Thottal Thodarum

Apr 7, 2012

Joy"full" சிங்கப்பூர் -3


DSC_5752காலையில் எழுந்ததும், ஒரு காப்பியை போட்டு கொடுத்துவிட்டு “அப்புறம்ணே. நல்லா தூங்கினீங்களா?” எனறு கேட்டவரிடம், “நீங்க ஏன் தூங்கவேயில்லை..? “ என்றவனை கோபமில்லாமல் பார்த்து, “தூங்க விட்டாத்தானே?” என்றார்.எனக்கு கூட அவர் சொன்ன காரணத்தை நினைத்து பாவமாய்தான் இருந்தது. காலையில் நம்ம ப்ளாக்கில் லோக்கல் நம்பரை கொடுத்தவுடன் தொடர்ந்து போன் வர ஆரம்பித்தது. வந்த போன்களை பார்த்து பிரபாகர் “அண்ணே.. சிங்கப்பூர்ல இவ்வளவு நண்பர்களா? என்று அதிசயப்பட்டார். புண்ணாக்கு மூட்டை பாலாவும், என்னுடய வாசக நண்பர் ஜெய்கிருஷ்ணாவும் இன்றே சந்தித்தாகவேண்டும் என்று சொல்ல, இரவு லிட்டில் இந்தியாவில் சந்திப்பதாய் பிக்ஸ் செய்து கொண்டு, வண்ணத்திரை தொலைக்காட்சியில் விக்ரம் படம் போட்டிருந்தார்கள் அதை பார்த்துவிட்டு ஒரு தூக்கத்தை போட்டு, மாலை அவர்களை சந்திப்பதற்காக கிளம்பினோம்.
IMGA0221அருமையான எம்.ஆர்.டி, மற்றும் பஸ் பயணங்களையும், அதன் தொழில்நுட்பங்களையும், கட்டமைப்பு நேர்த்திகளையும் சற்றே பொறாமையோடு வியந்தேன். வழியில் விஜய் ஆனந்தை எம்.ஆர்.டி ஸ்டேஷனில் சந்தித்துவிட்டு, முஸ்தபாவின் வாசலில் காத்திருக்க சொன்ன ஜெய்யையும், பாலாவை சந்தித்தோம். எத்தனையோ முறை போனில் பேசியிருந்தாலும், நேரில் பார்பது இதுதான் முதல் முறை. மிலிட்டரி ஆபிஸர் போல விரைப்பாக, ஸ்மார்ட்டாக இருந்தார். இவரிடம் எனக்கு பிடித்தது, அவருடய பேச்சும், நம் பேச்சை கேட்கும் போது தலையாட்டிக் கொண்டே “ஹா..ஹா” என்று செய்யும் ரெஸ்பான்ஸும்தான்.
IMGA0220அடுத்த சில நிமிடங்களில் ஜெய்யையும் பார்த்துவிட, என் கற்பனையை விட இளமையாய் இருந்தார். தீவிர ரஜினி ரசிகர். மிகவும் சாப்டான மனிதர். ஜோவியல். பார்த்தவுடன் பச்சக் என்று மனதில் ஒட்டிக் கொள்ளும் இயல்பானவர். பிரபா, நான், பாலா, ஜெய் எல்லோரும் கலந்தபின், பிரபாவுக்கு நைட் ஷிப் போக வேண்மென்பதால் அவருடன் சாப்பிட அஞ்சப்பருக்குள் நுழைந்தோம். போனவுடன் பொரித்த அப்பளத்தை வைத்தார்கள். பியர்? என்று ஆர்டர் செய்ய, பிரபா மட்டும் சாப்பிட்டு விட்டு கிளம்பினார். அதற்குள் ஒரு மக்கை முடித்துவிட்டு கிளம்ப யத்தனித்த போது, கோவியார் வந்து எங்களை சந்தித்தார். அப்போது அங்கே இன்னொரு நண்பர் வந்து “சார்.. நீங்க கேபிள் சங்கரா..? ப்ளாகர் தானே? என்று கேட்டபடி தன்னை முத்து என்று அறிமுகபடுத்திக் கொண்டார். ரொம்ப நேரமாய் ப்ளாக் பற்றி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அட நம்ம ஆட்களா? என்று வந்து கலந்ததாகவும் தானும் ஒரு ப்ளாகர் என்று சந்தோஷப்பட்டு, சிறிது நேரம் பேசிவிட்டு. கிளம்பினோம். வெளியே வந்து பார்த்தால் சாமி நின்றிருந்தார்.
IMGA0223
அவருடன் அவரது பிரதம சிஷ்யனாக அவதாரமெடுத்திருக்கும், விஜய் பாஸ்கர் என்கிற வெற்றிக்கதிரவனும், கோவியாரும் அடுத்த நாள் சாமி செய்ய இருக்கும் திருமந்திர உபன்யாச நோட்டீசுகளை விநியோகித்து கொண்டிருந்தார்கள். சாமி என்னை பார்த்து “என்ன எல்லாம் முடிஞ்சாச்சா? “ என்று அர்த்தததோடு வினவ, “இனிமே தான் ஆரம்பிக்கணும்” என்றேன்.

அடுத்து நாங்கள் உட்கார்ந்த இடம் ஒரு லோக்கல் ஓப்பன் பார். 12 வருட ஷீவாஸ் ரீகலுடன் ஆரம்பித்தார் ஜெய். ரஜினி, பதிவுலகம், அரசியல், செக்ஸ், சாமி,பதிவர்கள் என்று எங்கள் பேச்சில் வந்து விழாத விஷயங்களே இல்லை. இதற்கிடையே பதிவர்களுடன் தொலைபேசி பேச்சு வேறு. அவ்வளவு சுவாரஸ்யமாக ஆரம்பித்த அந்த மாலை விடியற்காலை மூன்று மணிக்கு முடிந்தது. இனிய அனுபவத்தை தந்த ஜெய்க்கும், பாலாவுக்கும் இந்த பதிவுலகத்திற்கும் நன்றிகள் பல.
IMGA0227
அங்கிருந்து டாக்ஸி பிடித்துக் கொண்டு பாலா தங்கியிருந்த ஹோட்டலான “மரினா மாண்ட்ரீயனில் பதினாலாவது மாடிக்கு ஏறி விழுந்தது தான் தெரியும். வரும் வழியில் டாக்ஸியில் “விண்ணைத்தாண்டி வருவாயா” பாட்டை கேட்டுக் கொண்டு வந்தது மங்கலாக ஞாபகத்தில் ஒலித்தது.
IMGA0226

கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

Unknown said...

பாஸ் தலைப்பை சிங்கப்பூரில் கேபிள் ன்னு போட்டு பாருங்க .. சூப்பர் அ இருக்கும் ..

மு.கஸ்ஸாலி
http://www.gazzaly.info

arul said...

seems you had enjoyed this singapore trip sankar anna

சித்தார்த்தன் said...

அன்புள்ளம் கொண்ட கேபிள் அண்ணாஅவர்களுக்கு,
உங்கள் வாசகன் சித்தார்த்தன் எழுதுவது,
தங்கள் எழுத்து எனக்கு 3 வருடங்களாகப் பழக்கம்...நன்றாக
உள்ளது...வாழ்த்துக்கள்...சிலபேர்கள் உங்களைக் கிண்டல் பண்ணுவதாக நினைத்தது கொண்டு உங்கள் நடையை காபி
அடிக்கிறஆற்கள்...