Thottal Thodarum

Nov 22, 2010

கொத்து பரோட்டா-21/11/10

சிங்கை பதிவர்கள் எல்லாரும் சேர்ந்து சென்ற வருடம் மணற்கேணி என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி கருத்தாய்வு போட்டி வைத்து அதில் வெற்றி பெற்ற மூன்று பதிவர்களுக்கு சிங்கப்பூர் வரை ஒரு வாரம் சுற்றுலா ஏற்பாடு செய்து, முதல் மலரை வெளியிட்டார்கள். சாதாரணமகவே சிங்கை பதிவர்களின் அன்பைச் சொல்லி மாளாது. அவ்வளவு விருந்தோம்பல் இருக்கும். அவர்கள் இந்த வருடமும் மணற்கேணி2010 என்று கட்டுரை போட்டி  நடத்துகிறார்கள். போட்டியின் விதிமுறைகளை பற்றி அறிந்து கொள்ள http://www.sgtamilbloggers.com/ இணைய தளத்தை பாருங்கள். போன வருடம் நான் கலந்து கொள்ளலாம் என்று அவர்களின் தளத்தை பார்வையிட்ட பிறகு மிகவும் தமிழில் இருந்த்ததால் எஸ்கேப்பாகிவிட்டேன். இம்முறை கொஞ்சம் பரவாயில்லை.. ஹி..ஹி..சும்மா காமெடிக்குத்தான் நண்பர்களே.. சிறந்த முறையில் நடத்தப்படும் ஒரு கருத்தாய்வு போட்டி இது. கலந்து கொள்வோம். சிங்கை செல்வோம்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மிழ் சினிமாவில் தற்போதைய பிரச்சனையே தியேட்டர் கிடைக்காமல் அலையும் தயாரிப்பாளர்களின் நிலைதான். பெரிய படங்கள் தவிர, பெரிய நிறுவனங்களின் கிழ் இயங்கும் திரையரங்குகங்கள், அவர்களின் படங்களுக்காகவே காத்திருந்து படங்கள் போடுவதால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்க மாட்டேனென்கிறது என்கிறார்கள். அப்படியே கிடைத்தாலும் அவர்களுடய படங்களுக்கான இடைவெளி காலத்தின் வரையில் தான் போடுகிறார்கள். ஒரு வேளை படம் பிக்கப் ஆகிவிட்டாலும் ஏற்கனவே போட்ட ஒப்பந்தத்தால் படத்தை கட்டாயமாய் எடுக்க வேண்டியதாகிவிடுகிறது என்று புலம்புகிறார்கள். இது என்னவோ உண்மைதான். இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் இம்மாதிரி  சின்ன படங்களுக்கு டேட் கொடுத்து நஷ்டப்படும் தியேட்டர்காரர்களும் அதிகமிருப்பதால் தான் அவர்கள் பெரிய படங்களுக்காக காத்திருக்கிறார்கள். அவ்ர்கள் கஷ்டம் அவர்களுக்கு. அதற்காகத்தான் சினிமா வியாபாரம் –2 எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஊரெல்லாம் ராசாவின் 2ஜி,ஸ்பெக்ட்ரம் பற்றித்தான் பேச்சாய் இருக்கிறது. இதன் நடுவில் நீரா ராடியாவின் பேச்சு வேறு பரபரப்பாய் ஒலி வடிவில் வந்து காணாமல் போய்விட்டது. அதை கேட்டவர்கள், படிப்பவர்கள் அனைவருக்கும் ஒரே குடும்பத்தினுள் பதவிக்காக எவ்வளவு டகால்டி வேலைகளை செய்கிறார்கள் என்றறியும் போது கொஞ்சம் கஷ்டமாய் இருக்கத்தான் செய்கிறது. பாவம் தலைவன் நிலைமை. சரி விடுங்க அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த் வார கிசுகிசு
சமீப காலமாய் வெற்றி  பறவை பட நிறுவனம் விஜய் டிவி நிறுவனத்துக்கு முக்யத்துவம் கொடுக்கிறதென்று பேசிக் கொள்கிறார்கள். வழக்கமாய் இவர்கள் வாங்கும் படங்களையெல்லாம் கலைஞர் டிவிதான் வாங்கிக் கொள்ளும். ஆனால் தற்போதைய ஹிட்டான பறவை படம் விஜய்யின் வசம்தான். சரி அதை முன்னமே விற்று விட்டார்கள் என்று சொன்னாலும். இவர்களின் அடுத்த வெளியீடான முக்கிய நடிகர் படத்தின் பாடல் வெளியீடு விஜய்யில் தான் ஒளிபரப்பாகப் போகிறதாம். யாருக்கோ செய்தி ரெடியாகிக் கொண்டிருக்கிறதோ..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார வருத்தம்
நேற்றிரவு ராசாவின் மனசிலே படம் கேடிவியில் ஓடியது.  குயில் பாட்டு பாட்டை கேட்டதும் களுக்கென கண்ணில் நீர் வந்துவிட்டது. படத்தை பார்த்து இல்லை. சுவர்ணலதாவின் குரலை கேட்டு. என்னா குரல்டா.. சே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார சந்தோஷம்
சில மாதங்களுக்கு முன் நம் பதிவுலக நண்பர்கள் செய்த உதவியால் காதொலி கேட்ட சிறுவனின் அம்மா போன் செய்தார்கள். அவன் நார்மல் ஸ்கூலில் சேர்ந்து நன்றாக படிப்பதாகவும், பேச ஆரம்பித்துவிட்டதாகவும், முதல் ராங்க வாங்கியிருப்பதாகவும் சொன்னார்கள். கேட்க சந்தோஷமாய் இருந்தது. அவனுக்காக உதவியவர்களுக்கும் சந்தோஷமாய் இருக்குமென்றுதான் இச்செய்தி.. நன்றி நண்பர்களே.
.
எந்திரன் படம் வெளிவந்த நாட்களில் என்னிடம் நிறைய பத்திரிக்கை நண்பர்கள் பேட்டியெடுத்தார்கள். சில பத்திரிக்கைகள் வெளி மாநில பத்திரிக்கைகள். அதில் ஒன்று டெக்கான் ஹெரால்ட்.. அந்த பேட்டியின் லிங்க்.. http://www.deccanherald.com/content/103530/decoding-rajinikanth.html  நானும் என் பங்குக்கு ரஜினியை பற்றி கருத்து சொல்லியிருக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
சென்ற வாரம் என்னவோ தெரியவில்லை இரண்டு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகளுக்கு அடுத்தடுத்த நாள் கலந்து கொள்ள நேர்ந்தது. ஒன்று எஸ்.ஏ.சி ராம்கி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “நானும் என் காதலும்” இன்னொன்று சசிக்குமாரின் “ஈசன்”.   முதல் படத்தின் பட்ஜெட் போலவே சின்ன இடத்தில் விழா நிறைவாக நடந்தது. மூன்று பாடல்கள் திரையிட்டார்கள். அதில் ஒரஞ்சாரமா உக்காந்து பேசலாமா” என்று பாடல் நிச்சய ஹிட் வகை. படத்துக்கு இசை மரியா மனோகர். கேட்டுப் பாருங்கள்.

