Posts

Showing posts with the label 2010 tamil cinema

தமிழ் சினிமா-2010-2

Image
ஜூலை அம்பாசமுத்திரம் அம்பானி, மதராசபட்டினம், அனந்தபுரத்து வீடு, தில்லாலங்கடி, மற்றும் சில சின்ன படங்கள் வெளியாயின. சன் தொடுப்பில்லாம வெளியான கருணாஸின் அம்பாசமுத்திரம் அம்பானி அவரது  சொந்தப்படம். படம் சுமாராக இருந்தாலும் பெரியதாய் செல்ப் எடுக்கவில்லை. ஆர்யா, விஜய் கூட்டணியில் வெளிவந்த மதராச பட்டினம் தான் இம்மாதத்திய பெரிய ஹிட் என்று சொல்ல வேண்டும், படத்தின் கதாநாயகிக்காகவே நிறைய பேர் படம் பார்த்தார்கள். டைட்டானிக்கின் உல்டா என்று சொல்லப்ப்ட்டாலும் சுவாரஸ்யமாக கதை சொல்லப்பட்டதால் வெற்றி நிச்சயமானது. மீண்டும் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ஆனந்தபுரத்துவிடு ஒரு பெரிய தோல்வியை சந்தித்தது. வித்யாசமான பேய் படமாய் அமைந்திருந்தாலும் வெகு ஜன ரசிகர்களை சென்றடையாதது சோகமே. சன் டிவியில் மட்டுமே மாபெரும் வெற்றி என்று சொல்லிக் கொண்ட இந்த வருடத்தின் அடுத்த தோல்வி படம் தில்லாலங்கடி. மதராச பட்டினம் சுமார் பதினான்கு கோடியில் தயாரிக்கப்பட்டு சுமார் 20 கோடி வரை வசூல் செய்ததாய் சொல்லப்படுகிறது. ஹிட்: மதராசபட்டிணம் @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ ஆகஸ்ட் பாண...