Thottal Thodarum

Apr 10, 2012

Joy"full" சிங்கப்பூர் -4


IMGA0258 Image0456
அடுத்தநாள் ஜெய்யிடம் நான் எழுந்தபின் பேசிய நேரம் சுமார் 10 மணியிருக்கும், நான் இருக்கும் இடம் தான் சிங்கப்பூரின் நடு செண்டராம். அங்கிருந்து ஒரு ரவுண்ட் அடித்தால் முக்கிய இடங்களை பார்த்து விடலாம் என்று சொன்னார். எல்லாவற்றையும் நோட் செய்துவிட்டு, அவசர அவசரமாய் குளித்துவிட்டு, மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.IMGA0252 IMGA0254
காலையிலேயே வெயில் உறுத்தியது. நம்மூரைவிட அதிகப்படியான ஹூமிடிட்டியினால் வழக்கத்தை விட அதிகமாய் வியர்த்தது. விஷ்..விஷ் என கிஞ்சித்தும் புகையில்லாத, ஹாரன் சத்தமில்லாத ஹைவேக்கள், நெஞ்சை பிடிக்கும் டி.சர்டுகளோடும், சர்வ நிச்சயமாய் ஒரு ஐ போனோ அல்லது ஐ பாடையோ, காதில் சொருகிக் கொண்டு போகாத இளைஞிகளோ, இளைஞர்களோ பார்க்க முடியாது. மாற்றி மாற்றி திடீர் திடீர்ரென நடு ரோட்டில் இறுக அணைத்து கொண்டு, காதல் வயப்படுவதும், கிட்டத்தட்ட ரொமான்ஸுக்கு அடுத்த கட்டத்தை நோக்கி பாயும் கைகள்,பாண்டீஸ் சைஸுக்கு ஒரு ட்ராயரையும், போட்டுக் கொண்டு ஆபீஸுக்கும், காலேஜிக்கும் போகும் சப்பை மூக்கு, இடுங்கிய கண்கள் கொண்ட பெண்கள்.எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லா நடைபாதையின் பளீர் தரைகள், பத்தடிக்கு ஒரு குப்பை தொட்டி, ரோட்டில் நடக்கும் நடையர்களுக்கான முக்கியத்துவம். நீங்கள் எவ்வளவு பிஸியான ரோடானலும் க்ராஸ் செய்ய வேண்டுமென்றால் சிக்னலில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால், அதற்கேற்ப மற்ற சிக்னல்களை சீரமைத்து, அடுத்த நிமிடங்களில் உங்களுக்கான வழி விடும் தொழில் நுட்பம். எவ்வளவு தான் மழை பெய்தாலும் அடுத்த நிமிடங்களில் பளிச்சாகும் ரோடுகள். சிட்டியில் மட்டுமில்லை, புறநகர்களில் கூட அஃதே. எல்லாவற்றையும் மீறி நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு இருந்து கொண்டே இருகிறது.
IMGA0228 IMGA0225
ஊர் சுத்தமாய் இருக்கிறது என்று சொல்வது சூரியனுக்கு டார்ச் அடித்தது போல. அதனால் அதை பற்றி பேசுவதை விட, இந்த ஒழுக்கத்தை இன்றளவில் மாட்டினால் ஃபைந்தான் என்ற ஒரு பயத்தை உள்ளூர விதைத்து, லஞ்சம் கொடுத்தெல்லாம் வேலைக்காகாது என்ற நிலையில், அந்த பயத்தை கொண்டே ஒழுக்கத்தை வளர்கிறார்கள். அந்த இறுக்கத்தின் வெளிப்பாட்டை நம்மூர்காரர்கள் லிட்டில் இந்தியாவில் வெளிப்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட நம்மூர் ஆட்டிட்யூடுடன்.
IMGA0219 IMGA0245
எம்.ஆர்.டி எனப்படும் மெட்ரோ ரயில் சர்வீஸின் தரத்தையும், ஒரு ஊரை எல்லாவிதங்களிலும் மால்களின் பேஸ்மெண்டுகளில் இண்டெர்கனெக்ட் செய்து,எல்லா போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தியிருப்பது ஆச்சர்யபடுத்துகிறது. அதே போல் பேருந்து வசதிகள். பேருந்துக்கும், எம்.ஆர்.டிக்கு ஒரு அடையாள அட்டையை எடுத்துக் கொண்டால் போது அந்த கார்டை உள்ளே நுழையும்போதும், வெளியேறும் போது காட்டினால் ஆட்டோமேட்டிக்காக நம் அக்கவுண்டிலிருந்து பணம் எடுத்துக் கொள்கிறார்கள். டாக்ஸிகள் பக்கத்து ரோடுக்கு கூப்பிட்டாலும் வருகிறார்கள். ஆனால் அவை வார இறுதி நாட்களில் கிடைப்பது தான் குதிரை கொம்பாக இருக்கிறது.
IMGA0242 IMGA0250
எல்லா மால்களிலும் புட்கோர்டுகளால் நிரம்பியிருக்க, எங்கேயும், எப்போதும் எல்லா கோர்டுகளிலும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டும் வாங்கிக் கொண்டும்தானிருக்கிறார்கள். சண்டெக் சிட்டியில் வார இறுதியில் ஐ.டி ஷோ நடந்து கொண்டிருந்தது. மால் முழுவதும், ஐ.டி ஷோ ஸ்டால்கள்தான். உலகில் உள்ள அத்துனை கம்பெனியும் வந்திருக்குமோ என்ற சந்தேகம். நடக்க முடியாத அளவுக்கு கும்பல் அம்மியது. எதோ மளிகை கடையில் சாமன்களை ட்ராலியில் தள்ளி வருவது போல, பெரிய பெரிய ட்ராலிகளில், கம்புயூட்டரையும், லாப்டாப்பையும், இன்ன பிற எலக்ட்ரானிக் வஸ்துக்களையும், அள்ளி போட்டுக் கொண்டு, எதையாவது தின்று கொண்டும், பீர் சப்பிக் கொண்டும், வாக் வேயில் பின்பக்கத்தை அழுத்தியபடி முத்தமிட்டுக் கொண்டே பிஸியாக இருந்தார்கள்.

