Thottal Thodarum

Mar 18, 2012

விண்மீன்கள்

vinmeengal-review
மறைந்த பழம்பெரும் இயக்குனர் கே.சங்கரின் பேரன் விக்னேஷ் மேனனின் முதல் படம். பல சிவாஜி, எம்.ஜி.ஆர் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சங்கர் அவர்கள். அவரின் பேரனிடமிருந்து கமர்ஷியலில்லாத வித்யாசமான படம்.Vinmeengal Latest Photo 792
பிறந்த குழந்தைக்கு ஏதேனும் சின்னப் ப்ரச்சனை என்றாலும் துடித்துப் போய்விடுவோம். ஆனால் நரேன் – மீரா தம்பதிகளுக்கு பிறக்கும் குழ்ந்தையோ செலிபரல் பால்சி என்கிற நோயால் பாதிக்கப்பட்டு, கழுத்துக்கு கீழே செயல்பாடு இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு வெஜிட்டபிள் என்பதாய் பிறக்கும் போது, அம்மாதிரி குழந்தைகளை பெற்றவர்களின் மன உணர்வுகளையும், அப்படிப்பட்ட குழந்தைகள் வளர, வளர அவர்களுக்கென்ற வாழ்க்கையை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதுதான் கதை.
Movie Vinmeengal Photos 953
நரேன் – மீராவாக விஷ்வா, ஷிகா. விஷ்வா புதுமுகமாம். நிச்சயம் பாராட்டுக்குரிய நடிப்பு. ஷிகாவின் அகன்ற பெரிய விழிகளில் தெரியும் கவலையும், சந்தோஷமும், வாழ்க்கையை எதிர் கொள்ள என்ன வழி என்று தெரியாத விரக்தியையும் வெளிப்படுத்திய விதம் அட நல்ல நடிகை ஒருத்தரை யூஸ் பண்ணாம இருக்கிறார்களே என்கிற வருத்தம் மேலிடத்தான் செய்தது.
Movie Vinmeengal Still 704
செலிபரல் பால்சியினால் பாதிக்கப்பட்ட இளைஞனாய் மாஸ்கோவின் காவேரி ராகுல்.  படம் நெடுக வீல் சேரில் உட்கார்ந்தபடி இருக்கும் கேரக்டரில் நடித்ததை பாராட்ட வேண்டும். ஆனால் நடிப்பென்று வரும் போது அக்குறைபாடுள்ளவர்களின் பாடிலேங்குவேஜை சரியாய் பயண் படுத்தாதது குறையே.  இவரின் காதலியாய் அனுஜா ஐயர். சுயமாய் முடிவெடுக்கும் புத்திசாலிப் பெண். கேரக்டரை உணர்ந்து செய்திருக்கிறார். படத்தில் ஒரு சர்பரைஸான விஷயமென்றால் பாண்டியராஜனின் கேரக்டர்தான். மெல்ல மெல்ல பாண்டியராஜன் ஒரு சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்டாய் மாறி வருகிறார். “ஜோக்கரை எவளாவது கல்யாணம் பண்ணிப்பாளா” என்று தன் காதல் தோல்வியை பற்றி சொல்லுமிடத்தில் அவர் குரலில் தெரியும் உணர்வுகள் க்ளாஸ்.
Vinmeengal New Pic 714
ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். ஆரம்பக் காட்சியில் வைக்கப்பட்ட வித்யாசமான கோணங்கள், பின்பாதியில் வரும் ஊட்டி காட்சிகள் என்று அழகான கவிதையை படிக்கிற உணர்வை கொடுத்தது. அதே போல் இசையமைப்பாளர் ஜூபினின் இசை முதல் பாடலாகட்டும், பின்னணியிசையிலாகட்டும் நன்றாக செய்திருக்கிறார்.
Vinmeengal Photo 182
தன் முதல் படத்தில் இம்மாதிரியான கதை களத்தை எடுத்துக் கொண்டதற்காக விக்னேஷை பாராட்ட வேண்டும். படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே கதைக்குள் போய்விடுவதும், மீராவின் கர்ப்ப வயிற்றை மேலிருந்து கீழே தடவுவதற்குள் முதல் மாதத்திலிருந்து நிறை மாத கர்ப்பிணி வயிறாய் மாறுவதும், குழந்தைக்கு பார்வை இருக்கிறது என்று கண்டுபிடித்து உற்சாகமாகும் காட்சியிலும் நெகிழ வைக்கிறார்.  குழந்தைககான பிரச்சனையை சொல்லும் காட்சியில் அவரது மேக்கிங் ஸ்டைல் தெரிகிறது. “தோத்துறுவோம்னு நினைச்சி விளையாடாம இருக்ககூடாது” “பிஸிக்கலி சேலஞ்சானவங்களை மெண்டலி சேலஞ்சாக்கிடாதீங்க” என்பது போன்ற வசனங்கள். ஆஃப் வேயில் ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தி, அவருக்கும், ஜீவாவுக்குமான உறவை ஒன்றிரண்டு வசனங்களில் வெளிப்படுத்தின லாவகம். இம்மாதிரி குழந்தைகளுக்காக தங்களையே அர்பணிக்கும் பெற்றோரை கண் முன் கொண்டு வந்த கேரக்டரைஷேஷன்கள். எங்கே வேண்டுமானாலும் மெலோட்ராமா செய்ய முடிகிற, நம்மை விக்கி விக்கி அழ வைக்கக்கூடிய இடங்கள் இருந்தாலும், இந்நிலையில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையை நம்பிக்கையோடு வழிநடத்திச் செல்ல தர வேண்டிய பாசிட்டிவ் எனர்ஜியை கெடுக்காமல் அழகாய் சொன்ன விதம் என்று  நிறைய இடங்களில்  மெச்சூரிட்டி தெரிகிறது.

