலென்ன செய்தி என்று கேட்பீர்களானால் மிக முக்கியமான செய்தி இருக்கிறது. நம் தமிழ் சினிமாவின் பழைய முக்கிய படங்களின் அனைத்து ப்ரிண்டுகளும் மற்றும் நெகட்டீவ்களின் நிலை படு மோசமான அல்லது அழிந்து போகும் நிலையில் நிலையில் இருப்பதுதான் அந்த செய்தி. சரி அதற்கென்ன செய்ய முடியும்? ஆப்ட்ரால் சினிமாதானே, எவ்வளவோ சரித்திர பிரசித்திப் பெற்ற விஷயங்களை நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். கேவலம் சினிமா தானே என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் என்னைப் போன்ற சினிமாக்காரர்களுக்கும்,காதலர்களுக்கும் பழைய படங்கள் ஒரு பொக்கிஷம். நம் பெற்றோர்களின் திருமணத்தை பழைய கருப்பு வெள்ளை புகைப்படங்களாய் இன்றும் நாம் பேணி பாதுகாத்து வருகிறோம். அந்தப் படங்களையெல்லாம் டிஜிட்டல் படங்களாய் ஸ்கேன் செய்து நம் ஹார்ட் ட்ரைவிலும், இணைய பெட்டங்களிலும் சேமித்து வைக்கிறோமில்லையா? இன்றைக்கும் இருபது வருடங்களுக்கும் முன் பிரபலமாயிருந்த வீடியோ கவரேஜ் செய்யப்பட்ட, கல்யாண கேசட்டுகளை டிவிடிக்களாய் மாற்றிக் இன்றும் அதை நவீன வடிவத்தில் வைத்திருக்கிறோமில்லையா? அது போலத்தான் சினிமாவும், இந்தியாவின் ஒவ்வொரு மொழி சினிமாவும் ஒவ்வொரு காலகட்டத்தை கடந்த பொக்கிஷங்கள்.

பேசாப் படக்காலத்திலிருந்து இன்றைய படங்கள் வரை சினிமா நமக்கு சொல்லும் செய்திகள் பல. நமது கலாச்சாரம், வாழ்கைமுறை, பண்பாடு, அந்நாளைய மக்களின் ரசிப்புத்தன்மை என்று ஒவ்வொரு படங்களும் காலத்தின் வரலாறுதான். நாலாயிர சொச்சப் படங்கள் இருக்கிறது அது அத்தனையும் பொக்கிஷமா? என்றால் இல்லை தான் என்றாலும் பொக்கிஷங்களை பாதுகாப்பது நம் கடமையல்லவா?. சரி சினிமாவை பார்பதைத்தவிர நமக்கும் சினிமாவிற்கும் என்ன சம்பந்தம் என்ற ஒரு கேள்வி ஒவ்வொரு சராசரி ரசிகனுக்கும் வரக்கூடியதுதான். நிச்சயம் சாராசரி ரசிகனுக்கு செய்ய ஏதுமில்லை என்றாலும் இந்த கர்ணன படம் மூலமாய் சினிமா ரசிகர்களுக்கும், சினிமா உலகத்தினருக்கும் சொல்லியிருக்கப்படும் செய்தி பழைய சினிமாக்களை காத்திட வேண்டும் என்பதுதான்.

இவ்வளவு சீரியஸாய் சொல்லப்படும் விஷயத்தை ஏன் சினிமா துறையை சார்ந்தவர்கள் கவனிக்கக்கூடாது? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. அவர்களும் இதற்கான முயற்சியை எடுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதற்காகும் செலவுகளை யார் முன்னெடுத்துக் கொள்வார்கள் என்ற கேள்வி பெரிதாய் இருக்கிறது.

வழக்கமாய் பழைய ப்ரிண்டுகளின் நெகட்டிவ்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு பெரிய ப்ராசஸிங்கே இருக்கிறது. அதை அப்படங்களின் லேப்தான் செய்து கொண்டிருக்கிறது. ஏதோ இன்றளவில் பழைய படங்களின் ப்ரிண்டுகள் கிடைக்கப்பெறும் பாக்கியம் இந்த லேப்புகளையும், அதன் தயாரிப்பாளர்களையுமே சாரும். இந்த ப்ரிண்ட் நெகட்டிவ்களை பாதுக்காப்பது என்பது கொஞ்சம் நச்சு வேலைதான். ப்ரிண்ட் பூஞ்சக்காளான் பிடிக்காமல் இருக்க ஒவ்வொரு முறையும் ஒரு கெமிக்கல் கோட்டிங்க் கொடுக்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட குளிபதனப்பட்ட நிலையில் வைத்தால் தான் நெகட்டிவ் கெடாமல் இருக்கும். அதற்கு செய்யப்படும் வேலைக்கான செலவு, கெமிக்கலுக்கான செலவு, மற்றும் பாதுக்காப்பாய் வைக்க உதவும் பெட்டகத்திற்கான செலவை அப்படத்தின் தயாரிப்பாளர்தான் ஏற்க வேண்டும். பணமென்று பார்த்தால் ஒரு தயாரிப்பாளருக்கு மிக சொற்பமான பணமாய்த்தான் இருக்குமென்றாலும், நொடிந்துப் போன தயாரிப்பாளர்களுக்கு அது பெரும் தொகையாகத்தான் இருக்கும். அப்படி பணம் செலுத்த முடியாத தயாரிப்பாளர்களின் பிலிம் நெகட்டிவ்களை லேப்புகள் பராமரிப்பதில்லை. அப்படி பராமரிபில்லாத நெகட்டிவ்கள் காலப் போக்கில் சுத்தமாய் அழிந்து போய் விடுகிறது.

