Thottal Thodarum

Apr 4, 2016

கொத்து பரோட்டா -4/4/16

சென்ற வாரம்  நண்பர் சங்கருடன் அவரின் கர்நாடகா ஸ்டேட் வண்டியில் வளசரவாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த போது 80 அடி ரோட்டின் முனையில் போலீஸாரால் நிறுத்தப்பட்டோம். உள்ள லைட்ட போடுங்க, டிக்கிய திறங்க என இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துக் கொண்டே ஒரு பெண் எஸ்.ஐயும், ஒரு கான்ஸ்டபிள் மற்றும் சில பல போலீஸ் “உயர் அதிகாரிகள்” செக் செய்தனர். ஒரு மினி டிவியை வைத்துக் கொண்டு, ஒரு  அவர்களின் செயல்பாடுகளை படமெடுத்துக் கொண்டிருந்தார். எங்கள் வண்டியில் செக் செய்ய ஏதுமில்லாததால் அனுப்பிவிட்டனர். நீங்க கர்நாடகா ரெஜிஸ்ட்ரேஷன்ல வர்றதுனால தீவிர் செக்கிங்  என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து என் காரில் அதே வழியில் திரும்பப் போன போது, அங்கே ஈ காக்கா இல்லை. தேர்தலுக்காக, தீவிர செக்கிங் என டிவியில் போடுவதற்காகவும் தேர்தல் கமிஷனின் கண்களில் மண்ணைத் தூவ நடத்த ஏற்பாடு போல. விளங்கிரும்
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
இந்த மாஜிஸ்ட்ரேட்டை சஸ்பெண்ட் பண்ணா மாதிரி கணக்கு வாத்தி குமாரசாமிய எப்ப தண்டிப்பாங்க?

Neat and with less melodrama..excellent performance and cinematography. Soothing background score.‪#‎KiAndKa‬

