Thottal Thodarum

Nov 19, 2010

சினிமா வியாபாரம்-2

பகுதி-1
சினிமா தியேட்டரை வெளியிலிருந்து பார்க்கும் போது எப்போதும் பிரம்மிப்பாகத்தான் இருக்கும். ஜே..ஜே என கூட்டமிருக்கும் இடமாகவும், ஸ்டாலில் விற்கும் பண்டங்களின் விலையை பார்த்து, தீபாவளி அன்று சாப்பிட்டுவிட்டு தியேட்டருக்கு போனாலும், இடைவேளையில் பாப்கார்ன் சாப்பிடவில்லையென்றால் கலாச்சாரக் கேடு என்பது போன்ற எண்ணத்தில் அவர்கள் கொடுக்கும் டகால்டி கூம்பில் போலியாய் வழியும் கார்ன்களை திட்டிக் கொண்டே சாப்பிட்டுவிட்டு, அள்ளுறான்யா.. தலைவர் படம் போட்டு வசூலேயும் அள்ளுறான். ஸ்டாலேயும் ஒரு அள்ளு என்று எல்லோரும் நினைப்பார்கள்.

ஆனால் அந்த கூட்டம், நெருக்கடி எல்லாம் முதல் மூன்று நாட்களுக்கு மட்டும்தான் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நிச்சயம் நம்ப மாட்டீர்கள். ஏன் நானே தியேட்டர் நடத்தும் குழுமத்தில் ஒருவனாக போகும் வரையில் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஒரு வெற்றிகரமான திரைப்படத்தை கொடுப்பதற்கு என்ன கஷ்டங்கள் இருக்கிறதோ.. அதற்கு ஈடான கஷ்டம் ஒரு நல்ல திரையரங்கை நிர்வகிப்பதில் இருக்கிறது.

ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்கள் தான் தமிழகத்தில் ஏன் இந்தியாவெங்கும் அப்படித்தான் இருந்தது. ஒவ்வொரு முறையும்.. டீவி, வீடியோ, டிவிடி, கேபிள், சாட்டிலைட் சேனல்கள், டிடிஎச், ஐபிடிவி, ரிசஷன் என்று ஒவ்வொரு விஷயமும் வந்து ஆதிக்கம் செலுத்தும் போது. சினிமா அவ்வளவுதான் இனிமே என்ன செய்ய போகிறது? என்கிற நிலை வரும் போது அது தன்னை தானே புதுப்பித்துக் கொண்டு ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் விஸ்வரூபமெடுத்து நின்றுதானிருக்கிறது.

நாங்கள் திரையரங்கை எடுத்து நடத்தலாம் என்ற எண்ணம் வரக் காரணமே எங்களுக்கெல்லாம் காட் பாதர் போன்ற ஒரு நண்பர்.. நடத்திய டூரிங் டாக்கீஸ் தான். அவர் ஒரு விநியோகஸ்தர் என்றால் ஏதோ பெரிய படங்களை விநியோகம் செய்பவர் என்று நினைக்காதீர்கள். ஆனால் அவர் பெரிய படங்களின் விநியோகஸ்தரும் கூட.. விநியோகஸ்தரான அவர் ஒரு ஸ்கூல் வாத்தியாரும் கூட. பார்ட்டைமாக விநியோகஸ்தராக இருப்பது போல் தெரிந்தாலும், மனதளவில் முழு நேர விநியோகஸ்தர், தியேட்டர் அதிபர்.. ஆம் தியேட்டர் அதிபர் தான். செங்கல்பட்டு ஏரியாவில் ஒரு டூரிங் டாக்கீஸின் லீஸ் ஓனர். டூரிங் கொட்டாயானாலும் அதிபர் அதிபர்தானே..

