Thottal Thodarum

Dec 23, 2013

கொத்து பரோட்டா -23/12/13 - சினிமா ஸ்பெஷல்- தலைமுறைகள் - பிரியாணி - என்றென்றும் புன்னகை - Dhoom 3

தலைமுறைகள்
மூத்த கலைஞர் பாலு மகேந்திராவின் புதிய படைப்பு. இது நாள் வரை ஃபிலிமில் படமெடுத்துக் கொண்டிருந்தவர் கால மாற்றத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு டிஜிட்டலில் களமிறங்கியிருக்கிறார். புதிய பரிமாணமாய் நடிப்பு. ஒளிப்பதிவில் தனக்கென ஒரு பாணியை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் புதிய டெக்னாலஜியில் அவனவன் செல் போன் கேமராவில் எல்லாம் படமெடுத்துவிட்டு, அதை சினிமாஸ்கோபாக மாற்றி திரையெங்கும் க்ரெயின்ஸோடு வெளியிடும் வேளையில், இயல்பான வெளிச்சத்தில் சும்மா நச்சென “35 எம்.எம்”மில் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் ப்ரேம்களோடு படமாக்கியிருக்கிறார். இருந்தாலும் வீடியோ ஃபீலை மறைக்க முடியாததன் காரணம் டெக்னாலஜியா? அல்லது படத்தின் கதையா என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இளையராஜா தன் பழைய ஆர்கேவிலிருந்து நாலைந்து விஷயங்களை எடுத்து விட்டிருக்கிறார். இதை ஒரு அழகிய குறும்படமாய் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@பிரியாணி
வெங்கட் பிரபுவின் வழக்கமான டயட். அதுவும் மங்காத்தாவுக்கு அப்புறமெனும் போது அதே மாதிரியான உட்டாலக்கடி மசாலாத்தனமும், இவர் படத்தில் மட்டும் பிரகாசிக்கும் ப்ரேம்ஜியை மட்டுமே வைத்து கொண்டு, லாஜிக் போன்ற மசாலா வஸ்துக்கள் இல்லாமல் பிரியாணி தயாரித்திருக்கிறார். அஜித் போன்ற பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்படும் போது கேட்க முடியாத லாஜிக் கேள்விகளை கார்த்தி போன்ற நடிகர்கள் நடிக்கும் போது கேட்க விழைவதை தடுக்க முடியவில்லை. ஸ்டார் பவர். படம் நெடுக இல்லாவிட்டாலும் ஆங்காங்கே ப்ரேம்ஜி சிரிக்க வைக்கிறார். முக்கியமாய் டிவி ஸ்டேஷனில் புலி வேஷம் போட்டு ஆடும் காட்சி. முதல் பாதியில் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தவர்களுக்கு அடர்த்தியான சம்பங்களின் தொகுப்பாலும், ப்ரவீன் ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கினாலும் சுவாரஸ்யமாகிவிடுகிறது பிரியாணி. எனக்கென்னவோ கார்த்தி என்றென்றும் புன்னகை போன்ற ஒர் ஃபீல் குட் படத்தில் நடித்தால் விட்ட இடத்தை பிடித்துவிடலாமென்று தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@
என்றென்றும் புன்னகை.
ஜூவா, வினய், சந்தானம், திரிஷா என்று ஒர் நடிக கூட்டணி. இன்னொரு பக்கம் டெக்னிக்கலாய் மதி, ஹாரிஸ், ப்ரவீன் ஸ்ரீகாந்தின் என்றொரு கூட்டணி. செலவைப் பார்க்காத நல்ல தயாரிப்பு. என எல்லாமே நன்றாக அமைந்த ஒர் டீம். முதல் பாதியை சந்தானம் காப்பாற்றுகிறார். ஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா, வினய் சந்தானம் ஆகியோரின் நடிப்பு கச்சிதம்.கதையாய் செட்டிலாகவே முதல் பாதியில் நெடு நேரம் எடுத்த திரைக்கதைதான் மைனஸ். இசை ஹிட் பாடல்களையே மீண்டும் மீண்டும் வேற பாடல் வரிகளைப் போட்டு  ஹிட்டாக்கும் முறை வழக்கொழிந்து வருவதை ஹாரிஸிடம் யாராவது சொன்னால் பரவாயில்லை. மதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய ப்ளஸ். வெளிநாட்டுக் காட்சிகளாகட்டும், வீட்டின் பால்கனியில் ஜீவா முனையில் உட்கார்ந்து கொண்டு பேசும் காட்சியிலாகட்டும், க்ளீன். மீண்டும் ஒர் ஃபீல் குட் படம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தூம் 3
