Thottal Thodarum

Apr 2, 2012

கொத்து பரோட்டா 02/04/12

www.simplelife.in என்கிற நிறுவனம் என்னுடய தளத்தில் வலது பக்கம் விளம்பரம் வெளியிட வேண்டும் என்று ஒரு டிசைனை அனுப்பியிருந்தார்கள். அதாவது அந்த விளம்பரத்தை க்ளிக் செய்து உங்களை ரிஜிஸ்டர் செய்து கொண்டால் ரூ.1000 க்கான தொகை உங்கள் கணக்கில் வைக்கப்படும் என்கிறார்கள். அப்படி உங்களை பதிவு செய்து கொள்ளும் போது உங்களுக்கான கோடை நீங்கள் அதில் சேர்க்க வேண்டும். கோட் "CABLESH" என்ற என் பெயரைத்தான் போட வேண்டுமாம். எது எப்படியோ இவன் பதிவ படிச்சி என்ன கிடைக்கப் போவுதுன்னு நினைச்சிட்டிருந்தவங்களுக்கு அட்லீஸ்ட் ஒரு டிஸ்கவுண்ட் கூப்பனாவது கிடைக்குதே எனக்கு ஒரு சந்தோஷம்தான். SO, ENJOY MAKAL'S
########################################



சசிகலா ஒரு லெட்டர் எழுதி மீண்டும், நட்பை புதுப்பித்து போயஸ் கார்டனுக்குள் நுழைந்துவிட்டார். ஜெவுக்கும் கண்கள் பனித்து இதயம் இனித்து விட்டது. இனி ஜெ மாறி விட்டார். இதன் பின்னணியில் சோவின் ஆதிக்கம், அவர் தான் இதையெல்லாம் செய்தார். அதையெல்லாம் செய்தார் என்று பார்பனீயம் பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இந்தப் பிரிவு, அறிவிப்பு எல்லாம் இப்படித்தான் முடியும் என்று கலைஞர் - மாறன் பிரிவின் போதும் சரி, ஜெ-  சசி பிரிவின் போதும் சொன்னேன்.  எனக்கென்னவோ இரண்டு பேரும் சரியான சான்ஸை மிஸ் செய்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. பின்னாளில் ஏண்டா என்று தாத்தா வருத்தப்பட்டது போல ஜெ மீண்டும் வருத்தப்படத்தான் போகிறார்.
######################################
முதலில் பால் விலை, பின்பு பஸ், இப்போது மின் கட்டண உயர்வு. நிச்சயம் உயர்த்தியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு என்ன மயிருக்கு வாடிக்கையாளர்களை அழைத்து ஏற்றட்டுமா? வேண்டாமா? என்ற நிகழ்ச்சி நடத்தி கண் துடைப்பது?. இடைத்தேர்தல் முடிந்தாகிவிட்டது. நாங்களும் ஓட்டுப் போட்டாயிற்று பின் தலையெழுத்து நீஙக் என்ன பண்ணாலும் சகிச்சிட்டு போக வேண்டியதுதான் தெரிஞ்சிருச்சு. பிறகென்ன.. கேட்டால் எல்லாவற்றிக்கும் காரணம் முந்தைய தி.மு.க ஆட்சிதான் என்று அறிக்கை விட்டுவிடலாம். இன்னும் ஒரு வருடத்திற்குள் கொஞ்சம் கொஞ்சமாய் மின் வெட்டு குறைந்துவிடுமாம். ஏதோ ஜெ அரசு வந்து எல்லாவற்றிக்கும் ஏற்பாடு செய்தது போல அறிக்கை விடுகிறார். ஏற்கனவே ஆரம்பித்து இருந்த அனல் மின் நிலைய பணிகள் எல்லாம் சென்ற ஆட்சியில் தொடங்கப்பட்டதுதான். என்ன கோயம்பேடு பேருந்து நிலையம் போல கட்டுன காலம் திமுக, பேர் போட்டுக்கிறது அதிமுகன்னு ஆகிவிடுவது தாத்தாவின் தலையெழுத்து போலருக்கு. எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும். ம்ஹும்.
####################################
வருகிற ஆண்டு வந்தால் இந்திய சினிமா தொடங்கி 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. அதை பெரிதாய் கொண்டாடும் உற்சாகத்தில் இருக்கிறது இந்தியத் திரையுலகம். சமீபகாலமாய் உலக நாடுகளில் இந்திய திரைப்படங்களுக்கு கிடைத்திருக்கும் வியாபார அங்கீகாரமும், க்ரிட்டிக்கள் அங்கீகாரமும் இந்திய சினிமாவை மேலும் உயர்த்தியுள்ள நிலையில். இந்திய அளவில் தமிழ் திரைப்படங்களுக்கான அங்கீகாரமும் தேசிய விருதுகளால் உயர்ந்திருக்கிற இந்நேரத்தில் பெப்சி - தயாரிப்பாளர்கள் ப்ரச்சனை, தொடர் தோல்விகள் என்று பல ப்ரச்சனைகளால் தமிழ் திரையுலகம் இருளாய் இருக்கிறது. விரைவில் அதற்கான நல்ல தீர்வு வந்து நூற்றாண்டை தமிழ் திரையுலகமும் கொண்டாடும் என்று நம்புவோம்.
##################################
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக்கூடாது என்ற போராட்டத்தை தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த உதயகுமாரின் சமீபத்திய அறிக்கைகளைப் பார்க்கும் போது சட்டென அமுங்கிப் போனதாகவே தெரிகிறது. மீனவர்கள் போராட்டம் வாபஸ், கடைகள் திறக்கும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும், என்று தினமும் அறிக்கை விட்டுக் கொண்டே அணுமின் நிலையம் மூடுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் சொல்லிவருவதைப் பார்க்கும் போது எல்லாமே ப்ளான் பண்ணி நடக்குதோ என்று தோன்றுகிறது. தமிழர் சீமானெல்லாம் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. சாக்கு மூட்டையிலிருந்து ”மியாவ்” சத்தம் கேட்பதை தவிர்க்க முடியவில்லை.
#####################################
மை கார்னர்

