கொத்து பரோட்டா - 18/04/16
தெறி படத்தை பாலிமர் டிவி ஓனர் சென்னையிலிருந்து திருட்டி விடியோ எடுக்கச் சொன்னதாக சொல்லி கோவையில் ஒரு தியேட்டரில் அவர்களது கேமராமேன் படமெடுத்ததாகவும், அதை ரசிகர்கள் கையும் களவுமாய் பிடித்து போலீஸ் வசம் ஒப்படைத்ததாகவும், இது போல பல வருடங்களாய் பாலிமர் சேனல் செய்து கொண்டிருப்பதாகவும், குற்றம் சாட்டினார் தாணு. அதை சன் நியூஸ் தொலைக்காட்சி ம்ட்டும் மறுக்கா.. மறுக்கா ஒளிபரப்பியது. வெளியே விசாரித்த போது அவர்கள் தியேட்டர்களில் அரசு அனுமதித்த விலைக்கு மேலே விற்றதை வீடியோ எடுக்க போனதால் நடந்த பிரச்சனை என்றும். பொய்க் குற்றச்சாட்டில் போலீஸார் வீடியோ கேமராவை செக் செய்த போது அதில் படம் ஏதும் இல்லையென்றும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை எல்லாம் மீடியாவும் பெரிது படுத்தவேயில்லை. ஆனால் சமீபகாலமாய் பாலிமர் டிவி வளர்ச்சி சன் டிவியின் கண்களை உறுத்த, அவர்களை மட்டம் தட்ட செய்த சூழ்ச்சியாகவே தெரிகிறது. இதற்கு பலி கடா தயாரிப்பாளர் தாணு. உடந்தை தயாரிப்பாளர் சங்கம். எவனாச்சும் கையில கேமரா வச்சிட்டு பப்ளிக்கா திருட்டு வீடியோ எடுப்பாங்களா யுவர் ஆனர்.? திரும்பத் திரும்பச் சொன்னா பொய் உண்மையாகிருமா.. இன்னுமா ஊரு உங்களை நம்புதுன்னு நினைக்கிறீங்க சன் நியூஸ்.
################################
தெறி படம் வெளியாவதில் விநியோகஸ்தர்களுக்கும் தாணுவுக்குமிடையே ஆன பிரச்சனை தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. யாரோ வேண்டுமென்றே விஜய்யின் படத்தை வெளியிட தடை விதிப்பதாக எல்லாம் பேச்சிருந்தது. ஆனால் இதற்கு முழு முதல் காரணம் தேர்தல். தேர்தல் காரணமாய் இப்போது இருக்கும் அரசு காபந்து அரசுதான். அதனால் அரசு நிர்ணையித்த விலைக்கு மேல் டிக்கெட் விற்று அது புகாரானால் தியேட்டரின் சி லைசென்ஸ் கேன்ஸல் செய்ய உரிமையுண்டு. அது இல்லாமல் அதிக விலைக்கு வாங்கினால் அதை வசூல் செய்ய 300-500 ரூபாய்க்க் விற்றால் தான் கவர் செய்ய முடியும். முதலில் எதிர்த்த கோவை மாவட்டத்தில் முன் பணம், எம்.ஜி. இல்லாமல் படம் கொடுக்க ஒத்துக் கொண்டனர். ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் தியேட்டருக்கு ஒரு கோடி கேட்க.. இங்கேயும் அதே பிரச்சனை கடைசி வரை எம்.ஜி. கொடுக்க மாட்டோம் என்றதால் காண்டாகிப் போன தாணு அவர்கள் உங்களுக்க் படம் கிடையாது என்று சொல்லிவிட்டார். அதனால் வெறும் மல்ட்டிப்ளெக்ஸில் மட்டும் படம் ஓடுகிறது. ஒரு விதத்தில் மக்களுக்கு நல்லது 120 ரூபாய்க்கு நல்ல தரமான திரையரங்குகளில் படம் பார்க்க வசதி. இது பற்றி ஒரு தெடர் எழுத எண்ணம். விரைவில்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டலிருந்து
கிரிக்கெட் மெல்லச் சாகும் - ஸ்டார் கிரிக்கெட்
Full of predictable scence, unorganised second half, without a strong antagonist the film fails flat though vijay carries the film on..
