Thottal Thodarum

Dec 31, 2012

கொத்து பரோட்டா - 31/12/12

இந்த வருடத்தின் கடைசி கொ.பரோட்டா. டெல்லி பெண்ணின் மரணம் காரணமாய் மனம் முழுவதும் சோகம் அப்பியபடியே எழுத வேண்டியிருக்கிறது. அப்பெண்ணின் மரணத்தினால் எழுந்த சோகத்தை விட, தொடர்ந்து தமிழகத்தில் மட்டுமில்லாது இந்தியாவெங்கும் பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றி தெரியவரும் போது மேலும் மனம் துன்பப்படுகிறது. இவ்வளவு எதிர்ப்பும், ஆதரவும் டெல்லி பெண்ணுக்காக மட்டுமில்லாமல் இம்மாதிரியான பாலியல் வன்முறையினால் பாதிக்கப்படும் எல்லா பெண்களுக்கு எதிராகவும் இருக்க வேண்டுமென மனம் விரும்புகிறது. எல்லா சமூக வலைத்தளங்களிலும், என்ன ரெண்டு நாள் அழுதுவிட்டு, ஸ்டேடஸ் போட்டு விட்டு கிரிக்கெட் மேட்ச் பார்க்க போய்விடுவீர்கள் என்று புலம்புகிறார்கள். சுனாமியில் குடும்பத்தையே பறிகொடுத்து அநாதையாய் இருப்பவர்கள் கூட சோகங்களைக் கடந்து அவர்தம் வாழ்கையை வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். குடும்பத்தை இழந்ததால், சாப்பிடாமலோ, சிரிக்காமலோ, காதலிக்காமலோ, கல்யாணம் செய்யாமலோ இல்லை. வாழ்க்கை அதன் பாட்டிற்கு ஓடும். ஓடித்தான் ஆகவேண்டும். எனவே இது பற்றி தினம் புலம்ப வேண்டும், ஸ்டேடஸ் போட வேண்டும் என்று நினைக்காமல் இனி வரும் காலங்களில் பெண்களையும் வெறும் சதை கோளங்களாய் பார்க்காமல், அவர்களுக்கும் மனதுண்டு, ஆசாபாசங்கள் உண்டு, வலி உண்டு என்பதை புரிந்து அவர்களை  சக மனுஷியாய் மதிக்கும் பண்பை வளர்க்க பாடுபடுவோம்.
@@@@@@@@@@@@@@@@@@@@பெண்களின் மேலான செக்‌ஷுவல் கொடுமைகள் ஒரு புறம் இருக்க, அரேபிய ஷேக்குகளால் விபச்சாரத்திற்கு தள்ளப்படும் பெண்களின் நிலை இன்னும் மோசம். இஸ்லாமிய சட்டப்படி ஒரு ஆண் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற விதியை வைத்து அரபு நாடுகளிலிருந்து வரும் ஷேக்குகள் இந்தியாவில் தங்கிப் போகும் நாட்களில் இங்கிருக்கும் ஏழைப் பெண்களாய் தெரிவு செய்து “நிக்காஹ்” செய்து கொண்டு,  ஒரு மாதமோ, ரெண்டு மாதமோ நன்றாக அனுபவித்து, “தலாக்’ கொடுத்து மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி விடுகிறார்கள். மீண்டும் இந்திய விஜயம், திருமணம், தலாக், என்று போய் விடுகிறார்கள். இம்மாதிரியான விஷயத்திற்கு பெண்களை  ஏற்பாடு செய்ய  பெரிய ஏஜெண்ட் குழுவே செயல்படுகிறது. 15,000 ரூபாயிலிருந்து 1லட்சம் ரூபாய் வரையில் பண பரிவர்த்தனை நடைபெறுகிறது. வழக்கம் போல ஏஜெண்டுகளின் கமிஷன் போக இவர்களுக்கு வருவது சொற்பமே. வறுமை ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், இம்மாதிரியான திருமணங்களுக்கு பணத்துக்காகவும், வசதியான வாழ்விற்காகவும், வெளிநாடுகளுக்கு போவதற்காகவும் விரும்பியே ஒத்துக் கொண்டும் வலிய வரும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. தலாக் செய்து கொண்டு வந்த பெண், மீண்டும் வேறொரு ஷேக்கிற்கோ, அல்லது  விரும்பியோ, விரும்பாமலேயோ தெரிந்தே விபச்சார சந்தைக்குள் நுழைந்துவிடுகிறாள். இதைப் பற்றிய விரிவான செய்தியை படிக்க 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
2012 இந்த ஆண்டு என்னைப் பொறுத்தவரையில் ஒரு சிறப்பான வருடமாகவே அமைந்தது. வருட ஆரம்பத்தில் வெளிவந்த கலகலப்பு என் திரையுலக வாழ்க்கையில்  புதிய கதவை திறந்துவிட்டது. அதற்கு காரணமான இயக்குனர் பத்ரிக்கு என் நன்றிகள் பல. மீண்டும் அவருடன் தில்லுமுல்லுவில் வேலை செய்ய வாய்பளித்திருக்கிறார். பிறகு இயக்குனர் சக்திவேலின் முழு நீள நகைச்சுவை படமான “ஈ.கோ’வில் வசனகர்த்தா வாய்ப்பு. அந்தப் படமும் சிறப்பாக வந்திருக்கிறது. 2013ல் வெளிவந்து ஒரு கலக்கு கலக்குமென நம்புகிறேன். இதைத் தவிர மேலும் ஒர் பெயரிடப்படாத படத்திற்கு வசனமெழுதியிருக்கிறேன். மேலும் பல புதிய படங்களுக்கு திரைக்கதை, வசனமெழுத  வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ரெண்டொரு டிவி சேனல் நிகழ்ச்சிகளுக்கும் என் பங்களிப்பை தரவிருக்கிறேன். விரைவில் நான் இயக்கும் திரைப்பட வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறேன். வலைப்பூக்களிலும், மற்ற சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவனிக்கப்படும் ஒருவனாய் இருந்ததும், டிவி, மற்றும் ரேடியோ, பத்திரிக்கை மீடியாக்களின் கவனத்தை பெற்ற சிறந்த வருடமாய் அமைந்தது. ஆதரவளித்த அத்துனை மீடியா நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

எழுதுவது என்று பார்த்தால் 2010ல் ஆரம்பித்து இரண்டு வருடங்களில் ஏழு புத்தகங்களை எழுதியிருக்கிறேன். இந்த வருடம் சினிமா என் சினிமா, கேபிளின் கதை, சினிமா வியாபாரம் ஆகியவை வெளிவந்திருக்கிறது. இதில் சினிமா வியாபாரம் புதிய பதிப்பாளர் மூலம் கேபிள் சங்கர் என்கிற பெயர் மாற்றத்துடன் பல புதிய விஷயங்களோடு வெளிவந்து வழக்கம் போல சக்கைப் போடு போட்டுக் கொண்டிருப்பதாய் சொன்னார்கள். சினிமா என் சினிமாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கேபிளின் கதை பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் நல்ல விமர்சனங்கள் வர ஆரம்பித்திருக்கிறது.கேபிள் டிவி எனும் போது மிகவும் டெக்னிகலான சமாச்சாரங்களாய் இருப்பதால் வெகு ஜன மக்களுக்கு புரியாமல் போய்விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது ஆனால் படித்தவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள் ஒரு சுவாரஸ்யமான நாவலை படித்தது போல் இருக்கிறது என்கிறார்கள். இவ்வளவு தகவல்களை எப்படி ஞாபகத்தில் வைத்திருந்தீர்கள் என்று பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்.  பாராட்டுக்களை மட்டும்தானா என்று கேட்பவர்களுக்கு, அவ்வப்போது சில நெருங்கிய நண்பர்களிடமிருந்து வரும் அன்பான திட்டுக்களும், சில அமைப்புகளிடமிருந்து வரும் மிரட்டல்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். விரைவில் சாப்பாட்டுக்கடை, மற்றும் நான் ஷர்மி வைரம் நாவல் இரண்டும் புத்தகமாய் வர இருக்கிறது. என் புத்தகங்கள் அனைத்தும் இணையத்தில் வாங்க.. இங்கே க்ளிக்கவும்

சமூகத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளை, அநியாயங்களை, பிரச்சனைகளை தட்டிக் கேட்டு பழகி, ஒரு நேர்மையான சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும் என்ற ஒத்த நம்பிக்கை கொண்ட நானும் நண்பர் சுரேகாவும் இணைந்து உருவாக்கிய, ஃபேஸ்புக் இணைய குழுமமான ”கேட்டால் கிடைக்கும்” ஆரம்பிக்கப்பட்ட போது பல பேர் எங்களை கிண்டல் செய்தார்கள். பின்பு எங்களின் செயல்பாடுகளால் உந்தப்பட்டு அவர்களும் கேட்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கை கொண்டு செயல்பட்டு வெற்றியடைய எங்கள் குழுமம் மிகக் குறுகிய காலத்தில்2800 உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் அடிப்படை உரிமைகளை, தவறுகளை தட்டிக் கேட்டு பெறுவதும், ஏதாவது உதவி தேவையென்றால் உடன் கிடைக்கப் பெற்று மற்றொருவருக்கு உதவும் மனப்பான்மையும் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் எங்களது குழுவின் எண்ணம் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. கேட்டால் கிடைக்கும் என்கிற நம்பிக்கை விதை தூவப்பட்டு துளிர் விட ஆரம்பித்திருக்க, அதை தழைத்தோங்கி வளரச் செய்யும் நண்பர்கள், உறுப்பினர்கள், அனைவருக்கும் எங்கள் கேட்டால் கிடைக்கும் குழுவின் சார்பாய் நன்றிகள் பல.