#####################################
யுடான்ஸ் கார்னர்
யுடான்ஸ் + நேசம் இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வுக்கான சிறுகதை, குறும்படப் போட்டி நிகழ்வு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. திருப்பூர் சேர்தளம் குழுவினர்களின் பேராதரவோடு பரிசளிப்பு விழா திருப்பூரில் சிறப்பாக நடந்தேறியது. ஆதரவு கொடுத்து நடத்த உதவிய வாசகர்களுக்கும்,  சேர்தளம், நேசம் குழுவினர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
##################################
குறும்படம்
அமானுஷ்ய குறும்படங்கள் எடுக்க கொஞ்சம் தைரியம் வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான நேரங்களில் அவர்களின் அமெச்சூர் தனங்களும், பார்த்து இன்ஸ்பயர் ஆன படங்களும் அவர்களை ஆட்க்கொண்டு சொதப்பி விடக்கூடிய அபாயம் உண்டு. இப்படத்தில் அம்மாதிரியான அபாயங்கள் இருந்தும் சட்டென வரும் திடுக் க்ளைமாக்ஸினால் தாண்டிவிடுகிறது.
###################################
என் ட்வீட்டரிலிருந்து
மின்சாரக் கட்டண உயர்வு என்னை பாதிக்காது. ஏன்னா ஒரு வருஷத்துக்கு முன்னாடி நான் கட்டினதை விட இப்ப குறைவாத்தான் கட்டுறேன் # 12hrs powercut pl


ராமஜெயம் - ராவணன் ஊரே கொண்டாடுதாமே. நேத்தைய அராஜகம் அதன் காரணமாய்த்தானோ?


கடந்தகால சோகமும், எதிர்கால பயமும் உன்னை அமிழ்த்து விட இடமளிக்காதே
உன் காதலை சொல்ல சரியான் தருணமெது? வேற யாராவது சொல்றதுக்கு முன்னாடி. # Translation


பலம் என்பது வெற்றியினால் வருவதல்ல.
################################
ப்ளாஷ்பேக்
மீண்டும் ராஜாவின் க்ளாஸிக்கிலிருந்து. இளையராஜா, மலேசியா வாசுதேவன், ஜானகி, வைரமுத்து, பாரதிராஜா காம்பினேஷனில் அட்டகாசமான பாடல். பாடல் வரிகளிலாகட்டும், பாடிய விதத்திலாகட்டும், அதைக் காட்சிப்படுத்தியவிதத்திலாகட்டும், எல்லாமே அற்புதமாய் அமைந்த பாடல். மீண்டும் இவர்களின் காம்பினேஷன் வந்தாலும் இது போன்ற ஒரு பாடல் அமையுமா என்பது சந்தேகமே.
######################################
அடல்ட் கார்னர் 
Three guys are arrested in an adult book store and appear before the judge. He asks the first guy to stand: "What is your name?" he asked. "John," the guy answered.
"And why were you arrested?" the judge asked.
"I was by the magazine rack holding a big fat cigar and blowing smoke." he answered.
The judge didn't see anything wrong with that, so he dismissed the guy and called up the next one.
"What's your name?" he asked.
"John," the guy answered.
"Why were you arrested?" the Judge asked.
"I was by the magazine rack holding a big fat cigar and blowing smoke." he answered.
Again, the judge saw nothing offensive, 'This so-called adult store is begining to sound more like a smoking club!' he thought. So he dismissed the charge and called up the next guy.
"What's your name?? No wait, let me guess; John." he said.
"No," said the guy, "My name is Smoke."
கேபிள் சங்கர் 


Post a Comment

27 comments:

புதுகை.அப்துல்லா said...

திரைஉலகம் நூற்றாண்டு கொண்டாடும் இந்த நேரத்தில் திரை உலகை உயிராய் நேசிக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

Karthik Somalinga said...

