அந்த ஆறு நாட்கள்...
சரியாக ஆறு நாட்கள் ஆகிவிட்டது.. நான் பதிவு எழுதி..அப்படி நான் பதிவெழுதாததால் பதிவுலகம் ஓன்றும் பாதித்ததாய் தெரியவில்லை.. பாலசந்தர், சுரேஷ், போன்ற பதிவர்கள் பின்னூட்டமிட்டும், ராஜ் தொலைபேசியிலும் விசாரித்தார்.. அவர்களுக்கு என் வந்தனம்.. கடைசியாய் பாபாவின் திருவிளையாடல் பதிவிட்டுவிட்டு என்னுடய இண்டர்நெட் இணைப்பை துண்டிக்க சொல்லிவிட்டேன்.. நான் என்னுடய் வீடு மாறியதால்.. அதற்கு பிறகு மிக பிஸியாய் இருக்க வேண்டிய நேரமாகிவிட்டது.. வீடு மாறியது ஓருபுறம், பேக்கிங் ஓருபுறம், இதற்கு நடுவில் ஓரு திரைப்படத்திற்க்கு திரைக்கதை விவாதம் வேறு ஓத்து கொண்டிருந்தேன்..ஓரு வழியாய் கலந்து கட்டி, ஞங்கே..மங்கே.. என்று குழப்பமாய் என் காரியங்களை செய்துவிட்டேன்.. அவ்வப்போது என் ப்திவுக்கு வந்த பின்னூட்டங்களை மட்டுறுத்தி வேலையை மட்டும் ப்ரவுசிங் செண்டரில் சென்று செய்துவந்தேன்.. ஓரு வழியாய் மூண்று நாட்களுக்கு பிறகு இண்டர்நெட் இணைப்பு புதிய வீட்டுக்கு கொடுக்கபட்டதும்.. எழுதலாம் என்று நினைத்து சிஸ்டத்தை பூட் செய்தபோது.. ஓரு மாதிரியான எண்ணை போடாத கீல் போல ஓரு சத்ததுடன் திரையில் வார்ட்ரோப் போட்டதுபோல் தோரணம் தோரணமாய் ஓர...