இந்தப் படமும் சுமார் நான்கு வருடங்களாய் பெட்டிக்குள் இருந்து வெளிவந்திருக்கும் படம். முதலில் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்டு, அவரது உறவினர் ரமேஷபாபுவின் ஆர் பிலிம்ஸ் சார்பாக வெளியாகியிருக்கிறது.
கார்த்திக். காலேஜ் நாட்களில் ஏராளமான பெண்களுடன் கடலை போடுவதில் மன்னன். கருணை மலர் என்கிற எஸ்.ஆர்.எம் காலேஜ் பெண்ணிடம் போன் பேசும் போதே கடலைப் போடும் நேரத்தில் சண்டையாகி பிரிந்தவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. சில வருடங்கள் கழித்து இருவரும் ஒரே கம்பெனியில் வேறு வேறு டிபார்ட்மெண்டில் வேலை செய்ய மீண்டும் ஒரு குழப்ப தருணத்தில் மலருக்கு தவறுதலாய் போன் போட்டுவிட, மீண்டும் சண்டை. பின்பு ஒரு நாள் மலர் யாரென கார்த்திக் பார்த்துவிட, அவளின் அழகில் மயங்கி காதலிக்க ஆரம்பித்துவிடுகிறான். எங்கே கார்த்திக் என்று சொன்னால் தன்னை வெறுத்துவிடுவாளோ என்று தன்னை சுந்தர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான். காதலும் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவள் மீதான காதலின் காரணமாய் என்ன காரணம் என்று சொல்லாமல் ஆனால் உன்னை நான் ஏமாற்றுகிறேன். அது எனக்கு பிடிக்கவில்லை என்று பிரிகிறான். கார்த்திக்கும், சுந்தரும் ஒருவர் தான் என்ற உண்மை மலருக்கு தெரிந்ததா? அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் கதை. அதை மிக சிம்பிளாய் சுவாரஸ்யமாய் தர முயற்சித்திருக்கிறார்கள்.
கார்த்திக்காக புது முகம் ஷிவ் பண்டிட். நல்ல டால் அண்ட் ஹேண்ட்சம்மான சாப்ட்வேர் இளைஞனுக்கு சரியான பொருத்தம். முடிந்தவரை இயல்பாய் நடைக்க முயற்சி செய்திருக்கிறார். கருணைமலராய் மானசி பரேக். சட்டென மனதில் ஒட்டிக் கொள்ளும் முகம். மிக க்ளோசப்பில் மட்டும் கொஞ்சம் உதட்டோரத்தில் ஒரு மாதிரியாய் இருக்கிறார். சாப்ட்வேர் கேர்ளுக்கான பர்பெக்ட் பிட். காதல் வயப்படும் போதான சில சின்னச் சின்ன தயக்கங்கள், கார்த்திக்கின் மீதான கோபத்தை பாடி லேங்குவேஜில் காட்டுமிடங்கள் எல்லாம் அர்பன் பெண்களின், அதுவும் கொஞ்சம் ஹெப்பான சாப்ட்வேர் பெண்அலின் பாடிலேங்குஜை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். இவர்களைத் தவிர சுஜா கேரக்டரில் இருவருக்குமான பொதுவான நண்பியாய் வரும் சுஹாசினி ராஜ். மிக இயல்பாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நம்ம சந்தானம். தனி ட்ராக் என்று போட்டிருந்தாலும் ஆங்காங்கே கலகலக்க வைக்கிறார். “நாளைக்கு ஞாயித்துக்கிழமை” என்று அவர் சொன்னாலும் சிரிப்பதற்கு ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு நச். ஒரு ஹைஃபையான சிட்டி செண்ட்ரிக் காதல் படத்துக்கு என்ன விதமான ஒளிப்பதிவு தேவையோ அதை சரியாக கொடுத்திருக்கிறார். டாப் ஆங்கிள் கார் பார்க்கிங் ஷாட்ஸ். மனதை வருடும் மென்மையான பின்னணிகள். அழகாய் பெயிண்ட் அடிக்கப்பட்ட பாண்டிச்சேர் தெருக்கள் என்று கதைக்கு கொடுக்க வேண்டிய மூடை சரியாய் கொடுத்திருக்கிறார். இசை சதீஷ் சக்ரவர்த்தி. மூன்றோ அல்லது நான்கு பாடல்கள் தான். ஒரே ஒரு பாட்டைத் தவிர பெரிதாய் இம்பரஸ் ஆகவில்லை. அதுவும் இரண்டாவது பாதியில் பாடல் தான் பெரிய ஸ்பீட் ப்ரேக்கரே. பின்னணியிசையில் நன்றாக செய்ய முயற்சித்திருக்கிறார்.
எழுதி இயக்கியவர் ஆண்ட்ரூ லூயிஸ். சரியான லொக்கேஷன்ஸ், ஆர்ட் ஒர்க், ஸ்லீக்கான வசனங்கள், அர்டிஸ்டுகளை செலக்ட் செய்தது என்று ஒரு அழகான ஆங்கில பட பாணி ரொமாண்டிக் படத்தை கொடுக்க செய்த முயற்சியில் வென்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சுஜா கேரக்டரை வைத்து ஆடும் ஆட்டம் சுவாரஸ்யம். ஆனால் சட்டென அவர்களின் காதலில் ஒன்ற முடியாத வகையில் திரைக்கதை ஆங்காங்கே நொண்டியடிப்பதை தவிர்க்க முடியவில்லை. கார்த்திக் தன்னை யார் என்று வெளிப்படுத்தாமல் மலரிடம் ஏமாற்றும் போது எங்கே மாட்டிவிடுவானோ என்ற பதைப்பதைப்பை ஏற்படுத்துவதற்காக சில சுவாரஸ்ய முடிச்சு சீன்களை வைத்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் எபக்டிவாக செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதே போல ரெண்டாவது பாதி கொஞ்சம் பாட்டு, திரும்பத்திரும்ப வரும் ஒரே மாதிரி காட்சிகள் என்று அமைத்திருப்பதும், என்னதான் ஆளை பார்க்காவிட்டாலும் குரலை வைத்து கண்டுபிடிக்க முடியாதா? என்பது போன்ற சில பல லாஜிக் மைனஸுகள் இருக்கத்தான் செய்கிறது. ஒரு வேளை ஒரளவுக்கு அறிமுகமான நடிகரை கதாநாயகனாய் போட்டிருந்தால், கார்த்திக் செய்யும் தில்லுமுல்லுகள் இன்னும் சுவாரஸ்யமாய் இருந்திருக்குமோ? மொத்தத்தில் ஒரு ஃபீல் குட் ஓகே லவ் ஸ்டோரி.
கேபிள் சங்கர்
Comments
அஜித் : தல போல வருமா ?
Good to see TOI is being sensible at least wrt Tamil Cinema...
Karthik
Thanks for sharing
For latest stills videos visit ..
Best Regarding.
www.ChiCha.in
www.ChiCha.in