நான் எக்ஸ்பிளனேட் மாலுக்குள் நுழைந்தேன். வழக்கமான கூட்டம் நெறியும் மாலாய் இல்லாமல் மிக அமைதியாக இருந்தது. இந்த கட்டிடத்தை எங்கிருந்தாவது டாப் ஆங்கிளிலிருந்து பார்த்தால் சிங்கப்பூரின் பிரபல பழமான தூரியனின் வடிவத்தில் அமைக்கப்பட்ட கட்டிடம். முழுக்க,முழுக்க, இசை, இசை கருவிகள், கான்செர்ட் ஹால், தியேட்ட்ர் ஹால்,  என்று இசையால் வழிந்தோடியது. நிச்சயம் பார்க்க வேண்டிய இசை சம்பந்தப்பட்ட நூலகம் ஒன்றும் உள்ளது.  கொஞ்சம் காஸ்ட்லியான பாஷ் புட் கோர்ட்டுகளும் இருந்தது.
IMGA0231 IMGA0235
அங்கிருந்து பின்பக்கம் போனால் க்ளார்க் வாக் வர, அங்கிருந்த டூரிஸம் கூண்டிலிருந்த ஒரு பெண், பதினைந்து டாலருக்கு ஆற்றில் படகின் மூலம் சிங்கப்பூரை சுற்றிக் காட்டும் நிகழ்ச்சிக்கு கேம்பெயின் பண்ண, நான் படகுக்காக காத்திருந்தேன். காத்திருந்த நேரத்தில் அவளுடன் பேச ஆரம்பித்தேன். எல்லா விஷயத்திற்கும் மிக அதிகமான எக்ஸ்பிரஷனுடன், அவளின் சின்ன கண்களை விரித்து பேசியது இண்ட்ரஸ்டிங். நான் தமிழ் சினிமாவில் வேலை செய்கிறேன் என்றவுடன், தனக்கும் தமிழ் பாடல்கள் பிடிக்கும் அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் என்றாள். தன் ஐ போனை விரலால் நிரடி, ஒரு பாட்டை போட்டு ஒரு பக்க இயர் போனை என் காதிலும், மற்றதை அவளுடய காதிலும் பொருத்தி, ப்ளே செய்தால்.. “ஆரோமலே” பாட்டு முழுவதும் முடியும் வரை, கண் திறக்கவேயில்லை, அனிச்சையாய் என் கை பிடித்திருந்தாள். நேரம் போக, போக, இறுக்கம் அதிகமாகியது. பாட்டு முடிந்து கண் திறந்தவளின் கண்களில் கண்ணீர் திரள, “I love this song. It’s Hurt me a lot” என்றாள். காதல்.
IMGA0249 IMGA0253
அதற்குள் ஒரு போட் வர, டூருக்கு கிளப்பினேன். அருமையான ஒரு குட்டி டூர் ஆற்றின் பேக்ரவுண்டில். பல நாட்டுகாரர்களுடன். அதில் உடன் வந்த ஒரு பிரஞ்சு பெண் க்யூட். முடிந்து வந்து மெல்ல மீக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு கால் போன போக்கில நடக்க ஆரம்பிக்க, திடீரென பெருமழை பிடித்துக் கொண்டது. அருகே இருந்த் ஒரு ஸ்டேடியத்தில் மொஸாயிக் என்று இசை திருவிழாவுக்கான ஆயுத்தஙக்ள் நடைபெற்று கொண்டிருக்க, நிறைய சைன பெண்கள் போவதை பார்த்து நானும் உள்ளே போக எத்தனித்தேன். அங்கே இருந்த ஒரு செக்யூரிட்டி கார்டு என்னை தடுத்தார்.” சார் இவர்கள் எல்லாம் குழுவின் ஆட்கள். இப்போது