கொத்து பரோட்டா - 10/12/12
நே ற்று முன் தினம் காந்தி மக்கள் இயக்கம் நடத்திய பாரதி விழாவுக்கு அதன் அமைப்பாளர்கள் அழைத்திருந்தார்கள். கவியரங்கமும், பட்டிமன்றமும் நடந்தேறியது. சனி மாலையில் பாரதி விழாவிற்காக அரங்கு நிறைந்திருந்தது ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. கடைசியாய் தமிழருவி மணியன் பேசினார். இவரது பேச்சை முதல் முறையாய் கேட்கிறேன். நிஜமாகவே தடதடவென அருவி போல நடு மண்டையில் தடேலென்று விழுந்து பொறிகலங்க வைக்கும் பேச்சு. பேச்சின் நடுவே கூட்டத்தில் யாரோ சலசலவென பேச, அதே வேகத்தில் ”பேசறவங்க வெளிய போயிருங்க” என்று சொல்லிவிட்டு தடையில்லாமல் மீண்டும் பேச ஆரம்பித்தார். வந்தேமாதரம் என்போம் என்கிற பாடலுக்கு அவர் கொடுத்த விளக்கமும், அவரது பாடி லேங்குவேஜும் அட்டகாசம். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பேச்சு. @@@@@@@@@@@@@@@@@