Thottal Thodarum

Apr 26, 2016

செய்வீர்களா தி.மு.க தலைவரே?

இத்தனை நாள் மீடியாவின் முன்னால் கண்காணாமல் இருந்த தயாநிதி மாறன் தற்போது மீண்டும் தி.மு.க தலைவருடன்.  அதைப் பார்த்திலிருந்து மீடியா, இண்டெர்நெட், கேபிள் டிவி, என பல துறைகளில் உள்ள தொழிலதிபர்கள், லேசாய் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் அவர்களால் நிச்சாயம் இம்முறை கழக ஆட்சி வந்தால் அம்மாதிரியான இடர்பாடுகள் கொடுக்காது. சுதந்திரமாக தொழில் செய்ய வழி வகை செய்யப்படும் என்று கூறியிருந்தாலும், இத்தனை நாள் இல்லாத ஆள் கிடைக்கிற கேப்பில் கருணாநிதியுடன் ஒட்டிக் கொண்டிருப்பது. கண்கள் பனித்து, இதயம் இனித்து போல ஆகி விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் மாறன் குடும்பத்தின் வியாபாரம் ஆக்கிரமிப்பு எந்த அளவிற்கு இருந்தது என அனுபவித்தவர்கள் அவர்கள். இதை வெளிப்படையாகவே சொல்லி அதற்காகவே தி.மு.கவிற்கு ஓட்டுப் போடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் அவர்களின் ஆளூமையில்லையா என்று கேட்டீர்களானால் இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் தொழில் செய்கிற்வரக்ளுக்கு தொல்லை இல்லை. என்பது உண்மை.

 2ஜியிலிருந்து பல நெகட்டிவ் தி.மு.க பரப்புரைக்களுக்கு காரணமே இவர்கள் தான். அப்படியிருக்க, கண்கள் பனித்து, இதயம் கனிந்ததை ஒட்டி ஒன்று சேர்ந்தார்கள். அப்படி அவர்கள் சேர்ந்த பின் என்ன நடந்து என்று எல்லோருக்கும் தெரியும். எனவே மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கும் தி.மு.க தலைமை எக்காலத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்கள குடும்ப வியாபாரிகளால் மற்ற தொழில்களுக்கு பிரச்சனை இருக்காது. சுதந்திரமாய் இருக்கலாமென்ற வெளிப்படையான அறிவிப்பு கொடுப்பீர்களா? 