சமீபத்தில் இயக்குனர் பாலுமகேந்திரா கூட சொல்லியிருந்தார் அவரது வீடு, மற்றும் சந்தியாராகம் படங்களின் நெகட்டிவ்கள் சேதமடைந்துவிட்டதாகவும், முற்றிலும் சரி செய்யப்பட முடியாத  நிலையில் இருப்பதாகவும் மிக வருத்தத்துடன் சொல்லியிருந்தார். இருபது வருட படங்களுக்கே இந்த நிலையென்றால் பழைய படங்களின் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள்.

தற்போது ப்ரசாத் போன்ற நிறுவனங்கள் அவர்களிடம் இருக்கும் பழைய படங்களின் நெகட்டிவ்களை டிஜிட்டலாக மாற்றி சேமித்து வைக்க அரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இதற்கு ஒரு ப்ரச்சனை இருக்கிறதாம். ஒவ்வொரு படமும் டிஜிட்டல் ஆன பிறகு அதை சேமிக்க டெர்ரா பைட் அளவிற்கு ஹாட் டிஸ்க் தேவை படுகிறதாம். அவ்வளவு பெரிய பைல்களை சேமித்து வைக்கக்கூடிய டெக்னாலஜிக்கு ஆகும் செலவும் அதிகம்தானாம். முழு படங்களையும் அதே குவாலிட்டியில் வைப்பதற்கு ஆகும் கொள்ளவும், அதற்கு பேக்கப் வசதிகள் செய்து கொடுப்பதும் ப்ரச்சனையாகப் பார்க்கப்ப்படுகிறது. விரைவில் அதற்கும் ஒரு தீர்வு வரும். அதற்கு முன்னால் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் ச்ங்கங்கள் எல்லோரும் சேர்ந்து  நம் பழைய தமிழ் திரைப்படங்களை அவர்கள் செலவில் பாதுகாக்க ஒரு வழிவகை செய்யலாமே? செய்வார்களா?
கேபிள் சங்கர்

Post a Comment

16 comments:

Jayaprakash said...

Information is nice! vunga adangam puriyuthu parpom enna seigirargal endru!
Anbudan,
JP

பிரபல பதிவர் said...

அதான் அல்ரெடி தொலைக்காட்சிகளில் எல்லா படமும் வருதே... அப்புறம் எதுக்கு நெகடிவ்???

shortfilmindia.com said...

மிஸ்டர் பிரபல பதிவர். அதுக்கு கூட நெகட்டிவோ, பாஸிட்டிவோ இல்லாத படங்கள் இருக்கிறது. அது பற்றி இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது.

மதுரை அழகு said...

//கேவலம் சினிமா தானே என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் என்னைப் போன்ற சினிமாக்காரர்களுக்கும்,காதலர்களுக்கும் பழைய படங்கள் ஒரு பொக்கிஷம்//

பழைய படங்களைப் பார்ப்பது தியானம் செய்வதைப் போன்றது.

Rajagopal.S.M said...

எனக்கு புரியலை. இப்ப ஒரு உதாரணத்துக்கு ராஜ் வீடியோ விஷன் கடைக்கு போனா பழைய படங்களோட வீசீடீ, டீவீடீ கிடைக்குது. அப்படி கிடைக்கும்போது அந்த படத்தோட நெகடிவ் இருந்தா, என்ன இல்லைனா என்ன? தேடி பார்த்தா வீடு சீடீ கூட கிடைக்கும். அப்புறம் அந்த படத்தோட நெகடிவ் எதுக்கு? இன்னும் கொஞ்சம் எளிமையா சொல்ல முடியுமா?

