
எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில், எனக்கு மட்டும் ஏன் இம்மாதிரி நடகக் வேண்டும்? என்று என்னையே கேட்டு நொந்து போகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது? சரியாய் சிங்கப்பூர் சாங்கி ஏர்போர் ட் (பட்ஜெட்) சேருவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு அந்த சம்பவம் நடந்தது. எப்படி எடுத்து கொள்வது இதை வரவேற்பாகவா? அல்லது அச்சுறுத்தலாகவா? மனம் குழம்பி போனேன்.
குழம்பத்திலிருந்து வெளியே வருவதற்குள் உடுக்கை ஆங்கிலம் பேசுகிறேன் என்று சைனீஸில் உட்காருங்கள், சீட் பெல்ட்டை போடுங்கள் என்று சொல்ல, அடுத்த சில நொடிகளிள் 35,000 அடிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆக கீழிறங்க ஆரம்பித்தது. முதல் வெளிநாட்டு பயணம், வெற்றிகரமாய் அயல் மண்ணில் கால் வைக்க போகிறோம் என்ற உணர்வே உள்ளுக்கும் லேசான சிலிர்ப்பை கொடுத்தது. இடப்பக்க ஜன்னல்களின் வழியே மினுக்கும் சிங்கப்பூர் அந்த இருளில் நட்சத்திரமாய் ஜொலிக்க, சிங்கப்பூர்.
பட்ஜெட் டெர்மினல் என்று போட்டிருந்தார்களே? என்று யோசித்தபடி வெளியே வந்தால், படிகளில் ஹாண்ட் லக்கேஜுகளோடு கீழிறங்கி சிங்கப்பூர் காற்றை சுவாசித்தேன். அந்த இரவிலும் லேசான சூடு காற்றில் இருந்தது. அடுத்து நான் நடந்து வந்த பட்ஜெட் ஏர்போர்டை பற்றி பின்னால் விவரிக்கிறேன். சென்னையின் ஏர்போர்ட்டை விட 50 மடங்காவது பிரம்மாண்டமும், வசதிகளும் நிறைந்ததாய் இருந்தது.
வழக்கமான எல்லா செக்கப்புகளும் முடிந்து வெளியே வந்த போது வரவேற்க பிரபாகர், கோவி.கண்ணன், ஜோசப் பால்ராஜ், துக்ளக் மகேஷ், வெற்றிக் கதிரவன் (எ) விஜய், விஜய் ஆனந்த, அவரின் மகன் குட்டி விஜயானந்த், ஜெகதீசன், ரோஸ்விக், சாமியின் மாணவர் வைரவன், என்று ஒரு பாசக்கார கும்பலே ஆரவாரமாய் வரவேற்றது. எனக்கு விசா போட்ட என் மாப்பிள்ளை வெற்றிகதிரவ்ன் என்னை பாசத்துடன் நான் யூத் தான் என்றாலும் உறவு முறையில் அங்கிள் ஆகிவிட்டதால் வரவேற்பு அட்டையை பிடித்திருந்து வரவேற்றனர்.(அண்ணன் கோவி.கண்ணன் அந்த அட்டையை பிடித்திருந்தது தான் கொஞ்சம் உள்குத்தாய் இருந்தது.:).
வந்திருந்த நண்பர்களில் மகேஷ், ஜோசப், கோவியார், பிரபாகர் ஆகியோரை தவிர வேறு யாரையும் எனக்கு தெரியாது. தெரிந்த நண்பர்களுடன் கூட அவர்கள் சென்னை வரும் போது ஒரிரு முறை சந்தித்திருக்கிறேன் அவ்வளவுதான். இப்படி கூட்டமாய் வந்து வரவேற்றது மனதை நெகிழச் செய்தது.
அங்கிருந்து சாமி அவருடய மாணவர் வைரவன் வீட்டிற்கு செல்ல, நான் பிரபாகரின் வீட்டில் தங்க அன்புடன் ஊருக்கு வருவதற்கு முன்பே போனிலும், மெயிலிலும், மிரட்டபட்டிருந்தேன். அதற்கு முன்பு நைட் சாப்பாட்டை முடிக்க நாம் லிட்டில் இந்தியா போவோம் என்று “ப்ளான்” செய்தார் ஜோசப், விட்றா வண்டிய என்று வெண்ணெயாய் வழுக்கி சென்றது அவருடய கார் 100 கி.மீட்டர் வேகத்தில். அடுத்த சில நிமிடங்களில் வண்டியை பார்க் செய்துவிட்டு என்னை எங்கு அழைத்து போகலாம் என்று ஒரு தெரு முக்கில் நின்று விவாதித்தார்கள். அப்போது என் மாப்ளை விஜய் “தயவு செஞ்சு வேற பக்கம் நின்னு பேசுவோமா.? நம்மளை இந்த தெரு பக்கம் பார்த்தால் தப்பா நினைக்கப் போறாங்க” என்றதும், எனக்குள் இருந்த ஆர்வகுட்டி “ஏன்? என்னா.. இங்க?” கேள்விகளை கேட்க, “வந்தவுடனேயே இத பத்தி தெரிஞ்சிக்க வேணாம். வாங்க சாப்புடலாம்னு” சகுந்தலாஸுன் ஒரு ஹோட்டலுக்கு கூட்டிப்போய் எனக்கு ஒரு கொத்து பரோட்டா ஆர்டர் செய்தாரு ஜோசப்பு.