Apr 25, 2016

கொத்து பரோட்டா- 25/04/16

பெங்களூரில் தமிழ் நூலகம் ஒன்றை காலி செய்யச் சொல்லி ப்ரச்சனையாகி, அந்நூலகத்தில் இருந்த புத்தகங்களையெல்லாம் நடு ரோட்டில் வீசியெறிந்த கொடுமை நடந்தேறியது. செய்தி கேள்விபட்ட நடுநிலையாளர்கள், தமிழார்வலர்கள், பேஸ்புக், ட்விட்டர் இணைய ஆட்கள் கொதிதெழுந்து தமிழர்கள்மீதான வெறியாட்டம், அது இது என்று ஏற்றிவிட்டு லைக் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது மட்டும் தேர்தல் சமயமாய் இல்லாவிட்டால் ஆளாளுக்கு கருத்து தெரிவிக்கிறேன் என்று அரசியல் பிரச்சனையாக்கி குளிர் காய்ந்திருப்பார்கள். எந்த மொழி புத்தகமாக இருந்தாலும் அதை குப்பையாய் வீதியில் கொட்டுவது மகா கொடுமைதான். அது தமிழ் புத்தகமாய் இருந்துவிட்டால் தேவையில்லாத மொழிப் பிரச்சனையாய், தமிழர்களுக்கு எதிரான ப்ரச்சனையாய் புரிந்து கொள்வது அபத்தத்தின் உச்சம். 
@@@@@@@@@@@@@@@@@@@@
பேலியோவை பேணுகிறவன், அதன் பயனை அடைந்திருக்கிறவன் என்கிற முறையிலும், பேலியோ டயட் பற்றி நியாண்டர் செல்வன் எழுதிய புத்தக வெளியீட்டுக்கு சென்றிருந்தேன். நல்ல டீசெண்டான கூட்டம். மருத்துவர்கள் புடை சூழ கேள்வி பதில் செஷனோடு சிறப்பாக நடந்தது. உடல் நலம் குறித்த விழிப்புணர்வு உள்ளவர்கள் அதிகம் இருந்தவர்கள் இருந்த கூட்டமானதால் அதிகம் அட்வைஸ்களாகவும், மெடிக்கல் டெர்ம்ஸுகளாய் கடந்த கூட்டத்தை அமைதியாய் கவனித்தார்கள். அல்லது கவனித்த மாதிரி நடித்தார்கள். டாக்டர் ஹ்ரிஹரன்,  டாக்டர் சுமதி ராஜா  டாக்டர் புருனோ, டாக்டர் ராஜா ஆகியோரின் இயல்பான விளக்கங்கள் என பயனுள்ள விழாவாக அமைந்தது.  டாக்டர் ஹரிஹரனின் பாடி லேங்குவேஜ், பேச்சு எல்லாம் விசு படத்தில் ஒரு காலத்தில் பிரபலமாய் இருந்த குரியகோஸ் ரங்காவைப் போல எனக்கு மட்டும் தெரிந்தது. அதை அவரிடம் சொன்னேன். அவருக்கு குரியகோஸ் ரங்காவை தெரிந்திருக்கவில்லை. அரோக்கியம் நல்வாழ்வு குழுவினரின் வாலண்டியர்களின் கட்டுக்கோப்பான ஏற்பாடுகள், அமைதி. பதில் சொன்ன விதம் இப்படி எல்லாமே அதீத நேர்கோட்டில் காணப்பட்டது. விட்டமின் ”டி”க்காக மதிய வெய்யிலில் நிற்பது கட்டாயம் என்றவர்களிடம் மத்யானம் அரை மணி நேரம் வெய்யில் நிற்க அனுமதி கொடுக்கிற தேர்தல் அறிக்கை கொடுக்கிறவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும் என்று ஆரம்பித்து, அங்கே உட்கார்ந்து கொண்டு, கொஞ்சம் அலப்பரை செய்தது நான் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அதே போல கேள்வி பதில் செஷனில் எனக்கு இருந்த சில பிரச்சனைகளைப் பற்றி பல முறை போனில் ஷங்கர்ஜியிடமோ, அல்லது டாக்டர் ப்ரூனோவிடமோ கன்சல்ட் செய்து கொண்டிருந்தாலும், அதை பப்ளிக்காக கேட்டது என்னைப் போல பல பேருக்கு இம்மாதிரி பிரச்சனைகள் இருக்கலாம் அதை வெளிக் கொண்டு வர, ஆனால் அதை ஜஸ்ட்லைக்தட், நீங்க புல் பேலியோ இல்லை என்று ஜோக்காய் மறுத்தலிப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். அப்படிப்பட்ட பதில் அப்ப நடுவுல கொஞம் அங்க இங்க டயட்ட விட்டோம்னா இந்த மாதிரியான ப்ராப்ளம் எல்லாம் வருமான்னு சந்தேகம் நிறைய பேருக்கு வர வாய்பிருக்கிறது. பத்ரி கிட்டத்தட்ட பேலியோவை இக்குழுவினர் மதம் போல பாவிக்கிறார்கள் என்று ஆரம்பித்து, அதை பாஸிட்டிவாக பேசினார். ஷங்கர்ஜி வேறு தமிழில் மற்றவர்கள் சொன்னதையே ட்விட்டர் பாணியில் மீண்டும் சுருங்க தமிழிலேயே விளக்கியது எல்லாம் கொஞ்சம் மத விழாப் போல இருந்ததை மறுக்க முடியாது. 
@@@@@@@@@@@@@@@@@@@
வெற்றிவேல்
சசிகுமாரின் படம். தாரை தப்பட்டையில் கீழே விழுந்தவர் உடனடியாய் ஒரு படத்தை ஆரம்பித்து எழ முயற்சித்திருக்கிறார். சேஃப்பாக  அவருடய டெம்ப்ளேட் நட்பு, ஜாதி, வகையறாக்கள் கலந்த கதையில் தேவர்மகன் லவ் ட்ராக்கை உட்டாலக்கடி அடித்து, நண்பருக்கு கல்யாணம் செய்வதற்கு பதிலாய் சொந்த தம்பிக்கு கல்யாணம் செய்து வைக்க போராடுகிறார். ஏற்கனவே பார்த்து சலித்த பல படங்களின் கலவையாய் படம் இருப்பதால், அடுத்தடுத்த காட்சிகள் ப்ரெடிக்டபிளாய் இருப்பது சோகம். அதுவும் க்ளைமேக்ஸ் எல்லாம் ரொம்பவே நாடகத்தனம். எதையும் தெளிவாய் முடிவெடுக்கத் தெரியாத ஊர் தலைவராய் பிரபு. ஆங்காங்கே கர்ஜித்து பேசுவதைத் தவிர ந்த்திங் ஸ்பெஷல். மியா ஜார்ஜின் மலையாளம் க்யூட். சசி குமார் கல்யாணம் செய்து கொண்டு வந்துவுடன் அவளை மருமகளாய் ஏற்கும் காட்சி செம்ம.. மத்தபடி.. ஓ........க்க்க்க்க்க்க்கே.. படம். தான்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
புதிய வீடியோ
@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
பெங்களூர் தமிழ் நூலக அழிப்பு விவகாரம் ரியல் எஸ்டேட் மேட்டர் போல தெரிகிறது. அதற்கு தமிழழிப்பு என்று ஏற்றிவிட்டு மொழி பிரச்சனையாக்க வேண்டாம்

