கொத்து பரோட்டா -18/02/13
குமுதம் ரிப்போர்டர் வந்திருக்கும் கலைஞர் - குஷ்பு விவகாரம் ஆபாசத்தின் உச்சம். குமுதம் குடும்பப் பிரச்சனையின் போது எதிர்தரப்பில் கலைஞர் நின்றார் என்பதற்காக எடுக்கப்பட்டிருக்கும் பழி வாங்கும் நடவடிக்கையாய்த்தான் இந்த கட்டுரை அமைந்திருக்கிறது. எவ்வளவு கீழ்தரமாக எழுத முடியுமோ அவ்வளவு கீழ்தரமாய் இறங்கி அடித்திருக்கிறார்கள். அதுவும் பெண் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணம் மிக மோசமான விஷயம். இவர்களை கொச்சைப் படுத்த பெரியாரையும், மணியம்மையையும் இழுத்திறுப்பது படு கொடுமை. இதே முறையில் எந்த ஒர் கட்சி தலைவரை பற்றி எழுதியிருந்தாலும் கண்டிக்கத்தக்க, எதிர்க்கப்பட வேண்டிய விஷயம். @@@@@@@@@@@@@@@@@@@@@