Thottal Thodarum

Apr 4, 2012

Ee Rojullo

wp-33eerojullo800 ஸ்ரீனிவாஸ் கேர்ள் ப்ரெண்ட்சுகளால் பாதிக்கப்பட்டவன். அவனிடம் உள்ள பணத்திற்காக மட்டுமே அவனை சுற்றியலைபவர்களாக இருக்கிறார்கள் என்று வெறுத்துப் போய் இருப்பவன். ஷ்ரேயா எல்லா ஆண்கள் நட்பு என்று ஆரம்பித்து அடுத்த லெவலுக்கு மூவ் செய்ய முயலும் போது நடக்கும் நிகழ்வுகளால் எரிச்சலடைந்து ஆண்களின் நட்பே வேண்டாம் என்று இருப்பவள். இருவரும் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, இருவருக்குள் நட்பும் கிடையாது காதலும் கிடையாது என்று பழக ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் காதலில் விழுந்தார்களா? இல்லையா என்பதுதான் கதை.


ரொம்பவும் சிம்பிளான கதை. அதை சொன்ன விதமும் படு சிம்பிளாக, இன்றைய இளைஞர்களின் மனசாட்சியாய் காட்சிகள் அமைந்திருக்க, படம் ஆரம்பித்ததிலிருந்து சும்மா ஜெட் வேகத்தில் பெண்கள் ஆண்களை எப்படி எக்ஸ்ப்ளாயிட் செய்கிறார்கள் என்று ஒவ்வொரு காட்சியிலும், வெளிப்படுத்தும் போது தியேட்டர் அதகளமாகிறது. அவ்வள்வு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் பாதி முழுவதும் இப்படி சட்டையராகவே போகிற படம் இரண்டாம்பாதியில் சீரியஸாகி இவர்கள் காதல் நிறைவேறுகிறதா இல்லையா? என்று போகிறது.
wp-40eerojullo800
படம் முழுக்க இரண்டு மூன்று கேரக்டர்களைத் தவிர எல்லோருமே புதுமுகம். டெக்னீஷியன்கள் உட்பட. ஸ்ரீனிவாஸ் ஸ்ரீ கேரக்டருக்கு சரியான தேர்வு. தற்கால இளைஞர்களின் ஆட்டிட்டியூட்டை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் கூடவே வரும் திக்கி பேசும் அஸிஸ்டெண்ட் டைரக்டர் கேரக்டரில் வரும் சாய் அட்டகாசம். அவர் பேசும் ஓவ்வொரு வசனமும் செம நக்கல் கிண்டல். ஷ்ரேயாவாக வரும் ரேஷ்மா சில பல ஆங்கிள்களில் திரிஷா போலவே இருக்கிறார். கேமராமேனும் மெனக்கெட்டு எந்தெந்த ஆங்கிளில் எல்லாம் த்ரிஷா போல இருப்பாரோ அந்தந்த ஆங்கிளில் எல்லாம் பட்ம்பிடித்திருக்கிறார்.
wp-52eerojullo800 கேனான் 5டி மார்க் 2 கேமராவில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 70 லட்சம் ரூபாய்தான். ஏற்கனவே ராம் கோபால் வர்மா இந்த டிஜிட்டல் கேமராவில் பெரிய நடிகர்களை வைத்து படமெடுத்திருந்தாலும், இந்த படத்தின் பாஸிட்டிவ் ரிசல்ட்டும், இதன் வசூலும் நிறைய புதிய கலைஞர்களை தெலுங்கு படவுலகுகிற்கு அறிமுகப்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் படம் என்றே சொல்ல வேண்டும்.

பிரபாகர் ரெட்டியின் ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்கது. முக்கியமாய் ப்ளீச் ஆகக்கூடிய இடங்களை அவாய்ட் செய்து, நல்ல ப்ளெசெண்டான விஷுவலை அளித்ததற்கு வாழ்த்துக்கள். கொஞ்சம் கிரேடிங்கில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் நல்ல குவாலிட்டி கிடைத்திருக்கும் என்றே தோன்றுகிறது. ஜே.பியின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியிசையும் ஓகே.
wp-47eerojullo800
எழுதி இயக்கியவர் மாருதி. புதியவரான இவரின் அப்ரோச் பாராட்டுக்குரியது. எங்கேயும் காம்பரமைஸ் ஆகாமல் படத்திற்கு என்ன தேவையோ அதை தெளிவாக கொடுத்திருக்கிறார். முத்ல் பாதி முழுவதும் கிண்டலும் கேலியுமாய் போகும் படம், இரண்டாவது பாதியில் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். ஆங்காங்கே கொஞ்சம் டபுள் மீனிங் வசனங்களுக்கு முகம் சுளிப்பவர்கள் இருந்தாலும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெறுகிறது. இரண்டாவது பாதியில் டெம்ப்ளேடான சீன்களும், வளவள வசனங்களையும் தவிர்த்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும். வெகு காலத்திற்கு பிறகு பெரிய பட்ஜெட் ஏதுமில்லாமல், முழுக்க முழுக்க இளைஞர்களை வைத்து அவர்களின் களத்தை இளைமையாய் சொன்னதற்காக சபாஷ்.
கேபிள் சங்கர் 

Post a Comment

4 comments:

குரங்குபெடல் said...

நம்பிக்கைய்யூட்டும் திரைப்படம்

நம்பிக்கைய்யூட்டும் விமர்சனம்

பகிர்வுக்கு நன்றி

arul said...

it seems a good try

keyven said...
This comment has been removed by the author.
கோகுல் said...

கேனான் 5 டி மார்க் 2 ஒரு டி எஸ் எல் ஆர் கேமிரா தானே, அதிலா படம் எடுத்தார்கள்?