ம.ந.கூட்டணிக்கு ஆதரவு வாபஸ் -ஆதித்தமிழர் கட்சி - எங்கிருந்துடா வர்றீங்க.. புரியவேயில்லையே அவ்வ்வ்

அம்மாவே பரவாயில்லை ஆட்சிக்கு அப்புறம் தான் நான். அய்யா.. எல்லா தொதியிலேயும் நான்”னு சொல்றாரு‪#‎மம்மிஎபெக்ட்‬

all the best @RSeanRoldan different and cult songs.. in ‪#‎jokker‬

நேற்றிரவு கே.டிவியில் மகாநதி -என்ன ஒரு அருமையான நடிகர் பூர்ணம் விஸ்வநாதன். ஐ மிஸ் ஹிம்.

சின்னக்கல்லு பெத்த லாபம்னு ஆரம்பிச்ச எம்.ஜியெல்லாம் பெத்த கல்லு சின்ன லாபம் கூட லேதுன்னு ஆயிருச்சு.
@@@@@@@@@@@@@@@@@@
தரகர்கள் கையில் தமிழ் சினிமா என்கிற தலைப்பில் தமிழ் ஹிந்துவில் வெளிவந்த கட்டுரையில் என் பேட்டி.
எது சரியான வியாபாரம்?
இன்னொரு பக்கம் தமிழ் சினிமாவின் வியாபார முறையைச் சீர்திருத்தம் செய்யாமல் இடைத்தரகர்கள் உள்ளிட்ட எந்த ஆபத்தையும் சமாளிக்க முடியாது என்கிறார் ‘சினிமா வியாபாரம்’உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரும் இயக்குநருமான கேபிள் சங்கர்.
தற்போது திரையரங்க உரிமையாளர்கள் பெரிய படங்களை எம்.ஜி. கொடுத்து(மினிமம் கியாரண்டி) வாங்கி வெளியிடத் தயங்குவதற்கு காரணம்; எத்தனை பெரிய வெற்றிப்படமாக இருந்தாலும் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குமேல் ப்ளாட் ரேட்டில் டிக்கெட் விற்கமுடியாத சூழ்நிலை இருப்பதுதான். மினிமம் கியாரண்டி அடிப்படையில் பெரிய படத் தயாரிப்பாளர்கள் கேட்கும் முன்பணத்தை, பத்து நாட்கள் ப்ளாட் ரேட்டில் டிக்கெட் விற்றாலும் எடுக்கமுடியாது என்பதுதான் தற்போதைய வியாபார யதார்த்தம். ஆனால் தயாரிப்பாளர்கள் ப்ளாட் ரேட் என்ற மாயை பத்து நாட்களுக்குமேல் நீடிப்பதாக நினைத்துக்கொண்டு, படம் ரூ.50 கோடி வசூல் ரூ.100 கோடி வசூல் என்று ஊக அடிப்படையில் அறிக்கை வெளியீட்டு போலியாக வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். இதை உண்மை என்று நம்பும் பெரிய ஹீரோக்கள், தங்களுக்கு ரூ.50 கோடி நூறுகோடி மார்க்கெட் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு தங்களது சம்பளத்தை ரூ.25 கோடி ரூ.30 கோடி என்று நிர்ணயித்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு இத்தனை சம்பளம் கொடுக்க முடியாமல்போனதால்தான் பல தயாரிப்பாளர்கள் சினிமா தொழிலில் இருந்தே ஒதுங்கிக்கொண்டனர். இதனால்தான் ஹீரோக்களே சொந்தமாக படநிறுவனம் தொடங்கி, தங்கள் படங்களை பினாமி தயாரிப்பாளர்களைக் கொண்டு தயாரிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.” என்று கூறும் கேபிள் சங்கர், ப்ளைன் டேர்ம்ஸ் எனப்படும் விகிதாசார அடிப்படையில் படங்களை விநியோகம் செய்தால் திரையரங்கில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி விற்று ரசிகன் பாக்கெட்டிலிருந்து பணத்தை திருட வேண்டிய அவசியமே இருக்காது. இதை மல்டி ப்ளெக்ஸ் மற்றும் மால் திரையரங்குகள் சரியாக செய்து கொண்டிருக்கின்றன” என்கிறார்.
இந்தியா முழுவதும் ஒரே முறை
மல்டி ப்ளெக்ஸ் மற்றும் மால் தியேட்டர்கள் 120 ரூபாய்க்கு மேலே டிக்கெட் விலையை ஏற்றி விற்பதில்லை. அவர்களது லாபத்தின் முக்கிய பகுதி என்பது கேண்டீன் மற்றும் பார்க்கிங் வியாபாரத்தில்தான் அடங்கியிருக்கிறது. இதனால் பெரிய படங்களை அவர்கள் 50:50 என்ற விகிதச்சாரத்தில் திரையரங்கு உரிமையாளரும் பட உரிமையைப்பெற்றவரும் வசூலை பிரித்துக்கொள்ளும் முறையில் படங்களைத் திரையிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இரண்டு வாரங்கள் தாண்டி படங்கள் ஓட ஆரம்பித்தால், வசூலில் 30 சதவிகிதம் திரையரங்கிற்கும் 70 சதவிகிதம் பட உரிமையாளருக்கும் என்று கொடுத்து விடுகிறார்கள். மல்டி ப்ளெக்ஸ் திரையரங்குகளின் இந்த வியாபாரமுறை இந்தியா முழுவதும் ஓரே சீராக பின்பற்றப்படுகிறது.
எனவேதான் மல்டி ப்ளெக்ஸ் அல்லாத திரையரங்க உரிமையாளர்களும் இதேபோல் வசூலைப் பிரித்துக்கொள்ளும்(ப்ளைன் டேர்ம்ஸ் முறை) விகிதாச்சார முறையில் படங்களை எங்களுக்குக் கொடுப்பதில் என்ன பிரச்சினை என்று பெரிய படங்களின் தயாரிப்பாளர்களைப் பார்த்து கேட்கிறார்கள். மினிமம் கியாரண்டியில் படத்துக்கு பணத்தைக்கொடுத்து வாங்கும்போது போட்ட பணத்தை எடுக்க அதிக விலைக்கு டிக்கெட் விற்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரேநேரத்தில் தயாராகும் ஒரு படம் தமிழ்நாட்டில் தோல்வியும் ஆந்திராவில் வெற்றியும் அடைவதற்கு அங்கே ப்ளைன் டேர்ம்ஸ் வியாபார முறை நடைமுறையில் இருப்பதுதான் காரணம்” என்கிறார் கேபிள் சங்கர். சமீபத்தில் தமிழ், தெலுங்கில் வெளியான ‘தோழா’ படத்தின் ஆந்திர வியாபார வெற்றியும் இதைத்தான் எடுத்துக்காட்டுகிறது
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Why is being in the military like a blow-job? The closer you get to discharge, the better you feel
கேபிள் சங்கர்

