பத்திரிக்கைத்துறை நண்பர் ஒருவர் அவரை சந்திக்க அழைத்திருந்தார். அவரை சந்திக்க டி.நகர் நோக்கி போய்க் கொண்டிருந்த போது போன் அடித்தது. நண்பர்தான்
“சார்.. எங்க இருக்கீங்க?”
“டி.நகர் பனகல் பார்க்கிட்ட இருக்கேன் நண்பரே”
”அப்ப 30 மினிட் வந்திருங்க..” என்றார் எனக்கு புரியவில்லை.. பனகல் பார்க்கிலிருந்து நடிகர் சங்கம் போவதற்கு எதற்கு அரை மணி நேரம்? என்று யோசித்தபடி, ‘நண்பா.. அதுக்கு எது அரை மணி நேரம்?” என்று கேட்டதும்.
‘சரி ஓகே நீங்க நடிகர் சங்கம் வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். நான் நடிகர் சங்கம் போனதும் அதற்கு நேர் எதிரே ஒரு பெரிய போர்ட் வைத்திருந்தார்கள். 30 MINUTES என்று. அதன் வாசலில் நண்பர், பத்திரிக்கையாளர் பாலா நின்றிருந்தார். இப்போது புரிந்துவிட்டது அவரை இதைத்தான் சொல்லியிருக்கிறார் என்று. என்ன இடம்ணே இது? என்று கேட்டபடி உள்ளே போனேன். அங்கே அழைத்துச் சென்று மேலாளரை அறிமுகப்படுத்தினார். அவர் சொன்ன கான்செப்ட் செம இண்ட்ரெஸ்டிங். அது மட்டுமில்லாமல் யுனிக்காகவும் இருந்தது.

பெரும்பாலான பகல் நேரங்களில் பிஸினெஸ் செய்யும் நண்பர்கள், மற்ற துறை நண்பர்கள் எங்காவது ஒரு பொது இடத்தை சொல்லி அங்கிருக்கும் டீக்கடை வாசலிலோ, அல்லது ஒரு ஹோட்டலில் காபி சாப்பிட்டுவிட்டு அதன் வாசலிலோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். பெரிய அளவில் பிஸினெஸ் செய்பவர்கள் கூட ஸ்டார் ஓட்டல் லவுஞ்சில் வந்திருந்து நண்பர்களுடன் காபியோ, டீயோ அருந்தியபடி மீட்டிங்கை முடித்துவிட்டு போவதை பார்த்திருப்பீர்கள். இந்த 30 மினிட்ஸ் ஒரு மத்யதர நண்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

இங்கு அரை மணி நேரத்திற்கு உட்கார்ந்து பேச பத்து ரூபாய் தான் வாடகை. நல்ல அட்மாஸ்பியர், டீசண்ட்டான ஆட்களின் வருகை, அரை மணிக்கொரு காபி, டீ, அல்லது ஜூஸ். என்று அட்டகாசப் படுத்துகிறார்கள். உஙக்ளுக்கு இதை விட ப்ரைவஸி வேண்டுமென்றால் தனி கேபின்கள் கூட தருகிறார்கள். அதை தவிர மெம்பர்க்ளுக்கு மதிய சாப்பாடு வேண்டுமென்றால் ஐம்பது ரூபாய்க்கு சாப்பாடும், மற்ற விருந்தினர்களுக்கு அறுபது ரூபாய்க்கு தருகிறார்கள். இதில் என்ன ஒரு விஷேஷம் என்றால் நிறைய பார்க்குகளில் மார்கெட்டிங், சேல்ஸ் போன்றவற்றில் வேலை செய்யும் நண்பர்கள் பார்குகளில் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். இவர்கள் வெளியிலிருந்து கொண்டு வரும் உணவை கூட அனுமதிக்கிறார்கள்.

மஸாச், பேன்குவிட் ஹால், தனி கேபின்கள், கேட்டவுடன் கிடைக்கும் சர்வீஸ் ஆட்கள், உங்கள் பொருட்களை வைத்துக் கொள்ள வாலட், குளிப்பதற்கான சுத்தமான டாய்லெட், என்று அட்டகாச படுத்திருக்கிறார்கள். வாசலில் மிக அருமையான இரண்டு ரிஷப்ஷன் பெண்கள் கண்களுக்கு குளூமையாய்.
