Thottal Thodarum

Nov 17, 2010

The Social Network

the-social-network-movie
மார்க் ஜூகர்பெர்க் 2003ல் ஹார்வேட் மாணவன் ஆறே வருடங்களில் கோடீஸ்வரன். எப்படி? இந்த கேள்விக்கான பதில் தான் இந்த திரைப்படம். கற்பனைகதையல்ல. நிஜத்தில் கண் முன்னே பார்த்து வளர்ந்து ஓங்கி நிற்கும் ஒருவனின் கதை. வழக்கமாய் நிஜ வாழ்க்கை கதைகள் அதிலும் சமகாலத்தில் வாழும் ஆட்களை பற்றிய கதைகளில் பெரிதாய் ஈர்பிருக்காது. அதிலும் வெறும் கம்ப்யூட்டர், வெப்சைட் என்று சுற்றி கொண்டிருக்கும் ஒருவனது கதையை சுவாரஸ்யமாக சொல்ல முடியுமா?என்று யோசிப்பவர்களும் முடியும் என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லில்யிருக்கிறார்கள் திரைக்கதையாசிரியரும், இயக்குனரும்.

the-social-network-20100927023625890_640w
கம்ப்யூட்டர் புலியான மார்க்கின் காதல் முறிவுக்கு பின் தான் படிக்கும் ஹாவர்ட்டின் லோக்கல் நெட்வொர்கை உடைத்து facemash.com என்றொரு இணையதளத்தை உருவாக்கி தங்கள் ஹாவர்டில் படிக்கும் மாணவிகளின் போட்டோக்கள் டேட்டாபேஸை திருடி மாணவர்களிடையே ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட, அதன் காரணமாக அவனை ஆறு மாதம் படிப்புக்கு தடை பெறுகிறான். ஒரு போதையான மது இரவில் ஹாவர்ட் ரோயிங் டீமிலிருக்கும் இரட்டையர்கள் தங்கள் சைட்டுக்கு வேலை செய்ய மார்க்கை அழைக்கிறார்கள்.

the-social-network-20100901014239966_640w
சிறிது நாட்கள் கழித்து மார்க்குக்கு பேஸ்புக் பற்றிய ஐடியா தோன்ற, அவனது நண்பன் எடுராடோவிடம் சொல்கிறான். அந்த இணைய தளம் மூலமாக ஹாவர்டிலிருக்கும் அத்துனை மாணவர்களையும் ஒன்றினைத்து அவர்களுக்குள்ளான தகவல்களை பரப்ப முடியும் என்று சொல்ல, எடுராடோ அவனுக்கு ஆயிரம் டாலர் கொடுத்து உதவுகிறான். சடுதியில் ஹாவர்டில் பிரபலமான பேஸ்புக்கின் வளர்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாய் பெரிய ஆலமரம் வளர ஆரம்பிக்க பிரச்சனையும் ஆரம்பிக்கிறது.
இரட்டையர்கள் சகோதர்களும், முதலாய் பணம் கொடுத்து உதவிய நண்பனும் மார்க் தங்களை ஒதுக்கிவிட்டு தங்கள் ஐடியாவையும் சுட்டு விட்டதாய் கேஸ் போட, அதில் எவ்வாறு மார்க் வென்றெடுக்கிறான் என்பதுதான் கதை. முழுக்க, முழுக்க, வசனங்களாலேயே நிரப்பப்பட்ட திரைக்கதை. அதிலும் மார்க் பேசும் சப்டைட்டிலில்லா ஸ்பீடுக்கு கூடவே ஓடி சில சமயம் நுரை தள்ளுகிறது.
the-social-network-20100901014236138_640w ஆனால் படத்தின் ஆரம்ப காட்சியில்  வரும்,  கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஷாட்டுகள் கொண்ட நீண்ட காட்சியை என்ன தான் சுவாரஸ்யமாய் டயலாக் நடிப்பு என்றிருந்தாலும் நம் இயக்குனர்கள் வைப்பார்களா? என்று தெரியவில்லை.. ஆனால் சரி சீன். இம்மாதிரியான நிஜ வாழ்க்கை கதைகளில் இருக்கும் சமகால காதல், பணம், துரோகம், செக்ஸ் போன்ற  சுவாரஸ்யங்களை வைத்து திறமையான திரைக்கதையமைத்த ஆரோன் சார்கின்னை பாராட்டத்தான் வேண்டும்.

