Posts

Showing posts with the label kumudam life

கொத்து பரோட்டா 2.0-24

கொத்து பரோட்டா 2.0-24 தமிழ் சினிமாவும் தமிழ் ராக்கர்ஸும் இணை பிரியாத எதிரிகளாகிவிட்டார்கள் . சிங்கம் படத்தின் துரைசிங்கம் தமிழ் ராக்கர்ஸை கண்டு பிடிப்பதுதான் சிங்கம் 4 படத்தின் கதை என்று மீம்ஸ் வரும் அளவுக்கு அவர்களின் அட்ராசிட்டி அதிகமாகிவிட்டது . நீ படத்த ரிலீஸ் பண்ணு , நான் காலையில லைவ்வுல போடுறேன் என்று சவால் விடும் அளவிற்கு . சிங்கம் படம் ரிலீஸான நேரத்தில் அவர்களும் லைவில் படம் போட , அதை முடக்க இவர்களின் நடவடிக்கை என பரபரப்பாகவே இருந்தது . பைரஸி நிச்சயமாய் சினிமாவை முடக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை . பெரிய படங்கள் என்றில்லாமல் . சின்ன படங்கள் கூட ஹெச் . டியில் பைரஸியில் வெளியாகிறது . பெரும்பாலான சின்னப்படங்களின் பைரஸி , வெளிநாட்டு உரிமைகள் விற்கப்படும் போது , அடியில் கண்ட சொத்துகள் அனைத்தும் என்கிற ரீதிரியில் டிஜிட்டல் உரிமங்களைக் கூட விற்று விடுகிறார்கள் மிகச் சகாய விலைக்கு . நான் இயக்கிய தொட்டால் தொடரும் படத்தினை தயாரிப்பாளர் யாருக்கும் விற்கவில்லை . வெளிநாட்டு உரிமையை அவரே வைத்திருந்தார் . சிங்கப்பூர் , மலேசியாவில் திரையிட்டார் . யாருக்கும் டிஜிட்டல் உரிமையை கொ...