Apr 18, 2016

கொத்து பரோட்டா - 18/04/16

தெறி படத்தை பாலிமர் டிவி ஓனர் சென்னையிலிருந்து திருட்டி விடியோ எடுக்கச் சொன்னதாக சொல்லி கோவையில் ஒரு தியேட்டரில் அவர்களது கேமராமேன் படமெடுத்ததாகவும், அதை ரசிகர்கள் கையும் களவுமாய் பிடித்து போலீஸ் வசம் ஒப்படைத்ததாகவும், இது போல பல வருடங்களாய் பாலிமர் சேனல் செய்து கொண்டிருப்பதாகவும், குற்றம் சாட்டினார் தாணு. அதை சன் நியூஸ் தொலைக்காட்சி ம்ட்டும் மறுக்கா.. மறுக்கா ஒளிபரப்பியது. வெளியே விசாரித்த போது அவர்கள் தியேட்டர்களில் அரசு அனுமதித்த விலைக்கு மேலே விற்றதை வீடியோ எடுக்க போனதால் நடந்த பிரச்சனை என்றும். பொய்க் குற்றச்சாட்டில் போலீஸார் வீடியோ கேமராவை செக் செய்த போது அதில் படம் ஏதும் இல்லையென்றும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை எல்லாம் மீடியாவும் பெரிது படுத்தவேயில்லை. ஆனால் சமீபகாலமாய் பாலிமர் டிவி வளர்ச்சி சன் டிவியின் கண்களை உறுத்த, அவர்களை மட்டம் தட்ட செய்த சூழ்ச்சியாகவே தெரிகிறது. இதற்கு பலி கடா தயாரிப்பாளர் தாணு. உடந்தை தயாரிப்பாளர் சங்கம். எவனாச்சும் கையில கேமரா வச்சிட்டு பப்ளிக்கா திருட்டு வீடியோ எடுப்பாங்களா யுவர் ஆனர்.? திரும்பத் திரும்பச் சொன்னா பொய் உண்மையாகிருமா.. இன்னுமா ஊரு உங்களை நம்புதுன்னு நினைக்கிறீங்க சன் நியூஸ்.
################################
தெறி படம் வெளியாவதில் விநியோகஸ்தர்களுக்கும் தாணுவுக்குமிடையே ஆன பிரச்சனை தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. யாரோ வேண்டுமென்றே விஜய்யின் படத்தை வெளியிட தடை விதிப்பதாக எல்லாம் பேச்சிருந்தது. ஆனால் இதற்கு முழு முதல் காரணம் தேர்தல். தேர்தல் காரணமாய் இப்போது இருக்கும் அரசு காபந்து அரசுதான். அதனால் அரசு நிர்ணையித்த விலைக்கு மேல் டிக்கெட் விற்று அது புகாரானால் தியேட்டரின் சி லைசென்ஸ் கேன்ஸல் செய்ய உரிமையுண்டு. அது இல்லாமல் அதிக விலைக்கு வாங்கினால் அதை வசூல் செய்ய 300-500 ரூபாய்க்க் விற்றால் தான் கவர் செய்ய முடியும். முதலில் எதிர்த்த கோவை மாவட்டத்தில் முன் பணம், எம்.ஜி. இல்லாமல் படம் கொடுக்க ஒத்துக் கொண்டனர். ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் தியேட்டருக்கு ஒரு கோடி கேட்க.. இங்கேயும் அதே பிரச்சனை கடைசி வரை எம்.ஜி. கொடுக்க மாட்டோம் என்றதால் காண்டாகிப் போன தாணு அவர்கள் உங்களுக்க் படம் கிடையாது என்று சொல்லிவிட்டார். அதனால் வெறும் மல்ட்டிப்ளெக்ஸில் மட்டும் படம் ஓடுகிறது. ஒரு விதத்தில் மக்களுக்கு நல்லது 120 ரூபாய்க்கு நல்ல தரமான திரையரங்குகளில் படம் பார்க்க வசதி. இது பற்றி ஒரு தெடர் எழுத எண்ணம். விரைவில்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டலிருந்து
கிரிக்கெட் மெல்லச் சாகும் - ஸ்டார் கிரிக்கெட்

Full of predictable scence, unorganised second half, without a strong antagonist the film fails flat though vijay carries the film on..

விஜய்.. மற்றும் விஜய்யினால் மட்டுமே தெறி

மல்டிப்ளெக்ஸ் தவிர மற்ற ஊர் தியேட்டர்களில் எவ்வளவு ரூபாய் விலை கொடுத்து தெறி டிக்கெட் வாங்குனீங்க? with ur theatre name and place


எம்.ஜி. கொடுக்க மாட்டோம் - தியேட்டர் அதிபர்கள்நீ ஒழுங்கா கணக்கு கொடுத்தா நான் ஏன் எம்.ஜி. கேட்கப் போறேன் - தயாரிப்பாளர்கள்.