யாரையும் அனுமதிக்க முடியாது” என்றார். வேறு வழியில்லாமல் மழைக்கு ஒதுங்கி கொள்கிறேன் என்று சொன்னேன். அவர் பெயர் ரத்னம். தஞ்சாவூர்காரர். ஆனால் தஞ்சாவூருக்கே போகாதவர். சிங்கையில் பிறந்து வளர்ந்த தமிழர். நெடு நேரம் பேசிக் கொண்டிருந்த போது அவர் என்னை எங்கேயோ பார்திருப்பதாய் சொன்னது ஆச்சர்ய படுத்தியது. கடைசியில் தான் தெரிந்தது அவர் என் பதிவுகளின் வாசகராம். கடல் கடந்து ஒரு புதிய வாசகரை சந்தித்தது உற்சாகமாய் இருந்தது.
IMGA0255 IMGA0288
மழை நின்றவுடன், மீண்டும் நடக்க ஆரம்பித்து, மெல்ல, மெல்ல ஒவ்வொரு மாலுக்குள்ளூம் சென்று, மேலிருந்து, கீழே, கீழே என்று அலைந்து, நடு நடுவே புட்கோர்டுகளில் ஜுஸும், காப்பியுமாய் குடித்தலைந்து, மீண்டும் சண்டெக் சிட்டி வந்து அங்கிருந்த பரோட்டா கடையில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு, அந்த மாலில் உள்ள மல்ட்டிப்ளெக்சை பார்க்க நடக்க ஆரம்பித்தேன். மேலே இருந்த வழிகாட்டிகளை படித்தபடி சுமார் அரை மணி நேரம் நடந்து அந்த மல்ட்டிப்ளெக்ஸை அடைந்தேன். ஏதாவது ஒரு படத்தை பார்கக்லாம் என்றால் எல்லா படங்களும் ஆரம்பித்து கவுண்டர் க்ளோஸ். இரண்டு 3டி படங்கள் ஓடிக்கொண்டிருந்தது. அந்த கண்ணாடி கொடுத்த பெண்ணும் குட்டையாய் 3டியில் இருந்தாள். மால்களை சுற்றிச் சுற்றி கால்கள் களைப்படைந்ததனால். மீண்டும் பாலாவின் ஹோட்டல் ரூமுக்கு சென்றடைந்தேன் நடந்தே. பாலா போன் செய்தார் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாகவும். “என்ன ப்ரோக்ராம் என்றார். சாமியின் திருமந்திர சொற்பொழிவு என்றேன்.
Image0452 IMGA0290
லிட்டில் இந்தியாவில் செராங்கூன் ரோடிலிருக்கும் காளியம்மன் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருந்த்து சாமியின் சொற்பொழிவு. முற்றிலும் வேறான ஒரு இடத்தில் அவரின் பேச்சு மிக சுவாரஸ்யமாக இருந்தது. சொற்பொழிவு முடிந்ததும், கேள்விநேரம் ஆர்ம்பிக்க, வந்திருந்த பக்தர்களில் ஒருவர், ஒரே நாளில் ஆன்மீகத்தை கரைத்து குடிக்கும் முடிவுடன் கேள்விகளால் துளைத்தெடுக, சக்கரை பொங்கல், புளியோதரையுடன் அந்நாள் இனிதே நிறைவுற்றது. கூட்டத்தில் மீண்டும் ஜோசப், கோவி, கிரி, அறிவிலி, பித்தனின் வாக்கு சுதாகர், மற்றும் பல நண்பர்களை சந்தித்துவிட்டு அளவளாவி கிளம்பினோம். ஆனால் கிளம்பிய வேகத்தில் போய் சேரத்தான் முடியவில்லை.