ஈசன் சத்யமில். கிராண்ட்கேலாவாக நடந்தது. மூன்று பாடல்களை நா. முத்துக்குமார் எழுதியிருக்கிறார். ஒரு பப் ஒன்றில் பாடும் பாடலை போட்டார்கள். “இந்த இரவுதான் போகுதே போகுதே.. இழுத்துக் கட்ட கயிறு கொண்டு வா நண்பனே” கவிஞர் அசத்தியிருக்கிறார் பாடல் வரிகளில். இன்னொரு பாராட்டப்பட வேண்டிய  விஷயம் அப்படத்தில் வேறொரு பாடலாசிரியர் மோகன்ராம்  எழுதிய ”ஜில்லாவிட்டு” என்ற பாடலை மிகவும் சிலாகித்து அவர் பாராட்டியது. நிச்சய ஹிட் லிஸ்டில் இந்த இரு படப் பாடல்களும்  இருக்கிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார டிட்பிட்ஸ்
சன் படவிழாவுக்கு, சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்கள், அனுராக் காஷ்யப், முங்காரு மலே கன்னட இயக்குனர் பட், மலையாள பட இயக்குனர் ரஞ்சித், பாலா, அமீர், இராம நாராயணன். வாரமல் மிஸ்ஸானவர் தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் மட்டும்தான். சசி தேசிய விருது பெற்றதை பற்றி சொலல்வில்லை என்று பத்ரிக்கைக்களில் சொல்லியிருந்த அமிரூக்கு, சரி பதிலளித்தார். எப்போது விருது வாங்கியவுடன் வடநாட்டு பத்திரிக்கைகளுக்கு என் வெற்றி என் குருநாதருக்கு தான் போய் சேரும் என்று சொன்னேனோ.. அப்போதே நான் அவருக்கு விஷயத்தை சொல்லிவிட்டதாகத்தான் அர்த்தம் என்று சொன்னதற்கு பின் நிறைய அர்த்தம் இருக்கிறது என்று தெரிகிறது.அனுராக் கஷ்யப்பின் அடுத்த படத்தின் இன்ஸ்பிரேஷன் சுப்ரமணியபுரமாம்..  ஈசன் திரைப்படத்தில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இயக்குனரெல்லாம் நடிகராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் காஜா மைதீன், ஞானவேல், ஏ.எல்.அழகப்பன் போன்ற தயாரிப்பாளர்கள் நடிகராகியிருப்பதுதான்.