விஜய்.. மற்றும் விஜய்யினால் மட்டுமே தெறி
மல்டிப்ளெக்ஸ் தவிர மற்ற ஊர் தியேட்டர்களில் எவ்வளவு ரூபாய் விலை கொடுத்து தெறி டிக்கெட் வாங்குனீங்க? with ur theatre name and place
எம்.ஜி. கொடுக்க மாட்டோம் - தியேட்டர் அதிபர்கள்
நீ ஒழுங்கா கணக்கு கொடுத்தா நான் ஏன் எம்.ஜி. கேட்கப் போறேன் - தயாரிப்பாளர்கள்.
வாரிசுகளுக்கு சீட்டு கொடுத்து வாரிசு அரசியலை ஆதரிக்கும் கட்சின்னு தன்னை நிருபிக்கிறதா? தி.மு.க
All problem seems to be solved. With minimum advance and plain terms..hope #Theri
தி.மு.கவின் தேர்தல் அறிக்கை அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்குமா?
ஏனோ தெரியவில்லை பிரத்யுக்ஷா என்ற பெயர் வைத்திருக்கும் நடிகைகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்கிறார்கள்
தியேட்டருக்கு ஒரு கோடி எம்.ஜியாம்.. அப்ப டிக்கெட் ரேட்டு தாறு மாறுதான்.. ம்ஹும்.. #அரசுவிலையில்டிக்கெட்?
@@@@@@@@@@@@@@@@@@@@@@
தப்பட்
தப்பட் என்றால் அறை என்று பொருள் அதாவது கன்னத்தில் அறைவது. இந்த பெயரில் ஒரு செயலி ஆங்கிலத்திலும், இந்தியிலும் செயல் பட்டு வந்தது. இப்போது அதை தமிழில் செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ் வர்ஷனின்ல் என்னுடய பங்களிப்பும் முக்கியமாய் இருக்கிறது.வானத்திற்கு கீழே உள்ள அத்துனை விஷயங்களைப் பற்றியும் கருத்து கூற விரும்பும் தமிழ் கூறும் நல்லுலகத்தை நம்பி ஆரம்பித்த இந்த செயலி.. தமிழ் புத்தாண்டு முதல் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பித்த நாளிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட டவுன்லோட் என்பது எந்த விதமான விளம்பரமில்லாமல் பெரும் சாதனையே. மேலும் உங்கள் ஆதரவினை செயலியை டவுன்லோட் செய்து உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் தெரிவிக்கலாமே..
@@@@@@@@@@@@@
Fan
அட்டகாச ட்ரைலர், ரெண்டு ஷாருக். அதில் ஒருவன் ஸ்டார்.. இன்னொருவன் அவரைப் போலவே இருக்கும் அவரது விசிறி. அவர்கள் இடையே நடக்கும் கதை. இந்திய திரையுலகில் விஷுவல் எஃபெக்ட்டின் அடுத்த கட்டத்தை இப்படத்தின் அடைந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒன்லைனாய் அட்டகாசமாய் இருந்தாலும் அதை அன்போல்ட் செய்யும் போது மிக..மிக. மெதுவாய்த்தான் ஆரம்பிக்கிறது. ஃபேன் ஷாருக் கவுரவின் கேரக்டரை சொல்லி முடிப்பதற்குள் கொஞ்சம் கொட்டாவி கூட வர ஆர்மபித்துவிட, வழக்கம் போல நாயகன் ஷாருக் தன் ரசிகனின் உணர்வை மதிக்காமல் அவர் தன் பால் கொண்ட ஆதர்சம் காரணமாகவே எதிர் ஹீரோவை மிரட்டி வீடியோ போடச் செய்தார் என்பதை மறந்து, அவரை தண்டித்து வீட்டிற்கு அனுப்புகிறார். மனதால் காயப்பட்ட கவுரவ். அவரைப் போலவே இருப்பதால் சில பல லாஜிக் ஓட்டைகளோடு ஹீரோ ஷாருக்கை எப்படி பழி வாங்குகிறான். தான் செய்த தவறை உணர்ந்து ஹீரோ ஷாருக் சாரி சொன்னாரா என்பதுதான் திரைக்கதை. படம் ஆர்மபித்திலிருந்து