அமீர்கானின் படம் பார்த்து நாளாகிவிட்டது. கடைசியாய் டோபிகாட் பார்த்த ஞாபகம். போலீஸ் கெட்டப்பில் மிகவும் ஸ்மார்ட்டாக, மீசையெல்லாம் வைத்துக் கொண்டு இருந்த போஸ்டரைப் பார்த்ததும் ஒரு அதிரடியான ஆக்ஷனை எதிர்பார்த்து படம் பார்க்க போனீர்களானால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள்.
நடு இரவு. மும்பை பீச் ரோடு. பஸ்ஸ்டாண்டில் படுத்திருக்கும் ஒருவனும், டீ விற்கும் சைக்கிள்காரனும், ஏதோ நடக்கப் போகிறதை உணர்ந்து முன்னும் பின்னும் அலைபாயும் பிங்கி என்கிற நாயைத் தவிர வேறு யாருமில்லாத நேரத்தில், வேகமாய் வரும் கார் ஒன்று சடாரென நிலை தடுமாறி அங்கிங்கு அலைந்து ப்ளாட்பாரத்தில் ஏறி பறந்து அப்படியே ரெண்டு ரவுண்டு அந்தரத்தில் சுழன்று, கடலில் வீழ்கிற விபத்தோடு படம் ஆரம்பிக்கிறது. அந்த விபத்தில் இறந்தது பிரபல நடிகர் அர்மான்கான். அதை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டரான சுர்ஜன்சிங் செகாவத்தின் பார்வையில் கதை ஆரம்பிக்கிறது.
இதன் நடுவில் இன்ஸ்பெக்டரின் எட்டு வயது பையன் ஒரு ஸ்லீக் லேக் விபத்தில் இறந்திருக்க, அந்த விபத்துக்கு காரணம் தான் தான் என்ற குற்ற உணர்ச்சியில் இன்ஸ்பெக்டர் மருக, இதனால் கணவன் மனைவிக்கிடையேயான ஒட்டுதல் இல்லாத உறவு. அதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் என்று ஒரு ட்ராக்.
விசாரணை ஒரு முட்டுச் சந்தில் வந்து நிற்கும் போது உதவ வரும் விபச்சாரி ரோஸி. அவளின் உதவியால் கொஞ்சம் கொஞ்சமாய் துப்பு துலங்க அரம்பிக்கிறது. இன்னொரு பக்கம் . அர்மான்கபூரின் நண்பனை மிரட்டி பணம் பறிக்க விழையும் தைமூர் என்று ஒரு ட்ராக். இந்த மூன்று ட்ராக்கினூடே பயணிக்கும் இந்த இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் முடிவில் நம்மை திடுக்கிடச் செய்ய வைக்கிறது.
இப்படத்தில் நடிப்பதற்கு எது அமீரை இன்ஸ்பயர் செய்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் இப்படத்தின் க்ளைமாக்சாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படி ஒரு க்ளைமாக்ஸ். அமீர் கேலிபர் உள்ள ஆட்கள் இம்மாதிரியான படங்களில் நடிப்பது ஒரு நல்ல விஷயம். அமீர் நடித்ததால் மக்களின் கவனம் இம்மாதிரியான மாற்று சினிமாக்களின் மீதான கவனம் அதிகமாகும் வாய்ப்பு நிறைய. பெரிய ஹீரோயிசம் ஏதுமில்லாத, சாதாரண குடும்ப வாழ்க்கை ப்ரச்சனைகளோடு, குற்ற உணர்ச்சியோடு வலைய வந்து கொண்டிருக்கும் போது வேலை பளூவும் சேர்ந்து கொள்ள, எல்லா விஷய்ங்களும் ஸ்டெரெஸ்சாக அழுத்த, ரோஸியின் பின்னால் போய் அவளின் அறையின் கட்டிலில் படுத்தபடி அவளின் தலைவருடலோடு தூக்குமிடத்தில் அவரின் முகத்தில் தெரியும் உணர்ச்சிகள் அபாரம். படம் முழுவதும் அண்டர்ப்ளே செய்திருக்கிறார். மனைவியிடம் காட்டும் கோபமாகட்டும், ப்ரச்சனைகளிடையே அடையும் கலக்கத்தோடு கண் கலங்கி ரோஸியிடம் அமிழும் போதும்.. அவர் கண்களில் தெரியும் ஆழம் க்ளாஸ்.