Cable சங்கர் said...

rajagopal.. கர்ணன் படமே அவர்களிடமிருந்த பீட்டாவிலிருந்து தான் நிறைய சரி செய்திருக்கிறார்கள். இந்த தரம் கூட இல்லாமல் டிவிக்கு பீட்டாவாக மாற்றக்கூட முடியாத அளவில் பல படங்கள் இருக்கு.

CS. Mohan Kumar said...

அலோ கொத்து எழுத நேரமிருக்காது. இதுக்கு மட்டும் நேரமிருக்கா? பிச்சுடுவோம் ..பிச்சு !

Cable சங்கர் said...

ஷூட்டிங் முடிஞ்சு நேத்து நைட்டு வந்திட்டேன்.

Anonymous said...

தியேட்டர்ல கர்ணன் ட்ரைலர் பாத்தேன். இன்னும் தெளிவாக பிரிண்ட் போட்டிருக்கலாம். ராஜ் டி.வி. யில் பார்ப்பது போல் சற்று மங்கலாகத்தான் தெரிகிறது.

Marc said...

வரலாறைப் பாதுகாப்பதும் நம் கடமை தான்.

அருமை வாழ்த்துகள்

Sopian Edy said...

nice


see my site

சுருதிரவி..... said...

இந்த ஆதங்கம் எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு. இங்கு ஐரோப்பாவில் கருப்பு வெள்ளை ஆங்கிலத்திரைப்படங்களை தொலைக்காட்சியில் பார்க்கும்போது அவை தெள்ளத்தெளிவாயிருப்பதைப் பார்த்து அவை வெளியான வருடத்தை தேடிப்பார்த்தால் நாம் பிறப்பதற்குமுன் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னரென்பதை தெரிந்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். ஆனால் எங்கள் வாலிப வயதில் மோகன்,சுரேஷ் போன்றோர் கதாநாயகர்களாக நடித்த திரைப்படங்களை தொலைக்காட்சியில் பார்க்கும்போது பல்லிளிக்கிறது, சமீபத்தில் கூட மௌனராகம் திரைப்படத்தை ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுகண்டு ஆர்வத்தோடு உட்கார்ந்தேன்.ஆனால் அந்த பிரதியின் தரம்கண்டு பாதியிலேயே எழுந்துவிட்டேன். எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் தமிழின் முக்கியமான திரைப்படங்களையாவது இப்படி காப்பாற்றுவதற்கு யாராவது முன்வரவேண்டும்.

NAGARAJAN said...

திரு கேபிளாருக்கு ஒரு வேண்டுகோள்

16ஆம் தேதி கர்ணன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதவும்.

அதோடு, 48 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் திரையிடப்படும் இப்படத்திற்கு, இன்றைய இளைய ரசிகர்களின் வரவேற்பினையும், ரசித்ததையும்

எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

வவ்வால் said...

கேபிள்ஜி,

கர்ணன் திரைப்படம் போன்ற பழைய திரைப்படங்களின் நெகட்டிவ் குறித்தான ஆதங்கங்கள் சரியே, ஆனால் இப்போது தான் டிஜிட்டல் ஆக்கப்பட்டதாக சொல்வதும், மேலும் நீங்கள் சொல்லும் தொழில்நுட்ப மேம்பாடுகளும் முரணாக இருக்கிறது.

// முழு நீள சினிமாஸ்கோப்பில், டிடிஎஸ் ஒளிப்பதிவில். டிஜிட்டல் க்ரேடிங் செய்யப்பட்ட ட்ரைலர். பார்க்க கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருந்தது. .ஆனால் இதை இவ்வளவு தூரம் நல்ல தரத்துடன் கொண்டுவர சுமார் அறுபது லட்சங்கள் செலவு செய்திருக்கிறார் திவ்யா ப்லிம்ஸ் சொக்கலிங்கம். இந்தப்படத்தின் நெகட்டிவை எடுத்துப் பார்த்த போது மனம் பதைத்துப் போனாராம். சுமார் 30 சதவிகிதம் சேதாரத்துடன் தான் நெகட்டிவ் இருந்ததாம். அதை மீண்டும் செப்பனிட்டு, டெக்னிக்கலாய் அதை எப்படி சரி செய்ய முடியுமோ அவ்வளவு மெனக்கெட்டு செலவு செய்து கர்ணன் என்கிற தமிழின் முக்கியமான படத்தை டிஜிட்டலாக்கி அப்படத்தை காப்பாற்றியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.//

எப்போது டிவிடி/சிடி உருவானதோ அப்போதே கர்ணன் டிஜிட்டல் ஆகிவிட்டது.

