கொத்து பரோட்டா -08/06/15
மேகி நூடூல்ஸ் ப்ரச்சனை ஆரம்பித்து ஒருவிதத்தில் நல்லதே. மக்களிடம் விற்கும் பொருட்களின் குவாலிட்டி குறித்த கவனம் அதிகமாகும். ஆனால் அதே நேரத்தில் இத்தனை வருடமாய் இதை செய்ய வேண்டிய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? இதற்கு தரச் சான்றிதழ் கொடுத்த அரசு அதிகாரிகளின் மேல் என்ன நடவடிக்கை? என்று கேட்டீர்களானால் அதற்கு பதிலில்லை.