Thottal Thodarum

Dec 15, 2012

நீ தானே என் பொன்வசந்தம்.

 விண்ணைத்தாண்டி வருவாயாவிற்கு பிறகு கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். அதற்கு முக்கிய காரணம், இளையராஜாவின் இசை. பாடல்கள் வெளியாகி கிட்டத்தட்ட ரெண்டு மாதங்களுக்கு மேல் இருந்தாலும் இன்றும் இசை ரசிகர்களிடையே இப்பட பாடல்களைப் பற்றி சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


வருண், நித்யாவின் காஃப் லவ், அடலசண்ட் லவ், காலேஜ் லவ், கொஞ்சம் மெச்சூர்டான லவ் என நான்கு பாகங்களாய் கதை விரிகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வோர் ப்ரச்சனை காரணமாய் இருவரும் பிரிகிறார்கள். குட்டிக் குட்டி ஈகோவினால். வளர்ந்து மெச்சூர்டான பிறகு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் கதை.

வருணாக ஜீவா, நித்யாவாக சமந்தா. இரண்டு பேரின் இளைக்காலம் முதல் மெச்சூர்டான காலம் வரையிலான நடிப்பு மிக இயல்பு. படத்தின் முதல் காட்சியிலேயே காலேஜ் கல்சுரலில் நித்யாவைப் பார்த்த மாத்திரத்தில் மீண்டும் பழைய நட்பை புதுப்பிக்க, நீதானே எந்தன் பொன்வசந்தம் பாடலைப் பாட, ஜீவாவை கவனிக்காத மாதிரி வெட்கமும், பெருமிதமுமாய் கண்கள் அலைபாய, இடது பக்கம் சிரிக்காமல் சிரித்து, கொஞ்சம் கண்கள் லேசாய் சிரிக்கும் சமந்தாவை பார்தால் நமக்கும் ஜீவாவிடம் வரும் ஜுரம் பற்றிக் கொள்ளும்.அவ்வளவு க்யூட். இரண்டு பேருக்குமிடையேயான டயலாக்குகள் வெட்கப் பார்வைகள், நண்பர்களிடையே இருக்கும் நெருக்கம் என்று எல்லாமே இன்றைய மிடில் க்ளாஸ், மற்றும் உயர்வகுப்பு ஆண், பெண்களின் நிலையை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் பெரிய பலம் சந்தானம். அவர் ஆங்கிலம் பேசுவது கொஞ்சம் ஹார்டாக இருந்தாலும் முதல் பாதி முழுவதும் நம்மை கலகலப்பாக கொண்டு போக உதவுகிறார். 
ஓம்பிரகாஷ், எம்.எஸ்.பிரபு, எஸ்.ஆர்.கதிர் ஆகியோரின் ஒளிப்பதிவு இக்கதைக்கு வலு சேர்க்கும் விதமாகவே அமைந்திருக்கிறது. முக்கியமாய் ஜீவாவும், சமந்தாவும் பிரியும் இடத்தில் ஜிம்மி ஜிப்பில் ஒரே ஷாட்டில் அவ்வளவு பெரிய காட்சியை படமாக்கியிருக்கும் விதம் அட்டகாசம். ஆண்டனியின் எடிட்டிங் வழக்கம் போல் பத்து செகண்ட் ஜம்ப் இல்லாமல் மெதுவாக, அழகாக எடிட் செய்திருக்கிறார். படத்தில் பலம் என்று சொல்லப் போனால் இளையாராவின் பாடல்கள் என்று சொன்னாலும், பின்னணியிசையில் கொஞ்சம் பழைய வாடை அடிக்கத்தான் செய்கிறது. எனக்கென்னவோ இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இருந்திருந்தால் ஒரு பெப் கிடைத்திருக்குமோ என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது. ராஜாவின் வெறிபிடித்த ரசிகனாய் இருந்தும் இது எனக்கு தோன்றுவது ஆச்சர்யமாக இருக்கிறது.
எங்கே விண்ணைத்தாண்டி வருவாயோ படத்தின் பாதிப்பு வந்துவிடுமோ என்று பயந்தபடியே கெளதம் படம் முழுக்க வேலை செய்திருக்கிறார் என்று தெரிகிறது.ஆனால் அதை மீறி இருவரிடையே ஏற்படும் ஈகோ சண்டைகளுக்கான காரணங்கள் எட்டு வயதில் காட்டும் போது சொல்லும் காட்சி கூட ஓகே.. ஆனால் அதே பள்ளியில் படிக்கும் காட்சியிலும், பின்னர் காலேஜ் படிக்கும் போது பிரியும் காட்சியிலும் டெப்தே இல்லாததால் என்ன இதுக்காக சண்டைப் போட்டுக்கிறாங்க? என்ற கேள்வி நமக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது. ஜீவா தன் குடும்ப நிலையைச் சொல்லியிருந்தால் எந்த ஒரு காதலியும் புரிந்து கொள்வாள் அப்படியிருக்க, ஜீவா அவரிடம் ஏதும் சொல்லாமல் சண்டைப் போட்டுக் கொண்டு பிரிவதும். மூன்று ஆண்டுகள் கழித்து தன் குடும்ப ப்ரச்சனைகளை எல்லாம் முடித்துவிட்டு, சாவகாசமாய் சமந்தாவைத் தேடி அலைகிற படியால் நமக்குள் எந்த விதமான உணர்வுகளும் எழ மாட்டேன் என்கிறது. அதே சமந்தா ஆஸ்திரேலியாவுக்கு போவதாய் சொல்லிவிட்டு போகும் போது ஜீவா சமந்தா இல்லாமல் புலம்புவது நமக்கும் லேசாய் உணருகிற போது சமந்தாவின் பிரிவுக்கு சரியான காரணம் வைத்திருக்க வேண்டும். க்ளைமாக்சில் ஜீவாவின் ரிஷப்சஷனுக்கு வந்துவிட்டு ராத்திரி முழுவதும் இருவரும் சேர்ந்து சுற்றிய இடங்களில் சுற்றி பேசும் இடங்கள் க்யூட்.

