Thottal Thodarum

Apr 16, 2012

கொத்து பரோட்டா - 16/04/12

மசாலா கபேவிற்கு பிறகு சுந்தர்.சியின் அடுத்த படத்திற்கான வசனமெழுதும் வேலை நடந்து கொண்டிருந்தது. கட்டிலில் சாய்ந்தபடி நான் லேப்டாப்பில் டைப்படித்துக் கொண்டிருக்க, இன்னொரு உதவி இயக்குனர் கட்டிலின் மேல் கால் வைத்திருந்தார். கட்டில் ஆட, “ஏன் சார் கட்டிலை ஆட்டுறீங்க?” என்றேன். "நீங்க தான் சார் ஆட்டுறீங்க” என்றார். சட்டென கீழே கால் வைத்தும் தான் தெரிந்தது பூகம்பம் என்று. உடனே அறையில் இருந்த மற்றவர்களை அழைத்து கீழே போக கூப்பிட, நண்பர் ஒருவர் இருங்க சாப்ட்டு வந்திடறேன் என்றார். பூகம்பம் என்று சொன்னதும் சாப்பிட்ட கையோடு வெளியே வந்தார். வாசலில் இருந்த வாட்ச்மேனிடம் பூகம்பம் பற்றி சொன்னவுடன். “பத்து நிமிஷமா சேர் ஆடுது சார்னு கீழ் ப்ளாட் காரங்க கிட்ட சொன்னேன்.. நீயே தூக்கத்தில ஆட்டிட்டு சொல்றியாங்குறாங்க” என்றார். சுனாமி அறிவிப்பு சொன்னவுடன்..நண்பர் ஒருவர் வர்றீங்களா பீச்சுக்கு இந்த பக்கமா என் ப்ரெண்ட் ஆபீஸ் இருக்கு அதும் மாடில போய் பார்க்கலாம் என்றார். 8.9 ரிக்டர் அளவில் இந்தோனேஷியாவை ஆட்டி எடுத்ததன் இம்பாக்டே கலக்கி எடுத்திருக்க, ஒன்றும் ஆகவில்லை என்பதால் வேடிக்கை பார்க்க தயாராக இருக்கும் நண்பரை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நமக்குன்னு வர வரைக்கும் எல்லாமே காமெடிதான் போலிருக்கு.
##################################


நேற்றிலிருந்து பொதிகை தொலைக்காட்சியில் எப்.சி.எஸ்.கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட “தமிழ்த்திரை” எனும் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சி ஒவ்வொரு வாரம் ஞாயிறு காலை 10.5க்கு ஒளிப்பாகும். அதை தொகுத்து இயக்கியிருப்பவன் அடியேன் தான். ஏற்கனவே இரண்டு தொலைக்காட்சி தொடர்களின் செகண்ட் யூனிட்டுகளை இயக்கியிருந்தாலும், வெகு காலம் கழித்து மீண்டும் டிவி மீடியாவில் நான் இயக்கியிருக்கும் நிகழ்ச்சி பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சோம்பிப் போயிருக்கும் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் வசூல் எனும் ஆக்ஸிஜனை ஒரு கல் ஒரு கண்ணாடி கொண்டு வந்திருக்கிறது. படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 5.3 கோடி என்கிறார்கள். சந்தானம், மற்றும் இயக்குனரைத் தவிர பெரிய பெப்பில்லாத டீம் தான் என்றாலும், தொடர் மார்கெட்டிங், பாடல்களை கொண்டு போய் சேர்த்தவிதம், அதிலும் ஏழாம் அறிவு படத்தோடு விட்ட ஒரு நிமிட டீசர் , இயக்குனர் சந்தானம் காம்பினேஷனில் இதற்கு முந்தைய படங்களில் கிடைத்த வெற்றி எல்லாமும் சேர்ந்து ஏகத்திற்கு ஏத்திவிட்டிருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த காரணத்தினால் படம் தாறுமாறாக ஹிட்டாயிருக்கிறது என்று சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள். ஆட்சி அவர்கள் பக்கம் இருந்தால் எல்லா தியேட்டர்களையும் வளைத்து விடுகிறார்கள். அதனால் தான் வெற்றி பெருகிறார்கள் என்றெல்லாம் அவர்களின் வெற்றிக்கு காரணம் சொன்னவர்கள். இதோ.. இப்போது இந்த வெற்றியை என்னவென்று சொல்வார்கள். இதற்கு ஒரு காரணம் சொல்வார்கள். சந்தானம். ஸோ.. வாட்.. சினிமா என்பது ஒரு குழுவின் முயற்சி. அதில் வெற்றிக்கான காரணம் யாராக இருந்தாலும் வெற்றி வெற்றியே.
##############################################
ஒகே..ஓகேவில் சந்தானத்தின் குரல் “ஹாய் ட்யூட்” என்று போனில் ஒலிக்கும் போதே மக்களிடம் ஆரவாரம் ஆரம்பமாகிவிடுகிறது. இந்த சம்மர் தமிழ் சினிமாவிற்கு காமெடி சம்மராக போகிறது. அடுத்து வரும் மசாலா கபேவில் சந்தானத்தின் கேரக்டரின் பெயரே சிரிப்பை வரவழைக்கும்.அவரின் கேரக்டர் பெயர் “வெட்டுப்புலி”. மனுஷன் அதகளப்படுத்தியிருக்கிறார். அவர் மட்டுமில்லாமல் மிர்ச்சி சிவா, மனோபாலா, விமல், வி.எஸ்.ராகவன், இளவரசு என்று பெரிய பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. ஒரு நான் ஸ்டாப் காமெடியை மீண்டும் சுந்தர் சியிடமிருந்து எதிர்பாருங்கள்.
#########################################
என் ட்வீட்டிலிருந்து
நல்லவனாய் இரு. ஆனால் அதை நிருபிக்க முயற்சி செய்யாதே.. அதை விட முட்டாள் தனமான விஷயம் ஏதுமில்லை.