எங்களை விட பெரியவரான அவருடய நெருக்கம் நட்பாய் மாறியது சினிமாவின் மேல் எங்களுக்கு உள்ள ஒரு ஆர்வத்தினால்தான். படங்களை வாங்கி விநியோகம் செய்யலாம் என்று நாங்கள் முடிவு செய்து அதை பற்றி யாரிடம் கேட்கலாம் என்று தேடிய போது வேறொரு நண்பர் மூலமாய் அவர் அறிமுகம் கிடைத்தது. கையில் ஒரு கல்யாண கேரி பேக், தமிழனினின் நிறமாய், வழுக்கைத்தலையுடன், சிரித்த முகத்துடன் ஒரு உயரம் குறைந்த காமராஜ் போன்ற முகத்துடன் அவர் அறிமுகமானார். மிக பொறுமையாய் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வார். விநியோகம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அது போல தியேட்டர் நடத்துவது மிக கஷ்டமான விஷயம். என்றெல்லாம் சொல்லும் போது எங்களுக்கு அவர் பெரியதாய் பில்டப் செய்கிறார் என்று தோன்றும்.

ஒரு டூரிங் கொட்டாயில் இத்துப் போன படம் போட்டு கல்லா கட்டுவதை ஒரு பெரிய வேலை என்று சொல்கிறாரே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் என் நண்பனுக்கு ஒரு ஆசை வந்தது. அவருடய டூரிங் கொட்டாயில் ஒரு சினிமாவை Hireக்கு (அப்படியென்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள சினிமா வியாபாரம் புத்தகம் படியுங்கள்- விளம்பரம்) எடுத்து முதல் முதலாய் தன் காலை சினிமாவில் வைக்க முடிவு செய்தார்.

ஒரு வருடத்துக்கு முன் ஹிட் படமான ஒரு ரஜினி படத்தை படப் பெட்டிக்கு மூவாயிரம், போஸ்டர் மற்றும் இத்யாதிகளுக்கு ஒரு ஐநூறு என்று செலவு செய்து, விநியோகஸ்தராக முடிவு செய்தார். அந்த படம் அவருடய டூரிங் டாக்கீஸில் மூன்று நாள் ஓடியது.


Post a Comment

19 comments:

பொன்கார்த்திக் said...

me the first..

பொன்கார்த்திக் said...

படிச்சுட்டு வரேன்,,

பொன்கார்த்திக் said...

//அப்படியென்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள சினிமா வியாபாரம் புத்தகம் படியுங்கள்- விளம்பரம்//

சகா சாணக்கயன் சகா நீங்க..

Pradeep said...

அந்த படம் அவருடய டூரிங் டாக்கீஸில் மூன்று நாள் ஓடியது.

//Appaalae?

Dr.Vijay padam kanakka interval vittu irukkingalae..

கா.கி said...

@கேபிள்

உங்க எண்ணம் சினிமா வியாபாரம் 2 எழுதறதா இல்ல, பார்ட் 1 வாங்க வெக்கறதா??? :P

Unknown said...

//ஒரு வெற்றிகரமான திரைப்படத்தை கொடுப்பதற்கு என்ன கஷ்டங்கள் இருக்கிறதோ.. அதற்கு ஈடான கஷ்டம் ஒரு நல்ல திரையரங்கை நிர்வகிப்பதில் இருக்கிறது//

புதுசா இருக்கு! எழுதுங்க தல தெரிஞ்சுக்கிறோம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

waiting for part 3

'பரிவை' சே.குமார் said...

வேகமா போன சினிமா வியாபாரத்துக்குள்ள திடீர்ன்னு பிரேக் அடிச்சிட்டிங்கண்ணே... அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்...

Prabu M said...

ஃபர்ஸ்ட் பார்டில் ஒவ்வொரு பாகத்திலும் தகவல்களை அள்ளி இரைத்திருந்தீர்கள்...
இந்த பார்டில் இரண்டு பாகங்கள் வெளிவந்தும் இதுவரை தெரிந்த சங்கதிகளும் உங்கள் அனுபவமும்தான் வந்திருக்கிறது...சீக்கிரம் கியரைப் போட்டுத் தூக்குங்க... ஒரு சூப்பர்ஹிட் தொடரோட சீக்வெல் இல்லையா இது!! :)

Thamira said...

நல்ல துவக்கம் கேபிள். அடுத்த ஹிட் புத்தகத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

(பை தி வே. இது மொத்த பின்னூட்டம். பெண்டிங் இடுகைகள் எல்லாம் படிச்சாச்சு.. ஹிஹி)

மாணவன் said...

உங்களின் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும் சார்...

ஜி.ராஜ்மோகன் said...