வாரிசுகளுக்கு சீட்டு கொடுத்து வாரிசு அரசியலை ஆதரிக்கும் கட்சின்னு தன்னை நிருபிக்கிறதா? தி.மு.க

All problem seems to be solved. With minimum advance and plain terms..hope ‪#‎Theri‬

தி.மு.கவின் தேர்தல் அறிக்கை அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்குமா?

ஏனோ தெரியவில்லை பிரத்யுக்‌ஷா என்ற பெயர் வைத்திருக்கும் நடிகைகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்கிறார்கள்

தியேட்டருக்கு ஒரு கோடி எம்.ஜியாம்.. அப்ப டிக்கெட் ரேட்டு தாறு மாறுதான்.. ம்ஹும்.. ‪#‎அரசுவிலையில்டிக்கெட்‬?
@@@@@@@@@@@@@@@@@@@@@@
தப்பட்
தப்பட் என்றால் அறை என்று பொருள் அதாவது கன்னத்தில் அறைவது. இந்த பெயரில் ஒரு செயலி ஆங்கிலத்திலும், இந்தியிலும் செயல் பட்டு வந்தது. இப்போது அதை தமிழில் செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ் வர்ஷனின்ல் என்னுடய பங்களிப்பும் முக்கியமாய் இருக்கிறது.வானத்திற்கு கீழே உள்ள அத்துனை விஷயங்களைப் பற்றியும் கருத்து கூற விரும்பும் தமிழ் கூறும் நல்லுலகத்தை நம்பி ஆரம்பித்த இந்த செயலி.. தமிழ் புத்தாண்டு முதல் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பித்த நாளிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட டவுன்லோட் என்பது எந்த விதமான விளம்பரமில்லாமல் பெரும் சாதனையே. மேலும் உங்கள் ஆதரவினை செயலியை டவுன்லோட் செய்து உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் தெரிவிக்கலாமே.. 
@@@@@@@@@@@@@
Fan
அட்டகாச ட்ரைலர், ரெண்டு ஷாருக். அதில் ஒருவன் ஸ்டார்.. இன்னொருவன் அவரைப் போலவே இருக்கும் அவரது விசிறி. அவர்கள் இடையே நடக்கும் கதை. இந்திய திரையுலகில் விஷுவல் எஃபெக்ட்டின் அடுத்த கட்டத்தை இப்படத்தின் அடைந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒன்லைனாய் அட்டகாசமாய் இருந்தாலும் அதை அன்போல்ட் செய்யும் போது மிக..மிக. மெதுவாய்த்தான் ஆரம்பிக்கிறது. ஃபேன் ஷாருக் கவுரவின் கேரக்டரை சொல்லி முடிப்பதற்குள் கொஞ்சம் கொட்டாவி கூட வர ஆர்மபித்துவிட, வழக்கம் போல நாயகன் ஷாருக் தன் ரசிகனின் உணர்வை மதிக்காமல் அவர் தன் பால் கொண்ட ஆதர்சம் காரணமாகவே எதிர் ஹீரோவை மிரட்டி வீடியோ போடச் செய்தார் என்பதை மறந்து, அவரை தண்டித்து வீட்டிற்கு அனுப்புகிறார். மனதால் காயப்பட்ட கவுரவ். அவரைப் போலவே இருப்பதால் சில பல லாஜிக் ஓட்டைகளோடு ஹீரோ ஷாருக்கை எப்படி பழி வாங்குகிறான். தான் செய்த தவறை உணர்ந்து ஹீரோ ஷாருக் சாரி சொன்னாரா என்பதுதான் திரைக்கதை. படம் ஆர்மபித்திலிருந்து எந்த விதத்திலும் ஒட்டாத ஒரு தன்மை படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்பட்டதை மறுக்க முடியாது. பட்.. கவுரவாக வரும் ரசிகர் ஷாருக்கின் நடிப்பு அட்டகாசம். கண்களில் தெரியும் ஆதர்சம், தன் நாயகன் தன்னை இப்படி உதாசீனப்படுத்திவிட்டானே என்கிற கோபம், துக்கம், அவனை பழிவாங்க செய்யும் துடுக்குத்தனம் எல்லாமே அட்டகாசம். ஆர்யன் ஷாருக்கின் மனைவியிடம் அவர் பேசும் சீன் சான்ஸ்லெஸ். பட்..  