Thottal Thodarum

Apr 17, 2012

Joy"full" சிங்கப்பூர் -5


DSC_5692 DSC_5697
ஆம் கிளம்பிய வேகத்தில் போய் சேரத்தான் முடியவில்லை. எம்.ஆர்.டியில் போகலாமா அல்லது பஸ்சில் போகலாமா என்று யோசித்தபடியே கடைசியில் டாக்ஸியில் போகலாம் என்று வெயிட் செய்ய ஆரம்பித்து, சுமார் இரண்டு மணி நேரம் நின்றதுதான் மிச்சம். நின்ற நேரத்தில் டயர்ட் ஆகியதால் இரண்டு பாட்டில் ”சாரு” ஒயினை வாங்கிக் கொண்டு ஒரு வழியாய் ரூமுக்கு போய் சேர்ந்தோம். அதற்கு பிறகு தூங்கும் போது மணி 2.



DSC_5700 DSC_5707
அடுத்த நாள் காலையில் ஜோசப் மதியமே லஞ்சுக்கு லிட்டில் இந்தியா வருவதாய் சொல்லிவிட்டார். மாற்று உடைக்காக பிரபா வீட்டிற்கு கிளம்பினேன். சண்டெக்கிலிருந்து 857 என்கிற பஸ்ஸில் ஏறி கடைசி நிறுத்தமான யூஷுனில் இறங்கி, அங்கிருந்து 804 பிடித்து இரண்டாவது ஸ்டாப்பிங்கில் இறஙகுமுன் பிரபா பஸ்ஸ்டாப்பில் நின்றிருந்தார். பக்கத்தில் ரோட்டை தோண்டி ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஏரியாவை சுற்றி ஒரு வளையம் வைத்துவிட்டு மண்ணை தோண்டி எடுத்து முடிந்தவரை கொஞ்சம் கூட சிந்தாமல், அப்படியே அருகிலிருந்த லாரியில் போட்டார்கள். பக்கத்திலேயே இரண்டு பேர் அப்படியும் கீழே சிந்திய ம்ண்ணை பெருக்கி கொண்டிருந்தார்கள். காலை டிபனை அருகிலிருந்த இந்தியன் ரெஸ்டாரண்டில் ஒரு ஆப்பமும், ஹோம் மேட் லெமன் டீயுடன் முடித்துவிட்டு. சிறிது நேரம் ஓவ்வெடுக்கலாம் என்று டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். வசந்தம் என்றொரு தமிழ் சேனல். படு மொக்கையாய் இருந்தது. வண்ணத்திரை என்றொரு சேனலில் நம்ம கேடிவி போல தொடர்ந்து படங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி நம்மூரில் கிடைக்கும் அத்துனை சேனல்களுடன், நிறைய சைனீஸ், மாண்ட்ரீயன் சேனல்கள் திரை முழுவதும் பூச்சி பூச்சியாய் ஓடியது.
DSC_5711 DSC_5712
மதியம் லிட்டில் இந்தியாவுக்கு கிளம்பினோம். அதே 804 பிடிக்க, காலையில் தெருவில் நோண்டிக் கொண்டிருந்தவர்கள் காணோம். அங்கே வேலை செய்தற்கான அறிகுறி ஏதுமில்லாமல் இருந்தது. சுமார் ஒரு மணி வாக்கில் லிட்டில் இந்தியாவுக்கு வந்தவுடன், எங்கே சாப்பிடலாம் என்று கலந்தாலோசித்து ஒரு வழியாய் அஞ்சப்பரில் தஞ்சம் அடைந்தோம். அருமையான சாப்பாட்டிற்கிடையே என்னுடய “லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்” புத்தகத்தை ஜோசப் அங்கேயே கடை விரிக்க சரியான சேல்ஸ். அப்போது அங்கே வந்த பதிவர்கள் நட்புடன் ஜமால், மற்றும் இன்னொரு பதிவர் நண்பர் பாரதி அவரது மனைவியுடன் வ்ந்திருந்தார். சாப்பிட்டு முடித்து வெளியே வந்த போது, சாமி தன் சீடர்களுடன் அங்கே வர, எல்லோரும் சிங்கை பதிவர் சந்திப்புக்கு கிளம்பினோம். எக்ஸ்பிளனேட் மாலின் பின்புறம் உள்ள பிரிட்ஜுக்கு கீழே எல்லோரும் அமர்ந்தோம்.
