Thottal Thodarum

Apr 30, 2012

கொத்து பரோட்டா 30/04/12

பெட்ரோல் விலையை ஏற்றுவதை தவிர வேறு வழியில்லை என்று சூசகமாய் சொல்லியிருக்கிறாராம் பிரதமர் மன்மோகன்சிங்ஜி. பெட்ரோல் நிறுவனங்களே இந்த விலையேற்றத்தை வரியை குறைத்து சரி செய்யலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் இவர் ஏற்றித்தான் ஆக வேண்டும் என்று கூறியிருப்பது மக்களின் மேல் கொஞ்சம் கூட அக்கறையில்லை என்பதைத்தான் காட்டுகிறது. தொடர்ந்து இப்படி விலையேறிக் கொண்டே போனால் மக்கள் எப்படி சமாளிப்பார்கள் என்று கொஞ்சம் யோசிக்கும் அரசாயிருந்தால் பரவாயில்லை. ம்ஹும் நமக்கு மத்தியிலும் சரி, மாநிலத்திலேயும் சரி.. மாட்டிக்கிட்டு அவஸ்தை படத்தான் எழுதி வச்சிருக்கு போலருக்கு.
@@@@@@@@@@@@@@@@@@@@@ஐ.பி.எல்லினால் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் இளைஞர்களின் கவனம் குறைந்திருப்பது கண் கூடாக தெரிகிறது. மதியக் காட்சிகளிலும், இரவுக் காட்சிகளிலும் தியேட்டரில் ஆட்களே இல்லை என்ற நிலையில் தான் பல தியேட்டர்களில் இருக்கிறது. சென்ற வெள்ளிக்கிழமை அன்று திருப்பூரிலிருந்து நண்பர் முரளிகுமார் அழைத்திருந்தார். அன்று ரிலீசான புதிய படத்திற்கு மொத்தமே நான்கு பேர்கள் மட்டுமே தான் இருப்பதாகவும். அதுவும் நண்பருடன் சென்றவர்கள் என்றார். இதிலிருந்து தப்பியது ஓகே.ஓகே மட்டுமே. ஐபிஎல்லை முறியடிக்க, பெரிய பட்ஜெட் படங்கள்தான் சரிப்படும் என்பது விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் தெரியும் என்றாலும், பெரிய படங்களின் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் ரிஸ்க் எடுக்க தயங்குகிறார்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
படித்ததில் பிடித்தது.
மணிஜியின் டேபிளின் மேல் இந்தப் புத்தகம் இருந்தது. எடுத்துப் படிக்க ஆரம்பித்த நிமிடத்திலிருந்து அதனுள் மூழ்கிவிட்டேன். அவரிடம் இரவல் வாங்கி பல வேலைகளுக்கிடையே படித்து முடித்துவிட்டேன். இதற்கு முன் வெட்டுப்புலியை எவ்வளவு ரசித்தேனோ அதை விட மூன்று மடங்கு இந்த நாவலை ரசித்து ரசித்து படித்தேன். மூன்று தலைமுறை அய்யங்கார் குடும்பத்தை பற்றிய கதை. ஆனால் தென் இந்திய மூன்று தலை முறை வரலாற்றை இவ்வளவு சுவையாய், சுவாரஸ்யமாய் சொல்ல முடியமா? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கான எழுத்து. முதலில் ஆங்கிலத்தில் வெளிவ்ந்து பின்பு அதே எழுத்தாளர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்நாவலைப் பற்றி எழுத வேண்டும் என்றால் புத்தகம் முழுக்க மார்க் செய்யப்பட்டிருக்கும் வசனங்களை எழுதினாலே ஒரு வாரத்துக்கு சிலாகித்து எழுதலாம். புலிநகக் கொன்றை பி.ஏ.கிருஷ்ணன் எழுதியது. இந்நாவலைப் பற்றி நண்பர் பலாப்பட்டறை ஷங்கர் எழுதிய கட்டுரையை படியுங்கள். நீங்கள் புத்தகத்தை படிககாமல் இருக்க மாட்டீர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
பெரிய பட்ஜெட் தமிழ் திரைப்படங்கள் தெலுங்கில் ஒரே சமயத்தில் டப் செய்து வெளியிடும் வழக்கம் பல காலமாய் இருக்கிறது. ஆனால் தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்து வெளியிட்ட பழைய சிரஞ்சீவி படங்கள், நாகார்ஜுனா படங்கள் என்று வெகு சில படங்களே வெற்றிப் பெற்றிருந்ததால் தொடர்ந்து முயற்சி செய்யாமல் விட்டிருந்தார்கள். ஆனால் இன்றைய தெலுங்கு நாயகர்கள் தங்களது படங்களை தமிழிலும் ஒரே நேரத்தில் வெளியிடும் முயற்சியை தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். ஏற்கனவே மகேஷ்பாபுவின் ஒரு தெலுங்கு படம் நந்து என்ற பெயரில் வந்து ஒரளவுக்கு வசூல ஆனதால். தொடர்ந்து அவரது நேரடி தெலுங்கு படங்கள் தமிழ் நாட்டிலும் சக்கை போடு போட ஆரம்பித்தததினாலும், அவரது படங்களை டப் செய்து வெளியிட முடிவு செய்தார்கள். கடந்த படமான பிஸினெஸ்மேனை தமிழிலும் வெளியிட இருந்து அது தள்ளிப் போனது. ஆனால் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா அதை தன் மாவிரன் வெற்றியை வைத்து தன் புதிய படமான ரக்‌ஷாவை தமிழிலும் வெளியிட்டார். தெலுங்கு ஹீரோவுக்கு நல்ல ஓப்பனிங் என்றே சொல்ல வேண்டும். அதை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் தன் தம்முவை சிங்கமகனாக்கியிருக்கிறார். அடுத்து இளைய தலைமுறை நடிகரான ராம் தமிழ்நாட்டில் பிறந்து தெலுங்கில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கருணாகரன் இயக்கும் ”ஏன் என்றால் காதல் என்பேன்”என்கிற புதிய படத்தை தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். சூப்பர்ஸ்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியும் தன் “ஈ” படத்தை இரண்டு மொழிகளில் வருகிற மே மாதம் வெளியிட இருக்கிறார். இனி வரும் மாதங்களில் சின்ன பட்ஜெட் தமிழ் படங்கள் இம்மாதிரியான பெரிய பட்ஜெட் தெலுங்கு டப்பிங் படங்களுடனும் போட்டிப் போட வேண்டியிருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
உடல், பொருள், ஆவி எல்லாத்தையும் தர்றேன்னு சொல்றாரு தலீவரு - யாராவது சொல்லுங்கப்பா இனி தந்து பிரயோசனமில்லைன்னுட்டு. 

