Raktha charitra-1
பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் பதினாறு லட்சம் ஹிட்ஸுகளுக்கான நன்றியும், தீப ஓளி திருநாள் வாழ்த்துகளும்.கேபிள் சங்கர் ரொம்ப நாளைக்கு பிறகு ராம்கோபால் வர்மா ஒரு பார்முக்கு வந்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே பழக்கபட்ட ஹோம் க்ரவுண்ட் கதை. அரசியல், வன்மம், கொலை, பழிவாங்குதல் தான் என்றாலும் மனிதன் அதை கொடுத்திருக்கும் விதம் அட.. கலாச்சார காவலர்கள், வயலன்ஸ் விரும்பாதவர்கள், திட மனதில்லாதவர்கள் நிச்சயம் இப்படத்தை பற்றி பேசவே வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இரண்டு பாகமாக படத்தை வெளியிட ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதால், முதல் பாகமான இந்த எபிசோடை தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்யவில்லை. ஏனென்றால் சூர்யா நடிக்கும் ரத்த சரித்ரம் இரண்டாவது பாகத்தில் தான் வருகிறது. அதுவுமில்லாமல். சென்ற வாரம் முதல் பாகம் வெளியாகியிருக்கிறது. அடுத்த பாகம் வருகிற நவம்பர் 26ஆம் தேதி மீண்டும் தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் எடுக்கப்பட்ட பாகம் வெளிவருகிறது. ஆனால் தமிழ் பதிப்பில் முதல் மற்றும் இரண்டு பாகத்தையும் சேர்த்து ஒரே படமாய் ரத்த சரித்ரம் என்று வெளியிட இருக்கிறார்கள் சரி கதைக்கு...