களவாணி திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் எனக்கு தெரிந்த நண்பர்தான். இப்போது இரண்டு படங்களில் வில்லனாகவும், ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறாராம். சந்தோஷமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வாரம் படித்தது
என் புதுலிப்ஸ்டிக் என்ன பிராண்ட்? பார்க்காமல் சொல் என்றாள். நான் அவள் இதழ்களை சுவைத்துச் சொன்னேன். பேஸ்புக்கில் நண்பர் செல்வகுமார்

சமீபத்தில் ஒரு கட்டுரை தொடரை படித்துவிட்டு அப்துல்லாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவரை பாக்கணும்ணே என்றார். அந்த கட்டுரை தொடர் ஆரம்பத்திலிருந்து நானும் படித்து வருகிறேன். அதன் பிறகு அந்த பதிவரை சந்தித்த போது பாராட்டித்தள்ளிவிட்டார். அவர் நண்பர் கே.ஆர்.பி.செந்தில் அவர்களின் பணம் எனும் கட்டுரை தொடர்தான். படித்துப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார ட்வீட்
விர்சுவல் நண்பர்கள் ஆயிரத்தை தாண்டியுள்ளது. ரியலில் இருந்த பத்து சொச்ச நண்பர்களைத்தான் காணவில்லை

ஐநாக்ஸில் மோமோ என்ற ஒரு ஐயிட்டம் விற்றார்கள். நம்ம ஊர் பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டைதான் பேர் தான் சைனீஸ்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்
நல்ல மேக்கிங்குடனான குறும்படம். முடிவு ஏற்கனவே தெரிந்துவிட்டாலும்.. சுவாரஸ்யமாக சொன்னது நன்றாகவே இருக்கிறது. கதாநாயகி ஐஷூவாக நடிக்கும் பெண் எக்ஸ்பிரஷனில் ஒரு குட்டி ஜோதிகாகவே இருக்கிறார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார வீடியோ
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார ப்ளாஷ்பேக்
நம்ம ஊர் லஷ்மி நடித்த இந்திபடம். கிஷோரின் மயக்கும் குரல் இப்பாடலுக்கு பெரிய அஸெட். இதே பாடல் மீண்டும் ரீமிக்ஸில் வந்து சக்கைபோடு போட்டது நான்கைந்து வருடங்களுக்கு முன். இப்போது கேட்டாலும் தெவிட்டாத மெலடி.
சிட்டி ஆயிஹே.. பங்கஜ் உதாஸ் கஜல் உலகின் கிங். அவரின் கேரியரில் உச்சத்தில் இருந்த போது, வெளியான சினிமா கஜல் இது.. இன்றளவில் இவ்வளவு உருக்கும் கஜலை சினிமாவில் பார்க்கவில்லை, கேட்கவில்லை. அருமையான அர்த்தமுள்ள பாடல்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்
பாருங்க.. பாருங்க.. பார்த்துட்டு சொல்லுங்க….
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜோக்
படிக்காத அப்பாவும் படித்த மகனும் ட்ரெக்கிங் போனார்கள். இரவு தங்க நேர்ந்துவிட்ட்தால் டெண்ட் அடித்து தூங்க ஆரம்பித்தார்கள். சில மணி நேரங்களுக்கு பிறகு எழுந்த அப்பா மகனை எழுப்பி, “வானத்தை பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது? என்று கேட்க, மகன் “லட்சக்கணக்கான நட்சந்திரங்கள், காலக்ஸியின் ஆச்சர்யங்கள் என்று விளக்க ஆரம்பிக்க, அப்பா கடுப்பாகி…”என்னத்த படிச்சவனோ.. நம்ம டெண்ட எவனோ தூக்கிட்டு போயிட்டான் அதவிட்டுட்டு.. நட்சத்திரம், கேலக்ஸின்றான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Three friends decided to bet each other $100 on who could make their wives scream more from sex.
They all go home to have sex with their wives and make them scream.
The next day the meet. The first friend says, "I made love to my wife for 2 hours and she was screaming for at least 1 1/2 hours."
The second friend says, "That's nothing, I start licking my wife for two hours and she was screaming the whole time and half hour after that."
The third friend says, " That's nothing, I made love to my wife for ten minutes, I came a couple times I wiped my Dick in the curtain and she still screaming."
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்
Post a Comment

