Posts

Showing posts with the label மின்னம்பலம்.

கதை திருட்டு

கதை திருட்டு இணையமெங்கும் தற்போதைய பரபரப்பு சர்கார் படக்கதை திருட்டு விஷயம் தான். பாருங்கள் நான்கூட  இக்கட்டுரையை ஆரம்பிக்க கதை திருட்டு என்று சொல்லித்தான் ஆரம்பிக்க வேண்டிருக்கிறது. ட்ரெண்டிங் முக்கியம்  என்னடா இது ஆரம்பித்த பத்தியிலேயே முருகதாஸுக்கு சப்போர்ட் செய்கிறார் போல இருக்கிறதே என்று யோசித்தீர்களானால் நிச்சயம் இல்லை. இக்கட்டுரை யாருக்கும் ஆதரவாக எழுதப்பட்ட கட்டுரையல்ல. உலகம் உருவாக ஆரம்பித்ததிலிருந்து கதை இருக்கிறது. மனிதன் வாய் வழியாய் சொல்லப்பட்டது. மொழி, கலை வடிவத்திற்கு ஏற்ப அதனதன் வடிவில் மறு வடிவம் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அந்த மாறுதலே சாஸ்வதம். என்பதை புரிந்தவர்கள் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. அப்படியென்றால் தெரிந்தே கதையை திருடியவர்களை கேட்பது நியாயமில்லையா என்றால் நிச்சயம் கேட்கப்பட வேண்டிய, உரிமையை கோர வேண்டிய நியாயம் தான். சில வருடங்களுக்கு முன் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தன்னுடய நிறுவன சுயசரிதையை ஒர் தினசரியில் எழுதினார். எப்போது படங்கள் தயாரித்தார்கள். எங்கிருந்து படங்களின் கதை எடுக்கபட்டது போன்ற பல தகவல்கள் அதில் இருந்தது....

கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -15

கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -15 தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு என பரபரப்பாய் போய்க் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா உலகம். தயாரிப்பாளர் சொல்லும் வி.பி.எப் கட்டணம் மட்டுமே இதற்கு காரணமல்ல. நீ தியேட்டரில் ப்ரொஜெக்டர் வைப்பதற்கு நான் எதற்கு காசு தரணும் என்பது நியாயமான விஷயம் தான்.   ஆனால் அதே நேரத்தில்  டிக்கெட் விலையை ஏற்ற இவர்கள் யார்? என்று தயாரிப்பாளர் தரப்பில் கேட்டிருப்பது. தயாரிப்பாளர்தான் டிக்கெட் விலையை நிர்ணையிக்க வேண்டும் என்று போராட இறங்கியிருப்பதும் செம்ம காமெடி. ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் எங்கள் டிக்கெட் விலை ஏற்றி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. எனவே ஏற்றிக் கொடுக்க வேண்டும். மும்பையைப் போல ப்ளெக்ஸி ரேட்டிங் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றெல்லாம் கோரிக்கை வைத்தவர்கள். இன்றைக்கு அரசு நிர்ணையித்த விலையான 150+ஜி.எஸ்.டி. + கே.வரி சேர்த்து வாங்கினால் இருநூறு ரூபாய் வந்துவிடுமென்று, பழைய விலையான 120க்கே வரி போட்டு வாங்கியும் தியேட்டரில் ஆள் நடமாட்டம் ...

