Thottal Thodarum

Dec 2, 2013

கொத்து பரோட்டா -02/12/13

தொட்டால் தொடரும்
இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது இந்த வருடமும், தொட்டால் தொடரும் படப்பிடிப்பும்.. இரண்டுமே முடியப் போகிறது. இன்னமும் ஒரிரு வாரங்களில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பித்துவிடும். தொடர் படப்பிடிப்பினால் காலையில் ஷுட்டிங்கிற்கு கிளம்பினால் இரவு வீடு மீண்டும் ஷூட் என்ற நிலையில் நேற்று இரவுதான் சென்னையை ஒரு ரவுண்டு அடித்தேன். இந்த இரண்டு மாதங்களில் தி.நகரில் இரண்டு இடங்களில் சரவணா ஸ்டோர்ஸ்காரர்கள் நகைக்கடையும், பர்னீச்சர் கடையும் ஆரம்பித்திருக்கிறார்கள். நல்லா காலியா இருந்த ஜி.என்.செட்டி சாலையையும் ட்ராபிக் ஆக்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த முனையில சரவணா ஸ்டோர்ஸ், இன்னொரு முனையில போத்தீஸ்னு வந்திருச்சு. உஸ்மான் ரோடு பூராவும் கடைகளாகி அங்கேயும் மூச்சு திணறுது. நடுவுல பேட்டாக்காரன் வேற ஒரு கடை போட்டிருக்கான். எகானமி மோசமா இருக்குன்னு சொல்லிட்டிருக்காங்க.. ஆனா வர்ற கடைகளைப் பார்த்தா அப்படித் தெரியலையே..
@@@@@@@@@@@@@@@@@@



அப்ப புரியலை இப்ப  புரியுது.
நடிகர் சத்யனின் அப்பா மாதம்பட்டி சிவகுமார் எனக்கு நண்பர். ஒரு காலத்தில் வாரத்தில் இரண்டு நாளாவது அவரை சந்தித்து நானும் என் நண்பர் சுரேஷும் இரவு நேரங்களில் சினிமாவைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். மிக சுவாரஸ்யமான தகவல்களை அள்ளிக் கொட்டிக் கொண்டேயிருப்பார். நேற்று திநகரில் நான் கண்ட மாற்றங்களைப் பற்றி நண்பர் செந்திலிடம்  “ஒரு ரெண்டு மாசம் வேலையில இருந்திட்டோம்னா நாம அவுட்டேட் ஆயிடுவோம் போல’ என்று சொன்னேன். சட்டென மாதம்பட்டி சிவகுமார் சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வந்தது.  “எல்லா இயக்குனர்களும் அவர்களின் முதல் படத்தின் போது வெற்றி பெறுவதற்கான காரணம் பெரும்பாலும் அவர்களை சுற்றி நடந்த நிகழ்வுகளை, சம்பவங்களின் தாக்கத்தினால் உருவான கதைகளை அவர்கள் எடுப்பதால்தான். பின்பு மெல்ல அவர்களின் படம் ஹிட்டாக ஆரம்பித்ததும்.. மெல்ல காலாற நடந்து ரோட்டில் அலைவதில்லை. அவனின் பழைய நிலைக்கு மீண்டும் போக முடிவதில்லை. அல்லது போவதில்லை. காரின் கண்ணாடியை ஏற்றிக் கொண்டு அவனுக்கும் வெளி உலகத்திற்குமிடையே திரை போட்டுக் கொண்டு விடுகிறான். அதனால் தான் அவனின் அடுத்த படைப்புகளில் யதார்த்தம் போய்விடுகிறது. அவனின் வீழ்ச்சி ஆரம்பமாகிறது என்றார். எனக்கென்னவோ அன்று அவர் சொன்ன போது கொஞ்சம் ஒத்துக் கொள்ள முடியாத விஷயமாய்த்தான் இருந்தது. இன்று அது நன்றாக உறைத்தது. நான் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய.. நன்றி சார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்

ராஜாவின் இன்னொமொரு க்ளாஸிக் பாடல். ராஜாவின் ரசிகர்களுக்கு கூட அவ்வளவாக ஞாபகமிருக்குமா என்று தெரியவில்லை. அருமையான பாடல். இசையெனும் “ராஜ” வெள்ளம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
2ஆம் தேதி முதல் சென்னையில் 2 மணி நேர மின்வெட்டு.. அட அட அட என்னா ஒரு சிங்க்.. 2-2
  • ரசனை என்பது தனித்துவமானதா? அல்லது பெரும்பாலானவர்களின் விரும்புவதா? #கன்ப்யூசிங்
    • விடியும் முன் படத்தைப் பற்றி நல்ல டாக் இருந்தும்.. ஓப்பனிங் இல்லாத காரணம் பப்ளிசிட்டி. வெளம்பரம் முக்கியம் # அவதானிப்பூஊஊஊ
      • ஒருவனைப் பற்றி ஆயிரம் கருத்துக்கள் இருந்தாலும் ஒரு வெற்றி கருத்துக்களை ஊமையாக்குகிறது.
      • ஒரு குழுவில் நான் தான் எல்லாமே என்று நினைப்பதை விட நானும் ஒருவன் என்று நினைப்பவன் தான் காரியக்காரன்# அவதானிப்பூ
        • பெருசா இருந்தது எல்லாம் சின்னதாகாதான்னு யோசிச்சப்ப இப்ப பெருசாயிட்டிருக்கிறது பார்த்தா உலகம் உருண்டைன்னு புரியுது. செல்போனை சொன்னேன்
        • @@@@@@@@@@@@@@@@@@@@@@@

        • அடல்ட் கார்னர்
        • Why does the law society prohibit sex between lawyers and their clients? To prevent clients from being billed twice for essentially the same service.

    கேபிள் சங்கர்


Post a Comment

4 comments:

'பரிவை' சே.குமார் said...

அண்ணா...
தங்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

யார் தூரிகை பாடல் அருமை...

மொத்தத்தில் கொத்துப் பரோட்டா சுவை.

Ramshe said...

மலையாள சினிமா பாருங்கள் laljoseph என்ற இயக்குனரின் கடந்த பத்து படங்களும் வெற்றி காரணம் அவர்கள் மற்றவர்களின் கதைகளை சிறந்த திரை கதைகளாக மாற்றி சிறந்த முறையில் கலந்தாலோசித்து இயக்குகிறார்கள் ...இங்கே சிறந்த இயக்குனர்கள் கூட இதை செய்வதில்லை

MMESAKKI said...

தொடர்ந்து உங்கள் பிளாக்கை படித்து வருகிறேன். தொட்டால் தொடரும் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அன்புள்ள இசக்கி, நெல்லை.

வெங்கி said...

Shankar

You mentioned that your cameraman for your movie is Amstrong. Can you kindly verify if he is from Chidambaram? I lost a long time friend in that name who is a cameraman as per the last info. Appreciate If you can recreate the friendship bridge.

FYI, I studied in Annamalai Univ. from 1985-1989 and me, Amstrong use to perform in same orchestra ;)

Dr. Venkatesh Raj
venkiee@gmail.com