DSC_5733 DSC_5736
DSC_5795 DSC_5788
DSC_5815 DSC_5849
பதிவர் அறிவிலி சுடான பஜ்ஜி எடுத்து வர, ஜோ, ஜோதிபாரதி, கோவி.கண்ணன், வெற்றிக் கதிரவன், பித்தனின் வாக்கு சுதாகர், அப்பாவி முரு, அவரது நண்பர் சரவணன், புண்ணாக்கு மூட்டை பாலா, ஜோசப் பால்ராஜ், மகேந்திரன், முகவை ராம், ஜெகதீசன், ஆகியோருடன் இனிதே துவங்கி, கடைசியாய் சுவாமி ஓம்காரின் பிரசங்கத்துடன் முடிவடைந்தது. இரவு படம் போகலாம் என்று வெற்றிக்கதிரவன் ப்ளான் செய்தான். ஆனால்  ஸ்டாப்ப்லாக்கில் எஸ்கேப் ஆனான். சாமியும் அங்கிருந்து ”எஸ்” ஸாக, அங்கிருந்து எங்கே போகலாம் என்று கலந்தாலோசித்துவிட்டு ஒரு சின்ன இண்டியன் பாரில் செட்டிலாகி, வழக்கம் போல கோலாகலமாய் சென்றது. நான் அன்று இரவு முகவை ராமுடன் தங்குவதாய் ஏற்பாடானது. காலையில் கோவி. அண்ணன் என்னை பிக்கப் செய்து கொண்டு சண்டோசா போகப் போவதாய் சொல்லிவிட்டு கிளம்பினார். சரி ஆளுக்கு ஒரு டாக்ஸி பிடித்து கிளம்புவோம் என்றபோது நான் தொண்டையை கனைத்து “ அது சரி.. எல்லா இடத்தையும் காட்டுறீங்க. அந்த கேலாங் எப்ப கூட்டிட்டு போவீங்க.? “ என்றதும் ஆளாளுக்கு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். “அலோ.. சும்மா சுத்திப் பாக்கத்தாங்க.” என்றவுடன் தான் நிம்மதியானார்கள்.
DSC_5743 DSC_5744
DSC_5884 DSC_5885
DSC_5886 DSC_5872
டாக்சியை பிடித்து நேரே கேலாங்கில் இறங்கினோம். ஊரே விழாக் கோலம் பூண்டது போல இருந்தது. எல்லா கடைகளிலும் எங்கு பார்த்தாலும் மக்கள், குடித்துக்கொண்டோ, சாப்பிட்டுக் கொண்டோ, நின்றார்கள். எல்லா தெருக்களிலும் ஒரே மாதிரியான செட்டப்பில் வீடுகள். வாசலில் ஏதோ பூச்சி பூச்சியாய் சிகப்பு எழுத்துக்களில் எழுதியிருந்தது. வீட்டின் வாசல் கதவு அகன்று திறந்து கிடக்க, மினியிலும், ஸ்கர்ட்டிலும், அங்கிருந்த கண்ணாடி பார்ட்டிசன்களுக்கு பின் வரிசை கட்டி அழகிகள் நின்றார்கள். அரசாங்கமே அங்கீகரத்திருக்கும் விபசார விடுதிகள் கொண்ட ஏரியா அது. அதே ஏரியாவில் சாதாரண மக்களூம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மெடிக்கல் டெஸ்ட் எல்லாம் செய்து சுகாதாரமாய் பேணுகிறது அரசாங்கம். அங்கே இம்மாதிரி அங்கீகரிக்கப்பட்ட விடுதிகள் இல்லாமல் ஒவ்வொரு தெருவின் சந்து முனைகளிலும், பெண்கள், பெண்கள், பெண்கள். அவர்களை தாண்டி போகும் போது கைபிடித்திழுக்கும், வியட்நாமிய பெண், பாவாடை தாவணி கட்டிய நம் ஊர் பெண், எதையோ யோசித்துக் கொண்டு, புகைத்தபடி நிற்கும் ந்டுவயது சீன பெண்கள், ம்லையாள பெண்கள், இந்தோனேஷிய, வங்காள, பெண்கள். இவர்கள் எல்லாம் கொஞ்சம் சீப். அங்கீகாரம் கிடையாது. திடீர் தீடீர் என்று