ஆனால் அதே நேரத்தில் கமர்ஷியலான ஒரு படமாய் நிறைய பேரிடம் கொண்டு செல்ல வேண்டிய சுவாரஸ்ய திரைக்கதை இல்லாததும்,   தடையாய் கமர்ஷியல் என்று நினைத்து வைத்திருக்கும் பாடல் ப்ளேஸ்மெண்ட்களும், நிறைய இடங்களில் வசனங்களிலேயே சொல்லியிருப்பதும், முக்கிய காட்சிகளில் ஒரு முடிவு இல்லாமல் சட்டென முடிவதும், எமோஷனுக்குள் நம்மைக் கடத்திச் செல்லாத காட்சியமைப்பும், முக்கியமாய் ஜீவாவுக்கு ஒரு பெண்ணின் அண்மை கொடுக்கும் கிளர்ச்சிதான் காதலா? என்று யோசிக்க வைக்கக்கூடிய காட்சிகளை இன்னும் கொஞ்சம் உடல் ரீதியான அவனுடய ப்ரச்சனைகளோடு அலசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அவர்களுக்கு ஏற்படும் உறவை காதலாய் மாற்றும் காட்சிகள் சாதாரண காதலன் காதலியை கவரும் முயற்சியாகவே இருப்பது படு செயற்கை.கதைக்கு பெரிதும் உதவாத ஜீவாவின் அப்பாவின் மேஜீஷியன் தொழில், அதில் ஏற்படும் விபத்து, போன்றவைகளும், பாண்டியராஜனின் கோமாளி வேஷமும், ஒட்டவேயில்லை. சிறு வயது ஜீவாவின் உடல் மொழிக்கும், அழகிய இளைஞனாய் வசீகரனாய் இருக்கும் ஜீவாவின் உடல்மொழிக்குமான குறைந்த பட்ச வித்யாசம் போன்று பல சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். சீரியஸ், கமர்ஷியல் என்று இரண்டுக்குமான அல்லாட்டத்தினால்   அரைமனதாய் தான் இருக்கிறது. எனினும் வித்யாசமான சீரியஸ் படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு விண்மீன்கள் வெளிச்சமே.
கேபிள் சங்கர்    

Post a Comment

4 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

//எனினும் வித்யாசமான சீரியஸ் படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு விண்மீன்கள் வெளிச்சமே.//

இது போதும் சார். கதையும் கொஞ்சம் வித்தியாசமான கான்செப்டா இருக்கு. Watchlistல போட்டாச்சு. சீக்கிரம் பார்த்துவிடுகிறேன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பார்க்கிறேன்.

UNMAIKAL said...

சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத முஸ்லீம்களுக்கு எதிரான புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்.
இதுவரையிலும் ஊட‌க‌ங்க‌ளில் க‌ண்டிராத‌வை

அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!

சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுதல் எனும் தூரநோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் போராட்டங்களில் இறுதியாக நிலைத்து நின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான்.

ஆயினும், சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே அதன் அழிவுக்குக் காரணமாயமைந்தது.

விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.

ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே.

புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.

புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.

எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர்.

புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.

அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 550 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது.

அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 1135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும்.


எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் சில மாதங்களே ஆன எத்தனை பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது


இதில் மிக வேதனைக்குறிய விடையம்

இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


இங்கு கிளிக்செய்து >>>>> கொலைவெறி புலிகளின் இன‌ஒழிப்பு (படங்கள் = விடியோ) <<<< பார்வையிடவும்.

சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.
..
.

raja said...

அய்யா நானும் ஒரு முஸ்லிம் தான்... முஸ்லிம் மக்களை விடுதலி புலிகள் கொன்றார்கள்... சரி... அதற்காக...அப்பாவி தமிழ் மக்களை...இலங்கை ராணுவம் கொள்வதை பார்த்து கொண்டு இருக்க முடியுமா....

அப்போ ஈராக்ல்... சதாம் ஹுச்சீன் கொன்றார்... இப்போ அமெரிக்க கொல்லுது... உயிர் போவது அப்பாவி மக்களுக்கு....

எல்லாரும் நல்லா இருக்க எல்லாம் வல்ல அல்லா விடம்... துவா கேட்கிறேன்