Thottal Thodarum

Nov 10, 2010

உத்தமபுத்திரன்

uthama-puthiran-2763 தனுஷ், ஜவஹர், விவேக், தமிழ் சினிமாவின் சிறந்த லூசுப் பெண் ஜெனிலியா மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமாவின் பிரபல், பிரபலமில்லாத நடிகர் நடிகைகள் என்று குழாமிட்டு வெளிவந்திருக்கும் படம். ஏற்கனவே தெலுங்கில் ஹிட்டானதால், ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல், சுடச்சுட வாங்கி ரீமேக்கியிருக்கிறார்கள். இம்மாதிரியான ரீமேக்குளை செய்யும் போது ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும், அங்கே அந்த படத்தை நடித்தது யார்? அங்கே அப்படம் ஹிட்டானதற்கான காரணம் என்ன? நேட்டிவிட்டி எந்த அளவிற்கு நமக்கு ஒத்து வரும் என்பதை எல்லாம் யோசித்திருந்தால் ஒரு பதினைந்து கோடி மிச்சமாயிருக்கும்.

பாக்ய்ராஜ் தலைமையில் உள்ள ஒரு பெரிய கூட்டு குடும்பத்தில் உள்ள தன் முறை பெண்ணுக்கு அவனுடய காதலனுடன் சேர்த்து வைத்ததால் வீட்டை விட்டு தனியே இருக்க வேண்டியதாகி போய்விடுகிறது தனுஷுக்கு. இதற்கு இன்னொரு பிரச்சனை தன் நண்பனின் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள் என்றதும் அப்பெண்ணை கடத்துகிறார்கள். ஆனால் கல்யாண மண்டபம் மாறியதால் மணப் பெண்ணும் மாறிவிட, செய்வதறியாது நிற்கும் நேரத்தில். மணப்பெண் தனக்கு அந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை என்று தான் புதுக்கோட்டையில் உள்ள தன் மாமா வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்ல, இதனிடையே இருவருக்கும் காதல் வர, ஜெனிலியாவை தன் வீட்டிலேயே தனுஷ் தங்க வைக்க, இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று குடும்பமே நினைக்கும் போது ஜெனிலியா கடத்தப்படுகிறார். காரணம் ஜெனிலியாவின் சொத்துக்காக இரண்டு மாமன்களுக்கிடையே லடாய். இரண்டு பேருக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆகாது. இருவரையும் சமாளித்து தனுஷ் எப்படி ஜெனிலியாவை அடைகிறார் என்பதை நீட்டி முழக்கி இரண்டேமுக்கால் மணி நேரம் சொல்லியிருக்கிறார்கள்.
uthama-puthiran-movie-stills-01 முதல் பாதி முழுவதும், தனுஷ், ஜெனிலியா, மற்றும் தனுஷ் குடும்பட்தினர் என்று ஒரே பாசக்காரக் குடும்பமாய் போவதால் ஒன்னும் பெரிசா சொல்றதுக்கில்லை. ஜெனிலியா வீட்டுக்காரங்களிடம் விவேக்குடன் தனுஷ் சேரும் போது தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டான மூச்சே வருகிறது. விவேக் வழக்கமான வசனக் காமெடியிலிருந்து மெல்ல ஆக்‌ஷன் காமெடிக்கு வந்திருக்கிறார். அதிலும் தனுஷ் செய்யும் உட்டாலக்கடி தில்லாலங்கடி வேலையை பார்த்து ஃபீல் செய்யும் போதெல்லாம் நெஞ்சம் மறப்பதில்லை மியூசிக் வரும்போது நிச்சயம் சிரிக்காமல் இருக்க முடியாது.

தனுஷ் குடும்பத்தில் ஒரு கும்பல் என்றால். இந்த பக்கம் ஜெனிலியா மாமன் குடும்பத்தில் ஒரு நடிகர் கும்பல். எல்லார் பெயரையும் சொல்லி முடிப்பதற்குள் தாவூ திர்ந்துவிடுமாதலால் முடிஞ்சா தியேட்டல படம் பார்க்கும் போது தெரிஞ்சிக்கோங்க.. இந்த குடும்பத்தை ஏதோ கவுண்டன் குடும்பம் என்று சொல்லி ஒரு மாதிரி நோகடிச்சிருக்காங்க.. உக்கார முடியல. டிவி சீரியல் கணக்கா லைனா ஆளாளுக்கு வரிசை கட்டி வந்து சீனுக்கு சீன் திருப்பம் தர்றோம்னு காமெடி செய்யற காமெடிய காண சகிக்க கண் கோடி வேண்டும்.
விஜய் ஆண்டனி நடிக்க போயிட்டதினால பாட்டு போடறதில சுரத்தில்லாம இருக்காரு போல.. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு பளிச்.. தனுஷுக்கு இந்த மாதிரி படங்கள் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

உத்தமபுத்திரன் - சோப்ளாங்கி
கேபிள் சங்கர்

Post a Comment

26 comments:

Pradeep said...

Thala.. ivlo sonninga.. Uthamaputhiran title vaikka kaaranathayum sollungalaen..

Thirumalai Kandasami said...

Appa uthamaputhiranum out a?

http://enathupayanangal.blogspot.com

Thirumalai Kandasami said...

Boss vallakottai ya yaravathu parthangala?

Sukumar said...

பார்க்கலாமா வேணாமா... பாஸ் ?

Sukumar said...

// Boss vallakottai ya yaravathu parthangala? //
அர்ஜுன், இயக்குனர் வெங்கடேஷ், தயாரிப்பாளர் எல்லோரும் பார்த்தாங்களாம் நண்பா...

CS. Mohan Kumar said...