21 comments:

vinthaimanithan said...

பணம் பத்தும் செய்யும் என்பார்கள். செந்தில் அண்ணனின் பணம் தொடர் அதையும் தாண்டிச் செய்யும் போல இருக்கின்றது! வாழ்த்துக்கள் அண்ணா!

vinthaimanithan said...

ஸ்வர்ணலதாவின் 'குயில்பாட்டு' கேட்கும்போதெல்லாம் அப்படியே சிலைபோலாகி விடுவது என் வழக்கம்! நீங்கள் சொன்னது நிஜம்... சிலதுளி கண்ணீரும் சேர்ந்துவரும்!

bandhu said...

//சரி விடுங்க அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..//
என்னது. சகஜமா. எவன் வீட்டு காசு. அதுவும், தயாநிதி தயாளு அம்மாளுக்கு 600 கோடி கொடுத்தாராமே. அதையும் சகஜமா எடுத்துக்கணுமா.
நாம எல்லாத்தையும் சகஜமா எடுத்துக்கிட்டு சினிமா பாத்துகிட்டும் A ஜோக் கேட்டுகிட்டும் இருக்கறதால தான் அவங்களும் மேலும் மேலும் கொள்ளயடிச்சிட்டு, நமக்கு தேவையான சினிமாவை 150 கோடிக்கு தயாரிச்சு கொடுத்துட்டு நமக்கு தேவையான மானாட மயிலாடவும் போட்டுக்கிட்டு இருக்காங்க.
நமக்கெல்லாம் இந்த ராடியா டேப் கேட்டு கூட விழிப்புணர்வு வரலன்ன எப்படி பாஸ்?

KuttyKannu said...

நான் ராடியா ராசா, ராடியா ரத்தன் டாட்டா டேப் கேட்டுட்டு ஒரு நாள் நைட்டு முழுதும் சரியா தூங்கல...பெரியாத்து சங்கதி லாம் இவ்ளோ கேவலமா தெருவுல வந்து சண்ட போடாத குறையா பேசிக்கிராணுக...இவனுகளுக்கெல்லாம் மாவீரன், அஞ்சாநெஞ்சன் னு பேர் வேற....வெட்கம் கெட்ட ஆளுங்க.....மக்களை ஏமாற்றும் இவனுகளை தெய்வம் தான் நின்று கொல்லும்...சீக்கிரம் ஒரு புரட்சி வரும் பாருங்களேன்...

கரெக்ட் அண்ணே..குயில் பாட்டு கண்ணில் நீர் வர வைக்கும் பாடல் தான்...

வினோ said...

அண்ணே நிறைய விசயங்கள்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice post

Unknown said...

தகவல்கள் அருமை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

good prottaa

pichaikaaran said...

ஆங்கிலம் தெரியாததால் ஜோக் படிக்கவில்லை . தமிழில் எழுதுங்கள்

பிரபல பதிவர் said...

பிரபல தமிழ் பதிவர் ஆங்கிலத்தில் நகைச்சுவை எழுதியிருக்கீங்களே...
தமிழில் எழுதுங்கள்....

தமிழ் வாழ்க....

பிரபல பதிவர் said...