ஆனால் ஜீவாவின்  வீட்டில் போய் சமந்தா பேசும் காட்சிகள் திரும்பத் திரும்ப ஒரே காட்சியை பார்த்த பீலிங்கில் கொட்டாவியை தவிர்க்க முடியவில்லை. இளையராஜாவின் பாடல்களையே ஆர்.ஆராய் ஆங்காங்கே பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம். பட் கெளதமின் மற்ற படங்களில் இருக்கும் இசை ஆளுமை இப்படத்தில் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும். குட்டிக் குட்டியாய் சில பல சந்தோஷ, சுவாரஸ்ய நிகழ்வுகள் இருந்தாலும்,  நீண்ட நேரம் பார்பதாக உணர வைக்கக்கூடிய முதல் பாதியும், குழப்பமான இம்பாக்ட் இல்லாத க்ளைமாஸும்,  மனதை நெகிழ வைக்ககூடிய, காதலின் வலியை உணரக்கூடிய காட்சிகள் மிஸ்ஸிங் என்பதால் சுத்தமாய் ஒட்டவேயில்லை.

கும்கி

கேபிள் சங்கர்

Post a Comment

15 comments:

Shyam Sundar said...

Me the First. Looks OK to me.

குரங்குபெடல் said...

புண் வசந்தம் . . . !

Athiban said...

padam flop. yesterday i watched.

ஆராமுதன் said...

Yenda thevdiya payalae, vun pondatiya kuutikoduthu cinima chance vaangittu ippa aduthavanga padatha paththi kurai solriyaada vesi mahanae

rajasundararajan said...

உன் பங்கினைச் சிறப்பாகச் செய்திருக்கிறாய் பெண்ணே! (இது சமந்தா). ஆனால் கௌதம் ஒரே ஒரு கதைதான் வைத்திருக்கிறார். அது என்னைப்போல் வயது கூடியவர்களும் உன்னைப்போல் இளசுகளை வாயொழுகுகிற கணக்குக்கு ஒரு கதை. அவரைப்போல் காதோரம் நரைகூடிய ஆட்களையும் குற்றம் சொல்வதற்கு இல்லை. ரஜினி, கமல் சாட்சியாக, என்னைப்போல் ரசிகர்களும் காதல்கதை பார்க்க இருக்கிறோம்தானே?

ppage said...

/// இன்றைய மிடில் க்ளாஸ், மற்றும் உயர்வகுப்பு ஆண், பெண்களின் நிலையை /////

யெஸ்.... ஒரு நருவீசான, நயமான, டிசண்ட்டா, டிக்னிபைட்டா களம் அமைத்தது மிகப் பெரிய பலம்....

ஏன்னா.......... தமிழ் படத்தில முக்கா வாசி.... அழுக்கன், அயோக்கியன், பொறுக்கி இவனுங்கள தான் ப்ரொஜக்ட் பண்ணுது... அப்படியில்லாம......... குடும்பத்த நேசிக்கிற.... பெண்ணை மரியாதையுடன் நடத்துகிற இந்த கதா நாயக பிம்பத்துக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி...

அண்ணன் பெண்பார்க்கும் படலத்தின் தோல்வியை சொன்ன காட்சிகளும்,... அது எப்படி நாயகனை மாற்றுகிறது எனும் நயமும்.......... நச்.....

மென்மையான, மேன்மையான உணர்வுகளுக்கும்.....