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -14

சினிமாவில் இருக்கவேண்டும் என்கிறவர்களிடையே எதையாவது புதிதாய் செய்ய வேண்டுமென்ற ஆசையில் உழல்பவர்கள் அதிகம். அதற்காக, காடாறு மாதம், நாடாறு மாதமென காசு சேர்த்து படம் எடுக்கிறவர்கள் ஒரு புறம் இருக்கத்தான் செய்கிறார்கள். நண்பர் வெளிநாட்டு வாழ் இந்தியராய் இருந்த காலத்திலிருந்து தெரியும். அங்கிருந்தே தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார். இந்தியாவுக்கு நிரந்தரமாய் வந்ததும், அவர் ஆரம்பித்த முதல் விஷயம் சினிமா தயாரிப்பு. அப்போதெல்லாம் டிஜிட்டல் என்பது மப்பும் மந்தாரமுமாய் வெறும் வாயில் பேசிக் கொண்டிருந்த காலம். மனுஷன் அன்றைய லேட்டஸ்ட் பேனாசோனிக் கேமராவை விலைக்கு வாங்கிக் கொண்டுவந்தேவிட்டார். உடன் எடிட் செய்ய சிஸ்டம் எல்லாம் வைத்து , தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்து தொடங்கியாயிற்று. டிஜிட்டல் சிஸ்டத்தில் ஆர்வமுள்ள, அல்லது கொஞ்சம் அதைப் பற்றிய அறிவுள்ள ஒர் குழுவை அமைக்க நினைத்தார். வார இறுதி நாட்களில் அவர் இளைஞர்களைக் கூட்டி டிஜிட்டல் எப்படி சினிமாவை மாற்றப் போகிறது என்பதை பற்றி என்னை பேசச் சொல்லி, டிஜிட்டல் கேமராவை பற்றிய அறிவை பரப்ப ஆரம்பித்த நேரம். அனைவரும் கேட்ட கேள்வி ஏன் நீங்களே இ...

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா ? -10

சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று விடும் தயாரிப்பாளர்கள் இருக்கும் இதே திரையுலகில் தான் இதெல்லாம் இருக்குனு சொல்றாங்க.. ஆனா அது ஏன் என் படத்துக்கு மட்டும் கேட்டு வர மாட்டேன்குறாங்கன்னு தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் தயாரிப்பாளர்களும் இருக்கும் இடம் தான் தமிழ் சினிமா. அப்படியாப் பட்டவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ உங்க படம் பத்தி கேள்விப்பட்டேன். இந்தி ரைட், தெலுங்கு ரைட் வாங்கிக்கிறோம்” என்று போன் வந்தால் எப்படி இருக்கும் அந்த தயாரிப்பாளருக்கு. உச்சி முதல் உள்ளங்கால் வரை சந்தோஷம் புரைக்கேறி குதித்தார். “ என்ன விலை?” என்று கேட்டது எதிர் முனை.  இவருக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. “ மார்கெட்டுல நம்ம படம் பத்தி நல்ல பேச்சு இருக்கு. இந்திக்கு ஒரு பத்து ரூபா கேட்டுட்டு இருக்கேன்” என்று தயக்கத்தோடு, இன்னும் ஜாஸ்தியா சொல்லியிருக்கலாமோ? இல்லை ஜாஸ்தியா சொல்லிட்டோமோங்கிற குழப்பத்தோட பதில் சொல்ல, ” சரி.. விடுங்க.. வேணும்னா நான் தெலுங்கும் சேர்த்து எடுத்துக்...

கந்துவட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -1

எங்கு பார்த்தாலும் கந்துவட்டி.. கந்து வட்டி என்கிற பேச்சுத்தான். ஒரு மாதத்துக்கு முன் கந்துவட்டிக் காரணமாய் தீக்குளித்த குடும்பத்திற்கு கிடைத்த கவன ஈர்ப்பை விட சமீபத்தில் பைனான்ஸ் பிரச்சனையால் தூக்கு மாட்டிக் கொண்ட இயக்குனர்/ நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரின் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளருமாகிய அசோக்குமாரின் மரணம் ஏற்படுத்தியிருக்கிறது. சினிமாவின் பவர் அப்படி. இறந்தவர் தன் இறப்புக்கு காரணமானவர் அன்பு செழியன் என்கிற பைனான்ஸியர்தான் என்று எழுதி வைத்துவிட்டு போக, ஏற்கனவே அவரின் பேரில் பல செவிவழிக்கதைகள் உள்ள நிலையில் பற்றிக்கொண்டது. உடனடியாய் கைது செய் என்று ஒரு கோஷ்டி போர்க்கொடி ஏந்தி களத்தில் இறங்க, அடுத்த நாளே அன்பு செழியன் நல்லவர் , வல்லவர், உத்தமர் எங்களீடம் அவர் நன்றாகத்தான் நடந்துகொண்டிருக்கிறார். என்று பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு பேட்டிக் கொடுக்க ஆரம்பித்த ஒரு கோஷ்டி என தமிழ் சினிமா ரெண்டாய் பிளந்திருக்கிறது. இதில் அரஸ்ட் செய்யச் சொல்லி போராடுகிறவர்கள் அதே அன்புவிடம் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்களும் இருக்க, இந்த பிரச்சனையை பெரிது செய்து அதில் அவர்களி...