The Social Network- Virtual
கேபிள் சங்கர்.
Post a Comment

20 comments:

Thirumalai Kandasami said...

Tamilla innuma copy adikala..

http://enathupayanangal.blogspot.com

Thirumalai Kandasami said...

Intha kathai tamila wokout agurathu konjam kastam than.



http://enathupayanangal.blogspot.com

thanjai gemini said...

Ippa padam pakkalama venama

Cable சங்கர் said...

தஞ்சை ஜெமினி
முடிஞ்சா சப்டைட்டிலோடு பார்க்கலாம்.

Cable சங்கர் said...

தஞ்சை ஜெமினி
முடிஞ்சா சப்டைட்டிலோடு பார்க்கலாம்.

Unknown said...

mmmm? :))

'பரிவை' சே.குமார் said...

nalla vimarsanam.

Prabu M said...

நான் ஏற்கெனவே எழுதிட்டேன்.. :)

http://vasagarthevai.blogspot.com/2010/11/social-network-2010.html

பொன்கார்த்திக் said...

என்ன சகா உங்க விமர்சனம் மாதிரி இல்லையே?

chandru2110 said...

red dragon, silience of the lamps,the jackal இது மாதிரி படங்கள் தமிழ்ல வருனும்ன்னு எதிர் பாக்குறேன்.

vinu said...

photovin meethirukkum centence supppppppppppppppppper appu

vinu said...

suraakku appuram tamilil intha padaththitrukku miga miga poruththamaana hero vera yaaraavum irrukka mudiyaathu kaaranam neenga sollii irrukuraa "inthapadaththil dialougue overuuuuuuuuuuuuu"


he he he he

pichaikaaran said...

இந்த மாதிரி நல்ல படங்களை தமிழில் நீங்கள் எடுத்தால்தான் உண்டு

சுரேகா.. said...

FACE THIS STORY WITH SOME FACES!
BOOK A TICKET WITHOUT BOOK!

FACE BOOK WITH A PHASE!

CORRECTAA?

Philosophy Prabhakaran said...

என்ன தலைவரே... ரொம்ப சின்னதா எழுதியிருக்கீங்க... படம் பிடிக்கலையா...

a said...

innum pakkala thala. pathidaren.

வந்தியத்தேவன் said...

you are appreciate only the other language films. known or unknown your mind not accept the good things in tamil cinema. already many more long shots available in Subramaniyapuram. IKKARAIKKU AKKARAI PACHCHAI

Cable சங்கர் said...

@vanthiyathevan
எனக்கு மைண்ட் செட் எல்லாம் இல்லை.. சுப்ரமணிய புரத்தில் சிங்கிள் ஷாட்டில் இரண்டு நிகழ்வுகளை கம்போஸ் செய்திருப்பார்கள். ஒன்று துரோகம், இன்னொன்றில் நிகழ்வு என்பதால் தாக்கம் அருமையாக இருந்தது. நான் சொன்னதை ஒழுங்காக நீங்க புரிஞ்சிக்க்லை.. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஷாட்டுகளில் வெறும் வசனங்களால் முதல் காட்சியில் ஆரம்பிக்கப்படும் இப்படத்தை பார்த்தால் தெரியும்.. ஸோ... நோ பயாஸ்ட் ஒபினியன்:))

Prasanna Rajan said...

அந்த முதல் ஷாட் மொத்தம் 20 பக்க ஸ்க்ரிப்ட். அந்த படத்தோட ஸ்க்ரீன்ப்ளேவை படிச்ச போது தான் அந்த விஷயம் புரிஞ்சுச்சு.

ரன்னிங் டைமை குறைக்கறதுக்காக Jesse Aisenberg'ஐ வேகமாக பேச வைத்தாராம், இயக்குநர் David Fincher.

இதை பத்தி என்னோட விமர்சனத்துலயும் சொல்லி இருக்கேன். என்ன தான் சுவாரசியமான ஸ்க்ரிப்டா இருந்தாலும் டைரக்டர் சரியா அமைஞ்சா தான் படம் எடுபடும்ன்றதுக்கு ’சோஷியல் நெட்வொர்க்’ ஒரு உதாரணம்...

Ba La said...

திரை விமரிசனமாக உங்கள் பதிவை பகிர்ந்துள்ளோம்.
நன்றி
http://laavi.blogspot.com/2010/11/facebook.html