லாஜிக் இல்லாத லண்டன் பயணம், சேஸ், தீவ் கொரியன் படத்தை சுட்டு ஹேப்பி நியூ இயர் எடுத்தாயிற்று, அதில் விடுபட்ட பழைய பில்டிங் சேஸ் பைட்டை அப்படியே இதில் பயன்படுத்தியிருக்கிறார்கள். மீடியோகெர் எக்ஸிக்யூஷன், ஒட்டாத திரைக்கதை , எல்லாம் சேர்ந்து ஒர் சுமாரான படமாய் ஃபேன்களுக்கு மட்டுமல்ல சினிமா ரசிகனுக்கும் அமைந்துவிட்டது வருத்தம்.
@@@@@@@@@@@@@@@@@
தெறி
விஜய், அட்லி, தாணு என பெரிய காம்பினேஷன்.  என்ன தான் சத்ரியனை எடுக்கவில்லை என்றாலும் காட்சிக்கு காட்சி ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. படம் முழுக்க ஏற்கனவே பார்த்த பாட்ஷா, முதல்வன், சத்ரியன் படங்களின் காட்சி தொகுப்பாய் இருப்பதால் அடுத்த காட்சி என்ன என்பது தெரிந்துவிட, சுவாரஸ்யம் குன்றி விடுவதை மறுக்க முடியாது.  ஜி.வி பிரகாஷின் 50வது படம்.  அதைத் தவிர நத்திங் ஸ்பெஷல். ஜித்து ஜில்லாடி பாடலில் விஜய்யை அவரே பாராட்டிப் பாடிக் கொள்வது கொஞ்சம் ஒட்டவேயில்லை வாய்ஸும் கூட.. எமி ஜாக்சனெல்லாம் படத்தில் எதற்கு என்பது டைரக்டருக்கே வெளிச்சம். இயக்குனர் மகேந்திரனுக்கு வேலையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் நான்கு காட்சிகள் உட்கார்ந்தவேஎ பேசுகிறார். ஒரு காட்சியில் கூளிங்கிளாஸ் போட்டு ஹைஸ்பீடில் நடக்கிறார். பட்.. அவரின் பாடி லேங்குவேஜை நேரில் பார்த்தவர்களுக்கு அவரின் நடிப்பு எப்படி என்பது நன்கு புரியும். வில்லனுக்கும் ஹீரோவுக்குமான் மோதலில் சுவாரஸ்யமோ விறுவிறுப்போ இல்லாததாலும், திரைக்கதையில் அடுத்து என்ன செய்வது புரியாமல் ஆவி விஜய் என்ற கதையெல்லாம் சொல்லி குழப்படிப்பது எல்லாம் தெலுங்கு சினிமா. குறையாய் பல விஷயங்கள் இருந்தாலும் ஜார்ஜின் ஒளிப்பதிவும் விஷுவல் ட்ரீட்.  விஜய் அழகாய் இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் நன்றாக நடிக்க வாய்ப்பிருந்தவற்றில் சிறப்பாகவே எமோட் செய்திருக்கிறார். படம் எங்கெல்லாம் தொங்குகிறதோ அங்கெல்லாம் அதை தன் தோளில் போட்டு முன்னெடுத்துச் செல்ல முயன்றிருக்கிறார். பட்.. ரெண்டு கை தட்டினாத்தான் சத்தம். இப்படம் விஜய் மற்றும் விஜய்யினால் மட்டுமே.. 
@@@@@@@@@@@@@@@@@
இந்த வார வீடியோ
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Three words to ruin a man's ego...?
 "Is it in?" 
கேபிள் சங்கர்

Apr 16, 2016

சாப்பாட்டுக்கடை- தட்டுக்கடை போளி ஸ்டால்

போளி என்றால் நிறைய பேருக்கு மேற்கு மாம்பலம் தான் நியாபகத்துக்கு வரும். போளிக்கான நிறைய கடைகள் அங்கே பிரபல்யம். அதே போல இந்த தட்டுக்கடையும். தி.நகர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து சப்வேயில் ஏறியவுடன் வலது பக்கத்தில் உள்ள கோயிலுக்கு முன் அமைந்த சிறு கடை. ஸ்வீட், மற்றும் கார வகைகள் காலையில் போட்டிருப்பார்கள். மாலை வேலையில் வடை, போண்டா, மசாலா போண்டா, தேங்காய் போளி, பருப்பு போளி, மசாலா போளி என வரிசைக் கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். சுடச்சுட போடப் போட காலியாகிக் கொண்டேயிருக்கும் கடை. டிமாண்டுக்கு ஏற்றார்ப் போல ஐயிட்டங்களை போட ஆர்மபிப்பார்கள் பெரும்பாலும் இரவு எட்டு  மணிக்குள் எல்லா போண்டா, போளி வகைகள் காலியாகிவிடும். எனக்கு இங்கே பிடித்தது தேங்காய் மற்றும் மசாலா போளி வகைகள். சைசில் சின்னதாய் இருந்தாலும், தேங்காயை வெல்ல பாகுடன் ஊற வைத்து அதை சூடான போளியாய் சாப்பிடும் போது தேங்காயும், வெல்லப்பாகின் ஜூஸும், நெய் வாசனையும் வாவ்வ்.. வாவ்வ்.. 

Apr 11, 2016

கொத்து பரோட்டா - 11/04/16

தேர்தல் பிரச்சாரம்  அபீஷியலாய் ஆரம்பிப்பதற்கு முன்பே டிவிப் பேட்டிகள் களை கட்ட தொடங்கிவிட்டது. நேரடியாய் ...த்தா.. ங்ம்மா என்றுதான் திட்டவில்லை. அப்படியே திட்டிவிட்டு, உடனடியாய் மன்னிப்பு கேட்பது பேஷனாகிவிட்டது. தேர்தலுக்கு தேர்தல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதும், முடிந்ததும் ஈஷிக் கொள்வதும் காமன் மேன் நமக்கு மறந்து போகாமல் இருக்கலாம். இவர்களுக்கு அடுத்த நாளே மறந்து போய்விடுகிறது. சரி திட்டியாச்சு, மன்னிப்பும் கேட்டாச்சு. எதிர் பக்கத்திலிருந்து கவுன்டர் வரவேயில்லையே என்ற கவலை வேறு. அதற்காக என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என் தொண்டர்களை ஏதும் செய்தால் சும்மா விடமாட்டேன் என்று நான் ரவுடி,.. நான் ரவுடி என்று கூவிக் கொண்டே போலீஸ் ஜீப்பில் ஏறும் வடிவேலு போல வைகோ இருப்பதை பார்க்கும் போது பாவமாய் இருக்கிறது.

Apr 4, 2016

கொத்து பரோட்டா -4/4/16

சென்ற வாரம்  நண்பர் சங்கருடன் அவரின் கர்நாடகா ஸ்டேட் வண்டியில் வளசரவாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த போது 80 அடி ரோட்டின் முனையில் போலீஸாரால் நிறுத்தப்பட்டோம். உள்ள லைட்ட போடுங்க, டிக்கிய திறங்க என இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துக் கொண்டே ஒரு பெண் எஸ்.ஐயும், ஒரு கான்ஸ்டபிள் மற்றும் சில பல போலீஸ் “உயர் அதிகாரிகள்” செக் செய்தனர். ஒரு மினி டிவியை வைத்துக் கொண்டு, ஒரு  அவர்களின் செயல்பாடுகளை படமெடுத்துக் கொண்டிருந்தார். எங்கள் வண்டியில் செக் செய்ய ஏதுமில்லாததால் அனுப்பிவிட்டனர். நீங்க கர்நாடகா ரெஜிஸ்ட்ரேஷன்ல வர்றதுனால தீவிர் செக்கிங்  என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து என் காரில் அதே வழியில் திரும்பப் போன போது, அங்கே ஈ காக்கா இல்லை. தேர்தலுக்காக, தீவிர செக்கிங் என டிவியில் போடுவதற்காகவும் தேர்தல் கமிஷனின் கண்களில் மண்ணைத் தூவ நடத்த ஏற்பாடு போல. விளங்கிரும்
@@@@@@@@@@@@@@@@@@@@@