எந்த விதத்திலும் ஒட்டாத ஒரு தன்மை படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்பட்டதை மறுக்க முடியாது. பட்.. கவுரவாக வரும் ரசிகர் ஷாருக்கின் நடிப்பு அட்டகாசம். கண்களில் தெரியும் ஆதர்சம், தன் நாயகன் தன்னை இப்படி உதாசீனப்படுத்திவிட்டானே என்கிற கோபம், துக்கம், அவனை பழிவாங்க செய்யும் துடுக்குத்தனம் எல்லாமே அட்டகாசம். ஆர்யன் ஷாருக்கின் மனைவியிடம் அவர் பேசும் சீன் சான்ஸ்லெஸ். பட்.. லாஜிக் இல்லாத லண்டன் பயணம், சேஸ், தீவ் கொரியன் படத்தை சுட்டு ஹேப்பி நியூ இயர் எடுத்தாயிற்று, அதில் விடுபட்ட பழைய பில்டிங் சேஸ் பைட்டை அப்படியே இதில் பயன்படுத்தியிருக்கிறார்கள். மீடியோகெர் எக்ஸிக்யூஷன், ஒட்டாத திரைக்கதை , எல்லாம் சேர்ந்து ஒர் சுமாரான படமாய் ஃபேன்களுக்கு மட்டுமல்ல சினிமா ரசிகனுக்கும் அமைந்துவிட்டது வருத்தம்.
@@@@@@@@@@@@@@@@@
தெறி
விஜய், அட்லி, தாணு என பெரிய காம்பினேஷன். என்ன தான் சத்ரியனை எடுக்கவில்லை என்றாலும் காட்சிக்கு காட்சி ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. படம் முழுக்க ஏற்கனவே பார்த்த பாட்ஷா, முதல்வன், சத்ரியன் படங்களின் காட்சி தொகுப்பாய் இருப்பதால் அடுத்த காட்சி என்ன என்பது தெரிந்துவிட, சுவாரஸ்யம் குன்றி விடுவதை மறுக்க முடியாது. ஜி.வி பிரகாஷின் 50வது படம். அதைத் தவிர நத்திங் ஸ்பெஷல். ஜித்து ஜில்லாடி பாடலில் விஜய்யை அவரே பாராட்டிப் பாடிக் கொள்வது கொஞ்சம் ஒட்டவேயில்லை வாய்ஸும் கூட.. எமி ஜாக்சனெல்லாம் படத்தில் எதற்கு என்பது டைரக்டருக்கே வெளிச்சம். இயக்குனர் மகேந்திரனுக்கு வேலையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் நான்கு காட்சிகள் உட்கார்ந்தவேஎ பேசுகிறார். ஒரு காட்சியில் கூளிங்கிளாஸ் போட்டு ஹைஸ்பீடில் நடக்கிறார். பட்.. அவரின் பாடி லேங்குவேஜை நேரில் பார்த்தவர்களுக்கு அவரின் நடிப்பு எப்படி என்பது நன்கு புரியும். வில்லனுக்கும் ஹீரோவுக்குமான் மோதலில் சுவாரஸ்யமோ விறுவிறுப்போ இல்லாததாலும், திரைக்கதையில் அடுத்து என்ன செய்வது புரியாமல் ஆவி விஜய் என்ற கதையெல்லாம் சொல்லி குழப்படிப்பது எல்லாம் தெலுங்கு சினிமா. குறையாய் பல விஷயங்கள் இருந்தாலும் ஜார்ஜின் ஒளிப்பதிவும் விஷுவல் ட்ரீட். விஜய் அழகாய் இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் நன்றாக நடிக்க வாய்ப்பிருந்தவற்றில் சிறப்பாகவே எமோட் செய்திருக்கிறார். படம் எங்கெல்லாம் தொங்குகிறதோ அங்கெல்லாம் அதை தன் தோளில் போட்டு முன்னெடுத்துச் செல்ல முயன்றிருக்கிறார். பட்.. ரெண்டு கை தட்டினாத்தான் சத்தம். இப்படம் விஜய் மற்றும் விஜய்யினால் மட்டுமே..
@@@@@@@@@@@@@@@@@
இந்த வார வீடியோ
இந்த வார வீடியோ
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Three words to ruin a man's ego...?
"Is it in?"
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments