Thottal Thodarum

Nov 4, 2010

Raktha charitra-1

பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் பதினாறு லட்சம் ஹிட்ஸுகளுக்கான நன்றியும், தீப ஓளி திருநாள் வாழ்த்துகளும்.கேபிள் சங்கர்
raktacharitra_poster ரொம்ப நாளைக்கு பிறகு ராம்கோபால் வர்மா ஒரு பார்முக்கு வந்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே பழக்கபட்ட ஹோம் க்ரவுண்ட் கதை. அரசியல், வன்மம், கொலை, பழிவாங்குதல் தான் என்றாலும் மனிதன் அதை கொடுத்திருக்கும் விதம் அட.. கலாச்சார காவலர்கள், வயலன்ஸ் விரும்பாதவர்கள், திட மனதில்லாதவர்கள் நிச்சயம் இப்படத்தை பற்றி பேசவே வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
rc4 இரண்டு பாகமாக படத்தை வெளியிட ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதால்,  முதல் பாகமான இந்த எபிசோடை தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்யவில்லை. ஏனென்றால் சூர்யா நடிக்கும் ரத்த சரித்ரம் இரண்டாவது பாகத்தில் தான் வருகிறது. அதுவுமில்லாமல். சென்ற வாரம் முதல் பாகம் வெளியாகியிருக்கிறது. அடுத்த பாகம் வருகிற நவம்பர் 26ஆம் தேதி மீண்டும்  தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் எடுக்கப்பட்ட பாகம் வெளிவருகிறது. ஆனால் தமிழ் பதிப்பில் முதல் மற்றும் இரண்டு பாகத்தையும் சேர்த்து ஒரே படமாய் ரத்த சரித்ரம் என்று வெளியிட இருக்கிறார்கள்
rc3 சரி கதைக்கு வருவோம். ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் தொகுதியில் முக்கிய அரசியல் புள்ளி நரசிம்ம ரெட்டி, அவனுடய அல்லக்கையாக இருந்து கொண்டு சூழ்ச்சி செய்யும் இன்னொரு அரசியல் வாதி நாகமணி ரெட்டி, நாகமணி ரெட்டியின் தூண்டுதலால் லோக்கல் ஜாதி ஆட்களிடம் நல்ல பெயரும், கட்சியில் நல்ல இமேஜுடன் இருக்கும் வீரபத்ரய்யாவை அழிக்க நரசிம்ம ரெட்டியை தூண்டுகிறார் நாகமணி. ஒரு கட்டத்தில் இருவருக்குமான பிரச்சனையில் வீரபத்ரய்யாவின் ஆட்களில் முக்கியமானவனான ஆசிஸ் வித்யார்த்தியை வைத்தே வீரபத்ராயாவை அவர் மனைவியின் கண் முன்னே கொல்கிறான். அதற்கு பழி தீர்க்க, வீரபத்ரய்யாவின் மூத்த மகன் வெறி கொண்டு எழுந்து பழி வாங்க முயல, அவனையும் லோக்கல் இன்ஸ்பெக்டரை வைத்து நரசிமம் ரெட்டியும், நாகமணி ரெட்டியும் கொன்று விடுகின்றனர்.
rc2
வீரபத்ரய்யாவின் இளைய மகன் பிரதாப் ரவி தன் தந்தைக்கும், அண்ணனுக்கும் ஏற்பட்ட இந்த கொடுரத்தை நினைத்து பொங்கி எழுகிறான். அவர்களின் சாவுக்கு பழி வாங்க ஆரம்பிக்கிறான். அவனுடய எல்லா செயல்களுக்கும் அவனுடய தாயும், காதலியும், அப்பா, அண்ணனின் ஆட்களின் ஆதரவும் கிடைக்க, நரசிம்ம ரெட்டியை கொல்கிறான். நாகமணி ரெட்டியின் பையன்கள் இருவரில் இளையவன் ஒரு பெண் பித்தனும், சேடிஸ்டுமானவன். அவனுக்கும் பிரதாப் ரவிக்குமான பிரச்சனை முற்றுகிறது. அப்போது ஆந்திர சூப்பர் ஸ்டாரான சிவாஜி ராவ் கட்சி ஆரம்பிக்க, அனந்தபூரில் அவருடய கூட்டத்தில் வெடிகுண்டு வீசி கலைத்ததால் அவ்வூரில் ஒரு  ஆள் வேண்டும் என்று தேடு போது பிரதாப் ரவியை தெரிந்து கொண்டு அரசியலுக்கு இழுக்கிறான். பின் பு நடக்கும் பழிவாங்கும் போராட்டமும், வன்மமும் தான் கதை.
rc படத்தின் ஆரம்ப காட்சியிலேயெ சும்மா ரத்தக் களறியாகிறது திரை. படம் நெடுக ரத்தமும், சதையுமாய் தெரித்து விழுகிறது. ஆந்திர அரசியலில் என்.டி.ஆரின் தெலுகு தேசம் கட்சியில் இருந்த பரிதால ரவி என்பவரின் நிஜ வாழ்க்கை கதை தான் என்று சொல்லப்படுகிற பட்சத்தில் திரையில் காட்டியது குறைவு என்கிறார்கள்.