பார்ப்பவரை பரவசப்படுத்தி காதல் கொள்ள வைக்கும் இதத்துக்கும் நிச்சயம் பாராட்டணும்...

இந்த படம் பார்த்து வெளிய வர ஆணும் பெண்ணும் ஆக்கபூர்வமா, அன்பா வெளியில் வருகிறார்கள்...

கொலை வெறியோட, அடுத்தவன் கழுத்த கடிச்சு துப்புற மாதிரி அனுப்புற மற்ற படங்கள் மாதிரி இல்லாதது சூப்பர்...

கலகல சந்தானத்துக்கும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு......

விஜய் said...

எதிர்பார்ப்புக்கு நீர்மாராக இருக்கிறது இந்த படம். கதை பரவாயில்லை. ஆனால் திரைக்கதை சற்று சறுக்கல் தான். அழகான காட்சிகள் ஆனால் ஆழமாகயில்லை. சில இடங்களில் வசனங்கள் அருமை. ஆங்காங்கே பாடல்கள் வருவது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் ஏனோ ஒரு நல்ல படம் பார்த்த உணர்வுடன் வெளிவரமுடியவில்லை.

அது என்னமோ கல்யாணத்திற்கு முன்பே கூடல் கொள்வது அப்படி என்ன நகரங்களில் சர்வசாதாரண நிகழ்வா என்ன. இந்த படத்திலும் வாரணம் ஆயிரத்திலும் இந்த மாதிரி காட்சிகள் வருகிறது. இந்த அளவு உடல் ரீதியான காதல் தான் இன்றைய இளைஞர்களின் காதாலா என்ன.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நானும் இளையராஜாவின் ரசிகன்தான்,இந்தப் படத்தின் பாடல்கள் என்னைக் கவரவில்லை.எவ்வளவுதான் மேதைகளாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின் ஓய்வெடுப்பதுதான் நல்லது.கிரிக்கெட்டில் சச்சின். இசையில் இளையராஜா

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்...
கௌதம் அரைத்த மாவையே மாற்றி அரைப்பதில் புத்திசாலி... ஆனால் எம்புட்டு நாள்தான் அதையும் பார்க்க முடியும்..

vijayaragavan said...

No music needed for this film. There's no deep scenes. It's just fight between two at various stages of their lives. Most of the scenes doesn't have a back ground score. There's no serious scenes. At the least songs could have been full length. And gowtham could have framed the incidents (not story as there's no such) around them. To my knowledge there no BGM score done for this movie. Perhaps gowtham used the songs snippets himself. I was wondering how gowtham would have narrated this story (?!) to all?

Movie sucks!

ஆத்மா said...

காதல் படங்களில் அரைத்த மாவைத்தான் அரைக்க முடியும்..
கௌதம் சார் என்ன விதி விலக்கா ?

நல்ல அலசல்

rajamelaiyur said...

விண்ணை தாண்டி வருவாயா அளவுக்கு எதிர்பார்த்து ஏமாத்த ஆட்களில் நானும் ஒருவன் ..

அன்புடன்

ராஜா

Google- தெரிந்ததும் , தெரியாததும்

Anbazhagan Ramalingam said...

மொதல்ல இந்த ல்வ் எழவு இல்லாம படம் எடுத்தாதான் தமிழ் சினிமா உருப்படும் சார்

rajasundararajan said...

//நமக்கும் ஜீவாவிடம் வரும் ஜுரம் பற்றிக் கொள்ளும்//

நமக்குப் பற்றிக்கொள்கிறது, ஆனால் ஜீவா ஆடி அடங்குன ஆள் மாதிரியில்ல சொதப்புறாரு?

//முக்கியமாய் ஜீவாவும், சமந்தாவும் பிரியும் இடத்தில் ஜிம்மி ஜிப்பில் ஒரே ஷாட்டில் அவ்வளவு பெரிய காட்சியை படமாக்கியிருக்கும் விதம் அட்டகாசம்.//

('ஜிம்மி ஜிப்பில்' என்று சொல்ல எங்களுக்குத் தெரியாது; உங்களுக்குத் தெரிந்திருக்கிறது!) அதுவரைக்கும் நல்லாப் போயிட்டிருந்த படத்தை, மொட்ட மாடியில, வடாகமாக்கிக் காயப்போட்டதே அந்த ஷாட்தான். (இளமை சம்பந்தமான படங்கள்ல ஓவரா அறிவுபூர்வமா ஷாட் வைக்கக் கூடாது இல்லையா? அறிவுங்கிறது முதுமையோடு சம்பந்தப்பட்டது).

P.P.S.Pandian said...

A fine review.But I do not agree with your point that if ARR composes it willbe still better...P.Sermuga Pandian