Posts

Showing posts with the label என்றென்றும் புன்னகை

கொத்து பரோட்டா -23/12/13 - சினிமா ஸ்பெஷல்- தலைமுறைகள் - பிரியாணி - என்றென்றும் புன்னகை - Dhoom 3

Image
தலைமுறைகள் மூத்த கலைஞர் பாலு மகேந்திராவின் புதிய படைப்பு. இது நாள் வரை ஃபிலிமில் படமெடுத்துக் கொண்டிருந்தவர் கால மாற்றத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு டிஜிட்டலில் களமிறங்கியிருக்கிறார். புதிய பரிமாணமாய் நடிப்பு. ஒளிப்பதிவில் தனக்கென ஒரு பாணியை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் புதிய டெக்னாலஜியில் அவனவன் செல் போன் கேமராவில் எல்லாம் படமெடுத்துவிட்டு, அதை சினிமாஸ்கோபாக மாற்றி திரையெங்கும் க்ரெயின்ஸோடு வெளியிடும் வேளையில், இயல்பான வெளிச்சத்தில் சும்மா நச்சென “35 எம்.எம்”மில் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் ப்ரேம்களோடு படமாக்கியிருக்கிறார். இருந்தாலும் வீடியோ ஃபீலை மறைக்க முடியாததன் காரணம் டெக்னாலஜியா? அல்லது படத்தின் கதையா என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இளையராஜா தன் பழைய ஆர்கேவிலிருந்து நாலைந்து விஷயங்களை எடுத்து விட்டிருக்கிறார். இதை ஒரு அழகிய குறும்படமாய் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். @@@@@@@@@@@@@@@@@@@@