பெ”ண்”களூரில் இருக்கும் அழகிய பெண்கள் எல்லோரும் கன்னட பெண்கள் இல்லை என்கிறேன் நான். ஆமாம் என்றான் என் கன்னட நண்பன்

தனியாய் இருக்கும் போது உன் எண்ணங்களை பார்த்துக் கொள். கூட்டமாயிருக்கும் போது உன் வார்த்தைகளை பார்த்துக் கொள்

உன்னைச் சுற்றி நெகட்டிவான எண்ணங்களை கொண்டவர்கள் இருக்கும் போது உனக்கு நல்ல விஷயங்களே நடக்கும் என்று எதிர்பார்க்காதே...

நல்ல நண்பன் என்பவன் நிச்சயமா தவறான ஒரு செயலை தனியாக செய்ய விடமாட்டான். 

உன்னிடம் எப்படி அவனின் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்லித்தர முடியாது. அவனாகவே வெளிப்படுத்தும் நாளுக்காக காத்திருக்க வேண்டும்.

பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு ஆண்களை தங்கள் வழிக்கு கொண்டு வர முடியுமென்று நம்புவதுதான். அவர்கள் தானாக்த்தான் மாறுவார்கள்.

ஏதாவது நடக்குமென காத்திருப்பதைவிட, எதையாவது நீயே செய்யேன்.

அலைகளை நிறுத்த சொல்லித் தரமுடியாது என்றாலும் அதில் எதிர் நீச்சல் போட கற்றுத்தர முடியும்.

நேற்றை விட ஒரு அடி முன்னேறியே இருக்கிறாய்.. எனவே விடாமல் முயன்றுபார்..

ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் ஒரு பிரியமான பாடலும், சொல்லப்படாத கதையுமிருக்கிறது.

உறவு முறிந்ததால் உணர்வுகள் மறக்கப்படும் என்று நினைப்பது முட்டாள்தனம்.

எனக்காக சண்டையிடுபவனை விட எனக்கு என் போராட்டத்திற்கு துணை நிற்பவனை மிகவும் பிடிக்கும்.

வாழும் நொடிக்காக சந்தோஷப்படுவதை விட்டு வரப் போகும் நிமிடங்களை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பது.. அறிவிலித்தனம்

மெளனம் கொடுக்கும் வலியை விட கொடுமையானது வேறேதுமில்லை.