விவேக் ஓப்ராய், தணிகல பரணி, ஜரினா வகாப், ஆஸிஸ் வித்யார்த்தி, கோட்டா சீனிவாசராவ், என்று ஒவ்வொரு கேரக்டருக்கும் பார்த்து பார்த்து செலக்ட் செய்திருக்கிறார்கள். வழக்கமாய் எல்லா ராம் கோபால் வர்மா படஙக்ளில் வரும் கேஸ்டிங்கை விட இப்படத்தில் முக்யத்துவம் அதிகம். ஒவ்வொரு வரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். கோட்டா போன்ற சீசன்டு ஆர்டிஸ்டுகளுக்கெல்லாம் இந்த் வேடம் ஜுஜுபி.. முக்கியமாய் என்.டி.ஆரை குறிக்கும் சிவாஜி ராவ் பாத்திரத்தில் வரும் சத்ருகன் சின்ஹாவின் பாடி லேங்குவேஜ் அட்டகாசம்.
rc1 ஒளிப்பதிவு அமோல் ரதோட்.. ஆர்.ஜி.வியின் வழக்கமான 180டிகிரி ஷிப்டிங்குகள், லோ ஆங்கில் ஷாட்டுகள், சிங்கிள் ஷாட்டுகளில் சரியான மூடை கொடுக்கும் ஷாட்டுகள் என்று படம் நெடுக அதகள படுத்தியிருக்கிறார். இயக்குனரின் தோளோடு தோளாக இணைந்து பணியாற்றியிருக்கிறார் என்றே சொலல் வேண்டும். படத்தில் முக்கியமாய் பாராட்டபட வேண்டிய இன்னொருவர் பிரதீப் சந்தீபின் பின்னணியிசைதான். மிக கிரிஸ்பான எடிட்டிங், என்று டெக்னிக்கலாய் நிறைவை கொடுத்திருக்கிறார்கள்.

சாதாரணமாக பார்த்தால் ஒரு அரசியல் படம் போல தோன்றினாலும் அதை கொடுத்த விதத்தில் வர்மா நிமிர்ந்து நிற்கிறார் என்றே சொலல் வேண்டும். ஆரம்ப காட்சியில் வரும் வாய்ஸ் ஓவரிலேயே கதை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார். அதன் பிறகு வரும் சம்பவங்க்ளூம், அதற்கான காட்சிகளும் தனிப்பட்ட வர்மாவின் முத்திரை காட்சிகள். பெரிய பில்டப் இல்லாமல் டப் பென சில காட்சிகள் நம்மை தூக்கி வாரிப் போட செய்கிறது.  இப்படியெல்லாம் வளர்ந்த பிரதாப் ரவியை பழிவாங்க சூர்யா ஆரம்பிக்கும்போது கதை முடிகிறது.. அடுத்த பாகத்துக்காக எதிர்ப்பார்ப்பை கிளப்பி விட்டிருப்பதே இயக்குனரின் வெற்றி என சொல்லாம்.
Raktha Charithra-1 – A Well Executed Violent Political Drama
கேபிள் சங்கர்
Post a Comment

23 comments:

க ரா said...

லிட்டர் லிட்டரா ரத்தத்த கொட்டி விளயாடி இருக்கானுங்கன்னா படத்துல.. பார்த்து அரண்டு போயிட்டேன்.. அந்த ரெண்டாவது ஸ்டில் எங்கேந்து தேடி எடுத்தீங்க..

Cable சங்கர் said...

aamaa.. ஆனா படத்துக்கு அது தேவைதான்..

விஜய் said...

அண்ணா... என்.டி.ஆர் கட்சி தெலுகு தேசம். மாற்றிக்கொள்ளவும். மற்றபடி படமும் விமர்சனமும் கலக்கல்.

நாமக்கல் சிபி said...

Suer Review! Padam Parkkum avalai thoondugirathu

a said...

தீபாவளி வாழ்த்துக்கள் தல.........

நேசமித்ரன் said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் நிறைவான விறு விறு விமர்சனம். உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துகள்

Philosophy Prabhakaran said...

இந்த பாகத்துல சூர்யா ஒரே ஒரு காட்சியில கூட வரலையா... ஹீரோயின் ஸ்டில் போட்டுவிட்டு ஹீரோயின் பற்றி எதுவுமே சொல்லவில்லையே...

DREAMER said...

படம் இன்னும் பாக்கல..ஜி! பாக்கணும். விமர்சனம் வழக்கம்போல் அருமை..! தீபாவளி நல்வாழ்த்துக்கள்

-
DREAMER

Paleo God said...

HAPPY DIWALI THALA!. :)))

CS. Mohan Kumar said...

தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லும் போது கூட, அதே வரியில் பதினாறு லட்சம் ஹிட்கள் பத்தி சொன்னாரே அவர் தான் யூத் கேபிள்

Unknown said...

நம்ம ஊர்ல படம் வரல, அதனால ஆன்லைன்லதான் பாக்கணும் ..

எஸ்.கே said...

விமர்சனம் நன்றாக உள்ளது! தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Unknown said...

தமிழில் வரட்டும்..! தீபாவளி வாழ்த்துக்கள் பாஸ்!

Ashok D said...

//இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் நிறைவான விறு விறு விமர்சனம். உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துகள் //

வழிமொழிகிறேன் கேபிள்ஜி :)

vasu balaji said...

தீபாவளி வாழ்த்துகள்.

கதிர்கா said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

shabi said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

Thomas Ruban said...

நல்ல விமர்சனம்.
உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள் சார்.

Unknown said...

deepavali valthukkal
mynaa pathingalla padam super o super waiting for ur review

Sri said...

Sir first write superhit movie
"Myna" revieve.

T.V.ராதாகிருஷ்ணன் said...

தீபாவளி வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

தீபாவளி வாழ்த்துக்கள் சொன்ன அத்துனை நெஞ்சங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்..

DR said...

இத்தனை நாள் இந்த படத்தை பத்தி ஒரு பெரிய அபிப்ராயம் இல்லாமல் இருந்தேன். உங்களோட விமர்சனம் இந்த படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது. அருமையான விமர்சனம். தீபாவளி நல்வாழ்த்துக்கள்...