Posts

Showing posts with the label பயணக் கட்டுரை

Joy"full" சிங்கப்பூர்- 6

Image
  அடுத்த நாள் காலையில் ராமிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, நானும் ஜெகதீசனும், கோவி.கண்ணனை சந்திக்க கிளம்பினோம். ”நான் உங்களை கோவியாரிடம் ஒப்படைத்துவிட்டு அப்படியே கிளம்புகிறேன் என்ற ஜெகதீசன் பின்பு.. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நானும் உங்களுடம் வருகிறேன் செண்டோசாவுக்கு என்றார். எனக்கு அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது. ஏன் என்றால் அவர் என்னுடய் நெருங்கிய நண்பரை போல அச்சு அசலாய் இருந்தார். பேச்சை தவிர. மிக மிக அளந்த பேச்சு, கூர்ந்து கவனிக்கும் தன்மை, மிக இயல்பாய் எங்களுக்குள்  ஒரு “கெமிஸ்ட்ரி” உருவாகிவிட்டது.

Joy"full" சிங்கப்பூர் -4

Image
  அடுத்தநாள் ஜெய்யிடம் நான் எழுந்தபின் பேசிய நேரம் சுமார் 10 மணியிருக்கும், நான் இருக்கும் இடம் தான் சிங்கப்பூரின் நடு செண்டராம். அங்கிருந்து ஒரு ரவுண்ட் அடித்தால் முக்கிய இடங்களை பார்த்து விடலாம் என்று சொன்னார். எல்லாவற்றையும் நோட் செய்துவிட்டு, அவசர அவசரமாய் குளித்துவிட்டு, மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.

Joyfull சிங்கப்பூர்-7 நிறைவு பகுதி

Image
அடுத்த நாள் காலையிலேயே குளித்து முடித்து ரெடியாகிவிட்டேன். பதிவர் ரோஸ்விக் விக்டர் பிரபாவின் வீட்டிற்கே வந்து விட்டார். அவருடய நண்பரும் என்னுடய வாசகருமான ராஜ் உடன். ராஜ் பதினைந்து வருட சிங்கப்பூர்வாசி. நல்ல டால் அண்ட் ஸ்லிம் பர்சனாலிட்டியாய் இருந்தார். மணக்க, மணக்க கொங்கு தமிழ் பேசுகிறார். பார்த்தவுடன் ரொம்ப நாள் பழகியவர் போல் பழகுகிறார். அவ்வளவு இயல்பு. பழகிய ஒரே நாளில் நெருக்கமாகி போனவர். இவர் டன்ஹில் புகைக்கும் ஸ்டைல் நன்றாக இருக்கும். இவர் ஒரு தகவல் களஞ்சியம். சிங்கப்பூரை பற்றி பல விஷயங்களை அருமையான ஜுராங்பார்க் டிரைவின் போது சொல்லி வ்ந்தார். அவரின் ஜிபிஎஸ் பெண் அவ்வப்போது நேராக போ, லெப்டில் திரும்பு, ரைட் திரும்பு, கேமரா இருக்கிறது, என்று சொல்லிக் கொண்டே வந்தது. வழி மாறிவந்துவிட்டால் கூட அடுத்த கணம் மாற்று வழி காண்பித்தது. சிங்கப்பூரை விட மலேசியாவில் பெட்ரோல் விலை குறைவாம். அதற்காகவே ரோட் வழியாக கிட்டத்தட்ட காலி டாங்குடன் மலேசியா சென்று அங்கிருந்து புல் கேங்குடன் வருவார்களாம். அதை கண்காணிக்க அங்கே ஆட்கள் இருக்கிறார்களாம். சிங்கப்பூரில் ...