மனிதர்கள் உன்னை கைவிடும் போதெல்லாம் கடவுள் உன்னை தூக்கிவிட இருக்கிறார் என்பது பல சமயங்களில் நிதர்சனமாக நிருபணம் ஆகியிருக்கிறது.

கோவில் வாசலில் பிச்சை போடாமல் கோயிலுனுள் வேண்டிக் கொள்பவர்களை பிச்சை கேட்பவர்கள் என்று சொன்னவர்களை உம்மாச்சி கண்ணை குத்தாமல் போவாது.:)

ஒவ்வொரு பெண்ணின் சிரிப்புக்கு பின்னாலும் ஒரு வலி நிறைந்த காலம் ஒன்று இருக்கிறது

மன்னிப்பு கேட்பது வீரம், மன்னிப்பு கொடுப்பது சாலச் சிறந்தது. மறப்பது அதை விட சிறந்தது.

உன்னிடமிருந்து உன் சந்தோஷத்தை பறிப்பவனை பற்றி கவலைப்பட்டு உன் காலத்தை வீணடிக்காதே..

தவறான விஷயங்களை துரத்துவதை விடும் போது நல்ல விஷயங்கள் நம்மை அடைய வழி விடுகிறோம்.

பிரச்சனைகளிலிருந்து ஓடுவதால் அதற்கான விடைகளிலிருந்து மேலும் விலகிச் செல்கிறோம்

உன் மீது காதல் கொண்டிருப்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்று இல்லை. அவர்களின் நடவடிக்கைகளிலேயே தெரிந்துவிடும்.

எதிரி என்ற ஒருவனிருந்தால்தான் வெற்றி என்ற ஒன்றுக்கான அர்த்தமிருக்கும்.
#####################################
ப்ளாஷ்பேக்
அகெய்ன் மொட்டையின் க்ளாசிக்கான சாங். ரொம்பவும் சிம்பிளான ட்யூனாய் ஆரம்பிக்கும் பாடல் எஸ்பிபியின் குரலில் சட்டென மாறி.. அதன் பின் வரும் வயலின் மற்றும் ப்ளூட்களின் இண்டர்லூடுகளில் ஆரவாரமாய் மேலெழும்பி, நம்மை அப்படியே மூழ்கடிக்கும் பாடல். வாவ்.. “கூடாத நெஞ்சம் இன்று கூடுதே பாடுதே” என்று எஸ்.பி.பி மயக்கும் இடம் க்ளாஸ்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
மை கார்னர்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
டிஜிட்டல் டெக்னாலஜி பல கதவுகளை இளைஞர்களுக்கு திறந்துவிட்டிருக்கிறது. அந்தக் கதவுகளில் ஒன்று டிஜிட்டல் கேமராக்கள். அதிலும் பல குப்பை குறும்படங்கள் வர ஆரம்பித்துவிட்ட நிலையில் சில நல்ல சுவாரஸ்யமான ட்விஸ்டுகளுடய படங்கள் வரத்தான் செய்கிறது. அப்படி பார்த்த அர்டினரியான ஆரம்பத்துடன் சட்டென ஒரு ஸ்வீட் டிவிஸ்டுடனான படம். ஹீரோயின் ஸ்மார்ட் அண்ட் அழகானவள் என்று சொல்லும் இப்படத்தின் ஹீரோயின் அப்படியில்லாமல் இருப்பது ஒரு குறை..  ஒரு ஓகே முயற்சி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
வேலை வாய்ப்பு கார்னர்
Auto - CAD தெரிஞ்ச (FRESHER OR EXPERIENCED)  அப்பாயின்ட்மென்ட்....

முகவரி - 
18/2, west sivan koil street, Vada palani, CHENNAI, Tamil nadu
Ex: above 1 yr
Sal:6000 to 8000
ph: P. Palanisamy- 9677187184
அனுபவம் உள்ளவர்களுக்கு, 6000-8000 வரை அனுபவத்திற்கு ஏற்றார் போல் சம்பளம் கிடைக்கும். புதியவர்களுக்கு, வேலை கற்றுக்கொள்ளும் வரை அநேகமாக முதல் மூன்று மாதம் வரை 4000  பிறகு அதிகமாகவும் கிடைக்கும்.போன் செய்துவிட்டு பழனிசாமி அவர்களை சந்திக்க நேரம் கேட்டுக் கொள்ளுங்கள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ 
அடல்ட்கார்னர்
ஒரு வயதான கஞ்சன் .  மனைவி இறந்து விட்டாள். இரண்டாவதா ஒரு சின்னப் பொண்ணை பார்த்து கல்யாணம் செய்துகிட்டான்.  காசு மதிப்பு புதுப்பெண்டாட்டிக்கு தெரியனுங்கறதுக்காக மேட்டருக்கு இறங்கும்போதெல்லாம் ஒரு உண்டியல்ல 50 ரூ நோட்டை போட்டுட்டு ஆரம்பிப்பார். ஒரு நாள் பாங்க் லீவ். ஏடிஎம்ல ப்ராப்ளம். உண்டியலை திறந்து காட்ட சொன்னார். அதுல 500, 1000 ரூ நோட்டெல்லாம் கிடந்தது. பார்ட்டி கடுப்பாயிட்டாரு.. ”இந்த காசு எல்லாம் எப்படி வந்திச்சு” என்று கோபமாய் கேட்டார். "அக்காங்.. எல்லாரும் உன்னை மாதிரியே பிச்சக்காரத்தனமா அம்பது ரூபா போடுவாங்களா என்ன?” என்றாளாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கேபிள் சங்கர்

Post a Comment

20 comments:

King Viswa said...

//வெகு காலம் கழித்து மீண்டும் டிவி மீடியாவில் நான் இயக்கியிருக்கும் நிகழ்ச்சி பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.//

நேற்றைய நிகழ்ச்சிக்கு இப்போ சொன்னா எப்புடி தல? இதோட அடுத்த வாரம்தான் பார்க்க முடியும்.லயன் காமிக்ஸ் No 211 - சாத்தானின் தூதன் டாக்டர் செவன்

சுரேகா.. said...

நிகழ்ச்சியை மிஸ் பண்ணிட்டேனே..!! :(

ஒரு கல்.ஒரு கண்ணாடி வெற்றி..அப்படியே மசாலா கஃபேலயும் தொடரட்டும்..!

கேபிள் சகாப்தம் தொடங்கட்டும்!

வாழ்த்துக்கள் ஜி!

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் ! உயரம் என்பதை இறங்கிப் பார்க்காமல் இருக்க முடிவது சிலரால் மட்டுமே.இன்னும் இன்னும் உயர்க கேபிளாரே :)

shortfilmindia.com said...

நன்றி சுரேகா, நேசமித்ரன்

SathyaPriyan said...

//
ஆட்சி அவர்கள் பக்கம் இருந்தால் எல்லா தியேட்டர்களையும் வளைத்து விடுகிறார்கள். அதனால் தான் வெற்றி பெருகிறார்கள் என்றெல்லாம் அவர்களின் வெற்றிக்கு காரணம் சொன்னவர்கள். இதோ.. இப்போது இந்த வெற்றியை என்னவென்று சொல்வார்கள்.
//
நான் அறிந்த வரையில் கலாநிதி மாறன், தயாநிதி அழகிரி மற்றும் உதயனிதி ஸ்டாலின் மூவர் மீதும் சொல்லப் பட்ட குற்றச்சாட்டு, அவர்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து குறைந்த விலையில் அவுட் ரைட் முறையில் படங்களை வாங்குகிறார்கள் என்றும், அப்படி கொடுக்க மறுப்பவர்களின் படங்களை வெளியிட முடியாமல் தடுக்க திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டினார்கள் என்பதும் தான்.

அனைவரையும் மிரட்டி தங்கள் படத்தினை ஓட வைத்தார்கள் என்று ஒருவரும் குற்றம் சாட்டியதாக தெரியவில்லை. மூன்று நிருவனங்களுமே மொக்கை படங்களையும் கொடுத்திருக்கிறார்கள், நல்ல படங்களையும் கொடுத்திருக்கிறார்கள். தோல்விப் படங்களையும் கொடுத்திருக்கிறார்கள், வெற்றிப் படங்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் குற்றச்சாட்டே அந்த தோல்விகள் அவர்களை அதிகம் பாதிக்காமல் செய்தது கடந்த ஆட்சியில் அவர்களுக்கிருந்த நெருக்கம்.