>>>எது எப்படியோ இவன் பதிவ படிச்சி என்ன கிடைக்கப் போவுதுன்னு நினைச்சிட்டிருந்தவங்களுக்கு அட்லீஸ்ட் ஒரு டிஸ்கவுண்ட் கூப்பனாவது கிடைக்குதே எனக்கு ஒரு சந்தோஷம்தான்

உங்களது ஏஜென்ட் வினோத் பதிவின் பின்னூட்டப் பிரிவில், எனது காமிக்ஸ் தொடர்பான வலை தளத்திற்கு சுட்டி கொடுத்தது, நூற்றுக்கணக்கான பேர் என் பதிவுகளை படித்திட வழி செய்தது! என்னை பொறுத்தவரையில், இது ஆயிரம் ருபாய் தள்ளுபடி கூப்பனை விட மிகவும் மதிப்பு வாய்ந்தது! மிக்க நன்றி சங்கர் சார்!

காமிக்ஸை விரும்புவர்கள், ஒரு தரம் வந்து பார்க்கலாமே!. காமிக்ஸுக்கு அறிமுகம் இல்லாதவர்களும் பார்க்கலாம், நீங்களும் விரும்ப தொடங்கி விடுவீர்கள்!

-கார்த்திக்
Bladepedia

வவ்வால் said...

கேபிள்,

// ஏதோ ஜெ அரசு வந்து எல்லாவற்றிக்கும் ஏற்பாடு செய்தது போல அறிக்கை விடுகிறார். ஏற்கனவே ஆரம்பித்து இருந்த அனல் மின் நிலைய பணிகள் எல்லாம் சென்ற ஆட்சியில் தொடங்கப்பட்டதுதான். என்ன கோயம்பேடு பேருந்து நிலையம் போல கட்டுன காலம் திமுக, பேர் போட்டுக்கிறது அதிமுகன்னு ஆகிவிடுவது தாத்தாவின் தலையெழுத்து போலருக்கு. எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும். ம்ஹும்.//

சினிமாவ பத்தி தெரியலைனா கூட விமரிசனம் என்ன படமே எடுக்கலாம்.

ஒரு 1500 மெ.வாட் மின் நிலையம் கட்ட சுமார் 2-3 ஆண்டுகளே போதும்(இதெல்லாம் புரியனும்னா கொஞ்சம் படிக்கனும்) தாத்தா ஆட்சியை 3 ஆண்டுகளுக்குள் களைத்து விட்டார்களா என்ன?

ஏன் அவர் ஆட்சிக்காலத்துக்குள் ஒரு மின் திட்டம் கூட செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை?

ஊழல் செய்திருந்தாலும் ,மேலும் அம்மையார் ஆட்சியை விட்டு போனப்போது தமிழகத்தில் உபரி மின் உற்பத்தி என்ற நிலை தான் இருந்தது. அது தான் உண்மை. ஏன் ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் தாத்தா எதையும் பிடுங்கவில்லை.

திட்டத்தை அறிவித்து , அடிக்கல் நாட்டுறவங்கள் தான் கமிஷன் வாங்கி கல்லா கட்டுவாங்க, பின்னர் வேலை நடக்கிறப்போ ஒப்பந்ததார் பெருசா தர மாட்டான் என்பதையும் நினைவில் கொள்ளவும். ஆனால் பிற்பகுதியில் தான் ஒப்பந்ததாரருக்கு அரசு அதிக பணப்பட்டுவாடா செய்ய வேண்டி இருக்கும்.

கமிஷன தாத்தா வாங்கிட்டு போய்ட்டார் வேலை செஞ்சவன்ங்களுக்கு பணத்த அடுத்த ஆட்சிக்கு வரவங்க கொடுக்கணும் , கமிஷன் கிடைக்காது.

இப்படி திட்டம் ஒரு ஆட்சியில் அதுக்கு பணப்பட்டுவாடா இன்னொரு ஆட்சியில் எனப்போவதால் தான் தமிழ் நாட்டில் எந்த திட்டமும் குறித்தகாலத்தில் முடிவதில்லை. ஏன் எனில் பின்னர் பணம் கொடுக்கும் ஆட்சியாளர் அவங்க பங்குக்கு ஒரு தொகை எதிர்ப்பார்ப்பார்கள்.

உங்களுக்கு இதெல்லாம் புரிய கடினமாக இருக்கும் ரஜினியின் சிவாஜி படத்தில் நாகூர் ஹனிபா பேசுவதை ரிவைண்ட் செய்து பார்த்துக்கொள்ளவும்.
---------

//ராமஜெயம் - ராவணன் ஊரே கொண்டாடுதாமே. நேத்தைய அராஜகம் அதன் காரணமாய்த்தானோ?//

ஊருக்கு பல ராம ஜெயம்களை (ராவணன்)உருவாக்கியதும் தாத்தா தான் என்பதை ஏன் சொல்ல மறந்தீர்கள் :-))

----

// இந்தப் பிரிவு, அறிவிப்பு எல்லாம் இப்படித்தான் முடியும் என்று கலைஞர் - மாறன் பிரிவின் போதும் சரி, ஜெ- சசி பிரிவின் போதும் சொன்னேன். //

இதை முன் கூட்டியே பக்‌ஷி ஜோசியம் சொன்ன நீங்க இதை மட்டும் எப்படி மிஸ் செய்தீர்கள்...

//கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக்கூடாது என்ற போராட்டத்தை தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த உதயகுமாரின் சமீபத்திய அறிக்கைகளைப் பார்க்கும் போது சட்டென அமுங்கிப் போனதாகவே தெரிகிறது. மீனவர்கள் போராட்டம் வாபஸ், கடைகள் திறக்கும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும், என்று தினமும் அறிக்கை விட்டுக் கொண்டே அணுமின் நிலையம் மூடுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் சொல்லிவருவதைப் பார்க்கும் போது எல்லாமே ப்ளான் பண்ணி நடக்குதோ என்று தோன்றுகிறது. //

ஹி..ஹி நாங்க எல்லாம் போன வருஷமே இதெல்லாம் பிளான்னு கண்டுப்பிடிச்ச துப்பறியும் சாம்புலால் :-))

shortfilmindia.com said...

//ம்(இதெல்லாம் புரியனும்னா கொஞ்சம் படிக்கனும்) //

ஆமா படிக்க”ணு”ம்

//இப்படி திட்டம் ஒரு ஆட்சியில் அதுக்கு பணப்பட்டுவாடா இன்னொரு ஆட்சியில் எனப்போவதால் தான் தமிழ் நாட்டில் எந்த திட்டமும் குறித்தகாலத்தில் முடிவதில்லை. ஏன் எனில் பின்னர் பணம் கொடுக்கும் ஆட்சியாளர் அவங்க பங்குக்கு ஒரு தொகை எதிர்ப்பார்ப்பார்கள்.//

இதே நிலை தான் அதிமுக ஆட்சியிலும்.

shortfilmindia.com said...

//சினிமாவ பத்தி தெரியலைனா கூட விமரிசனம் என்ன படமே எடுக்கலாம். //

அப்படியா எடுத்து எழுதித்தான் பாருங்களேன். எவன் படிப்பான், பார்க்குறான்னு பார்ப்போம்.:))

shortfilmindia.com said...

//திட்டத்தை அறிவித்து , அடிக்கல் நாட்டுறவங்கள் தான் கமிஷன் வாங்கி கல்லா கட்டுவாங்க, பின்னர் வேலை நடக்கிறப்போ ஒப்பந்ததார் பெருசா தர மாட்டான் என்பதையும் நினைவில் கொள்ளவும். ஆனால் பிற்பகுதியில் தான் ஒப்பந்ததாரருக்கு அரசு அதிக பணப்பட்டுவாடா செய்ய வேண்டி இருக்கும்.
//

அட்லீஸ்ட் இந்த மாதிரியாவது அவங்க ஆட்சியில பண்ணிட்டு போய் சம்பாதிச்சி இருந்தா கூட சந்தோஷப்பட்டிருக்கலாம்.

Paleo God said...

ஸ்ருதி சேரல, பேஸ் வாய்ஸ்ல கூட பரவாயில்லை, உங்களுக்கு ஹைபிட்ச் ப்ராப்ளம் இருக்கு. சங்கதி எதுவும் சரியா விழல.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

CS. Mohan Kumar said...

//ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ஸ்ருதி சேரல, பேஸ் வாய்ஸ்ல கூட பரவாயில்லை, உங்களுக்கு ஹைபிட்ச் ப்ராப்ளம் இருக்கு. சங்கதி எதுவும் சரியா விழல.

இந்த ஆளு சூப்பர் சிங்கர் ஜூனியர் நிறைய பாக்குறாரு போல ..

CS. Mohan Kumar said...

கேபிள் : கெட்ட வார்த்தை பிரயோகம் அவசியம் தானா? அந்த தலைப்பில் ஒரு புக்கே வந்தது வேறு விஷயம். நீங்க உபயோகிப்பதே (கோபத்தில்) கெட்ட வார்த்தையாக வர வேண்டும் என்று தான் ; எழுத்தில் கெட்ட வார்த்தை குறைச்சுக்க பாருங்க

Anonymous said...

//தமிழர் சீமானெல்லாம் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. //

'நாமும்' தமிழர் சாரே!!

arul said...

any way kudankulam will start all ahve to wait and see about the safety issues raised by common people living aroung it.

Lakshman said...

பார்பனீயம் - ஹும்ம்ம் நீங்களுமா ஷங்கர் சார். தமிழ் பதிவர்களும் டுவீட்டர்களும் இந்த வார்த்தையை உபயோகித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள் போலும். ஊருக்கு இளைத்தவன்...

வவ்வால் said...

கேபிளாரே,

//படிக்க”ணு”ம்//

கலக்குறிங்க போங்க :-)) "னு" "ணு" என அழகா எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டிட்டிங்க, நானும் எழுத்து பிழைகளை ரசிப்பதில்லை, முடிந்த அளவுக்கு பிழையின்றி எழுதவே முயற்சிக்கிறேன். வழக்கமாக பிழை திருத்தம் பார்க்காமல் தட்டியதும் கொட்டிவிடுவதால் ஏற்படுவது.(எனதுப்பதிவிலும் எட்டிப்பார்க்கிறது பிழைகள்) இப்படியே போனால் உங்களைப்போலவே அதிக எழுத்துப்பிழைகள் எனக்கும் மலிந்து விடுமோ என்று கவலையாயிருக்கிறது.

