Thottal Thodarum

Dec 17, 2012

கொத்து பரோட்டா -16/12/12

கேட்டால் கிடைக்கும்
இன்றைய தினத்தந்தி வெறும் பதினெட்டு பக்கத்தோடு வர, பக்கத்தை சரி பார்க்க மேலே பார்த்தால் இன்றைய விலை 900 காசுகள் என்று போட்டிருந்தது. வெறும் சினிமா விளம்பரம் பாக்க, தெனம் வாங்கிக் கொண்டிருக்கும் இந்த பத்திரிக்கைக்கு ஒன்பது ரூபாயா ஏன் என்று பார்த்த போது கேலண்டருடன் என்று போட்டிருக்க, செம கடுப்பாகி விட்டது. யார் கேட்டார்கள் இந்த கேலண்டரை. வாடிக்கையாளர் கேட்காமலேயே அவர்களுக்கு எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் திருட்டுத்தனமாய் விலையேற்றி விற்பது குற்றமல்லவா?. இதே முறையைத்தான் தினமலரும் செய்கிறது. ஊருக்குத்தான் உபதேசமெல்லாம் போல. தினசரிகளை தினமும் கடைகளில் போய் வாங்குகிறவர்களுக்கு விலை பார்த்து வாங்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் மாத கணக்கில் பேப்பர் போடுகிறவர்களை வைத்து பேப்பர் வாங்குபவர்களுக்கு அடுத்த மாத பில் வரும் போதுதான் தெரியும். இவர்களின் இந்த தில்லு முல்லு வேலை. அதற்குள் அந்த கேலண்டர் குப்பைக்கோ, அல்லது எங்கோ மாட்டப்பட்டுவிட, வேறு வழியில்லாமல் ஐந்து ரூபாய்தானே என்று கொடுத்துவிடுவார்கள். யோசித்துப் பாருங்கள். ஒரு லட்சம் பேப்பருக்கு காலண்டருடன் விற்றிருந்தால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு வாங்குபவர்களின் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ விற்றாகிவிட்டது. நாளை இதே டெக்னிக்கை வைத்து ஒரு ஷாம்பூ பாக்கெட் கொடுத்துவிட்டு, கூட ரெண்டு ரூபாய் போட்டு விட்டால் யாருக்கு தெரியப் போகிறது. இதை கேட்டே ஆக வேண்டும்  என்று முடிவெடுத்து எனக்கு பேப்பர் போடுகிறவரிடம் “இன்னைக்கு போட்டிருக்கிற கேலண்டரை நான் கட்டாயம் வாங்கித்தான் ஆகணுமா?” என்று கேட்டேன். அவர் கொஞ்சம் தயக்கத்துடன் “ ஆமா சார்.. விலையில போட்டிருக்கு இல்லை.. “ என்று இழுக்க, “அப்ப இன்னைக்கு எனக்கு தந்தி வேணாம்” என்றேன். சற்று யோசித்தவர்..”சரி சார்.. வேணாம்னா.. நான் கேலண்டரை திரும்ப வாங்கிட்டு பேப்பர் விலை மட்டும் போட்டுக்கிறேன்” என்றார். தயவு செய்து இம்மாதிரியான விஷயங்களை ஐந்து ரூபாய் தானே என்று யோசித்து விட்டு விடாமல் உடனே உங்கள் பேப்பர் போடுகிறவரை கூப்பிட்டு கேளுங்க. அல்லது தினத்தந்திக்கு போன் செய்யுங்கள். இது அநியாயக் கொள்ளை. உங்கள் பேப்பர் போடுகிறவருடன் விலை குறைக்க முடியாது என்றால் இன்றைய பேப்பர் தேவையில்லை என்று சொல்லிவிடுங்கள். ஒரே நாளில் இம்மாதிரி பல ஆயிரம் பேப்பர்கள் திரும்ப வரும் போது பேப்பர்காரனுக்கு புரியும். இல்லாவிட்டால் தினத்தந்தி அலுவலகத்திற்கே போன் செய்து உங்கள் கண்டனத்தை தெரிவிக்கவும் http://www.asklaila.com/listing/Chennai/Vepery/Daily+Thanthi/1uQwHcze/. சென்ற வாரம் நண்பர் ஒருவர் இதே போல தினமலர் பேப்பரிடம் பேசியிருக்கிறார். மூன்று பேப்பர்கள் வாங்கினால் மூன்று கேலண்டரையா வைத்துக் கொள்ள முடியும்? கேட்டால் கிடைக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@குலதெய்வ கோயிலுக்கு ஒர் பயணம். உளுந்தூர்பேட்டை டோலிலிருந்து பைபாஸில் கும்பகோணம் பயணம். அங்கே இங்கே என்று ஒரு சில கிலோ மீட்டர்கள் தவிர சாலைகள் நன்றாகவே இருந்தது. நானோவில் இன்னொரு தொடர் பயணம். நான் ஓவர் டேக் செய்யும் போதெல்லாம் வண்டிக்காரர்கள் எட்டிப் பார்ப்பதை பார்த்தால் டாடாகாரர்கள் சந்தோஷமாவார்கள். கும்பகோணம் மேலும் நெரிசலாகிக் கொண்டிருக்கிறது. ரூட் பஸ்கள் இருக்கும் தக்குணூண்டு இருபது அடி ரோடில் மாலை ஆறு மணிக்கு அசுர ஸ்பீடில் ஓவர்டேக்கெல்லாம் செய்கிறார்கள். இதயம் துடிக்கிற துடிப்பில் வாய் வழியாய் வந்துவிடும் போலிருக்கிறது. இப்போதும் கோயில் சுவர்களில் போஸ்டர் ஒட்டிக் கொண்டுதானிருக்கிறார்கள். அதே சுவற்றில் இங்கே போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எழுதிக் கொண்டுதானிருக்கிறார்கள். வாசு தியேட்டரில், ஃபுல் ஹெச்டி , 7.1  சர்ரவுண்ட் சவுண்ட் போட்டிருக்கிறார்கள். சுவாமிமலையில் மாலை நேர பிரகார சுற்றல் அருமையாய் இருந்தது. குலதெய்வ அபிஷேகமெல்லாம் முடிந்து திருநாகேஸ்வரம் போய் ராகுவை ஐஸ்வைத்துவிட்டு வரலாம் என்று போயிருந்தோம். நல்ல கூட்டம். அர்ச்சனை செய்த குருக்களுக்கு ஒவ்வொரு அர்ச்சனைக்கும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அர்ச்சனைச் சீட்டு தொகையில் பங்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படியிருக்க, தட்சணை கொடுங்கோ என்று கேட்டு வாங்குவது கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது. NH45 முழுவதும் கும்பகோணம் டிகிரி காப்பிக் கடையாகவே இருக்கிறது. ஒரு சிலதில் ஒன் அன் ஒன்லி என்று ஸ்பெஷல் கொட்டேஷன் எல்லாம் போட்டு விளம்பரம் வேறு.நான் வீட்டிற்கு வந்து காப்பி குடித்தேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@
அரசு கேபிளில் பாதி சேனல்கள் மொக்கையாய்த்தான் வருகிறது. சென்ற முறைக்கு இம்முறை ரெண்டு மூன்று லோக்கல் சேனல் அதிகமாகியிருக்கிறது. போன முறை மெயின் லைனில் வந்த சேனல்கள் எல்லாம் இப்போது இருப்பதிலேயே கடைசி சேனல்களாய் வந்து கொண்டிருக்கிறது. ஏன் என்று சில சேனல் சி.ஈ.ஓக்களிடம் கேட்ட போது , காசு கொடுக்காட்டி அப்படித்தான் என்றார்கள். போனமாதம் தெரிந்த சேனல் இந்த மாதம் தெரிவதில்லை.பதிமூன்று மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாததால் மக்கள் இன்வெர்டர், ஜெனரேட்டருக்கு பழக்கப்பட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட குடிசை வீட்டின் வாசலில் கூட ஒரு சின்ன இன்வெர்ட்டர் இருக்கிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@
அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகளை சரமாரியாய் சுட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்டவனைப் பற்றி படிக்கும் போது அடிவயிறு எரிகிறது. இறந்து போன குழந்தைகளை நினைத்து நெஞ்சம் பதறுகிறது.யார் பெத்த புள்ளையானாலும் புள்ள புள்ளதானே? சமீபகாலமாய் எவனோ ஒருவனின் மூளைச் சூட்டால் சம்பந்தமேயில்லாமல் மக்கள் கொல்லப்படுவது குறித்து அமெரிக்கா அரசு யோசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. முக்கியமாய் துப்பாக்கி கலாச்சாரத்தை நிச்சயம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
ஏண்டா மிஸ் கால் கொடுத்தா கூப்பிட மாட்டியா? கட் பண்றேன் நீ கூப்பிடு # வாங்கிங் அவதானிப்பு