//Sukumar Swaminathan said...
பார்க்கலாமா வேணாமா... பாஸ் ? //

இவ்ளோ சொன்ன பிறகு இப்படி கேக்குறாரே.. இவர் ரொம்ம்ப்ப நல்லவரோ?

Ashok D said...

சும்மா... பிரிச்சி மேஞ்ட்டிங்க... good form

ஹரிஸ் Harish said...

படம் பாத்துட்டேன்..கொஞ்சம் மொக்கதான்..இருந்தாலும் எனக்கு பிடிச்சிருக்கு..

Prabu M said...

//அங்கே அந்த படத்தை நடித்தது யார்? அங்கே அப்படம் ஹிட்டானதற்கான காரணம் என்ன? நேட்டிவிட்டி எந்த அளவிற்கு நமக்கு ஒத்து வரும் என்பதை எல்லாம் யோசித்திருந்தால் ஒரு பதினைந்து கோடி மிச்சமாயிருக்கும்.
//
இந்தச் சின்ன விஷயத்தை ஏன் புரிஞ்சிக்கவே மாட்டேங்குறாங்கன்னுதாங்க புரியவே மாட்டேங்குது!!

கதையை வாசிக்க முயற்சிபண்ணேன்.... பூமிசுத்துறது கண்ணுல தெரியுது!!
விவேக் நல்ல ரிலாக்ஸ் போல... உங்க விமர்சனம் படிச்சாலே படம் பார்த்தமாதிரி ஆகிடுது.... ஆனால் உங்க இண்டஸ்ட்ரிக்கு பிரச்னைதான் அண்ணா... நாங்க தியேட்டருக்குப் போகவாபோறோம்!! :)

விஜய் said...

அப்ப தீபாவளிக்கு வந்த படங்களிலே 'மைனா' சுமார்,'உத்தமபுத்திரன்' மொக்கை,'வ' செமகடி. அண்ணா... இப்ப என்னத்ததான் பாக்கறது? இந்த தீபாவளி புஸ்ஸா?

'பரிவை' சே.குமார் said...

படம் ரொம்ப நல்லாயில்லையின்னாலும் எனக்குப் பிடிச்சிருக்கு.
உங்கள் விமர்சனம் அருமை.

நம்ம வலைப்பூவுக்கும் ஒரு எட்டு வந்துட்டுப் போறது அண்ணா.

Unknown said...

உத்தம "புத்தி" ரன் ....

R.Gopi said...

நல்ல வேளை....

கேபிளார் இன்னமும் “வல்லக்கோட்டை” பாக்கல போலிருக்கு.....

பார்த்துட்டு விமர்சனம் எழுதிடப்போறீங்க....

இன்னமுமா இந்த அர்ஜுன் வச்சு படம் எடுத்துட்டு இருக்காங்க?

எப்படி தல இதெல்லாம் நடக்குது... கொஞ்சம் எங்களுக்கு எல்லாம் புரியற மாதிரி சொல்லுங்களேன்...

Unknown said...

//தனுஷுக்கு இந்த மாதிரி படங்கள் தேவையில்லை என்றே தோன்றுகிறது.//
:)))

Ram said...

படத்தில் யாருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது..
மிகவும் பிடித்த மற்றும் வெறுத்த ஸீன் எது என்பன போன்றும் பதிவு செய்யவும்..

Unknown said...

தனுஷ் திருந்த மாட்டார். குட்டி, பரட்டை போன்ற படங்கள் உதாரணங்கள்.

//* அங்கே அப்படம் ஹிட்டானதற்கான காரணம் என்ன? *//
இதே மாதிரி தான் தில்லாலங்கடியும் பலாப் ஆச்சு

ஆனந்தி.. said...

சுறா படத்துக்கு அப்புறம் தியேட்டர் இல் சுகமா தூங்க வச்சது இந்த படம் தான் கேபிள்சார்..செகண்ட் ஹாப் எல்லாம் உட்கார முடில...மதுரையில் நாங்க படம் பார்த்துட்டு இருக்கும்போது நிறைய பேரு எந்திரிச்சு போய்ட்டாங்க..ஜெனிலியா வோட ஓவர் expression பல சமயங்களில் எரிச்சலா கூட இருக்கு...இதை டிவிடி யில் பார்த்தால் கூட பொறுமை இருக்காது னு தான் தோணுது சார்...:)))

bayo said...
This comment has been removed by the author.
rghavan66 said...

இடைவேளையில் வண்டி எடுக்க விடமாட்டேன்னு சொல்லிட்டாங்க சார், இல்லைன்னா!!!!

DR said...

ஊத்திகிச்சா... ஹை ஜாலி ஜாலி,,, இனிமேலாவது தெலுகு படங்களை தமிழில் எடுத்து சாவடிக்க மாட்டாணுங்க...

Unknown said...

//ஊத்திகிச்சா... ஹை ஜாலி ஜாலி,,, இனிமேலாவது தெலுகு படங்களை தமிழில் எடுத்து சாவடிக்க மாட்டாணுங்க...//

:)))

Unknown said...

மலையாளத்த ரீமேக் பண்ணாலும் ஊத்தணும்!!

ஐயோ அப்ப நம்ம டாக்டரோட வாழ்க்கை? :))

Thamira said...

ஜெனிலியாவை ரசிக்கலாம் என்றிருந்தேன். வட போச்சா.?

Shaj said...

dssdf

YESRAMESH said...

மலையாளத்த ரீமேக் பண்ணாலும் ஊத்தணும்!
ENAKKUM THAN ROMBA AAAASAI

YESRAMESH said...

மலையாளத்த ரீமேக் பண்ணாலும் ஊத்தணும்!
ENAKKUM THAN ROMBA AAAASAI