அதற்கு முதலில் ஒரு நல்ல கீ.போர்ட் வாங்க வேண்டும் ,இப்போதுள்ளதில் பாதி எழுத்துக்கள் மாயமாகிவிட்டது ,சில கீகளும் வேலை செய்வதில்லை. இரும்பில் செய்த கீ போர்டு எங்காவது கிடைக்குமா? தெரிந்தால் சொல்லவும்.:-))

வவ்வால் said...

கேபிள்ஜி,

//இதே நிலை தான் அதிமுக ஆட்சியிலும்.//

ஆமாம் அதனால் தான் எந்த கட்சியையும் குறிப்பிடாமல் சொன்னேன்.ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் இதுவே நடக்கிறது. நீங்கள் தான் அய்யா ஆரம்பிச்சது இப்போ அம்மா சொல்லிக்கிறாங்க அது எப்படினு உணர்ச்சி வசப்பட்டுடிங்க :-))

கடல் நீரைக்குடி நீராக்குறேன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க ஒரு லிட்டர் கடல் நீர் கூட குடி நீராச்சா 5 ஆண்டுகளில் என்பது கேள்விக்குறியே.(அம்மையார் அறிவிச்சு, அய்யா பயன்ப்படுத்திக்கொண்ட்டது) அது போல தான் எல்லா திட்டங்களும்,கமிஷன்களும்
--------------
//அப்படியா எடுத்து எழுதித்தான் பாருங்களேன். எவன் படிப்பான், பார்க்குறான்னு பார்ப்போம்.:))//

ஹி..ஹி யாருக்கும் நாம போட்டியா இருக்க கூடாதுன்னு தான் விட்டு வச்சுருக்கோம், இறங்கினா ஒரு கை(கால்?) பார்க்காம விடமாட்டோம்.

நம்ம ஆடியன்ஸ்ஸே வேற :-))

---------

//அட்லீஸ்ட் இந்த மாதிரியாவது அவங்க ஆட்சியில பண்ணிட்டு போய் சம்பாதிச்சி இருந்தா கூட சந்தோஷப்பட்டிருக்கலாம்.//

விவரம் தெரியாமலே இருக்கிங்க ,ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்து, டெண்டர் விட்டு கமிஷன வாங்கிட்டு போயாச்சு. இப்போ இருக்கிறவங்க அதை தொடர்வாங்களா என்பது மீண்டும் நடக்கும் பேரங்களுக்கு பின்னரே முடிவாகும்.

அப்படியே பேரம் படிந்து வேலை நடந்தா அய்யா நான் கொண்டாந்த திட்டம்னு சொந்தம் கொண்டாடுவார், அம்மா நான் தான் முடிச்சேன்னு சொந்தம் கொண்டாடி , அறிக்கைப்போர் தான் நடக்கும். அதெல்லாம் படிக்கிறவன் மண்டை தான் காயும் :-))
****
N.B:E&O.E

புதுகை.அப்துல்லா said...

// ஊழல் செய்திருந்தாலும் ,மேலும் அம்மையார் ஆட்சியை விட்டு போனப்போது தமிழகத்தில் உபரி மின் உற்பத்தி என்ற நிலை தான் இருந்தது

//


2001 - 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற செல்வி.ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் துவங்கப்பட்ட, செயல்படுத்தப்பட்ட மின் திட்டங்கள் எவை எவை என்று கொஞ்சம் சொல்ல முடியுமா/ தகவலுக்காகக் கேட்கிறேன்.

வவ்வால் said...

//2001 - 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற செல்வி.ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் துவங்கப்பட்ட, செயல்படுத்தப்பட்ட மின் திட்டங்கள் எவை எவை என்று கொஞ்சம் சொல்ல முடியுமா/ தகவலுக்காகக் கேட்கிறேன்.//

//The gross generation was 52,345 million units (MU) and a total of 41,200 MU
was consumed in Tamil Nadu during the year 2004-2005. As per the TNEB’s
data, the gross generation is 55489 MU and the total consumption is 43710 MU
for the year 2005-06. The historical annual growth in energy consumption in
Tamil Nadu is in the order of 5% to 6% in the previous 10 years. With a spinning
reserve of 500 MW, the net deficit will be around 597 MW in 2006-07. The
corresponding energy shortage will be around 1072 MU for the year 2006-07.//
http://tnerc.gov.in/orders/CPP%20Order-approved%20host%20copy.pdf

2005-06 இல் 500 மெ.வா உபரியாக மின்சாரம் இருந்துள்ளது. அதே சமயத்தில் 2006-07 இல் 597 மெ.வா பற்றாக்குறை வரும் என 2006 இல் மின்வாரியம் அறிவித்துள்ளது ,அதே சமயம் ஆண்டுக்கு 5-6% பற்றாக்குறை வர வாய்ப்புள்ளதை முந்தைய 10 ஆண்டுகால நுகர்வு வளர்ச்சியை வைத்து கணக்கிட்டுள்ளார்கள் ,எனவே 2006 இல் ஆட்சிக்கு வந்தவர்கள் தான் செயல்ப்பட்டிருக்க வேண்டும். 5 ஆண்டுகளும் தூங்கிவிட்டார்கள் இப்போது எதிர்க்கட்சியான பிறகு வந்துக்கேள்விக்கேட்க என்ன உரிமை இருக்கிறது.