மூளை குருடாயிருக்கும் போது கண்கள் இருந்தும் பிரயோஜனமில்லை.

ஒரு மோசமான அனுபவத்திற்கு பின் தான் வாழ்க்கையை அவ்வளவு சுலபமாய் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று புரிகிறது.

நாடார்களில் எந்த பிரிவினையாக இருந்தாலும் ஜாதி கணக்கெடுப்பின் போது சொல்லுங்க #ஒரு நாடார் கட்சி தலைவர் #ஜாதி ஒழிஞ்சிரும்

உன்னுடன் இருக்கும் போது உன்மத்தம் பிடித்தவள் போல் இருந்திருக்கிறேன் என்பது நீ இல்லாத போதுதான் புரிகிறது. # காதல்

பிரிவோம் சந்திப்போம் -2 படித்துக் கொண்டிருக்கிறேன். என்னா ஒரு ரைட்டிங்டா.. அநியாயமா படமா எடுத்து கெடுத்துட்டாங்க

ஒருவரை கலாய்ப்பது என்று வரும் போது மட்டும் எல்லோருக்கும் நகைச்சுவை உணர்வு பீறிட்டு வருகிறது அது எப்படி? டவுட்டு

அட்டு பிகருக்கு குட்டு பாயும், குட்டு பிகருக்கு அட்டு பாயும் செட்டாவுறதுதான் வழக்கம் # கலகலப்பு @ Masala Cafe

முறைப் பொண்ணும், மொட்டைமாடில காய வச்ச வத்தலும் ஒண்ணு. எப்ப எவன் தூக்கிட்டு போவான்னே தெரியாது # கலகலப்பு @ Masala Cafe

வாழ்க்கை ஒரு காலி பக்கம் போல. அவங்கவங்க பக்கத்தை அவங்களேத்தான் எழுதிக்கணும்.