தலைவா உங்களுக்கு தெரிஞ்சு இன்னும் எந்த ஊரிலாவது டுரிங் டாக்கீஸ் இருக்கா ?
பகுதி -1 சூப்பர் அடுத்த பகுதியை ஆவலோடு எதிர் நோக்குகிறேன் . http://www.grajmohan.blogspot.com

mani sundaram said...

இந்த கேபிள் சங்கர் ஒரு டுபாகூர்.... கூடிய சீக்கிரம் அது தெரியும்.....

pichaikaaran said...

விறுவிறுப்பா போகுது

shortfilmindia.com said...

@பொன்.கார்திக்
நன்றி

@பிரதீப்
இப்பவும் இருக்கிறது நண்பா..

@கா.கி
ரெண்டும்தான்
@ஜீ
ஆமாம்

@ரமேஷ்
நன்றி

@சே.குமார்
விரைவில்

@பிரபு.எம்
முயற்சி செய்கிறேன்

@ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி

@மாணவன்
நன்றி

@ஜி.ராஜமோகன்
நன்ரி

@மணி
நான் ஒரு டுபாக்கூர் என்று தெரிய வைக்க நீங்கள் செய்யும் முயற்சி அத்தனைக்கும் வாழ்த்துக்கள் மணி..

@பார்வையாளன்
நன்றி

Unknown said...

தமிழனின் நிறமாய், வழுக்கைத்தலையுடன், சிரித்த முகத்துடன் ஒரு உயரம் குறைந்த காமராஜ்
- யதார்த்தம் என்பது அனுபவத்தினால் மாட்டுமே வரும்.

mani sundaram said...

கேபிள் நான் ஏன் முயற்சி செய்ய வேண்டும் நீங்கள்தான் அதையும் செய்துகொண்டு இருக்கும் பொழுது... இது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அல்ல... இலவச ப்ளாக் தானேன்னு தனக்கு தெரிஞ்சதல்லாம் ரைட் நு எழுத கூடாது... பாக்கலாம் உங்கள் படம் வந்த பிறகு உங்களுக்கு தெரியும்.... படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது.... அப்பவும் நீங்கள் எழுதலாம்... உங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று... என்ன சரிதானே

Cable சங்கர் said...

@mani
படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று படம் எடுத்துத்தாந்தெரிய வேண்டுமென்று இல்லை.. எனக்கு இப்பவே தெரியும். நான் படமெடுத்தவன். ஒரு தயாரிப்பாளரின் மகன். நான் யார் என்று அறியாமல் என்னை வெளிப்படுத்த நினைக்கிறீர்கள். பாருங்கள் மணி.. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அல்ல என்று சொல்லிவிட்டு.. உங்கள் வெறுப்பை காட்டுகிறீர்கள். நான் எப்போது சொனேன் நான் சொல்வதுதான் ரைட் என்று. நீங்களாகவே நினைத்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.. மணி..

எனக்கு தெரிந்த விஷயங்களை என்னால் பகிர முடிகிற இடத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அதை நீங்கள் எல்லாம் வரவேற்று தான் ஆக வேண்டிய கட்டாயம் இல்லை. இல்லை நான் சொல்வது தவறாக இருந்தால் நிச்சயம் அதை உங்கள் மாற்று கருத்தாக சொல்ல எல்லா சுதந்திரமும் உங்களுக்கு உள்ளது.

நிச்சயம் என் படம் வரும்.. அப்போது நீங்கள் விமர்சியுங்கள். நான் எப்போதுமே விமர்சனங்களை வரவேற்ப்பவன்.. இல்லாவிட்டால் என்னை டுபாக்கூர் என்று சொன்ன உங்கள் பின்னூட்டத்தை இங்கே வெளியாகியிருக்காது. ஒரு படைப்பை வெளியிட்டுவிட்டால் அதற்கான விமர்சனங்கள் எழத்தான் செய்யும்.. அதனை ஏற்க திராணியில்லாதவர்கள் பொது வெளிக்கு வரக்கூடாது என்பது
என் எண்ணம்.

என் படம் வெளிவரும் வரை பொறுத்திருந்து தொடர்ந்து என் பதிவுகளை, உங்களுக்கான பின்னூட்டங்களை படித்து உங்கள் பொன்னான விருப்பு வெறுப்புகளை பதிவேற்றுங்கள் .. நன்றி.

mani sundaram said...

நன்றி கேபிள்....