ஆபீஸ் போகும்பெண்கள் அத்துனை பேரும் ஹெட்போனில் பேசி கொண்டும், வெட்க சிரிப்பு சிரித்துக் கொண்டும்தான் செல்கிறார்கள். #வாங்கிங் அவதானிப்பு

Alex Pandian may join with dth bandwagon #sepculation.

எதிர்நீச்சல் விளம்பரத்தில் இண்டர்நெட், சிடி, யூடியூப், பைரஸி சைட் என்று எல்லாத்தையும் கலாய்த்து விளம்பரம் போட்டிருக்காங்க.. இண்ட்ரஸ்டிங்

சமயங்களில் அல்ப வார்த்தைகளூக்கெல்லாம் ஸ்பெல்லிங் மறந்துவிடுகிறதே.. ஏன்?

போஸ்டர்கள் பற்றி ஒரு சுவாரஸ்ய இண்டர்வியூ கொடுத்தேன் தந்தி டிவியில்.

கேபிள் உரிமையாளர் சங்க தலைவர் விட்டிருக்கும் அறிக்கைக்கும் நிஜமாகவே உரிமையாளராய் இருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. # விஸ்வரும்

மூன்று பேர் மூன்று காதல் பாடல்கள் க்யூட்.

பட அதிபர்கள் கமலுக்கு ஆதரவு. # பண்ணித்தானே ஆகணும்.

அவசரமான நேரத்தில் உனக்காக காது கொடுப்பவனை விட, உனக்கு தேவையான நேரத்தில் உனக்காக நேரம் ஒதுக்குபவனே நண்பன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
இக்குறும்படம் ஐரோப்பிய நாடுகளில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்கிறார்கள். ஈழ போராட்டத்திற்காக தன் மூன்று பிள்ளைகளை இழந்த ஒரு வயதான பெண்ணின் மன உணர்வினை மாவீரர் தினம் ரெண்டு குழுக்களால் தனித்தனியாய் நடத்தப்படுவதை குறித்த குறும்படமிது. பார்த்த மாத்திரத்தில் தொண்டையடைத்து நெகிழ வைக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
இந்த பாடலை எப்போது கேட்டாலும் பிடிக்கும். பாடல் முழுதும் ஒரு விதமான துள்ளல் இருக்கும். உலகையே ஆட்டி வைத்த இசைக்குழுவின் பாடல். இவர்களின் “ABBA" திரைப்படத்தின் ஓப்பனிங் காட்சியை பார்க்க வேண்டும் அவ்வளவு அட்டகாசமாய் இருக்கும். அப்படத்தின் முதல் காட்சியில் லிப்டினுள் அக்குழுவினர் இருக்க, லிப்ட் கதவு திறக்கும் போது அக்குழுவில் உள்ளவர் கையை விரிக்க, லிப்ட் கதவு திறக்கும் போது ஸ்கீரினும் அகலமாய் விரியும். தமிழில் நினைத்தாலே இனிக்கும்  படமே அப்படத்தின் தாக்கத்தில் உருவானது என்றும் சொல்வார்கள். இதே ட்யூனில் ஹிந்தி, தமிழ், என்று இந்திய மொழிகள் அத்தனைகளிலும் ஏதோ ஒரு வகையில் இன்ஸ்பயர் ஆகி உருவான பாடல்கள் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல.
@@@@@@@@@@@@@@@@@@@@
விஸ்வரூபம்
படத்தை டிகோடட் ரிஸிவரில் ஒளிபரப்பினால் காப்பி செய்து டிவிடி வந்துவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு ஒர் நற்செய்தி. ரெக்கார்ட் செய்ய முடியாதபடியான டெக்னாலஜி நிறைய இருக்கிறதாம். இதோ அதன் நிரலி. http://en.wikipedia.org/wiki/Windows_Media_DRM . மலேசிய ஆஸ்ட்ரோவில் இம்மாதிரியான டெக்னாலஜிக்களை சிறப்பாக உபயோகப்படுத்துகிறார்களாம்.இதற்கு மாற்று ஏதாவது கண்டு பிடித்து அதை உடைத்து ரெக்கார்ட் செய்ய முடியும் என யாராவது புதுசாய் கண்டுபிடித்திருக்கலாம். ஃபிங்கர்ஸ் க்ராஸ்ட். எனவே அடுத்ததாக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஒரே நாளில் அவர்களது நெட்வொர்க்கில் ஆயிரம் ரூபாய் கட்டி அப்படியே ஒளிபரப்பிவிடுவார்கள் என்று வேண்டுமானால் பேச ஆரம்பிக்கலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Seven wise men with knowledge so fine, created a pussy to their design.First was a butcher,with smart wit,using a knife, 
he gave it a slit,Second was a carpenter,strong and bold, with a hammer and chisel,he gave it a hole, 
Third was a tailor, tall and thin,by using red velvet,he lined it within, Fourth was a hunter,short and stout,with a piece of fox fur, he lined it without,Fifth was a fisherman,nasty as hell,threw in a fish and gave it a smell, Sixth was a preacher, whose name was McGee,he touched it and blessed it,and said it could pee,Last was a sailor,dirty little runt, he sucked it and fucked it,and called it a cunt
கேபிள் சங்கர்

Post a Comment

11 comments:

bandhu said...

