Posts

Showing posts with the label Moviewud ott cable sankar

Kerala Paradiso

Image
  சிறிய கிராமத்தில் ஒரே ஒரு தியேட்டர் இருந்து, இன்று அது இல்லாமல் பக்கத்து நகரங்களுக்கு படம் பார்க்கச் செல்லும் சினிமா ரசிகர்கள் ஏராளம். ஒவ்வொரு முறையும் அவரவர்கள் ஊருக்கு போகும்போது அங்கே இருந்த தியேட்டரை நினைத்து நாஸ்டால்ஜிக் விஷயங்களை நண்பர்களுடன் அசை போடாதவர்கள் இருக்கிறார்களா? என்ன? அலங்கார் தியேட்டரில் ஜாக்கிசானின் ப்ராஜெக்ட் ஏ பார்த்துவிட்டு, அவரைப் போலவே நண்பர்களுடன் ஓடுகிற பஸ்ஸில் ஏற முயன்ற நாட்களை இன்றைக்கும் நானும் என் கல்லூரி நண்பர்களும் பார்க்கும் போதெல்லாம் சொல்லி சிரிக்காமல் இருந்தது இல்லை. அப்படியான ஒரு சிறு கேரள ஊரில் வெளிநாட்டுக்கு போய் சம்பாரித்து வந்த காசில் சினிமா பாரடைசோ படம் கொடுத்த தாக்கத்தில் தன் சொந்த கிராமத்தில் “கேரளா பேரடைசோ” என்கிற் தியேட்டரைக் கட்டியவரின் மருமகன். தினமும் தியேட்டரைச் சுற்றியே வலம் வருகிறவனுக்கு அத தியேட்டர் பேங்க் கடனுக்காக மூடப்பட, தியேட்டர் கட்டிய மாமனுக்கு உடல் நலமில்லாமல் போக, தன் காதல், தியேட்டர் இடத்தை அடைய நினைக்கும் ஆட்கள், நிஜ வாழ்க்கை சம்பவங்களை சினிமாவக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் ஹீரோ, அவனது அன்பான குடும்பம், கூட்...