பைரஸியும் சினிமாவும் -4

பைரஸியும் சினிமாவும் -3 டிஜிட்டலானாதால் இருக்கும் பாதுகாப்பின்மை ஒரு ரிஸ்க் என்றாலும், பெரும்பாலானவர்களின் அடிப்படை நேர்மையினால் பைரஸிக்கு துணை போகாவிட்டாலும், ஒரு சில படங்களின் வீடியோக்கள், ஏன் சில படமே வெளிவந்ததற்கான காரணம் அங்கிருந்த மனசாட்சி இல்லாத ஒரு சில அரைவேக்காட்டு பண தேவை மிகுந்த அப்ரசண்டிகள் தான் காரணம். முன்பெல்லாம் வெளிநாட்டு வீடியோக்கள் மூலம் வந்ததைப் போல டிஜிட்டல் கேமராக்களின் வளர்ச்சி இன்றைக்கு மொபைலிலேயே அட்டகாச படமெடுக்கும் வசதி வரை வந்து விட்டதால் சுலபமாய் போய்விட்டது. தியேட்டர் ஆப்பரேட்டர்களின் உதவியுடன் கேமரா பிரிண்டுகள் வெளிவர ஆரம்பித்தது. பல தியேட்டர்களை ஒரிஜினல் ஓனர்கள் நடத்தாமல் லீசுக்கு விட்டு விட்டு மாச காசு மட்டுமே வாங்கிக் கொண்டிருக்க, பெரும்பாலான பி, சி செண்டர் தியேட்ட்ரகளின் ஓனர்கள் தியேட்டர் மேனேஜரும், ஆப்பரேட்டருமாகவே இருக்க, சொற்ப சம்பளம், இவர்களின் தேவையை அதிகரித்திருக்க, லம்பாய் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கிடைக்கக் கூடிய வாய்ப்பை யார் வேண்டாமென்று சொல்லுவார்கள்?. இப்படியாக தியேட்டர் பிரிண்டுகள் வர ஆரம்பிக்க, க்யூப், யூ எப்.ஒ போன்ற நிறுவனங்க...

ஓ.டி.டி எனும் மாயவன் -2

நெட்ப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் வீடியோ ஓ.டி.டி. ப்ளாட்பார்மில் டிவி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி வந்ததெல்லாம் போய், ஸ்பானிஷ், பிரேசில், என உலகின் பல மொழிகளில் ஒரிஜினல் சீரீஸ்களை தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது ஹவுஸ் ஆப் கார்ட்ஸின் ஹீரோ கெவின் ஸ்பேசி. சமீபத்தில் வில்ஸ்மித்தை வைத்து என்பது மில்லியனுக்கு நெட்ப்ளிக்ஸில் மட்டுமே ஓடும் திரைப்படம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார்கள். ஏற்கனவே ப்ராட்பிட் நடித்து ஒரு படத்தை வெளியிட்டார்கள். நிறைய சிறு முதலீட்டு படங்களையும் தயாரிக்கிறார்கள். இரண்டு வருடம் முன்பு பூஷன் உலக சினிமா திருவிழாவில் தெரிவான ரேடியோபெட்டி, மற்றும் ரெவீலீஷன் எனும் இரண்டு இண்டிப்பெண்டண்ட் திரைப்படங்கள் நெட்ப்ளிக்ஸில் மட்டுமே வெளியாகி மக்களின் பாராட்டையும், அப்பட தயாரிப்பாளர்களுக்கு லாபத்தையும் கொடுத்துள்ளது. என்னது லாபத்தை கொடுத்ததா? என்றால் நிச்சயம் ஆம் என்றே சொல்ல வேண்டும். என்ன அவர்களுடய பணம் என்பது இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் டேட் மாறாமல் கொடுப்பார்கள். இது நெட்ப்ளிக்ஸின் முறை. அடக்கமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இண்...