கொத்து பரோட்டா - 10/12/12

நேற்று முன் தினம் காந்தி மக்கள் இயக்கம் நடத்திய பாரதி விழாவுக்கு அதன் அமைப்பாளர்கள் அழைத்திருந்தார்கள். கவியரங்கமும், பட்டிமன்றமும் நடந்தேறியது. சனி மாலையில் பாரதி விழாவிற்காக அரங்கு நிறைந்திருந்தது ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. கடைசியாய் தமிழருவி மணியன் பேசினார். இவரது பேச்சை முதல் முறையாய் கேட்கிறேன். நிஜமாகவே தடதடவென அருவி போல நடு மண்டையில் தடேலென்று விழுந்து பொறிகலங்க வைக்கும் பேச்சு. பேச்சின் நடுவே கூட்டத்தில் யாரோ சலசலவென பேச, அதே வேகத்தில் ”பேசறவங்க வெளிய போயிருங்க” என்று சொல்லிவிட்டு தடையில்லாமல் மீண்டும் பேச ஆரம்பித்தார். வந்தேமாதரம் என்போம் என்கிற பாடலுக்கு அவர் கொடுத்த விளக்கமும், அவரது பாடி லேங்குவேஜும் அட்டகாசம்.  மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பேச்சு.
@@@@@@@@@@@@@@@@@



செவிக்கினிமை
சென்ற மாதம் தான் நெஞ்சுக்குள்ளேவை வெளியிட்டார்கள். இன்று இந்த பாடல். ஒவ்வொரு பாடலாய் வெளியிட்டு பில்டப் ஏற்றிவிடுவது கூட சுவாரஸ்யமாய்த்தான் இருக்கிறது. நெஞ்சுக்குள்ளேவைப் போல சட்டென கேட்டவுடன் பிடிக்கவில்லை என்றாலும் கேட்க கேட்க பிடிக்கும் போலருக்கு. இந்த ஏலே கீச்சான். கொஞ்சம் முஸ்தபா முஸ்தபா சாயலடிக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
சமயங்களில் தவறான பாதை சரியான வழியை காட்டும்

சமயங்களில் நம் குழந்தைத்தனம் வெளிப்படுவது உடல் நலத்திற்கு நல்லது.:))

மன்னிப்பு கேக்குறவன் மனுஷன், மன்னிக்கிறவன் பெரிய மனுஷன் # கமல் பஞ்ச்

வீரம்னா என்னா தெரியுமா பயம் இல்லாம நடிக்கிறது # கமல் பஞ்ச்

வாசலில் விற்கும் வெங்காய சமோசா சூடு ஆறுவதற்குள் சாப்பிட்டால் நன்றாக இருக்கிறது.

விக்கிபீடியா, ஐ.எம்டி.பியில் ஆங்கிலத்தில் படிக்கத் தெரிந்தவர்களுக்கு அவ்வளவு சுவாரஸ்யமில்லை என்றே சொல்ல வேண்டும்.

தெருவோர டீக்கடையில் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருந்தவனை கவுன்சிலராக்கி அழகு பார்க்கும் நமக்கு ஊழலைப் பற்றி பேச அருகதையில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அம்புலி பட இயக்குனர்களிடமிருந்து போன். ‘ஜி சாயங்காலம் மீட் பண்ணலாமா?”.  சரி என மாலை சென்று சந்தித்தேன். உங்க முகமூடி கதையை படிச்சேன் எங்க அடுத்த படத்துக்கு யூஸ் பண்ணலாம்னு பாக்குறோம் ஓகேன்னா எங்களுக்கு தர்றீங்களா?” என்று கேட்டார்கள். சந்தோஷமாய் தருகிறேன் என்று சொல்லிவிட்டு பேசிக் கொண்டிருந்த போது வேறொரு போன் வந்தது. இன்னொரு இயக்குனர் நண்பர் பேசினார். அவரும் கதை படித்துவிட்டு ஒரு குறும்படமாய் எடுக்கலாம்னு நினைக்கிறேன் என்றார். நான் வித்துப் போச்சு என்று சொன்னதும் “நேரம்யா” என்றார். என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தேன். இவர்கள் இயக்கிய ‘ஓர் இரவு” படத்தை நமக்காக ஸ்பெஷல் திரையிடல் செய்ய கேட்டிருந்தேன். நிச்சயம் என்றார்கள். எப்போது வைத்துக் கொள்ளலாம் நண்பர்களே. சென்ற வருட சென்னை உலகப் பட விழாவில் கலந்து கொண்ட படம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எம்.ஜி.அர் நினைவிடத்தை புதுப்பித்து கட்டியிருக்கிறார்கள். ரெட்டை இலையெல்லாம் ஓகே. எதுக்காக தங்கநிற பறக்கும் குதிரையை வைத்து இருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஏதாவது வாஸ்து கீஸ்து தாக்கீதாக இருக்குமோ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மருத்துவரின் பேட்டியை ஒரு டீசராய் தந்தி டிவியில் போட்டிருந்தார்கள். அப்பட்டமான ஜாதி அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார். சமீபத்திய தலித்- வன்னிய காதல் ப்ரச்சனையைப் பற்றி அவர் பேசியது எஸ்கேபிசம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
இந்த பாடலைப் கேட்கும் போதும், பார்க்கும் போதும் ஒரு உற்சாகம் பிறக்குமெனக்கு. பாடலும, இடையே வரும் பிஜிஎம்லில் புகுந்து விளையாடி அட்டகாசம் செய்திருப்பார் மொட்டை. கமலின் கண்களில் தெரியும் குறும்பு, காதல். பரதநாட்டியம் ஆடத் தெரியாத மாதவியின் கண்களை மட்டுமே வைத்து சமாளித்த பாரதிராஜா. பெண் உடலை வீணையாய் மீட்டும் ஐடியாவை வைத்து எடுக்கப்பட்ட ஷாட்களும், அதன் பின்னணியில் வரும் ஸ்வரங்களும் க்யூட்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவுக்கு ஒளிப்பதிவாளர் ராணா அழைத்திருந்தார். முதல் பட ஹிட் கொடுத்த இயக்குனர்கள் ஈரம் அறிவழகன், நான் ஜீவா சங்கர், பிட்சா கார்த்திக் சுப்பாராஜ், அட்டக்கத்தி ரஞ்சித், ஆரண்யகாண்டம் குமாரராஜா, ந.கொ.ப.காணோம் பாலாஜி ஆகியோரை அழைத்து ஒவ்வொரு பாடலையும், ட்ரைலரையும் அறிமுகப்படுத்தியது சுவாரஸ்யம். ட்ரைலரையும் பாடல்களையும் பார்த்த மாத்திரத்தில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியதியிருப்பது உண்மை. 
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
what does a pussy and a sponge have in common?the more they absorb the better it fells for them