இதற்கு முன்னதாக வந்த பார்ட்டுகளில் என்ன செய்தார்களோ அதை இன்னும் கொஞ்சம் பெரிசாக செய்திருக்கிறார்கள். பேங்காரர்களின் இம்சையால் தன் தந்தையை இழந்த மகன்களின் பழிவாங்கல்தான் கதை. அமீர் என்பதால் கொஞ்சம் மெனக்கெட்டு ஃப்ரிஸ்டீஜை எல்லாம் உட்டாலக்கடி அடித்து மிரட்டியிருக்கிறார்கள். சின்ன பசங்களுக்கு மிகவும் பிடிக்கும் படியாய் அமீர் ஓட்டும் பைக், ரோட்டில் ஓடுகிறது, தண்ணியில் ஓடுகிறது, வானத்தில் பறக்கிறது. டெக்னிக்கலாய் செம மிரட்டல். காத்தரீனா கைஃப் அழகு. அதிலும் ஆடிசனுக்கு அவர் ஆடும் ஆட்டம் அட அட அட.. ம்ஹும். என்னா ஒரு பர்பாமென்ஸ். டெக்னிக்கலாய் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையிலான மேக்கிங். அருமையான ஸ்டார் காஸ்ட் எல்லாம் இருந்தும் அமீர்கானை மட்டுமே நம்பி முழுக்க முழுக்க களமிறங்கியிருக்கிறார்கள். தூம் சீரியஸ் என்பதால் அசுரத்தனமான ஆக்‌ஷன் காட்சிகள் வேண்டுமென்பதற்காக, பைக் சேஸ்.. சேஸ், கார் சேஸ், சேஸ்.. என வெறும் சேஸ் காட்சிகளுக்கு முக்யத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதி முழுவதும் அமீர்கானின் நடிப்புக்கு கொடுக்கும் விதமான கதையை அமைத்து, அமீர் ஒர் திங்கிங் ஆக்டர் என்பதால் அவருக்கான ஸ்கோப் கொடுத்து கதை அமைத்ததில் பாதி படம் சீரியஸாகவும், பாதி படம் ஒரே ஆட்டமும் பாட்டமுமாய் போகிறது. பெட்டிக் கடையில் தேன் முட்டாய் திருடுவதற்கு கூட பெரிய ப்ளான் செய்து திருட வேண்டிய காலகட்டத்தில் நான்கு முறை ஒரு பேங்கை திவாலாக்கும் அளவிற்கு தொடர்ந்து கொள்ளையடிக்கும் அமீர் எப்படி கொள்ளையடித்தார்? அதற்கான ப்ளான் எப்படி? என்றெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் முதுகில் லேப்டாப் பேக்கை மாட்டிக் கொண்டு, கொள்ளையடித்த பணத்தையெல்லாம், பறக்கவிட்டு நடு ரோட்டில் முகம் தெரிய ஓடுவது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எவ்வளவோ சிறு முதலீட்டு படங்கள் தொடர்ந்து வெளிவந்து யாராலும் பார்க்கப்படாமல் பெட்டிக்குள் முடங்கிய நிகழ்வுகள் உண்டிங்கே என்றாலும், இந்த படம் பற்றி நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாய்த்தான் இருக்கும். ”தா” என்கிற பெயரில் ஓரளவுக்கு நல்ல பப்ளிசிட்டியுடன் தான் வெளியிட்டார்கள். பத்திரிக்கையாளர்கள் கூட அட நல்ல படமென சொல்ல, பாவம் ரிலீசான நேரத்தில் அடை மழை காரணமாய் யாருக்கும் தெரியாத படமாகிவிட்டது. இப்படத்தின் ஹீரோ சமீபத்தில் ஒர் படத்தில் வில்லனாய் வந்ததாய் ஞாபகம். யாருக்கும் தெரியாமல் வெளிவந்து போன இப்படத்தை நிறைய முறை ரீ ரிலீஸ் செய்ய முயன்றார்கள். இப்போதும் யாராவது கை கொடுக்கலாம். படத்தைப் பற்றி படிக்கhttp://www.cablesankaronline.com/2010/12/blog-post.html
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
ஃபேம் தியேட்டர் க்ரவுண்ட் ப்ளோரில் ஒர் இடத்தில் சிடிக்கடைக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். இவங்க தான் பைரஸியை ஒழிக்கப் போறாங்களாம். ம்ஹும்
 • பிரியாணி ஃபர்ஸ்ட் ஹாஃப் புளியன் சோறு. செகண்ட் ஹாஃப் குஸ்கா.
  • Good production value, apt performance from artistes, excellent cinematography & Editing, fails in front of lethargic screenplay andmusic#EP
   • தவறுகளை உதவியாளர்கள் எப்படி சுட்டிக்காட்டாமல் போவது தவறோ அது போல விமர்சகர்கள் பெயர் பெற்ற கலைஞன் என்பதற்காக விமர்சனம் செய்யாமலிருப்பது.
    • கேளடி கண்மணி போன்ற படங்களுக்கு இன்றைய காலகட்டத்தில் அப்போது கிடைத்த வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகமே

