Posts

Showing posts with the label அரசு கேபிள்

கொத்து பரோட்டா -16/12/12

Image
கேட்டால் கிடைக்கும் இன்றைய தினத்தந்தி வெறும் பதினெட்டு பக்கத்தோடு வர, பக்கத்தை சரி பார்க்க மேலே பார்த்தால் இன்றைய விலை 900 காசுகள் என்று போட்டிருந்தது. வெறும் சினிமா விளம்பரம் பாக்க, தெனம் வாங்கிக் கொண்டிருக்கும் இந்த பத்திரிக்கைக்கு ஒன்பது ரூபாயா ஏன் என்று பார்த்த போது கேலண்டருடன் என்று போட்டிருக்க, செம கடுப்பாகி விட்டது. யார் கேட்டார்கள் இந்த கேலண்டரை. வாடிக்கையாளர் கேட்காமலேயே அவர்களுக்கு எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் திருட்டுத்தனமாய் விலையேற்றி விற்பது குற்றமல்லவா?. இதே முறையைத்தான் தினமலரும் செய்கிறது. ஊருக்குத்தான் உபதேசமெல்லாம் போல. தினசரிகளை தினமும் கடைகளில் போய் வாங்குகிறவர்களுக்கு விலை பார்த்து வாங்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் மாத கணக்கில் பேப்பர் போடுகிறவர்களை வைத்து பேப்பர் வாங்குபவர்களுக்கு அடுத்த மாத பில் வரும் போதுதான் தெரியும். இவர்களின் இந்த தில்லு முல்லு வேலை. அதற்குள் அந்த கேலண்டர் குப்பைக்கோ, அல்லது எங்கோ மாட்டப்பட்டுவிட, வேறு வழியில்லாமல் ஐந்து ரூபாய்தானே என்று கொடுத்துவிடுவார்கள். யோசித்துப் பாருங்கள். ஒரு லட்சம் பேப்பருக்கு காலண்டருடன் விற்றிருந்தால் ஐந்து லட...

கேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கல் தள்ளிவைப்பு பின்னணி என்ன?

நியாயமாய் இன்று முதல் சென்னையின் எல்லா டீவிக்களிலும் அனலாக் சிக்னல் கட்டாகியிருக்க வேண்டும். ஆனால் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஹைகோர்ட்டில் கேஸ் போட்டு வருகிற 5 ஆம் தேதி வரை தடையுத்தரவு வாங்கியிருக்கிறார்கள். அனலாக் சிக்னல்களை கட் செய்து முழுவதும் டிஜிட்டல் மயமாக்கும் மத்திய அரசின் ட்ராயின் சட்ட அமலாக்கத்தை தடுப்பது ஏன்? என்று கேட்டால் அதற்கு முக்கிய காரணம் செட்டாப் பாக்ஸ்கள் ஆப்பரேட்டரிடமோ, எம்.எஸ்.ஓவிடமோ இல்லாமையும், இத்தொழிலில் சென்னையில் மட்டும் நிலவும் குழப்பமும்தான்.

கொத்து பரோட்டா -05/09/11

Image
யூத்துகளின் சந்திப்பு நேற்று மாலை டிஸ்கவரியில் நடந்த யூத் பதிவர் சந்திப்பு கிண்டலும்,  கேலியுமாய் யூத்புல்லாய் நடைபெற்றது. ம.போ.சியின் பேத்தியும் வந்திருந்தார். புதிதாய் எழுத வந்திருக்கும் அத்துனை இளைஞர்களையும் ஒரு சேர சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. நிகழ்ச்சியில் பேசிய யுவகிருஷ்ணா, உருப்படாத நரேன், ஜாக்கி, ராஜ் சுந்தர்ராஜன், மெட்ராஸ் பவன் சிவகுமார், ஆகியோரின் பேச்சு சீரியஸாகவும் போயிற்று. கணிணியில் தமிழில் எழுத முடியும் என்று தெரியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய முடியுமா? என்று கேட்டார்கள். நிச்சயம் முடியும். ஏன் நாம் ஒரு குழுவாய் இணைந்து, இதற்கான ஒரு பயிற்சி பட்டறையை செய்யக்கூடாது?. மற்றபடி வாசலில் இருந்து வரவேற்ற சிவகுமார், பிலாசபி பிரபாகரன் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது.:) ####################################################