சென்ற ஆட்சியின் கடைசி இரண்டாண்டுகளில் வெளிவந்த பெரும் பாலான தமிழ் படங்கள் இவர்களின் விநியோகம் அல்லது இவர்களின் தயாரிப்பு தான். அது நிச்சயம் இந்த ஆட்சியில் குறைந்திருக்கிறது.

Cable சங்கர் said...

//நான் அறிந்த வரையில் கலாநிதி மாறன், தயாநிதி அழகிரி மற்றும் உதயனிதி ஸ்டாலின் மூவர் மீதும் சொல்லப் பட்ட குற்றச்சாட்டு, அவர்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து குறைந்த விலையில் அவுட் ரைட் முறையில் படங்களை வாங்குகிறார்கள் என்றும், அப்படி கொடுக்க மறுப்பவர்களின் படங்களை வெளியிட முடியாமல் தடுக்க திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டினார்கள் என்பதும் தான். //

இது ஒரு புதுக்கதை. எனக்கு தெரிந்த ஒரு தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கேட்டு கொடுக்க முடியாது என்று சொல்லி, பெரிய அளவில் ரிலீஸும் செய்தார்..

Cable சங்கர் said...

எத்தனை அதிமுக பினாமிக்கள் இப்போது தமிழ் திரையுலகில் அலைந்து கொண்டிருக்கின்றனர் தெரியுமா?

SathyaPriyan said...

கேபிள்ஜி,

நான் அம்மாவின் ரத்தத்தின் ரத்தம் கிடையாது. தயாநிதி, உதயநிதி மற்றும் கலாநிதி மூவரும் திரையுலகை விடு ஒழிவது திரையுலகிற்கு நல்லது என்றும் கூறுபவனும் கிடையாது.

உண்மையில் ஒரு வாடிக்கையாளனாக எனக்கு தேவை நல்ல படம். அதை யார் கொடுத்தால் என்ன? நான் டிக்கெட்டிற்கு கொடுக்கும் காசு யாருக்கு போனால் என்ன?

அதனால் எனக்கு திமுக பினாமிகள் பற்றியும் கவலை இல்லை, அதிமுக பினாமிகள் பற்றியும் கவலை இல்லை.

கார்கில் போர் நடந்த போது இந்தியாவிற்கு போபர்ஸ் பீரங்கிகள் மிகவும் உதவியாக இருந்தன. அதை குறித்து கருத்து வெளியிட்ட காங்கிரஸ் தலைமை அதுவே போபர்ஸ் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்பதற்கு சாட்சி என்றது. நீங்கள் கூறுவதும் அப்படித்தான் இருக்கிறது.

பீரங்கிகள் ஒழுங்காக செயல் படுவதும், அவை முறையாக வாங்கப் படுவதும் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத செயலோ அப்படித்தான் இவர்கள் படம் வெற்றியடைவதும், இவர்கள் மற்றவர்களை மிரட்டுவதும். லாஜிக் இடிக்கிறது என்பதற்காக அதனை தெரிவித்தேன். அவ்வளவே.

மற்றபடி உங்கள் அடுத்த படத்திற்கு வாழ்த்துகள்.

உலக சினிமா ரசிகன் said...

வாரந்தோறும் கருணாநிதி பேமிலி படங்கள் மட்டுமே வெளியாயின.
இப்போது அப்படியா?

உடும்பன் என்ற சாதரண படத்தை எடுத்து நல்ல முறையில் விளம்பரம் செய்து....நியாயமான லாபமும் பார்த்து விட்டார்... எனது நண்பர்... தயாரிப்பாளரும்... இயக்குனருமான பாலன்.
கருணாநிதி ஆட்சியில் இப்படத்தை வெளியிட்டிருக்கவே முடியாது.

மைனா என்ற படத்தை மிரட்டி வாங்கி....
நாங்க விளம்பரம் பண்ண அளவுக்கு படம் வசூல் இல்லை...
என பட்டை நாமம் சாத்தப்பட்டது...
அந்தப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனருக்கு...