2000-01 இல் 7513 மெ.வா மின் உற்பத்தி, அது 2005-06 இல் 10031 மெ.வா ஆக உயர்ந்துளது.எப்படி தானாக உயருமா?

06-07 இல்-10098 மெவா,
07-08 இல்-10122 மெவா
2011 இல்-10010 மெ.வா தான்

இங்கு சொல்லி இருப்பது மின் உற்பத்தி + வாங்கப்பட்ட மின்சாரம் சேர்த்து. இன்ஸ்டால்டு மின் உற்பத்தி திறன் அல்ல. தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறன் 15000 மெவா , நடை முறையில் உற்பத்தியாவது குறைவு.ஏன் எனில் முழு அளவில் மின் உற்பத்தி செய்ய முடியவில்லை அதற்கு பல காரணங்கள் இருக்கு. முக்கியமான காரணம் நிர்வாக சீர்கேடு.
2006க்கு பிறகு பல இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படாமல் இருக்கு, காரணம் இயற்கை எரிவாயுக்கு மின்வாரியம் பணம் செலுத்தவில்லை. பராமரிப்பு இல்லாமல் பல அனல் மின் உற்பத்தி நிலையங்களில் 100 சத மின் உற்பத்தி இல்லை.

கட்டிடத்துக்கு பேரு அறிவாலயம்னு வச்சுக்கிட்டா மட்டும் போதாது :-))

எனவே அம்மையார் காலத்தில் ஊழல் இருந்தாலும் மின் உற்பத்தி திறன் குறையாமலே இருந்தது என்பது தான் உண்மை.

இப்போ கூட புதிய மின் உற்பத்தி நிலையங்கள் இல்லாமலே மின் தேவையை சமாளிக்க முடியும். அதற்கு பணம் இல்லை. கிட்ட தட்ட 5000 மெவாட் அளவுக்கு சரியான பராமரிப்பு இல்லாததால் மின் உற்பத்தி செய்யாமல் முடங்கி கிடக்கு. மேலும் எரி திறன் குறைவான நிலக்கரியை வாங்குவதால் முழு திறனில் இயங்காமல் இருக்கிறது பல மின் நிலையங்கள்.

ஆர்காட்டாரைக்கேளுங்கள் சொல்வார் எல்லாம் அவரது திருவிளையாடல் தான் :-))

இப்போது இருக்கும் தகவலை வைத்து சொல்லி இருக்கேன், இது போதாது என்றால் சொல்லுங்கள் , தேடிப்போடுகிறேன்.

வவ்வால் said...

ஹி..ஹி ஒரு திருத்தம் சிவாஜி படத்துல அமைச்சர வரும் ஹனிபா கொச்சின், நான் நாகூர் ஹனிஃபானு போட்டுட்டேன்(நாகூர் ஹனீபா தான் மைண்ட்ல நல்லா பதிஞ்சு போயிடுச்சு)

mani sundaram said...

Vavval kalakkureenga keep going

mani sundaram said...

Dubakoor enna replye illa

புதுகை.அப்துல்லா said...

வவ்வால் அண்ணே, கேட்ட கேள்விக்கு நேரடியான பதில் இல்லை.

மீண்டும் தெளிவா கேட்கிறேன்.

"2001 - 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற செல்வி.ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் துவங்கப்பட்ட, செயல்படுத்தப்பட்ட மின் திட்டங்கள் எவை எவை என்று கொஞ்சம் சொல்ல முடியுமா? தகவலுக்காகக் கேட்கிறேன்

புதுகை.அப்துல்லா said...

வவ்வால்ணே, 2000-01 இல் 7513 மெ.வா மின் உற்பத்தி, அது 2005-06 இல் 10031 மெ.வா ஆக உயர்ந்துளது.எப்படி தானாக உயருமா?

தானா உயராது

1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியின் போது தீட்டப்பட்ட திட்டங்களினால் உயர்ந்தது அது

புதுகை.அப்துல்லா said...

நீங்கள் சென்னையில் இருந்தால் சொல்லுங்கள், நான் தேடி வந்து உங்களிடம் ஒரு கோப்பு தருகிறேன். 1967 துவங்கி இதுவரை நிறுவப்பட்ட மின் திட்டங்கள் எவர் ஆட்சியில் என்பது பற்றியும் வருட வாரியான பற்றாக்குறை, எந்தெந்த காலங்களில் அதற்கான மாற்று முயற்சி எடுக்கப்பட்டது ( உதாரணமாக 1989 திமுக ஆட்சியில் போர்கால அடிப்படையில் நிறுவப்பட்ட காற்றாலை திட்டம்) போன்ற விவரங்கள் அடங்கிய அந்தக் கோப்பை படியுங்கள். பின் விவாதிப்போம். விசயம் அறியாது வெட்டியாக அரசியல் பேச நாம் இருவருமே வேலைவெட்டி அற்றவர்கள் அல்லவே :)

ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். கடந்த ஆட்சியைவிட பல மடங்கு மின்வெட்டு இந்த ஆட்சியில் உள்ளது கண்கூடு. இந்த ஆட்சி வந்த 10 மாதத்தில் மக்கள் தொகையொ, தொழிற்சாலைகளோ இரட்டிப்பாகவில்லை. அப்படியிருக்க மின்வெட்டு பல மடங்கு உயர்கிறது என்றால் எவர் ஆட்சி திறமையற்ற ஆட்சி?