சாப்பாடு முடிஞ்சு எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு கிளம்ப, நானும் பிரபாவும் ஒரு டாக்ஸி பிடிச்சி யூஷுனில் இருக்கும் அவரது வீட்டிற்கு சென்றேன். ஒரு அரை மணி நேர பயணத்திற்கு பின்பு, பிரியா படத்தில் வரும் ப்ளாட்டுகள் போன்ற ஒரு அடுக்ககத்தின் எட்டாவது ப்ளோரில் உள்ள அவரது வீட்டில் இறங்கி, செட்டிலானவுடன், பிரபா ஒரு போனையும், க்ரெடிட் கார்ட் போன்ற ஒன்றைக் கொடுத்து இனிமே இதுதான் உங்க லோக்கல் போன், இது பஸ், மற்றும் எம்.ஆர்.டி கார்ட் என்று சொல்லிவிட்டு, நாளையிலேர்ந்து நாம் வெளியே போவோம் எனறபடி சில மணிநேரங்கள் பேசிவிட்டு, படுத்தோம். நடுவில் எழுந்து பார்த்த போது விடியற்காலையில் ஐ போனில் பாட்டை கேட்டபடி, கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருந்தது பிரபாகரின் உருவம். காலையில் எழுந்ததும், ஒரு காப்பியை போட்டு கொடுத்துவிட்டு “அப்புறம்ணே. நல்லா தூங்கினீங்களா?” என்றவரிடம் “நீங்க ஏன் தூங்கவேயில்லை..?”என்றவனை கோபமில்லாமல் பார்த்து, “தூங்க விட்டாத்தானே?” என்றார்.




டிஸ்கி: நிறைய பேர் ஜாய்புல்லுக்கு எதுக்கு ரெண்டு எல்லுன்னு கேட்கிறாங்க. தெரியாம போடலை. தெரிஞ்சே போட்டது. உச்சபட்ச சந்தோஷத்தை இப்படி ஒரு எல் எக்ஸ்ட்ரா போட்டு சொல்லலாம்னுதான்..
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
12 comments:
arumayana payana katturai thodarungal
என்னது கேபிள் அங்கிள் லா ?
இன்று
கதம்பம் 28-03-12
Hello Mams,
nee anthukellam saripattu varamate danu vadivel comedy mathiri kadaisi varaikum athu enna sambavam nu sollamatingala.........AVVVVVVVVVV
18 வயது கூட நிரம்பாத பச்சை பாலகனை அங்கிள் என அழைத்து அசிங்கபடுதியத்தை வன்மையாக கண்டிக்க கடமை பட்டுள்ளேன்.
i expect சிங்கையின் சாப்பாட்டுக்கடை..:)
இது நிச்சயம் மீள் பதிவுதான், அல்லது பழைய பயண அனுபவத்தை தூசி தட்டுகிறீர்கள் என்று நினக்கிறேன். சரியா? கே.ஆர். பி செந்தில் அவருடைய பதிவில் உங்கள் சிங்கபூரில் பார்த்தது பற்றி குறிப்பிட்டிருந்தார். எப்படி இருந்தாலும் ஐந்து வருடம் நான் இருந்த பூமியை பற்றி நீங்கள் எழுதுவது மகிழ்ச்சியே
யூத்தாமா. நாங்க நம்பிருவோமா?
அங்க போய் படம் பார்ப்பீங்களா...விமர்சனம் வருமா...
நீங்க நின்னுகிட்டு இருந்த தெரு Dusker தெருவா? ;-)
"full" ஆ அடிச்சுட்டு மட்டையானதைக் கூட அப்படிச் சொல்லலாம்
ரொம்ப suspense போடதிங்க சீக்கிரம் விசயத்துக்கு வாங்க... சங்கராந்தில பிரியாணி சாப்டீங்களா? நிஜமாலுமே டிவைன்...........
Post a Comment