இணையத்தில் என்னுடய சாப்பாட்டுக்கடை பதிவுகளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது. எனவே சாப்பாட்டுக்கடை என்கிற புதிய ஃபேஸ்புக் இணைய குழுமம் ஒன்றையும் ஆரம்பித்தேன். கேட்டால் கிடைக்கும் குழுவை விட மிகத் துரிதமாய் 3000 உறுப்பினர்களை கொண்டு வளர்ந்து கொண்டிருக்கிறது.  குழு மக்களின் பெறும் ஆதரவுடன் விரைவில் ஒரு சாப்பாட்டுத் திருவிழாவை அரங்கேற்றலாம் என்று நினைத்திருக்கிறோம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
வெற்றி என்பது மலையில் ஏறுவதைப் போல எவ்வளவு உயரம் போகிறாயோ அவ்வளவு தனிமையடைவாய் 

புதிய படங்களுக்கு ஃபேஸ்புக்கில் பேஜ் ஓப்பன் பண்ணுவது கூட ஓகே. டிவீட்டரில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து அதை பாலோ செய்து என்ன பிரயோஜனம்? டவுட்டு

நீ.பொ.வசந்தம் படத்தை பழிப்பவர்களுக்கு ஏழு ஜென்மத்துக்கு காதலே கிடைக்காதாம். சொல்லிட்டேன்பா..

திருவாதிரை களி. ஏழு காய் கூட்டு.. டிவைன். # சாப்பாட்டுக்கடை

மீடியாவுக்கு தீனி போட டெல்லி நிகழ்வுகள் ஏற்றிவிடப்படுகின்றனவோ என்று சந்தேகமாய் இருக்கிறது

நான் செய்தது பெரிய தவறுதான் ஆனால் என் வாழ்வில் முக்கியமான படிப்பினை.

நாராயணசாமி தமிழக அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்க பிரதமரிடம் பேசுவதாய் சொல்லியிருக்கிறார். அப்ப நிச்சயம் கிடைச்சுரும்.

புறக்கணிப்பை விட மோசமானது போலியான வாக்குறுதிகள்

பணம் போனா திரும்ப வரும் அது எப்படி?போன பணம் போனதுதான் திரும்ப வர்றது புதுப்பணம்.

அம்மிணிக்கு பிறகு அபிதா என்னை ஆட்கொள்ள ஆரம்பிக்கிறாள்.