ரெய்ட் நடத்தி இவர்களை அள்ளி விடுகிறார்கள் போலீசார்கள். எல்லா தெருக்களையும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, கிளம்பிய போது அங்கு இருக்கும் ஆண், பெண் யாரிடமும் எந்தவிதமான அசூசையோ, ஒரு மாதிரியான பார்வையோ இல்லை. மிக இயல்பாய் எல்லாரும் கடந்து போனார்கள். வெளியே டாக்ஸி பிடித்து கிளம்புகையில் அருகே ஒரு ரஷ்ய பெண் நல்ல ஓங்குதாங்கான உயரத்துடன் நிற்க, அருகே வந்து நின்ற டாக்ஸி காரணை பார்த்து, “250 டாலர்ஸ்” என்றாள். டாக்ஸி கியர் போட்டு கிளம்ப யத்தனிக்க, அவள் “200,, ஒரு அடி முன்னால், 150 இன்னும் ஒரு அடி முன்னால், 100 என்றதும்.. காரின் முன் கதவு திறக்க, அந்தப் பெண் காரின் கதவை திறந்து, ஒரு கணம் நிமிர்ந்து இலக்கில்லாம் ஒரு பார்வையை பார்த்து, பெருமூச்சு விட்டு காரினுள் உட்காரும்போது சிரித்தாள். 
DSC_5853 DSC_5863
DSC_5849 DSC_5842
DSC_5838 DSC_5834
DSC_5828 DSC_5829
DSC_5827 DSC_5823
DSC_5810 DSC_5809
இரவு ராமின் வீட்டில் போய் சேரும் போதே நடு நிசிக்கு மேல் ஆகிவிட்டது வழக்கம் போல். தூக்கம் வரவில்லை. ஜெகன் தனக்கு தூக்கம் வருவதாக சொல்லிவிட்டு கீழே படுக்க போக, நாங்கள் இருவரும் ஆளுக்கொரு டயட் கோக்கை சப்பிக்கொண்டே பேச ஆரம்பித்தோம். பேச்சு பல விஷயஙக்ளை தாண்டிச் சென்றது. சினிமா, வாழ்க்கை, இலக்கியம், என்று பல திசைகளில் ஓடியது. ராம் பழகுவதற்கு மிக இனிமையான நண்பர். மிக இயல்பாக நம்முடன் அளவளாவ ஆரம்பித்துவிடுபவர். இவரிடம் இன்னொரு விசேஷம் . மன்னிக்கவும் சிறப்பு என்னவென்றால், கொஞ்சம் கூட ஆங்கிலம் கலக்காமல், தமிழிலேயே பேசுகிறார். முக்கியமாய் நாம் அதிகம் பயன்படுத்து பல ஆங்கில பெயர்களுக்கு ஈடான தமிழ் வார்த்தையை தேடிப் பிடித்து பேசுகிறார். அவ்வளவு இனிமை. இதன் நடுவில் சீன மொழியை கற்றுக் கொள்வதற்காக வகுப்புக்கு வேறு போகிறார். சுமார் நான்கு மணிக்கு தூங்கப்போனோம். நான் ராமின் வீட்டில் இருப்பது கோவி. அண்ணனுக்கு தெரியாது. அதானால் எதற்கும் ஒரு குறும்செய்தி அனுபிவைப்போம் என்று அனுப்பிய அடுத்த சில நொடிகளில் பதில் மெசேஜ் வந்தது. 

கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

கோவை நேரம் said...

அருமை....

சித்தார்த்தன் said...

சங்கர் அண்ணா,

உங்கள் சிங்கப்பூர் பயண கட்டுரை மிகவும் நன்றாக இருக்கிறது,எனக்கு முன்பு ஒரு முறை சிங்கப்பூர் பணி புரிய வாய்ப்பு வந்தது.அப்போது அதை ஏற்று கொள்ளும் மனநிலையில் நான் இல்லை..தற்போது உங்கள் கட்டுரை படிக்கும் போது மிகுந்த அளவில் மகிழ்ச்சி தருகிறது ....இருந்தாலும் இதை எல்லாம் பார்க்க முடியாத வருத்தத்தை தருகிறது....செல்வேன் ஒருநாள் சிங்கப்பூர் என்ற லட்சியத்தோடு..............