நிச்சயம் இதை விளம்பரம் செய்ய எழுதவில்லை. பல சமயங்களில் நண்பர்களை சந்தித்து ஒரு அரை மணி நேரம் பேசுவதற்கு பல இடங்களை யோசித்து, காபி டேவிலோ, அல்லது லோக்கல் டீக்கடையில் ஐம்பது ரூபாயிலிருந்து, இருநூறு ரூபாய் வரை செலவு செய்து சந்திப்பை நடத்திவிட்டு போகும் நண்பர்களுக்கும், அர்ஜெண்டாக ஒரு வேலைக்கு சென்னைக்கு வந்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு குளித்துவிட்டு போக வேண்டும் என்று இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாய் இருக்கும் என்று தோன்றியது. ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியுள்ளது. இப்போது ஒரு ஸ்பெஷலைஸ்டு மார்டன் சலூன் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. ஒரு முறை சென்று வாருங்கள். அப்புறம் சொல்வீர்கள். மிக குறைந்த விலையில் மெம்பர் ஷிப் கிடைக்கிறது.

பத்து ரூபாய்க்கு அருமையான அரை மணி நேரம். இது விளம்பர பதிவல்ல, நான் போன போது உணர்ந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான். அங்கே இருந்த இரண்டு மணிநேரத்தில் சில பழைய நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் சொன்ன விஷயம் உட்லண்ஸ் டிரைவ் இன் போன பிறகு நிறைய பேர் செட்டில் ஆகியிருக்கும் இடம் என்றார். ஒரு குட்டி பதிவர் சந்திப்பை நடத்த சரியான இடம்..
http://www.passwordgroup.com/service.html
Comments
தலைப்பைப் பார்த்துவிட்டு சட்டையர் டைப் பதிவோ என்று நினைத்துவிட்டேன்....
இது பயனுள்ள பதிவு அண்ணா... எனக்கு இந்தத் தலைப்பு பொருத்தமா இல்லை...
Usually your headings explain half of the content...
in fact in Mumbai domestic airport this concept is there. 30 mins business meet, 30 mins body massage, 30 mins women beauty parlour
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...
:(((
எத்தனை எத்தனை நாள் அங்க உள்ள மரத்தடிகளில் நின்னு சினிமா பேசிருப்போம்.கொஞ்ச நாள் முன்னாடி கவுண்டரை பார்த்தபோது மனுஷன் புலம்பித்தள்ளுனாரு டிரைவ் இன் இல்லாததைப்பற்றி :(
தலைவரின் கலைஞரின் முயற்சியால், மிக பிரமாண்டமான் பூங்கா உருவாகி கொண்டிருக்கிறது.
அயல் நாடுகளிலிருந்து பல வண்ண மலர்கள் , நட்டுள்ளனர்.
தகவலுக்கும்...இடுகைக்கும் நன்றி..
இதை பகிர்ந்து கொள்வது? மெம்பர்ஷிப் ஆவது எப்படி? அதையும் விளக்கியிருக்கலாமே?
however late is better then never.
அண்ணே, தம்மு அலவ்டா?
//
அப்புறம் தண்ணி, ..... , எல்லாம் அலவ்டான்னு கேப்பாங்க...
நல்லா கேக்குறாங்கய்யா டீடெய்லு.... இவங்கள எல்லாம் மூத்தர சந்து முக்குல மீட்டிங் போட உடனும்
அண்ணே, தம்மு அலவ்டா?
//
அப்புறம் தண்ணி, ..... , எல்லாம் அலவ்டான்னு கேப்பாங்க...
நல்லா கேக்குறாங்கய்யா டீடெய்லு.... இவங்கள எல்லாம் மூத்தர சந்து முக்குல மீட்டிங் போட உடனும்
2) //இது விளம்பர பதிவல்ல//
இது போன்ற பதிவை விளம்பரமாகவும் வெளியிடலாம்.. ஏன்னா உங்க பதிவுல போட்டா புளூட்டோ கிரகம் வரை இப்படி ஒரு விஷயம் இருப்பது ரீச் ஆகும்....