பிரபல தமிழ் பதிவர் ஆங்கிலத்தில் நகைச்சுவை எழுதியிருக்கீங்களே...
தமிழில் எழுதுங்கள்....

தமிழ் வாழ்க....

008 said...

இந்த வார வீடியோ மிகவும் அருமை. இது போன்ற ஒரு நிகழ்வு எனக்கே நடந்து உள்ளது.

Unknown said...

தலைவரே என் வந்தனங்கள்...

கருந்தேள் கண்ணாயிரம் said...

டெக்கான் ஹெரால்டுக்கு வாழ்த்துக்கள் சங்கர்.. :-)

ஒரு சின்ன சஜெஷன் சொல்லலாமா? இந்த @@@@@@@@@@, ஒரு மாதிரி கண்ணை இழுக்குது.. ஏதோ ஒண்ணு கொறையுறமாதிரி ஒரு பீலிங்கி.. அதுக்குப் பதில் வேற எதாவது ஃபில்லர் ட்ரை பண்ணுங்களேன்..

கருந்தேள் கண்ணாயிரம் said...

அதேபோல், ஸ்பெக்ட்ரம் பற்றி ராடியாவின் பேச்சைப் படித்தேன்.. தமிழில்.. ரத்தம் கொதித்ததே மிச்சம்.. இவனுங்களையெல்லாம் நடுத்தெருவுல நிக்க வெச்சி.... அரேபிய தண்டனை வழங்கணும்.. என்ன சொல்றீங்க

ரவி said...

how much time it takes to make one post ?

ஜி.ராஜ்மோகன் said...

தலைவா எப்படித்தான் இவ்வளவு பெரிய பதிவை உங்களால் எழுத முடிகிறதோ தெரியவில்லை.ரொம்ப சூப்பர்.http://www.grajmohan.blogspot.com

Prabu M said...

//என் புதுலிப்ஸ்டிக் என்ன பிராண்ட்? பார்க்காமல் சொல் என்றாள். நான் அவள் இதழ்களை சுவைத்துச் சொன்னேன். பேஸ்புக்கில் நண்பர் செல்வகுமார்//

அபாரம்!

shortfilmindia.com said...

@vinthai manithan
செந்திலின் பணம் நிச்சயம் படிக்க வேண்டிய பதிவு

@பந்து
சரி பந்து இப்ப என்ன செய்யலாம் சொல்லுங்க நான் ரெடி..

@குட்டி கண்ணு
நன்றி

@வினோ
நன்றி

@டி.வி.ராதாகிருஷ்ணன்
நன்றி

@விக்கி உலகம்
நன்றி

@ரமேஷ்
நன்றி

@பார்வையாளன்
சில விஷயங்களை தமிழில் எழுதினால் ருசிக்காது

@சிவகாசி மாப்பிள்ளை
உங்களுக்கு அதே பதில்தானுங்கோ.. ஊருக்கு வர்றேன்னீங்களே.. என்னாச்சு..?

@008
நன்றி

2கே.ஆர்.பி.செந்தில்
நன்றி

@கருந்தேள் கண்ணாயிரம்
மாத்திருவோம்

@@க்ருந்தேள் கண்ணாயிரம்
இதுக்கெல்லாம் கொதிச்சா. நமக்கு தான்ப்ளட் ப்ரஷர் வரும்..

2செந்தழல் ரவி.
ஏன் ஹெல்ப் பண்ண வர்றீங்களா? :))

@ஜி.ராஜ்மோகன்
கையாலத்தான்

:))

2பிரபு.எம்.
இதுபோல பல இண்ட்ரஸ்டிங்கான விஷயங்களை அதுவும் முத்தத்தை வைத்தே கலக்குபவர் அவர்.

Unknown said...

Cable,

Malayalam director name Vikram illa, Renjith...correct pannidunga...

ஜோசப் பால்ராஜ் said...

சிங்கைப் பதிவர்களின் முயற்சிக்கு ஊக்கமூட்டியமைக்கு நன்றி அண்ணா.

கதிர் சாதாரணப் பள்ளியில் படித்து முதல் மாணவணாய் வந்தது மிக சந்தோசமா இருக்கு. என் சார்பா ஒரு சாக்லேட் வாங்கி குடுங்க அந்த குட்டிப் பையனுக்கு.