//சமயங்களில் அல்ப வார்த்தைகளூக்கெல்லாம் ஸ்பெல்லிங் மறந்துவிடுகிறதே.. ஏன்?//
//sepculation//
:-)

Arun Kumar said...

AirTel , Tata sky இரண்டு பேருமே ஏன் astro கூட NDS Middleware தான் உபயோகபடுத்திறார்கள். இதில் ஏதாவது ஓரு சானலை ரிகார்ட் செய்யாமல் தடுக்கும் தொழில் நுட்பம் உள்ளது. விஸ்வரூபம் pay per view ஆக வருவதால் ரிகார்ட் செய்தாலும் சில நாட்களுக்கு பின்னர் தானகவே டிஸ்க்கில் இருந்து அழிந்து விடும். இது எல்லாம் செட்டாப் பாக்கிஸ் இருக்கும் வசதி. ஆனால் இங்கு பல பேர் டிவியில் இருந்து டாப்பிங் கார்டு அல்லது செட்டாப் பாக்ஸ் AV portல் இருந்து தான் காப்பி செய்கிறார்கள்

இதை எல்லாம் தடுக்க முடியாது.

Hari said...

Direct'a dth la irundhu vena record pannama thadukalam. En friend house la tv la ye record pannikara option iruku. Andha madhiri record panna onnum panna mudiyadhu. Hm. Varattum. Vandha namakum laabam dhan. Ini ella padatthayum theatre la parkanum nu avasyam illa. Nalla print e udanadiya parkalam. 4 per padam parka pona 480 agudhu. Ini 40 rs la nalla clarity yana padattha kudumbathoda parkalam. Kamal ku nanri.

rajamelaiyur said...

//எதிர்நீச்சல் விளம்பரத்தில் இண்டர்நெட், சிடி, யூடியூப், பைரஸி சைட் என்று எல்லாத்தையும் கலாய்த்து விளம்பரம் போட்டிருக்காங்க.. இண்ட்ரஸ்டிங்
//
நானும் பாத்தேன் .. அருமை .. தனுஷ் பாடல் நன்றாக இருக்கு

rajamelaiyur said...

//
அவசரமான நேரத்தில் உனக்காக காது கொடுப்பவனை விட, உனக்கு தேவையான நேரத்தில் உனக்காக நேரம் ஒதுக்குபவனே நண்பன்.
//

உண்மை ..

அன்புடன்
ராஜா
FACEBOOK TRICKES

vanavilselva said...

தின தந்தி பேப்பர்ஆ வாங்கறீங்க ??????????!!!!!!!!!!!!!!!!!!!

pichaikaaran said...

"எனவே அடுத்ததாக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஒரே நாளில் அவர்களது நெட்வொர்க்கில் ஆயிரம் ரூபாய் கட்டி அப்படியே ஒளிபரப்பிவிடுவார்கள் என்று வேண்டுமானால் பேச ஆரம்பிக்கலாம்."

நெட்டில் ஒளிபரப்பும் வாய்ப்பும் இருக்கிறதே..

SANKAR said...

கேபிளஅண்ணே வணக்கம் கேட்டால் கிடைக்கும் மூலம் இந்த theatre கட்டண கொள்ளையை தடுகக முடியுமா? சங்கர் திருநெல்வேலி

r.v.saravanan said...

இன்றைய பேப்பர் தேவையில்லை என்று சொல்லிவிடுங்கள். ஒரே நாளில் இம்மாதிரி பல ஆயிரம் பேப்பர்கள் திரும்ப வரும் போது பேப்பர்காரனுக்கு புரியும்.

yes sankar sir

ஆத்மா said...

நான் கூட ஜோசிக்காம 5 ரூபாய தோக்கிக் கொடுத்துடுவேங்க... 5 ரூபாதானே என்னுதான் பார்ப்பேன்...
பட் அந்த 5 ரூபா எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்து என்கிறது இப்பதான் எனக்குப் புரியுது...

மற்றவை எல்லாமுமாக சேர்ந்து கலக்கல் பதிவு

SFSDRC said...

Adult Jokes spoil the image and respect on ur social care..