நீ அணைந்து என்னை அணைக்கும் போது என்னுள் இருக்கும் கங்கு பற்றி எரிய ஆரம்பிக்கிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@
சனியன்று தினத்தந்தி டெலிவிஷன் திரையில் நான் தொகுத்து இயக்கும் “தமிழ்த்திரை” நிகழ்ச்சியைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தார்கள். இதற்கு முன் இரண்டு படங்களுக்கு வசனம்,  ஒரு படத்திற்கு திரைக்கதை, மேலும் இரண்டு சீரியலுக்கு வசனம், மற்றும் திரைக்கதை எழுதியிருந்தாலும், பெரும்பாலும் சின்னப் படங்களாய் அமைந்துவிட்டதால் வெளியே தெரியாமல் போனது. சில படங்கள் இன்னமும் படப்பிடிப்பில் இருக்கிறது.  என்னை வசனகர்த்தாவாக்கி சின்னத்திரையில் பெயர் வரச் செய்தவர் என்னுடய மெண்டர் திரு.என்.வி.நடராஜன் அவர்கள். அவ்ர் தான் என்னை செகண்ட் யூனிட் இயக்குனராக்கி தொழில் கற்றுக் கொடுத்தவர். பொதிகையில் சதுரங்கம் என்கிற சீரியலில் தான் என் பெயர் இடம் பெற்றது. இப்போது அதே பொதிகையில் துவார் சந்திரசேகரின் தயாரிப்பில் நான் இயக்கி வெளிவரும் “தமிழ்திரை” என்று சினிமா நிகழ்ச்சியில் இயக்கத்தில் எனது பெயர் மீண்டும் பொதிகையில் ஆரம்பித்திருக்கிறது. கடந்த மூன்று வாரமாய் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தினத்தந்தியில் தமிழ்த்திரை நிகழ்ச்சி பற்றிய ஒரு செய்தி வந்திருந்ததை பார்க்க மிக சந்தோஷமாயிருந்தது. இந்த வாய்ப்பை நல்கிய தயாரிப்பாளர் துவார் சந்திரசேகருக்கும், நண்பர், தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்துக்கு என் நன்றிகள். இந்த நிகழ்ச்சியில் விளம்பரம் செய்ய விரும்புகிறவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
நண்பர் ராஜமாணிக்கம் இரண்டு பீரிதி மிக்ஸிய வாங்கி விட்டு பட்ட அவஸ்தைக்கு கேட்டால் கிடைக்கும் மூலம் எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. ஐ.எஸ்.ஐ இல்லாமல் கொடுக்கப்பட்ட மிக்ஸி ஒன்று எரிந்து போக, அதற்கு பதிலாய் புதிய மிக்ஸிக்கள் ஐ.எஸ்.ஐயோடு கிடைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம் என்று ராஜமாணிக்கம் என்னையும், சுரேகாவையும் பாராட்டினாலும், இதற்கான வெற்றி எல்லாமே கேட்டால் கிடைக்கும் என்று நம்பி போராடிய ராஜமாணிக்கதுக்கே சேரும். நீங்களும் நம்புங்கள் நிச்சயம் கேட்டால் கிடைக்கும். அதற்கு மேலும் ஒரு உதாரணமாய் நண்பர் சுரேகாவிற்கு கிடைத்த இன்னொரு வெற்றி . சாதாரண பேரிச்சம் பழம் தானே என்று விடாமல் கேட்டதால் கிடைத்த வெற்றி.. இது உங்களாலும் முடியும். கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக்கிட்டேயிருங்க. கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@
கலகலப்பு @ மசாலா கபே வருகிற 11 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கு அடுத்து நான் வசனம் எழுதிய இன்னும் பெயரிடப்படாத கந்தக்கோட்டை சக்திவேல் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிந்துவிட்டு வந்திருக்கிறார்கள். இளமையான காதல் கதை. முற்றிலும் புது முகங்களை கொண்டு தயாராகும் இப்படத்திற்கு படப்பிடிப்பிற்கு முன் முக்கிய நடிகர்கள் அனைவருக்கும் ரிகர்சல் பார்த்து பயிற்சி பெற்ற பின் தான் படப்பிடிப்புக்கு போனார்கள். அதனால் தான் குறைந்த நாட்களில் படப்பிடிப்பை முடிக்க முடிந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
இந்த பாடலைக் கேட்டதும் எஸ்.பி.பியின் தேன்குரல் நம்மை மயக்கும். பிறகு இதன் இசையமைப்பாளர் யார் என்று கேட்கத் தோன்றும். அவ்வளவு இனிமையான மெலடி. “மனிதர்களில் இத்தனை நிறங்களா?” என்கிற படத்தில் தான் இந்த பாடல் வருகிறது. இதில் கமல்ஹாசன் ஒரு கெளரவ கேரக்டரில் நடித்திருப்பார். சந்திரமோகன் தான் ஹீரோ. ஸ்ரீதேவி படு பாந்தமாய் அழகாய் இருப்பார். என்னதான் பாடலுக்கு ஏற்ற விஷுவல் இல்லாமல் இருந்தாலும்  அருமையான பாடல். இசையமைப்பாளர் யார் என்று தானே கேட்கிறீர்கள்? ஷியாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@
மை கார்னர்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
ஒரு ரெஸ்ட்டாரண்டில் ஒரு பார்வையற்றவர் வந்தார். அவர் தன்னால் படிக்க முடியாது என்பதினால் இதற்கு முன்னால் யாராவது சாப்பிட்டு விட்டு கழுவாத ஃபோர்க்கை கொண்டு வந்து கொடுங்கள் அதை வைத்து நான் ஆர்டர் செய்கிறேன் என்றார். கடைக்காரரும் கொண்டு வந்து கொடுத்தார். அந்த கழுவாத ஃபோர்க்கை முகர்ந்து பார்த்து, வெஜிட்டபிள் பிரியாணியை கேட்டார்.  ஆச்சர்யப்பட்ட கடைக்காரர் அடுத்த அயிட்டத்துக்கு மீண்டும் அதே முறையை பயன்படுத்தி வேறு ஒரு அயிட்டத்தை ஆர்டர் செய்ய, அவரை மீண்டும் டெஸ்ட் செய்ய தன் கடையின் சமையலைப் பார்த்துக் கொள்ளூம் தன் மனைவி பாரிஜாதத்திடம் போய் ஃபோர்க்கை அவளுடய பேண்டீஸில் தேய்த்துக் கொடுக்கும் படி கேட்டு வாங்கி வந்தார். பார்வையற்றவர் முகர்ந்து பார்த்து சட்டென யோசித்து, பாரிஜாதம் இங்கயா வேலை செய்யறா? என்றார்.
கேபிள் சங்கர்