இந்தக் கேள்வியொடு விடைபெறுகிறேன். வணக்கம் :)

புதுகை.அப்துல்லா said...

Dubakoor enna replye illa

//

அண்ணன் மணிசுந்தரம், உங்களையோ, உங்கள் குடும்பத்தினரையோ நான் ஏமாற்றியதாகவோ அல்லது உங்களிடம் நான் பொய் சொல்லியதாகவோ தெரியவில்லை. அப்புறம் என்ன டுபாக்கூர்?

Cable சங்கர் said...

!@ அப்துல்லா..
விடுங்கண்ணே.. கொஞ்சம் அறிவார்த்தமா பேசுனா இவனுங்களுக்கு தாங்காது. இவனுங்க் டுபாக்கூர் ப்ரொபைல் வச்சிட்டு எத்தையாவது பேசுவானுங்க.. நாம நம்ம வேலைய பாப்போம்.

வவ்வால் said...

புதுகை அப்துல்லா,

நீங்க தான் எம்.எம் .அப்துல்லாவுமா? திமுக பொதுக்குழுவிலே வீரபாண்டியாருக்கு எதிராகவும் சவுண்ட் கொடுத்தார்னு ரிப்போர்ட்டர்ல படிச்சேன் அதான் ஒரு தகவலுக்கு கேட்டேன். அவரில்லை என்றாலும் பரவாயில்லை உங்களுகும் சொல்கிறேன்,

இது போல கோப்புகளில் இருந்து மின்சாரம் உற்பத்தியாகுமென்றால் தமிழகத்தில் மின் வெட்டே இருக்காது. கோப்பு என்ற பெயரில் ஆவணப்படுத்ததலை சரியாக செய்வதில் வல்லவர் ஆச்சே தொல்காப்பிய எழுத்தாளார் :-))

தமிழக மின்வாரிய திட்டங்கள் ,அறிவிப்புகள் ஆகிய கோப்புகளை பிடிஎப் ஆக அவர்கள் தளத்திலேயே நிறைய வைத்துள்ளார்கள். 10 ஆண்டுகளுக்கான அறிவிப்புகள் ,புள்ளி விவரங்களை முன்னரே பார்த்தாச்சு , பலவற்றை சேமித்தும் வைத்திருக்கிறேன்.

ஏற்கனவே சொன்னது தான் 1500 மெ.வாட் அனல் மின் நிலையத்தை மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கலாம், ஏன் இவர் அறிவிப்பாராம் பின்னர் அவங்க செய்தாங்க என்று சொல்லிக்கணும். அய்யாவே முடிச்சு இருக்கலாமே? பதில் கிடைக்குமா?

செய்யூர் மெகா மின் திட்டம் 4000 மெவாட் கூட 2001 இல் கோப்புகளில் தயாராச்சு ,இன்னும் முடியலை. அது நடை முறைக்கு வரும் போது உரிமை யாருக்கு போகும்.

2001-05 காலத்தில் சுமார் 2500 மெ.வா மின் திட்ட விரிவாக்கம் ,வட சென்னை, எண்ணூர், தூத்துக்குடியில் செய்யப்பட்டுள்ளது.

கடல் நீரைக்குடி நீர் ஆக்கும் திட்டம் அறிவிச்சது அம்மையார் காலத்தில ஆனால் பின்னர் அய்யா காலத்தில முடிச்சாங்க ,இப்போ கடல்ல் நீர் குடி நீர் ஆச்சா? ஒரு லிட்டர் தண்ணீர் கூட வரலைனு ஜீ.வி ல தான் கட்டுரைப்போட்டான்.

புதிய தலமை செயலகம் கட்ட கோட்டூர் புரத்தில் அடிக்கல் நாட்டியது அம்மையார் ,அதை இடம் மாற்றி கட்டியது அய்யா, அப்போ யாருக்கு பேரு? மேலும் தலைமை செயலகத்தை அவசரமாக கட்டி முடித்தவர்களுக்கு ஏன் ஒரு மின் திட்டம் கூட 5 ஆண்டுகளில் முடிக்க முடியாமல் போச்சு?

//( உதாரணமாக 1989 திமுக ஆட்சியில் போர்கால அடிப்படையில் நிறுவப்பட்ட காற்றாலை திட்டம்)//

அப்போ தமிழக மின்வாரியம் ஏகப்பட்ட காற்றாலை வைத்திருக்கணுமே இருக்கா?
இன்று வரையில் தமிழக மின்வாரியம் சொந்தமாக உற்பத்தி செய்யும் காற்றாலை மின்சாரம் 19.33 மெவாட் தான்.