கேபிள் சங்கர்

Comments

CS. Mohan Kumar said…
Congrats Cable for Mugamoodi.
a said…
//
நான் வித்துப் போச்சு என்று சொன்னதும் “நேரம்யா” என்றார்.என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தேன்
//
நல்ல நேரம்ன்னு சொல்லுங்க‌ தல.....
புரோட்டா சரியில்லை ;(
Unknown said…
Congrats, and did you removed the "Mugamoodi" post, I searched for, but didn't find that.
Unknown said…
இன்னும் கொஞ்சம் சுவைய போட்டுருக்கலாம் விஷயம் நெறைய இல்லை
pichaikaaran said…
' இயக்கிய ‘ஓர் இரவு” படத்தை நமக்காக ஸ்பெஷல் திரையிடல் "

இந்த படத்தின் சிடி க்காக அலைந்து பார்த்து , கடைசிவரை வாங்க முடியவில்லை .
r.v.saravanan said…
உங்க முகமூடி கதையை படிச்சேன் எங்க அடுத்த படத்துக்கு யூஸ் பண்ணலாம்னு பாக்குறோம் ஓகேன்னா எங்களுக்கு தர்றீங்களா?” என்று கேட்டார்கள்.

congrats sankar sir
Balaji said…
Cable sir I am eager to see Oor iravu movie...my number 9790963642 Pls call me for special show
Balaji said…
Eager to watch oor iravu pls call me for special show 9790963642 is my number
வாழ்த்துக்கள்!
R. Jagannathan said…
Nalla Neram vanthaachu! Wish to see Cable in big screen (in front of and / or from behind the camera) more from 2013 onwards! (Ulagam azinju thirumbi poranthudum!) - R. J.
krishna said…
konjam Thamizharuvi ayyavoda pechayum video eduthu inga pottu irunthaa naangalum kettiruppomae...
krishna said…
தமிழருவி அய்யாவோட பேச்சை இங்க பதிவிட்டு இருந்தா நாங்களும் கேட்டிருப்போமே ....
//நெஞ்சுக்குள்ளேவைப் போல சட்டென கேட்டவுடன் பிடிக்கவில்லை//

இந்த மொக்கை பாட்டுக்கே இவ்வளவு விசுவாசம் என்றால் படத்துக்கு எவ்வளவு காட்டுவீங்க சங்கர்?

மீனவர் வாழ்க்கைக்கு ஏன் மதுரை தமிழில் பாட்டு? இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்.
காத்தவராயன். படமே பார்க்காமல் அது மீனவ்ர் வாழ்கையை சொல்லும் படம் என்று நீங்களாகவே முடிவெடுத்தால் அதற்கு என்ன பெயர்
//ட்ரைலரையும் பாடல்களையும் பார்த்த மாத்திரத்தில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியதியிருப்பது உண்மை. //

இது எப்படியோ அதுவும் அப்படித்தான். கடல்-ட்ரைலர்

நீங்கள் மறுபடியும் மறுபடியும் ஓர் மணிரத்னம் வெறியர் என்று நிரூபிக்கிறீர்கள்.

மதுரை தேனி வட்டாரத்தில் கடலை நான் இதுகாரும் கண்டதில்லை. உங்கள் குரு படத்தில் இதுவும் சாத்தியமாகலாம், ராவணினில் வடஇந்திய மாடமாளிகைகளும் நெல்லையில் சாத்தியமாயிற்றே!

ராவணனிலும் மதுரை கதைக்களமாக இல்லாவிட்டாலும் மதுரை தமிழில்தான் பாட்டு இருக்கும் அதையாவது ஒப்புக்கொள்வீர்களா? இல்லை குரு பக்தியை காட்டுவீர்களா?

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்