அமீரின் மனைவியாய் ராணி முகர்ஜி. மேக்கப்பில்லாத, ஒர் இயல்பான குடும்பத்தலைவியை கண் முன் நிறுத்துகிறார். கணவனுக்காக தன்னை மாற்றிக் கொண்டு சினிமாவுக்கு போக ஆசைப்பட்டு கடைசியில் சண்டையாய் மாறி அமீர் கோபத்தோடு போகுமிடத்தில் பரிதாபத்தை சம்பாதிக்கிறார்.
விபசாரி ரோசியாய் கரீனா. ஆரம்பத்தில் அவரது பார்வையில் தெரியும் ஒரு வசீகரம் அதீதமாய் இருந்தாலும், க்ளைமாக்சில் அதன் பின்னணி தெரிய வரும் போது ஜிவ்வென இருக்கிறது. அருமையான் நடிப்பு. வசீகரிக்கும் குரலில் இவர் பேசும் வசனங்கள் ஜிலீர். படம் பாருங்கள் புரியும்.
விபச்சாரப் பெண்கள். அந்த இடங்களின் பின்னணி, வயது முதிர்ந்த விபச்சார பெண், அவளின் மேல் பச்சாதபத்தோடு அலையும் நவாசுதீன் சித்திக்கின் கேரக்டர். அமீரின் அஸிஸ்டெண்டாய் வரும் சப் இன்ஸ்பெக்டர் என்று பல குட்டிக் குட்டிக் கேரக்டர்களினால் விசாரணையை சுவாரஸ்யப்படுத்தியிருப்பது அருமை.
மன்மோகனின் ஒளிப்பதிவில் தடாலடியாய் ஏதுமில்லாவிட்டாலும், மும்பையின் விபசாரப் பகுதிகளின் காட்சிகளிலும், ஆர்பாட்டமில்லாத சஜஷன், ஃபோகஸ், அவுட் ஆப் ஃபோகஸ் உத்திகளில் அடுத்தடுத்த காட்சிகளை மிக இயல்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார். டைட்டில் பாடல் காட்சிகளில் மும்பையின் இரவு வாழ்க்கையை சொல்லும் மாண்டேஜுகலும், ராம் சம்பதின் பின்னணியிசையும் படத்தின் ஆரம்பத்தில் வரும் பாடலும் நன்றாக இருக்கிறது.
ரீமா காக்டி, ஜோயா அக்தரின் திரைக்கதையும், ஃபர்ஹான் அக்தரின் வசனமும் பல இடங்களில் வசீகரிக்கிறது. படத்திற்கு அடிஷனல் வசனம் அனுராக்கஷ்யாப். குறையென்று சொல்லப் போனால் எல்லாக் கேரக்டர்களையும் பற்றிச் சொல்லி செட்டிலாகவே நேரம் பிடிப்பதால் விசாரணை நிஜ விசாரணையை விட மிக மெதுவாகச் செல்கிறது. கொட்டாவி வருவதை பல இடங்களில் தவிர்க்க முடியவில்லை. இம்மாதிரியான படங்களில் பரபர விசாரணைகளை எபெக்டுகளோடு பார்த்து பழகிய மக்களுக்கு இது பாசஞ்சர் ரயிலை விட வேகம் குறைவானதாகப் படும். அதே போல இன்ஸ்பெக்டர் வீட்டு பிரச்சனையெல்லாம் படத்தின் நீளத்தை அதிகரிக்க ஏற்பட்ட காட்சிகளாகவே தெரிகிறது. க்ளைமாக்சில் வரும் காட்சிக்காக இவ்வளவு நீளமான படத்தை பார்க்க வேண்டுமா? என்று சலிப்பு வந்தால் கம்பெனி பொருப்பல்ல.
கேபிள் சங்கர்

Comments
:)
இதையும் படிக்கலாமே :
google தெரிந்ததுதும் தெரியாததும்
. . .. . !?