முடியலை... அவ்வ்வ்வ்

”ஹலோ சாமி”

“சொல்லுங்கம்மா உங்க பேர் என்ன?”

“சுப்புலச்சுமிங்க. எங்க வீட்டுக்காரர் வெளி ஊர்ல வேலை செய்யுறாரு.. புது வேலைக்கு ட்ரை பண்ண கிடைக்க மாட்டேங்குது.”

“அவர் பேரு என்னம்மா?”

“ரவிங்க”


“அஹா... நான் எத்தனையோ நிகழ்ச்சில சொல்லியிருக்கேனே.. ரவி, சுரேஷ், கவி இப்படி பேர் வச்சா அவங்க ரொம்ப கஷ்டப்படுவங்கன்னு. கையில பணம் நிக்குதா?

“இல்லை சாமி”

“இப்ப எது கேட்டாலும் கோபப்படுவாரே”

:ஆமா சாமி

“ரவிங்கிற பேர் வச்சவங்க எல்லாரும் பணம் சம்பாதிக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க.. அப்படியே சம்பாரிச்சாலும், கைல தங்காது, அப்படி தங்கினாலும், அந்த பணத்தை காப்பாத்துறதுக்கு அதுங்கூடவே உக்காந்திட்டிருப்பாங்க”

“????”

“அவரு பேரை மாத்திருங்க.”

“என்ன பேரு வைக்கிறது சாமி.. இளஞ்செழியன், இள மாறன், இளவேனில் இந்த மூணு பேர்ல ஒன்னை 48 தடவை 48 நாள் எழுத சொல்லுங்க. 21 நாள்ல ஏதாவது மாற்றம் தெரிஞ்சிச்சுன்னா அதே பேரை வச்சிக்க சொல்லுங்க.. இல்லாட்டி வேற பேர 48 எழுதச் சொல்லுங்க. அதுவும் 21ஆம் நாள் மாற்றம் வரலைன்னா மூணாவத எழுதச் சொல்லுங்க்..”

“??????...@@@@### சரிங்க சாமி”

அடுத்த காலர்.

:”சாமி எனக்கு கல்யாணம் ஆக மாட்டேன்குது.

“இதுக்கு முன்னாடி உங்களுக்கு கல்யாணம் ஏற்பாடாகி தடையாயிருச்சா?

“இல்லீங்க.

“அப்ப பொண்ணு பர்த்து ஏற்பாடு ஆகிறதுக்கு முன்னாடி தடையாயிருச்சா?

“இல்லீங்க..”

“நீங்க என்ன தொழில் செய்யுறீங்க..?

“நான் ட்ராவல்ஸ் வச்சிருக்கேன் சார்..”

“வருமானம் எப்படி?

“சுமாரா போவுதுங்க.. “
“கையில் பணம் நிக்குதா?

“அது ஓரளவுக்கு நிக்குங்க..”

“அதாவது சரியா நிக்கலைங்கிறீங்க?

“அப்படியில்லை சாமி.. சில மாசம் ட்ரவல்ஸ் டல்லா இருக்கும் சில மாசம் பிக்கப்பாயிரும்.”

“அதான் நான் சொல்றேன் உங்களுக்கு பொருளாதார ஏற்றத் தாழ்வு இருந்திட்டேயிருக்கு. உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம இருக்குதா”

“பெருசா ஒண்ணும் இல்லைங்க.. வழக்கமா எல்லாருக்கும் இருக்கிற பி.பி, சுகர் தாங்க”

“அதானே.. இருக்குதுல்ல அதும் வியாதிதானே.. உங்க வீட்டு வாசல்ல ஒரு மரம், அல்லது தண்ணீத் தொட்டி, தண்ணி டேங்க் ஏதாச்சும் இருக்கா/

இல்லீங்க.. வீட்ட விட்டு வெளிய வந்த திரும்பினப்புறம் தான் ஒரு மரம் இருக்கு து ரோடுல இருக்கு. நம்ம வீட்டிற்கும் இதுக்கும் சம்ம்ந்தமில்லைங்க..”

