சாரு நிவேதிதாவின் “ராஸலீலா”
சாருவின் பேரை சொன்னாலே பல பேருக்கு கோபம் வருகிறது.. வக்கிரம் பிடித்தவன், ஆபாசமாய் எழுதுபவன், திமிர் பிடித்தவன் என்று பல பேர் பல விதமாய் கூறுகிறார்கள்.. எனக்கு சாருவை கோணல் பக்கங்கள் மூலமாய்தான் அறிமுகம். பல முறை புத்தக கண்காட்சிகளில் அவரது 0 டிகிரி நாவலை வாங்க எடுத்து வைத்து பின்பு ஏனோ வைத்துவிட்டு வந்திருக்கிறேன். அதன் பிறகு அவரது இணைய பக்கத்தின் மூலம் தொடர்ந்தேன். சமீபத்தில்தான் அவரது ராஸ்லீலா புத்தகம் என்னுடய நண்பர் ராஜ் மூலமாய் கிடைத்தது. இதுவரை நாவல் என்ற ஓரு கட்டத்துக்குள் எழுதப்பட்ட பல விஷயங்களை கட்டுடைத்திருக்கிறார். சாரு.. கண்ணாயிரம் பெருமாள் என்கிற கேரக்டர் மூலமாய் ஓரு மனிதனின் வாழ்க்கையில் அவன் காணும், அனுபவிக்கும் பல விஷயங்களின் தொகுப்பை நீங்கள் நாவல் என்று எடுத்து கொள்ள மாட்டீர்கள் என்றால், கட்டுரை தொட்ராய் எடுத்து கொள்ளுங்கள்.. ஒரு முறை படிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டீர்கள்.. உலகத்தில் மிக போதையான விஷயம் எதுவென்று தெரியுமா..? குடி, சிகரெட், பெண், அபின், கஞ்சா, இன்னும் எத்தனையோ.. அதையெல்லாம் விட போதையானது சாருவின் “ராஸலீலா”. கட்ந்த ஓரு வாரமாய் 655 பக்க நாவலை, நானும் எனது...