கேபிள் சங்கர்

Post a Comment

14 comments:

கோவை நேரம் said...

காலை வணக்கம்..ரொம்ப நீ .........ளமான ..சுவையான பதிவு...

கோவை நேரம் said...

ஒரே பதிவில் அனைத்தும் சொல்லிவிட்டால் எப்படிங்க...இன்னும் பத்து பதிவுக்கு இழுக்கலாமே...எங்களுக்கு போர் அடிக்காது...ஒரே பதிவில் இத்தனையும் படிக்கும் போது ஏதோ சுவாரசியம் குறைவது போல தோன்றுகிறது ..

Jagannathan said...

உங்களை அடையாளம் தெரிந்துகொண்ட செக்யூரிடி அதுவும் தமிழர், உங்களை ஸ்பெஷலாக உள்ளே விட்டதாக நீங்கள் எழுதாதது சிங்கப்பூரின் அடையாளத்தை நன்கு புரிய வைக்கிறது! - ஜெ.

Jagannathan said...

உங்களை அடையாளம் தெரிந்துகொண்ட செக்யூரிடி அதுவும் தமிழர், உங்களை ஸ்பெஷலாக உள்ளே விட்டதாக நீங்கள் எழுதாதது சிங்கப்பூரின் அடையாளத்தை நன்கு புரிய வைக்கிறது! - ஜெ.

arul said...

arumayana pathivu jackie anna

வவ்வால் said...

கேபிள்,

வெளிநாட்டு அனுபவம்னு எழுதுவதை வழக்கமா படிக்க மாட்டேன், படிச்சா ஏன்டா நம்ம நாடு இன்னும் இப்படி இருக்குனு கடுப்பும், அந்த நாட்டு மீது பொறாமையும் வந்து நவதுவாரத்திலும் பெரு மூச்சு விட வேண்டி இருக்கு.

என்ன கடுப்பு ஏத்தின உங்களை சும்மா விட முடியுமா? அங்கே எல்லாம் சினிமாவே தயாரிக்கிறது இல்லை, சினிமாகாரங்க தான் ஆட்சிக்கு வரனும்னு மக்களும் ஆசைப்படலை அதான் நாடு நல்லா இருக்கு :-))

எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தா தமிழ்நாடு இன்னொரு சிங்கப்பூரா மாத்திக்காட்டுவேன் என்பதை அடக்கத்துடன் சொல்லிக்கொள்கிறேன் :-))

வவ்வால் said...

// arul said...
arumayana pathivu jackie anna

11:14 AM//

எந்த பதிவு யாரு எழுதினா என்பதே தெரியாமல்,என்ன எழுதி இருக்குனும் படிக்காமல் பின்னூட்டம் போடுற ஒரு கும்பல் அடங்கவே மாட்டேங்குது :-))

eniyavan said...

நல்ல பயண கட்டுரை சுவாரஸ்யமாக இருக்கிறது... சுத்தமான ரோடு,சட்டத்துக்கு கட்டுப்படும் மக்கள் படிக்கும்போதே பொராமையா இருக்குது...என் இந்திய தேசம் எப்போதுதான் மாறும்மோ.......

eniyavan said...
This comment has been removed by the author.
பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//அந்த கண்ணாடி கொடுத்த பெண்ணும் குட்டையாய் 3டியில் இருந்தாள்.//
???
அவ்வளவு பக்கமா போய் பார்த்தீங்க?

ramesh said...

Athu Enna sir "Nadu center". Thavirkalamae Inimale. Nandri.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் ... மீண்டும் ஒரு சிங்கபூர் பயணமா! வாழ்த்துகள்

அரவிந்தன் said...

//நடு செண்டராம்// ????

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

@aravindan

சும்மா ஒரு கிண்டலுக்காகத்தான்.. அது..