டெல்லியில நடந்த கற்பழிப்புக்கு எதிராய் கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அப்ப தமிழ்நாட்டுல நடந்ததுக்கு..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வருடத்தில் வந்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவைகளின் லிஸ்ட் இது. சில படங்கள்  கமர்ஷியல் வெற்றி பெறாவிட்டாலும், மொத்த படமாய்  திருப்தியளிக்காமல் இருந்தாலும், ஆங்காங்கே தெரியும் சில குட்டிக் குட்டி மத்தாப்பூ சஞ்சலங்களை ஏற்படுத்திய, டெக்னிக்கல் முயற்சிகள்,  என என் மனதுக்கு பிடித்த படங்களாய் இருப்பதால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்
தமிழ்
நண்பன், அம்புலி 3டி, காதலில் சொதப்புவது எப்படி?,3,,வழக்கு எண்18/9, கலகலப்பு, ராட்டினம், தடையற தாக்க, நான் ஈ, மதுபானக்கடை, அட்டகத்தி, ஆச்சர்யங்கள், சுந்தரபாண்டியன் ,பிட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம். நீதானே என் பொன்வசந்தம்
மலையாளம்
Thattin Maraythu, 24 Female kottayam, Run Baby Run
தெலுங்கு
Businessman, Mr.NooKaiah, Ishq, EE Rojullo, Life is beautiful
ஹிந்தி
Kahaani, Shangai, Ferrari ki sawari, Cocktail, Barfi, Raaz3, English Vinglish, Talaash,Vicky Donor, Gangs of Wasseypur 1 & 2, Saheb biwi aur gangster, Luv shuv tey chicken khurana.
ஆங்கிலம் 
Argo, Good Night Good Morning, Life of PI.
@@@@@@@@@@@@@@@@@@@@
பிடித்த பாடல்கள்
மகயாலா - நான் - விஜய் ஆண்டனி, வேணாம் மச்சான் வேணாம் - ஹாரிஸ் - ஓகே.ஓகே, தீயே தீயே - ஹாரிஸ் - மாற்றான், ஒண்ணும் புரியலை -கும்கி- இமான், ஆசை ஒரு புல்வெளி - சந்தோஷ் நாராயண், சாய்ந்து சாய்ந்து, என்னோடு வா வா, முதல் முறை பார்த்த ஞாபகம்- இளையராஜா- நீ .பொ.வ, பாதகத்தி,  ஆம்பளைக்கும் பொம்பளைக்கு - யுவன் - கழுகு,  காதல் எந்தன் காதல்,  அஹா காதல், மழை.. மழை - யுவன் - மூன்று பேர் மூன்று காதல், அடியே, ஏலே கீச்சா, நெஞ்சுக்குள்ளே - ஏ.ஆர்.ரஹ்மான் - கடல், Jiyere, Challa ki - A.R.Rahman - Jab Tak Hai Jaan,
@@@@@@@@@@@@@@@@@@@@@
அரசியலில் செம காமெடி என்றால் தமிழகத்தில் உள்ள அத்துனை அரசியல்வாதிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உட்சபட்சம்,  நாரயணசாமி எதையும் பதினைந்து நாளுக்கு மேல் இழுக்காதவர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
இந்தப் பாடல் சிவகுமார், ஸ்ரீதேவி நடித்த சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு படத்தில் வருகிறது என்று நினைக்கிறேன். அற்புதமான மெலடி. ராஜா வழக்கம் போல்  பிஜிஎம்மில் வயலினில் ராஜாங்கம் அமைத்திருப்பார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள், திரைத்துறை, பத்திரிக்கை, ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த 2013 வாழ்த்துகள். அன்புடன் உங்கள் கேபிள் சங்கர்Post a Comment

15 comments:

Ponchandar said...

இனிய வாழ்த்துக்கள் ! ! ! அடுத்த வருடம் சந்திப்போம்.....

ஓஜஸ் said...

நண்பன், அம்புலி 3டி, காதலில் சொதப்புவது எப்படி?,3,,வழக்கு எண்18/9, கலகலப்பு, ராட்டினம், தடையற தாக்க, நான் ஈ, மதுபானக்கடை, அட்டகத்தி, ஆச்சர்யங்கள், சுந்தரபாண்டியன் ,பிட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம். நீதானே என் பொன்வசந்தம்

//Thuppaki Missing

Sivakumar said...

உணவுத்திருவிழா - நல்ல ஐடியா.

arul said...

good list of films

Unknown said...

இம்மாதிரியான திருமணங்களுக்கு பணத்துக்காகவும், வசதியான வாழ்விற்காகவும், வெளிநாடுகளுக்கு போவதற்காகவும் விரும்பியே ஒத்துக் கொண்டும் வலிய வரும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.//////
ஆசை தான் காரணம் பாஸ் உண்மையா உழைக்கிற ஆண்களுக்கு பெண் கேட்ட சமுதாயம் அந்தஸ்துன்னு பேசி கடசில இப்படி ஏமாந்து தான் போறாங்க...
ஆமா பாஸ் இவ்ளோ வேலை இருந்தும் நீங்க எப்படி எழுதுறிங்க..

r.v.saravanan said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் sir

Ba La said...

http://youtu.be/YK6WOFxCrjI

Anbazhagan Ramalingam said...

wish you a wonderful happy new year sir

muthu123 said...

anne, where is adult content.

James said...

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்நாடு LIST OF HOLIDAYS

குறையொன்றுமில்லை. said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

Yaseen said...

Thambi Tea Ennum varala...

அமர பாரதி said...

Happy new year Cableji.

Ranjani Narayanan said...

கடந்த ஆண்டைபோலவே வரும் புதிய ஆண்டும் உங்களுக்கு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்!

சாதாரண கிராமத்தான் said...

வாழ்த்துக்கள் கேபிள்,
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கடைசியில் அது இருக்குமோ என்று நினைத்து படித்துவந்தேன். அது இல்லாமல் ஒரு கொத்து. தொடருங்கள்.