Post a Comment

17 comments:

வெங்கி said...

மதுரை ஆதீனம்: என்ன தம்பி, சரக்கை கொண்டு வந்துட்டியா? ரூம் ரெடியா இருக்கு, நானும் மருந்து சாப்பிட்டுட்டு ரெடியா இருக்கேன்...
நித்தி: எல்லாம் ரெடி குருவே..ஆனா பேசின மாதிரி டீல் பண்ணிட்டீங்கன்னா, நீங்க பண்ணலாம்.. எப்படி?
ம.ஆ: என்ன தம்பி இது, வீர்யம் குறையறதுக்கு முன்னே, அனுப்புங்க..அப்புறம் கொப்பரைக்காய் ஆயிடப்போகுது..
நித்தி: மொதல்ல கிரீடம், அப்புறம் மேடம்..
ம.ஆ: சரி, சபைக்கு வாங்க.. சட்டு புட்டுன்னு கிரீடத்தை மாட்டிட்டு போங்க..எனக்கு இப்பவே கிர்ருஞ்ஞுது..
நித்தி: கவலைப்படாதீங்க...கிரீடம் மாட்டுங்க..அப்புறம் மேடம் உங்களுக்கு பூஸ்ட் குடுப்பாங்க..
ம. ஆ: எல்லாம்...சிவா மாயம்...
(சிவா லோகத்தில் சிவ பெருமான்: இவன் திருந்த மாட்டானா? எமனிடம் சொல்லி எண்ணெய் கொப்பரையை ஆசிட் ஊற்றி ரெடி பண்ண சொல்...அது தான் ரெண்டு பேருக்கும் தகும்)

நிரஞ்சனா said...

Sir, புதியவளான என் பதிவைப் படித்துக் கருத்திட்டு ஊக்குவித்த உங்களுக்கு என் நன்றி. சுஜாதா என்ற மந்திரச் சொல் உங்களை கவனிக்க வைத்திருக்கும் என்பது என் யூகம். அப்படியெனில் சமீபத்தில் நான் படித்து வியந்த அவரின் வேறொரு படைப்பைப் பற்றி இன்று எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது தாங்கள் பார்த்து கருத்துத் தெரிவித்தால் என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்று வேண்டி அழைக்கிறேன்.

http://www.nirusdreams.blogspot.com/2012/04/blog-post_29.html

மதுரை அழகு said...