இந்த ஒரு சோறு போதும்.

குரங்குபெடல் said...

" ஒகே..ஓகேவில் சந்தானத்தின் குரல் “ஹாய் ட்யூட்” என்று போனில் ஒலிக்கும் போதே மக்களிடம் ஆரவாரம் ஆரம்பமாகிவிடுகிறது. இந்த சம்மர் தமிழ் சினிமாவிற்கு காமெடி சம்மராக போகிறது. அடுத்து வரும் மசாலா கபேவில் சந்தானத்தின் கேரக்டரின் பெயரே சிரிப்பை வரவழைக்கும்.அவரின் கேரக்டர் பெயர் “வெட்டுப்புலி”. மனுஷன் அதகளப்படுத்தியிருக்கிறார். அவர் மட்டுமில்லாமல் மிர்ச்சி சிவா, மனோபாலா, விமல், வி.எஸ்.ராகவன், இளவரசு என்று பெரிய பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. ஒரு நான் ஸ்டாப் காமெடியை மீண்டும் சுந்தர் சியிடமிருந்து எதிர்பாருங்கள். "


இதுவே செம காமெடியா இருக்கு . . .


வாழ்துக்கள்

Cable சங்கர் said...

@உலக சினிமா ரசிகன்
உடும்பன் வெற்றி என்று அவர்கள் மட்டுமே சொல்லிக் கொள்ள வேண்டும். நிஜம் எனக்கு தெரியும்.

மைனா படத்தை மிரட்டி வாங்கியது என்பதும் கட்டுக்கதை. ஏனென்றால் அப்படி மிரட்டி வாங்கியது என்றால் அது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் செய்திருக்க வேண்டும். முதலில் வாங்கியது ஏ.ஜி.எஸ். தான் அவர்களிடமிருந்துத்தான்.. இவர்கள் விநியோக உரிமையும் பெற்றார்கள். சும்மா கதை சொல்லக்கூடாது தலைவரே.. பிரபு சாலமன் தனக்கு பணம் தரவில்லை என்று என்றைக்குமெ குறை சொல்ல் முடியாது ஏனென்றால் அது அவுட் ரைட் முறையில் விற்க்கப்பட்ட படம். பணம் தரவில்லை என்று புலம்ப ஏஜிஎஸ்க்குத்தான் உரிமை உண்டு. நீங்களே வடிச்சு அவங்க வீட்டு சோறு என்றால் நம்ப முடியாது.

எனக்கும் திமுக குடும்ப படங்களின் ஆதிக்கம் பற்றி தெரியும். ஆதைப் பற்றி எழுதியும் இருக்கிறேன். ஆனால் நீங்கள் நினைப்பது போல இம்மாதிரி நிகழ்வுகள் எல்லாம் புரளியான கற்பனைகளே..

Unknown said...

Please comment about my first story...

http://gpmforever.blogspot.com/2012/04/blog-post.html

arul said...

thanks for sharing good short films

Unknown said...

நன்றி கேபிள் சார்...

உங்க கொத்து பரோட்டாவை வழக்கம் போல கலக்கிட்டிங்க....

Unknown said...

நன்றி கேபிள் சார்...

உங்க கொத்து பரோட்டாவை வழக்கம் போல கலக்கிட்டிங்க....

Ramasubramaniam said...

NICE POST SIR


வழித்துணை
த/பெ-(தந்தை பெயர்)

http://vazhithunai.blogspot.in/2012/04/blog-post.html

உலக சினிமா ரசிகன் said...

நீங்கள் நான் சொல்வதை வீண் புரளி என்று அடக்கி விட்டீர்கள்.

உடும்பன் படத் தயாரித்தவ்ர் 35 ஆண்டு கால நண்பர்.
படம் உருவான மொத்த வரலாறும் தெரியும்.
இந்தப்படத்தை பணம் சம்பாதிக்கவே எடுத்தார்.
போட்ட முதலீடு...குட்டி போட்ட வட்டியும் சேர்த்து நியாயமான லாபமும் கிடைத்திருக்கிறது.