“அப்ப பின் பக்கம் மரம்?

“இல்லீங்க”

“பின்னாடி ஏதாச்சும் குப்பை ஏதாச்சும் போட்டு வச்சிருக்காங்களா?

“அப்படி இல்லைங்க..

”உங்க பேரு என்னாங்க..”

”அசோக் ராஜுங்க..”

“ஆ.. அதான் ப்ரச்சனை அசோக்ராஜ்ங்கிற பேரும் அந்த வீடும் சரியில்லை அதான் உங்களுக்கு கலயாணம் ஆக மாட்டேன்குது. உங்க் ராசி மிதுனம்னு சொன்னீங்க இல்லையா? உடனே வீட்டையும் பேரையும் மாத்திட்டீங்கன்னா.. எல்லாம் சரியாயிரும்.”

“சரிங்க என்ன பேரு வச்சிக்கிறதுங்க.. “

“ஹானஸ்ட் ராஜ்னு வச்சிங்கங்க..”

“!@#@##@##!”

மேற்ச் சொன்ன பேச்சுக்கள் ஜெயா ப்ளஸில் ஒரு சாமியாருக்கும் நேயர்களுக்குமிடையே நடந்த உரையாடல். இதற்கு மேல் ஏதும் சொல்ல விரும்பவில்லை.. முடியலை செம காமெடி.
கேபிள் சங்கர்

Comments

Unknown said…
ஹஹஹஹஹாஆஅ செம்ம காமெடி
iniyavan said…
தலைவரே,

அருமையான காமடி.

வீட்டில் என் பெயர் ரவிதான் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

இதே போல் சன் மியூஸிக்கில் நாட்டாமை ஷோவில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.
இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே நேர விரயம்; அதை வேலை மெனக்கெட்டு எழுத்தில் பதிவு பண்ணி பிளாக்கிலும் போட வேண்டுமா? ஏதோ சிறுகதை என்று நம்பி வாசித்து ஏமாந்து போனேன்.

தினசரி பதிவு போட வேண்டுமென்று கட்டாயமில்லை கேபிள்; நீங்கள் எதுவும் எழுதாமலிருந்தாலும் நாங்கள் உங்களை மறந்து விட மாட்டோம். அதனால் இப்படிப்பட்ட மொக்கைகளை எல்லாம் தவிர்த்து விடுங்களேன்; ப்ளீஸ்....

அன்புடன்
சோ.சுப்புராஜ்
R. Jagannathan said…
Athu Comedy show-vaa irukkap poovuthu! Eththanai sonnaalum / pattaalum puriyaatha intha maathiri Mada sumbankalai aemaaththinaal enna thappu?- R. J.
SathyaPriyan said…
கேபிள்ஜி, அட்டகாசம்.....

உங்க பேர கூட சேமியா சங்கர்ன்னு மாத்தி வச்சுகிட்டா உங்க பதிவுக்கு ஒரு மணி நேரத்துக்கு பத்தாயிரம் பேர் வருவாங்களாம்.
Gopi said…
படிச்சு முடிக்க ரொம்ப நேரம் ஆயிடுச்சி. சிரிச்சிக்கிட்டே இருந்தா எப்படி படிக்கிறது? ஜெயா டிவி க்கு நகைச்சுவை சானல் இல்லததால இது மாற்று ஏற்பாடு போல இருக்கு.
ஹா... ஹா...

ஊரை ஏமாத்துறவனுகளுக்கு பேச்சுத் திறமை அதிகம்ண்ணே...
Unknown said…
இதுவும் ஒரு பொழுது போக்கு .
ராத்திரி 10 மணிக்கு மேல எந்த சேனலுக்கு போனாலும் இந்த கூத்துதான். என் நண்பன் ஒரு படி மேல போய் எட்டாம் தேதின்னா டாய்லட் போக கூட பயப்படுறான். முடிஞ்சா என் பதிவையும் வந்து பாருங்க.
http://muthuchitharalkal.blogspot.com/2012/08/blog-post_17.html

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

Box Office உண்மைகள்

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்