பீட்டாவில் இருந்து என்று சொல்லும் போதே அது வீடியோ டேப் வடிவம் என்று இருப்பதையும் உறுதி செய்கிறது, டெலி சினி அமைப்பின் மூலம் டிவியில் போடப்படும் போது பீட்டா காபி உருவாகிவிடுகிறது, அப்போதெலாம் வீடியோ டேப்பில் கிடைக்கும் ,பின்னர் ராஜ் டிவி, சிடி, டிவிடி போட்டது.எனவே டிஜிட்டல் வடிவம் அப்போவே எடுத்தாச்சு.

இப்போது கியுப் ப்ரொஜெக்சனுக்கு டிஜிட்டல் செய்துள்ளார்கள் என்பதே சரி,ஆனால் கியுப் புரொஜெக்சன் என்பதே அதிக பட்சம் 4k resolution தான் இது வழக்கமான பில்ம் ப்ரொஜெக்சன் விட குறைவான ஒன்றே. ஆனால் நம்ம ஊர் தியேட்டர்களில் பெரும்பாலும் கியுபில் 2கே ரிசொல்யுஷன் புரொஜெக்டர்கள் தான் இருக்கு எனவே இது வழக்கமான பில்ம் புரொஜெக்சன் விட மோசமான தெளிவையே கொடுக்கும்.எனவே தொ.காவில் பார்க்கும் உணர்வையே கொடுக்கும், இப்படியெல்லாம் சொன்னால் வியாபாரம் ஆகும் என சொன்னதையே நீங்களும் திரும்ப சொல்வது தொழில்நுட்பம் தெரிந்தவர் சொல்வது போலவா இருக்கு.

90 களில் கொஞ்சம் கோடுகளோடு தியேட்டரிலேயே கர்ணன், திருவருட்செல்வர், உத்தம புத்திரன் எல்லாம் பார்த்திருக்கிறேன்,சென்னை போன்ற நகரங்களில் தான் பழைய படங்கள் வருவது அபூர்வம். பின்னர் தொலைக்காட்சிகளில் 24 மணி நேரமும் பழைய படங்களை போட்டதால் , கிராமங்களில் பழைய படம் போட்டு பிழைப்பு பார்த்த தியேட்டர்களின் வருமானம்ம் போய் மூட வேண்டியதோ அல்லது கல்யாண மண்டபம்,குடோவுன் என ஆகிப்போச்சு.

எனவே பழைய படங்களை டிஜிட்டல் ஆக்கி காப்பாற்றிய சேவை எல்லாம் திவ்யா பிக்சர் செய்து விடவில்லை. அப்படிப்பார்த்தால் அப்பெருமை ராஜ் டிவிக்கே போக வேண்டும்.மேலும் திவ்யா பிக்சர் பெரும்பாலும் விநியோக உரிமை வைத்துக்கொண்டே டிவிடி போட்டு காசு பார்த்து வருவதும், அதன் பலன் தயாரிப்பாளர்களுக்கு போவதில்லை என்பதுமே உண்மை.இப்படத்தை பி.ஆர் .பந்துலுவே தயாரித்தார் ஆனால் மறுவெளியிட்டீல் அவர் குடும்பத்துக்கு என்ன பயன்?

டிடிஎஸ் ஒளிப்பதிவு என்று போட்டுள்ளீர்கள் ,அது ஒலிப்பதிவு முறை. அப்போதைய ஒலிப்பதிவு ஸ்டீரியோ தான்(யார் கண்டா மோனாவாக கூட இருக்கலாம்) அதையே 5.1 இல் ஒட்டுமொத்தமாக ஒலிக்க செய்ய முடியுமே தவிர பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இருக்காது.

terra byte ஹார்ட் டிஸ்க் அளவுக்கு எல்லாம் அதிகம் செலவாகும் டிஜிட்டல் செய்து சேமிக்க கடினம்ம் என்றும் சொல்கிறீர்கள் 3 ஆண்டுகளுக்கு முன்னர் 1 டிபி எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் 4500 ரூக்கு வாங்கினேன் இப்போது 5 டி.பி 7500 என்று சொல்கிறார்கள். இந்த அளவு தொகை கூட கடினமா?

நெட்டில் பேட்டில் ஷிப் போடொம்ஸ்கின் கூட டவுன் லோட் செய்ய முடிகிறது. எனவே இணையத்தில் ஒரு முறை ஏற்றிவிட்டால் சாஸ்வதமாக காலத்துக்கும் கிடக்கும்.

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

சரியாக சொன்னிர்கள் வவ்வால்.புதிய படங்கள் கூட Dts தொழில் நுட்பத்தை சரியாக பயன்படுத்தவில்லை. இந்த Dts, dolbydigital,THX ஒலி நுபங்கள் எல்லாம் விளம்பரதிரகாகதான் பயன் படுத்துகிறர்களே தவிர மற்றபடி ஏதும் இல்லை.