Thottal Thodarum

Mar 22, 2012

Joyfull சிங்கப்பூர் - 1


IMGA0251ரு பயணம் எனக்கு இவ்வளவு சந்தோஷத்தை, இவ்வளவு நட்பை, இவ்வளவு ஆச்சர்யங்களை, அதிர்ச்சிகளை, கண்ணீரை அளிக்கும் என்று எண்ணவேயில்லை என்பது நிஜம். ஆம் இதை நிஜம் என்று உணர்ந்து முடிப்பதற்குள்ளேயே பயணம் முடிந்து திரும்பிவிட்டேன். புக் கிரிக்கெட்டில் ஓடும் காட்சியை போல் சடசடவென ஓடி மறைந்து விட்டது. அவ்வளவு வேகம்.IMGA0217
சுவாமி ஓம்காருடன் என் பயணம் என்றவுடன், என்னை பற்றி தெரிந்தவர்கள் “பாவம் சாமி” என்று வருத்தபட்டதாக சொன்னார்கள். “அவருக்கு கூட வர்றதுக்கு வேற ஆளே கிடைக்கலையா..?” என்று எல்லோர் மனதிலும் கேள்வி இருந்தது. நான் ஒரு ஆன்மீகவாதி என்பதை உணர்ந்தவர் ஆதலால் ஓம்கார் ஒரு புன்னகையுடன் “சொன்னா சொல்லிட்டு போகட்டும்” என்றார். என்னா பெருந்தன்மை. வேற வழி.

மதியம் இரண்டு மணி விமானத்தை பிடிக்க, காலை 11.00 மணிக்கு ஏர்போர்ட்டுக்கு வந்தோம். நானும் என் மனைவியும் சாமிக்காக காத்திருந்த போது, அவரும் மெல்ல வந்து சேர்ந்தார். இரண்டு பேரும் போர்டிங் போட கிளம்பிய போது ஒரு வெண் சட்டை உருவம் எங்களை கடக்க, நான் “அண்ணே” என்று கூப்பிட, சட்டென திரும்பினார்… அப்துல்லா.. அலுவலக விஷயமாய் யாரையோ செண்ட் ஆப் செய்ய வந்திருந்ததாய் சொன்னார். வெளிநாட்டு பயணத்துக்காக என்னை வாழ்த்திவிட்டு கிளம்பினார்.IMGA0216உள்ளே போய் போர்டிங் போட்டுவிட்டு, இமிக்ரேஷன் எல்லாம் செக் செய்துவிட்டு, வெயிட்டிங் லவுஞ்சில் உட்கார்ந்து நானும் சாமியும் ஆளுக்கொரு காபி அருந்திவிட்டு ஒரு மணி வாக்கில் பேச ஆரம்பித்தோம். மிக சுவாரஸ்யமான பேச்சு. எனக்கு. பாவம் சாமி. நான் மட்டுமே பேசிக் கொண்டிருந்தேன். சாமியாய் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று பின்னால் தான் புரிந்தது.

பேசிக் கொண்டிருந்த சுவாரஸ்யத்தில் விமான நேரத்தை மறந்திருந்த போது ஒரு போர்டில் எங்கள் விமானத்தின் நம்பர் ஒளிர, கிட்டே போய் பார்த்தால் விமானம் 1.30 மணி நேரம் லேட். சாமி முகத்தில் முதல் முதலாய் லேசான கிலி ஓடியது. இன்னும் லவுஞ்சிலேயே என் பேச்சை கேட்கணுமா? என்ற ஒரு விஷயம் அவருள் ஓடியதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.

ஒரு வழியாய் விமானம் வந்து, இடம் பார்த்து உட்கார்ந்து செட்டிலானோம், விமானம் கிளம்பியது. சாமி ஒரு சூவிங் கம்மை எடுத்து என்னிடம் கொடுத்து, போட்டு மெல்லுங்கள் காதடைப்பு குறையும் என்றார். சாமி ஒரு ஐடியா மணி என்பது எனக்கு தெள்ளத் தெளிவாய் தெரிந்தது.
Image0450உடுக்கை போன்ற இடுப்பு என்று ஆங்காங்கே பார்த்திருகிறேன். சும்மா சொல்லி வைத்து செய்தார் போன்ற ஒரு இடுப்பை கிஞ்சித்தும், பெருக்காத ஒரு இடுப்பை, கொண்ட் இரு ஹோஸ்டஸுகளை பார்த்து பெரு மூச்சு மட்டுமே விட முடிந்தது. நாங்கள் போனது டைகர் ஏர்வேஸ் என்பதால் அவள் கட்டியிருந்த பெல்ட் கூட புலிக்கலரில் இடுப்பில் தழுவியிருந்தது அழகாய் தான் இருந்தது. நான் அளவுகளை பற்றி சொல்ல நினைத்து எழுதாமல் விட்ட, சட்டை புடைப்புகளை பற்றி எது என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். பாருங்கப்பா நான் அதை பத்தி எழுதலை. எழுதலை.. எழுதலை..

எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில், எனக்கு மட்டும் ஏன் இம்மாதிரி நடக்க வேண்டும்? என்று என்னையே கேட்டு நொந்து போகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது? சரியாய் சிங்கப்பூர் சாங்கி ஏர்போர் (பட்ஜெட்) சேருவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு அந்த சம்பவம் நடந்தது.  எப்படி எடுத்து கொள்வது இதை வரவேற்பாகவா? அல்லது அச்சுறுத்தலாகவா? மனம் குழம்பி போனேன்.
(தொடரும்)

Post a Comment

11 comments:

venkat said...

//உடுக்கை போன்ற இடுப்பு என்று ஆங்காங்கே பார்த்திருகிறேன். சும்மா சொல்லி வைத்து செய்தார் போன்ற ஒரு இடுப்பை கிஞ்சித்தும், பெருக்காத ஒரு இடுப்பை, கொண்ட் இரு ஹோஸ்டஸுகளை பார்த்து பெரு மூச்சு மட்டுமே விட முடிந்தது. நாங்கள் போனது டைகர் ஏர்வேஸ் என்பதால் அவள் கட்டியிருந்த பெல்ட் கூட புலிக்கலரில் இடுப்பில் தழுவியிருந்தது அழகாய் தான் இருந்தது. நான் அளவுகளை பற்றி சொல்ல நினைத்து எழுதாமல் விட்ட, சட்டை புடைப்புகளை பற்றி//
saamiya pakkathula vaichukkutu pannra velaiyaa ithu.

Suthershan said...

இருப்பதிலேயே மொக்க flight tiger தான்.. mostly ஹோஸ்டஸ் எல்லாம் கிழவிகலத்தான் இருப்பாங்க.. நீங்க வந்தப்ப கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கும் போல.. உங்களுக்கு லக்ன்னு நெனக்கிறேன்.. Joyful Singapore பத்தி நிறைய எழுதுங்க.. தற்போது சிங்கபூர்வாசி என்பதால் ஆவலுடன் காத்திருக்கிறோம்..
இங்கே chewing gum 1992 லேயே தடை செய்துட்டாங்க.. இரண்டு வருடம் முன்பு கூட அதன் தடையை நீக்க முடியாதுன்னு உறுதியா சொல்லிட்டாங்க..

http://sprs.parl.gov.sg/search/topic.jsp?currentTopicID=00074068-ZZ&currentPubID=00075291-ZZ&topicKey=00075291-ZZ.00074068-ZZ_1%23%23

மோகன் குமார் said...

மீள் பதிவு??

scenecreator said...

enna bathroom vanthuducha?

Suthershan said...

1. flight dance ஆடியிருக்கும்
2. சரக்கு (tiger ல சரக்கு காசு கொடுத்து வாங்கணும் ) ஒத்துக்காம ஆம்லேட் போட்டுருக்கணும்

என்ன ஆச்சு?

Jagannathan said...

நீங்க பேசிட்டே இருந்தபோது சாமி ஒண்ணும் பேசலயா? சரியாப் பாத்தீங்களா -அவரு சூயிங் கம் மென்னுட்டு இருந்திருப்பாரு! - ஜெ.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

தொடரட்டும்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று
அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

"என் ராஜபாட்டை"- ராஜா said...

tamilmanam 2

Ba La said...

இலங்கையின் உத்தியோகப் பற்றற்ற தூதுவர்கள் அமெரிக்கா வந்துள்ளார்கள்

பதிவலை

Lakshman said...

தப்பா நெனைக்காதீங்க.. Joyful Singapore தான் சரி.