எங்களுக்கு,
நூறு ரூபாய்க்கு...
120 ரூபாய் வந்தாலே லாபம்தான்.
1000 ரூபாய் வந்தால்தான் லாபம்... என நினைப்பவர்கள் படம் நஷ்டம்... என அலறிப்புலம்புவார்கள்.

30 ரூபாய்க்கு ஒரிஜினல் டிவிடி தமிழனுக்கு கிடைக்கச்செய்த புண்ணியவான் பாலன்.
கார்ப்பரேட் கம்பெனிகள் கோடிகோடியாய் கொட்டி உரிமையை விலை பேசிய போது மறுத்த...சிவப்பு சிந்தனையாளர் பாலன்.
சேகுவேரா வரலாற்று டிவிடியை...
100 ரூபாய்க்கு விற்றவர்களிடமிருந்து உரிமையை வாங்கி...
60 ரூபாய்க்கு டிவிடி விற்றவர்.இலவசமாக வண்ண போஸ்டரும் கொடுத்தார்.


எங்களை பொய்யர்கள் என இனியும் சித்தரிக்க வேண்டாம்.

பாலனுக்கு சினிமா மொழி தெரியாது என குற்றம் சாட்டுங்கள்.
உங்களை... நானும் வழி மொழிகிறேன்.

அவருக்காக இவ்வளவு பேசுகிறேனே...
உடும்பன் படத்தை நான் பார்க்கவில்லை...
பார்க்கவும் மாட்டேன்.
பாலன் நட்பை இழக்க தயாராயில்லை.

வவ்வால் said...

கேபிள்ஜி,

// தொடர் மார்கெட்டிங், பாடல்களை கொண்டு போய் சேர்த்தவிதம், அதிலும் ஏழாம் அறிவு படத்தோடு விட்ட ஒரு நிமிட டீசர் , இயக்குனர் சந்தானம் காம்பினேஷனில் இதற்கு முந்தைய படங்களில் கிடைத்த வெற்றி எல்லாமும் சேர்ந்து ஏகத்திற்கு ஏத்திவிட்டிருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த காரணத்தினால் படம் தாறுமாறாக ஹிட்டாயிருக்கிறது என்று சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள். ஆட்சி அவர்கள் பக்கம் இருந்தால் எல்லா தியேட்டர்களையும் வளைத்து விடுகிறார்கள். அதனால் தான் வெற்றி பெருகிறார்கள் என்றெல்லாம் அவர்களின் வெற்றிக்கு காரணம் சொன்னவர்கள். இதோ.. இப்போது இந்த வெற்றியை என்னவென்று சொல்வார்கள்.//

ஹி..ஹி... ஒரு ஆறு மாசத்தில எல்லாம் மாறிவிடுகிறதே எப்படிங்கோ... ஏழாம் அறிவு வந்தப்போ அப்படியே உல்டாவா சொன்னீங்க, தொடர்ந்து மார்க்கெட்டிங் செய்து ஹிட்னு சொல்லிக்கிறாங்கனு, தியேட்டர் எல்லாம் புடிச்சுக்கிட்டாங்க, நான்கைந்து பிரஸ்மீட் வைத்துட்டாங்க, ஹிட்டுனு போஸ்டர் ஒட்டிக்கிறாங்கனு ஏழாம் அறிவை வறுத்தெடுத்திங்க, அப்போ ரெட் ஜெயண்ட் வேண்டாதவங்க,இப்போ வேண்டியவங்களா ஆகிட்டாங்களா?

இப்போ வேற யாரோ அப்படி சொன்னாப்போல அப்படி சொன்னவர்கள் இப்போ என்ன சொல்லுவாங்கனு கேட்கிறிங்க, நீங்க தான் சாரே அப்படி சொன்னது :-))

பார்ப்பான் said...
This comment has been removed by the author.
பார்ப்பான் said...

[[மசாலா கபேவிற்கு பிறகு சுந்தர்.சியின் அடுத்த படத்திற்கான வசனமெழுதும் வேலை நடந்து கொண்டிருந்தது.]]

மசலா கப்பே பட விளம்பரம் பேப்பரில் பார்த்தேன். உங்கள் பெயர் இல்லை. யாரை ஏய்ச்சி பிழைக்க இந்த பிழைப்பு பிழைக்கிறீர்கள் கேபிள் சங்கர்.