தேதியை மாத்துங்க தலைவா...! 30/05/2012 அல்ல 30/04/2012

குரங்குபெடல் said...

"கருணாகரன் இயக்கும் ஏன் என்னை மயக்கினாய் '


அண்ணே அது " ஏன் என்றால் காதல் என்பேன் "


ஹையா . . காலையிலேயே குறை சொல்லியாச்சு

Ponchandar said...

A secretary got an expensive PEN as a birthday gift from her boss.

She sent her boss a thanking note via SMS.

The wife reads the text and angrily shows her husband the message:

"Your penis wonderful, I enjoyed using it last night. Thanks"

Moral:- Space is essential in every successful married life!

Ganesan said...

nice kothu..

arul said...

As you have said new films have to be good in everything if they want success

வெங்கி said...

நானும் முதல் பின்னூட்டமா ஒரு சின்ன கொத்து பரோட்டா போட்டிருக்கேன்...கமெண்ட் பண்ணுங்கய்யா..

மணிஜி said...

அன்பு கேபிள்..புலிநகக்கொன்றை நீ பபாஷாவிடமிருந்து வாங்கியது..படித்து விட்டு எனக்கு தரவேண்டும் என்பதுதான் அக்ரிமெண்ட்.. கடும் இலக்கியப்பணி.. மற்றும் திரைப்படப்பணிகளினால் மறதி அதிகமாகிவிட்டதோ:-)

Subramanian Lokesh said...

DMK arambichathu verum Tamilnadula maatum thaan... aana aatchila illaatha pothum agila indiyavey atha paathu vairu eriyuthu!

cable DMKva mattam thattanumnu nenacha athukku velipadayavey oru book ezhuthalamey.. atha vittutu yen indirecta kathai solren perula DMKva pathi thara koraiva ezhuthuraanga??

DMK eppavumey opena thaana aduthavangala vimarsanam seivaanga!

athaana ungalukku DMKva pathi solla mudiyaaama thaan ippadi ezhuthareenga!

DMK thaan TamilNadunu Tamizh mozhila peru maathunaanga... athey maathiri ungalukku Andhra Pradesha.. unga Telugula vaikka oru katchiyaachum irukka???

rajamelaiyur said...

//வாழ்க்கை ஒரு காலி பக்கம் போல. அவங்கவங்க பக்கத்தை அவங்களேத்தான் எழுதிக்கணும்.
//

உண்மையான வரிகள்

சுரேகா.. said...

மிக்க நன்றி ஜி..! கேட்டால் கிடைக்குமுக்கு உங்கள் ஒத்துழைப்பு அளப்பரியது..!

வாழ்த்துக்கள்!

kumar said...

என்ன ஒரு நகைமுரண்? கேட்டால் கிடைக்கும் என்று
புரட்சிப்பாட்டு எழுதும் கேபிள்ஜி,மத்தியிலும் சரி
மாநிலத்திலும் சரி நம் தலைவிதி இதுதான் போலும்
என்று புலம்பலாமா? சலித்து கொள்வதும்,சகித்து கொள்வதும்
புரட்சியாளர்களுக்கு அழகல்லவே!

kumar said...

என்ன ஒரு நகைமுரண்? கேட்டால் கிடைக்கும் என்று
புரட்சிப்பாட்டு எழுதும் கேபிள்ஜி,மத்தியிலும் சரி
மாநிலத்திலும் சரி நம் தலைவிதி இதுதான் போலும்
என்று புலம்பலாமா? சலித்து கொள்வதும்,சகித்து கொள்வதும்
புரட்சியாளர்களுக்கு அழகல்லவே!

Gana said...

Sir ,

Singing is good. High pitch is not comming.

--Gana

அருண் said...

பாட்டெல்லாம் படிச்சு கலக்குறிங்க! masala cafe வெற்றி பெற வாழ்த்துக்கள்,இது சுந்தர் சி சாருக்கு 25 ஆவது படமாமே? நீங்களும் சீக்கிரமே ஒரு படம் டைரக்ட் பண்ணனும்,அப்பிடியே என்னையும் உதவி இயக்குனரா சேர்த்துக்கோங்க சார்!
-அருண்-.

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

Best Regarding.

www.ChiCha.in

www.ChiCha.in