Thottal Thodarum

Dec 1, 2013

விடியும் முன்

 

ரொம்ப நாளாகிவிட்டது இப்படி ஒர் கிரிப்பிங் திரில்லரைப் பார்த்து.  நான்கு பேர்கள், மூன்று காரணங்கள், இரண்டு பேர், ஒரு நாள் என்ற கேப்ஷனே ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு ட்ரைலர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிக்கையாளர் காட்சி போட்ட தைரியம் வேறு என்னுள் இருந்த ஆர்வத்தை மேலெழுப்ப.. தொட்டால் தொடரும் படப்பிடிப்பு முடிந்தவுடன் நேற்றிரவு கிளம்பிவிட்டேன். 


ரேகா எனும் விலைமாதுவுடன் ஒர் பெரிய இடத்து கஸ்டமருக்கு சின்னப் பெண் தேவையென அனுப்பி வைக்கப் படுகிறாள். ஆனால் அங்கே ஒர் அசம்பாவிதம் நடந்துவிடுகிறது. அதன் தொடர்பாக அங்கிருந்து ரேகாவும், சின்னப் பெண் நந்தினியும் தப்பி ஓடுகிறார்கள். ஒரு பக்கம் பெரிய இடத்து ஆளின் பையன்,  துரைசிங்கம் என்ற ரேகாவின் அங்கிள். ஓவர் ஸ்மார்ட் ஜான் விஜய் ஒரு புறமென நான்கு முனை துரத்தலின் காரணம் என்ன? அவர்கள் தப்பினார்களா? இல்லையா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ரேகாவாக பூஜா. தன் கேரக்டர் உணர்ந்து நடித்திருக்கிறார்.  எங்கேயும் ஓவர் ஆக்டிங்கில்லை. அதுவும் தன் உடன் வரும் சிறுமிக்காக கதறுமிடத்திலும், தொழிலை விட்டுவிட்டு நேர்மையான வாழ்க்கை வாழும் லஷ்மி ராமகிருஷ்ணனிடம் நந்தினியை பாத்துப்பீங்களா என்று கேட்குமிடத்திலும், நந்தினியை குளிப்பாட்டிக் கொண்டே பேசுமிடத்திலும் வாவ்... என்று சொல்ல வைக்கிறார். அதே போல சிறுமி நந்தினியின் பாடி லேங்குவேஜும், டயலாக் டெலிவரியும் கொஞ்சம் ஓவர் என்று தோன்றுவது போல் இருந்தாலும், இத்தனை சிறு வயதில் அவள் கடந்து வந்திருக்கும் பாதை அவளிடமிருந்த குழந்தைத்தன்மையை போக்கியிருக்கும் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.  

கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் பாடல்களை விட, பின்னணியிசை ஹாண்டிங். ஒளிப்பதிவு சிவக்குமார் விஜயன். ஆங்காங்கே வரும் கார் ஷாட்கள், வேக்கம் ப்ரஸ் ஷாட்களில் வித்யாசமான ஆங்கிள்களையும், படம் நெடுக துருத்திக் கொண்டிருக்காத ஒளிப்பதிவு. 

எழுதி இயக்கியவர் பாலாஜி குமார். ஹாலிவுட் படத்தில் வேலை செய்தவர் என்கிறார்கள். அது கதை சொல்லும் த்ரி ஆக்ட் ஸ்டர்க்சரில் நன்றாய் தெரிகிறது.  மிக அழகாய் படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே கதையின் எல்லா கேரக்டர்களையும் வெளிப்படுத்தி, ப்ரச்சனையையும் சொல்லி, க்ளைமேக்ஸுக்கான முடிச்சையும் மிக அழகாய் அவிழ்த்திருக்கிறார். மிக இயல்பான வசனங்கள். க்ரூம்ட் மூட் லைட்டிங். சின்னச் சின்ன கேரக்டர்களை வைத்து ப்ராஸ்டிடியூஷன் தொழிலையும், அதன் பின்னணியையும் சொல்லியிருக்கும் முறை. கொஞ்சம் டீடெயிலிங் செய்திருந்தாலும் ஆபாசமாய் முடிந்துவிடக்கூடிய கதைக்களம்.  மிக ஜாக்கிரதையாய் கையாண்டிருக்கிறார். கதைக்குள் இருக்கும் கேரக்டர்களிடையே இருக்கும் உறவுகளை, அவர்களின் முன் கதைகளை சின்னச் சின்ன வசனங்கள் மூலமாக வைத்த விதம், அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பதைக் கூட நம் யூகத்தின் மூலமாய் பதில் தேடிக் கொள்ள வைத்தது என புத்திசாலித்தனமாய் திரைக்கதை அமைத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் சினிமாத்தனமாய் இருக்கிறது என்று சொல்பவர்களையும், London to Brighton ப்ரிட்டிஷ் படத்தின் தழுவலென்பவர்களை மீறி தமிழ் சினிமாவிற்கு ஒர் நல்ல த்ரில்லரை அளித்திருக்கிறார் இயக்குனர்.
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

arul said...

thanks shankar anna for the review

ramesh said...

Very good film this movie adopt from London to Brighton(2006)

'பரிவை' சே.குமார் said...

விமர்சனங்கள் படத்தைப் பற்றி பெருமையாக சொல்வதால் பார்க்க வேண்டிய படத்தில் வைத்தாகிவிட்டது... இங்கு டவுன்லோட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்... தியேட்டருக்கு பிரபல படங்கள் மட்டுமே வரும்....

உங்கள் விமர்சனம் நன்று...

Unknown said...

Same story line of 'XXX' english movie....

rrmercy said...

another perspective described here -
http://kanavuthirutan.blogspot.in/2013/12/blog-post_5.html