தில்லாலங்கடி சரக்கு தயாரிக்கும் ஒரு பெரிய மாபியா கும்பலிடம் வேலைக்கு போகும் ஹீரோ, அங்கேயே வேலை செய்யும் ஹீரோயின். என்ன தான் வில்லன் ஏரியா என்றாலும் செம ஸ்ட்ரிக்ட், ஆண்களும் பெண்களும் பேசக்கூடாது மீறி பேசினால் அடி உதை குத்து என்பது போல படுஸ்ட்ரிக்ட் மேனேஜ்மெண்ட். அதை மீறி இருவருக்கும் காதல் வந்து மேட்டர் கூட ஆகி, கர்ப்பமே ஆகிவிடுகிறார்கள். அதில் ஒரு இளைஞன் நிறைய பணம் சேர்த்து வைத்திருக்க, அவன் கலெக்ஷன் வேலை பார்ப்பவன் என்பதால் அவன் திருடித்தான் வைத்திருக்கிறான் என்று நினைத்து ஹீரோ அவனை போட்டுக் கொடுத்துவிட, அவன் எல்லோர் முன்னிலையிலும் கொல்லப்பட, பின்பு தான் ஹீரோவுக்கு தெரிகிறது தன் சம்பள பணத்தை தான் தன் தங்கையின் திருமணதிற்காக சேர்த்து வைத்திருக்கிறான் என்று. தான் செய்த தவறுக்கான பிராயச்சித்தமாய் அவன் குடும்பத்துக்கு சேர வேண்டி கொள்ளையடிக்க முடிவெடுக்கிறான். ஓடும் போது காதலியையும் கூட்டிக் கொண்டு ஓட, வில்லன் க்ரூப் துரத்துகிறது. பின்பு என்ன ஆனது என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.
படத்தில் அவ்வப்போது நம்மை கிச்சு கிச்சு மூட்டுபவர் சுனில் ஷெட்டி. அந்த செக்ஸி வில்லி, வில்லன் க்ரூப், அக்கவுண்டண்ட், பணத்தை டெபாசிட் செய்யும் முறை போன்றவைகள் சுவாரஸ்யம்தான்.
எழுதி இயக்கியவர் தேஜா. கொஞ்சம் அங்காடித்தெரு, கொஞ்சம் மைனா, இன்னும் கொஞ்சம் அவரின் பழைய படங்களின் தொகுப்பாய் சில பல காட்சிகள் என்று இருந்தாலும் இரண்டாவது பாதியில் சுவாரஸ்யம் குறையாமல் செய்திருக்கிறார். கடனுக்காக என்ன வேலை செய்கிறோம் என்று கூட கேட்கத் தெரியாமல் இருப்பவர்கள் கூகுள் மேம்பை வைத்துக் கொண்டு ரூட் பார்ப்பதும், வில்லன் கோஷ்டிகளும் அதே கூகுள் மேப்பை வைத்து பார்ப்பதும், ஆளாளுக்கு ஆட்டோ, கார், என்று ஹீரோயின் கூட லாஜிக் இல்லாமல் வண்டி ஓட்டுவது போன்ற காட்சிகள் நம்மை கதையோடு லயிக்க முடியாமல் தவிக்க விடுகிறது. இதற்கு முன்னால் வந்த தேஜாவின் படங்களோடு ஒப்பிடுகையில் இது ஓகே படம் தான்.
கேபிள் சங்கர்
Comments
வரலாறு முக்கியம் நராயனரே . . நாராயணரே . .
நன்றி