நிச்சயம் உங்களை புகழ இந்த பின்னூட்டம் இடவில்லை
இது புகழ்ச்சி பின்னூட்டம் அல்ல
ஒரு பிரபல பதிவர் இவ்வளவு லேட்டாகவா
இதை பகிர்ந்து கொள்வது? மெம்பர்ஷிப் ஆவது எப்படி? அதையும் விளக்கியிருக்கலாமே?
//
அப்புறம் கோயம்பேடு பஸ் ஸ்டான்ட்லேர்ந்து, சென்ட்ரல்லேர்ந்து, எக்மோர்லேர்ந்து, செங்கல்பட்லேர்ந்து, உகாண்டாலேர்ந்து எப்படி வரனும்னு மேப் போட்ருக்கலாம்....
நல்லா கேளுங்க பிரபல பதிவர்னா ஒரு பொறுப்பு வேணாம்....
நானும் அந்த பக்கம் போகும்போது என்னடா இந்த இடம் புதுசா இருக்கேனு நினைச்சேன்.... தெளிவுபடுத்தினதுக்கு நன்றி... :)
//
கண்ணா ஒன்னு தெரிஞ்சிக்கோ....
நினைச்சிட்டு போய்ட்டே இருக்கிறவன் பின்னூட்டம்தான் எழுதுவான்....
இறங்கி என்ன ஏதுன்னு பாக்குறவன் பிரபல பதிவர் ஆகிவிடுவான்..........
//
தல... சொற் குற்றம்.... குளித்து விட்டுதான் உடை மாற்ற வேண்டும்... உடை மாற்றி குளிக்க கூடாது....
பொருள் குற்றம் ..... குளிக்ககிறதுக்காக யாரும் அர்ஜென்டா சென்னை வர தேவையில்லை... அவுங்க ஊர்லயே குளிக்கலாம்
நன்றி
@கா.கி
நீங்க ஒருவாட்டிபோய் பாருங்க.. முதல் வருகைக்கு நன்றி
@பார்வையாளன்
பயன்படுத்திக் கொள்ளும் போது கூப்பிடுங்க..:))
நன்றி
@ஜீ
கூட்டிட்டு போய் பேச மட்டும் செய்யலாம்
@பிரபு.எம்
அப்படியா?
@ராம்ஜு யாஹு
அப்படியா..? தகவலுக்கு மிக்க் நன்றி
நன்றி
@காவெரி கணேஷ்
ஆயிரம் பூங்கா வைக்கட்டும்.. எட்டு மணிக்கு துரத்தி விட்டுருவானுங்க.. டிரைவ் இன் போல வருமா?
2சே.குமார்
நன்றி
@மதுரைக்காரன்
நன்றி
@எல்.கே
நன்றி
@கோபி ராமமூர்த்தி
நன்றி
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
@ஜெயரம் ப்ரகாஷ்
நன்றி உங்கள் முதல் வருகைக்கும் ம்பின்னூட்டத்திற்கும்
@வெங்கட்
நன்றி
@பிலாசபி பிரபாகரன்
ரொம்ப் ஓப்பன் ப்ளேஸ் முடியாது..
2மோகன்குமார்
நன்றி
அது சரி
@வானவன் யோகி
அட அண்ணே ஒரு போன் பண்ணியிருக்க கூடாது.. எங்க வீட்டிலேயே தங்கி போயிருக்கலாமே..? அட போங்கண்ணே..
@பஷீர்
அது சரி ..எனக்கு தெரிந்து அதுக்க்கப்புறம் தானே எழுதணும்.
பொருள் குற்றமெல்லாம் ரொம்பத்தான் ஓவர்.. அவ்வ்வ்வ்வ்
@கீதப்பிரியன்
நன்றி
அப்படி ஆவது நடக்காது என்று நினைக்கிறேன் தலைவரெ. அதுக்கான என்விரான்மெண்ட் இங்கு இல்லை.
Social Network parthacha?Eppo review?
-
DREAMER
என்ன சார் முதல் வருகைக்கு நன்றி??
நான் கார்த்திக் கிருஷ்ணா... சுருக்கி ’கா.கி’னு ,மாத்திட்டேன்....
http://en.wikipedia.org/wiki/Regus