1989 இல் 1.25 மெ.வா தான் உற்பத்தி செய்துள்ளது அது தான் உங்க பாஷையில போர்க்கால நடவடிக்கையா :-))
----
// இந்த ஆட்சி வந்த 10 மாதத்தில் மக்கள் தொகையொ, தொழிற்சாலைகளோ இரட்டிப்பாகவில்லை. அப்படியிருக்க மின்வெட்டு பல மடங்கு உயர்கிறது என்றால் எவர் ஆட்சி திறமையற்ற ஆட்சி?//

உங்களுக்கு அரசியலில் நல்ல எதிர்க்காலம் இருக்கு :-)) எது நடந்தாலும் அடுத்தவர்களை காரணம் காட்டும் கலை நல்லா வருது.

கடந்த காலங்களில் வாங்கிய காற்றாலை மின்சாரத்துக்கு பணம் கொடுக்காமல் போய்விட்டார், இப்போது கொடுக்கவும் முடியவில்லை, வாங்கவும் முடியவில்லை.
//"Since the power crisis started in 2008, the demand-supply gap till last year was only around 2,000MW. But in the last few months of 2011, the gap widened to nearly 3,000MW and now it stands at 4,000MW. Once the peak summer starts, demand for electricity will increase further," said a power manager. The board is in a fix now as it is not sure about how to manage the situation. "Last year, we purchased 1,500MW of electricity from private players at high prices and somehow managed the situation. But this time, we are not able to buy as we still owe 10,000 crore to suppliers," said the power manager.

Now, TNEB is only able to get 150MW. "We are already in a financial mess and we don't want to buy power at high costs. We will only buy only if the rate is around 4 per unit. We just have to bear with the problem for a couple of months," said a TNEB official.//
இந்த சுட்டியப்படிங்க தெரியும்,

காற்றாலை கடன்

அப்புறம் நான் தொடர்ந்து மின்சாரம் குறித்து பதிவுப்போட்டுக்கொண்டு தான் இருக்கேன், எப்போவாது நேரம் இருந்தா அங்க வாங்க உங்க எல்லா கேள்விக்கும் விடை கிடைக்கும்.(நான் கேள்விக்கேட்டா மாட்டிப்பிங்க)

புதுகை.அப்துல்லா said...

// நீங்க தான் எம்.எம் .அப்துல்லாவுமா? திமுக பொதுக்குழுவிலே வீரபாண்டியாருக்கு எதிராகவும் சவுண்ட் கொடுத்தார்னு ரிப்போர்ட்டர்ல படிச்சேன்

//

yes. i am that same abdulla :)

i have lot of evidence to advocate all your questions. the problem is i dont have time to write it elaborately here. but you could find my writings about the power scenario in my google plus where you have answer for all your qusrtions.

// //( உதாரணமாக 1989 திமுக ஆட்சியில் போர்கால அடிப்படையில் நிறுவப்பட்ட காற்றாலை திட்டம்)//

அப்போ தமிழக மின்வாரியம் ஏகப்பட்ட காற்றாலை வைத்திருக்கணுமே இருக்கா?
இன்று வரையில் தமிழக மின்வாரியம் சொந்தமாக உற்பத்தி செய்யும் காற்றாலை மின்சாரம் 19.33 மெவாட் தான்.//

it is not mean that government has started. government has introduce new power policy in that year which simplifies the regulation to start wind energy by private sectors.

// // இந்த ஆட்சி வந்த 10 மாதத்தில் மக்கள் தொகையொ, தொழிற்சாலைகளோ இரட்டிப்பாகவில்லை. அப்படியிருக்க மின்வெட்டு பல மடங்கு உயர்கிறது என்றால் எவர் ஆட்சி திறமையற்ற ஆட்சி?//

உங்களுக்கு அரசியலில் நல்ல எதிர்க்காலம் இருக்கு :-)) எது நடந்தாலும் அடுத்தவர்களை காரணம் காட்டும் கலை நல்லா வருது.


//

never. i have not shown the others. i am telling the fact. again i am asking you "இந்த ஆட்சி வந்த 10 மாதத்தில் மக்கள் தொகையொ, தொழிற்சாலைகளோ இரட்டிப்பாகவில்லை. அப்படியிருக்க மின்வெட்டு பல மடங்கு உயர்கிறது என்றால் எவர் ஆட்சி திறமையற்ற ஆட்சி?"


//.(நான் கேள்விக்கேட்டா மாட்டிப்பிங்க)

//


me?? never, because we have our own power plat of 7.5 megawatt producing by WHRC. hope i know something in this field :)

நம்பள்கி said...

///மீண்டும் ராஜாவின் க்ளாஸிக்கிலிருந்து. இளையராஜா, மலேசியா வாசுதேவன், ஜானகி, வைரமுத்து, பாரதிராஜா காம்பினேஷனில் அட்டகாசமான பாடல்.///

முக்கியமா பிள்ளையார உட்டுட்டீன்களே. அவர் இல்லை என்றால் எல்லாமே அம்பேல்!