    • தொப்பியில்லாத பாலு மகேந்திராவை பார்க்கும் போது கீரீடமில்லாத அரசன் தான் ஞாபகத்துக்கு வருகிறான் #Thalaimuraigal 

    • ராகுல் காந்திய பிரதமர் வேட்பாளர்னு அறிவிச்சா காங்கிரஸ் செயிக்கும்னு யாரு இவனுங்க கிட்ட சொன்னாங்க..? #டவுட்டு

    • அவனவன் தக்குணூண்டு கேமராவில் படமெடுத்துவிட்டு, ஸ்கோப்பில் பிக்ஸலோடு காட்ட ஆசைப்படும் வேலையில் நச்சுன்னு 35mm. #Thalaimuraigal

      • ஆளுமை -ஆணவம் ரெண்டும் எழுத்தல ஒரு வித்தியாசம்தான் ஆனால் நிஜத்தில ஆயிரம் இருக்கு

      • நாங்க எப்ப கூட்டணின்னு சொன்னோம்?#ஞான தேசிகன். இவரு காங்கிரஸுல என்னவா இருக்காரு. டவுட்டு

        • @@@@@@@@@@@@@@@@@@@@@@
        • குறும்படம்
        • ந்ண்பர் அரவிந்தின் முதல் முயற்சி. சுவாரஸ்யமான நாட். டீசெண்டான மேக்கிங். காமெடியாய் சொல்ல முயற்சிக்காமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாய் வந்திருக்குமென்பது என் எண்ணம். வாழ்த்துக்ள் அரவிந்த்.
        @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
        • அடல்ட் கார்னர்
        • What’s the most important question to ask if you want to have safe sex? What time will your husband be home?
        • கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

k.rahman said...

/நாங்க எப்ப கூட்டணின்னு சொன்னோம்?#ஞான தேசிகன். இவரு காங்கிரஸுல என்னவா இருக்காரு. டவுட்டு/

கலைஞர்,காங்கிரஸ், ராகுல் காந்தி, ஞான தேசிகன்ன்னு நீங்க எல்லாரையும் போட்டு பின்னி பெடல் எடுகரத பாக்கும் பொது எனக்கு ஒரு டவுட்டு . நீங்க எப்ப புரட்சி தலைவி அம்மா தங்க தாரகையை பத்தி தைரியமா எழுத போறீங்க ?