cute nice cameo by @SrBachchan and Mrs. Bachchan. ‪#‎Kaandki‬

By naming as a franchies dosent need to be as good as original

ஆளே இல்லாத மலை, காட்டுல 4ஜி இருந்து என்ன பிரயோஜனம். என் வீட்டு ஹால்ல சிக்னல் இல்ல.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டார்லிங் 2
இன்னொரு பேய் படம். படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில் வளரும் நடிகர்களாய் இருந்தவர்கள் எல்லாம் இப்போது கொஞ்சம் முகம் தெரிந்தவர்களாய் போனதன் காரணமாய் ஸ்டூடியோk க்ரீன் கைங்கர்யத்தில் வெளியாகியிருக்கிற படம். டார்லிங் என்ற பெயர் காரணத்தால் ஓரளவு கூட்டத்தை கூட்ட முடிந்த அளவிற்கு, வந்த கூட்டத்தை தக்க வைக்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். வழக்கம் போல மிக சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட, ஒரே ஒரு பங்களாவில் எடுக்கப்பட்ட படம். வெரி புவர் டெக்னிக்கல் ஒர்க். எல்லா வகைகளிலும், கதை சொன்னதிலும் சீரியஸாகவும் இல்லாமல், காமெடியாகவும் இல்லாமல் போனதில் ஆவி வந்ததோ இல்லையோ கொட்டாவி வந்தது தான் மிச்சம். க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் என்று நினைத்து வைத்திருந்தாலும், அப்படியான டிவிஸ்டுக்கு அழுத்தமான ப்ளாஷ் பேக் வேண்டுமென்ற முனைப்பு கூட இல்லாமல் திரைக்கதை போவது பெரிய மைனஸ். ஹிட்டான படத்தின் டைட்டிலை வைத்தால் ஓடிரும்னு நினைச்சிருந்தாங்கன்ன்னா.. ம்ம்ஹும். நாம தான் தியேட்டர்லேர்ந்து ஒடி வரணும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Ki And Ka
ஒரு பெரிய கார்பரேட் கம்பெனியில் வேலை பார்க்கும் கியா, ஒரு விமான பயணத்தில் மிகப் பெரிய கார்பரேட் கம்பெனியின் ஒரே வாரிசான கபீரை சந்திக்கிறாள். அந்த சந்திப்பு அவர்களிடையே நெருக்கத்தை உண்டு பண்ணுகிறது. அதற்கு காரணம் கபீரின் கேரக்டர். வழக்கமான ஒர் ஆண் போலில்லாமல், ஒரு ஹோம் மேக்கராய் தன் அம்மாவைப் போல  நீ வேலைக்கு போ.. நான் வீட்டை பார்த்துக்கறேன்னு என்ற அவனது கருத்தை இருவரும் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை. பெரிய ட்விஸ்ட் அண்ட் டர்ன் இல்லாமல், மிக சுவாரஸ்யமாய் போகிறது படமும், அதன் கதையும். மேல் தட்டு வர்க குடும்பமாதலால் அவர்களின் உணர்வெழுச்சி காட்சிகளும், மிகவும் மேலோட்டம்மாய் இருப்பது மெலோ ட்ராமா உச்சத்தை விரும்புகிறவர்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும்.  கரீனாவின் அழகான பர்பாமென்ஸ்.. அவரது கேரக்டர் போலவே ஸ்ட்ராங்க இருக்க, அர்ஜுனின் கேரக்டரில் மட்டுமே கொஞ்சம் குழப்பம். ஒர் ஆணின் ஈகோ இல்லாமல் கிட்டத்தட்ட ஒர் படித்த மிடில் க்ளாஸ் பெண்ணின் மனநிலையில் உலவுவதும், எங்கெல்லாம் கோபப்படுவான் என்று நினைக்கும் போதெல்லாம் மிகவும் சப்ட்யூட்டாக மாறி வளைய வருவது ஏமாற்றம். பிசி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் கொஞ்சம் ஓல்ட் ஸ்கூல் ஸூத்திங் பின்னணியிசை என டெக்க்னிக்கலாய் ஜமாய்த்திருக்கிறார் பால்கி. பட்.. ரொம்பவும் ட்ராமா பண்ண வேண்டிய களம். அதை செய்யாமல் ப்ளாட்டாக கொடுத்திருப்பது கொஞ்சம் ஏமாற்றம் தரக்கூடியதாய்க் கூட இருக்கலாம். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
நாரதன்
படம் ஆரம்பித்த ஷாட்டிலிருந்து முடியும் வரை ஹீரோ நகுல் யாரையாவது கை பிடித்து ஓடிக் கொண்டேயிருக்கிறார். அவரைத் துறத்தும் மாமா ராதாரவி வாயாலேயே துரத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் படம் தான் இருந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்கிறது. வசனத்தால் நிமிர்ந்த படங்கள் வெளியான மாதத்தில் வசனத்தாலேயே நம்மை டார்சர் செய்த படமென்றால் அப்புகழ் நாரதனுக்கு சேரும். பாவம். நகுல், தன்னால் முடிந்தவரை உழைத்திருக்கிறார். என்ன வேலைக்காகாத இடமாகிவிட்டது. க்ளைமேக்ஸில் அம்னீஷியா பேஷண்ட் கதாநாயகியின் நினைவு திரும்புமிடத்தில் மொத்த தியேட்டரும் கைதட்டி கொண்டாடிய இடம் புதுமை.
@@@@@@@@@@@@@@@@@
குறும்படம். -சில்ர இல்லப்பா
ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை தேடியலையும் ஒர் மாணவனின் கதை தான். ஆங்காங்கே காமெடிக்காக கொஞ்சம் இயல்பை மீறி இருந்தாலும், லேசாய் புன்னகைக்க வைத்திருக்கிறார்கள். முடிவில் ஒரு சிறிய கருத்தும். டெக்னிக்கலாய், ஒளிப்பதிவாகட்டும், பின்னணியிசையாகட்டும், எடிட்டிங்காகட்டும் பர்பெக்ட். அதே போல நடித்த அத்துனை பேர்களின் நடிப்பும் செம்ம இயல்பு. எக்ஸப்ட் சில்லரை இல்லைன்னு சொல்கிறவர்களைத் தவிர, டிவிடிக் கடையில் குண்டு பையன் கிஷோர் கோழி மேட்டர் இருக்கான்னு கேட்குமிடம்.. ஹாஹா.. சிரித்து மாளலை..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
"Women need a reason to have sex. Men just need a place." 
Billy Crystal 
கேபிள் சங்கர்

Post a Comment

No comments: