Thottal Thodarum

Dec 9, 2013

கொத்து பரோட்டா - 09/12/13

சாப்பாட்டுக்கடை
சாப்பாட்டுக்கடை புத்தகமாய் வெளிவந்து சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்றார் பதிப்பாளர். பா.ராகவன் படித்துவிட்டு இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமோ என்று ட்விட்டரில் பாராட்டி  சொல்லியிருந்தார். புத்தகத்தை ஆன்லைனின் வாங்க விரும்புவோர் இங்கே அழுத்தவும்
@@@@@@@@@@@@@@@@@@@



மூன்று மாநில ப.ஜ.கவின் வெற்றி காங்கிரஸ் எதிர்பாளர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ப.ஜ.க ஆதரவாளர்களுக்கு அட்ரிலினை ஏற்றியிருக்கிறது. நேற்று சைதையில் முப்பது பேர் பக்கம் சேர்ந்து 5000 வாலாவெல்லாம் வெடித்து கொண்டாடினார்கள். இன்னொரு பக்கம் தி.மு. க ஆதரவாய் இருந்தும் காங்கிரஸை பிடிக்காவிட்டாலும், ப.ஜ.க இந்துத்துவா கட்சி என்ற காரணத்துக்காக காங்கிரஸை ஆதரிக்கும் கும்பல்களுக்கு ஒரே குழப்பமாய் இருக்கிறது. எது எப்படியோ ப.ஜ.கவிற்கு ஏறுமுகமான நேரமாய்த்தான் தெரிகிறது. 
@@@@@@@@@@@@@@@@@@
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி கவனிக்கதக்க வெற்றி. ஆனால் இந்த வெற்றி அவர்களுக்கு ஒர் டெஸ்ட் என்றே சொல்ல வேண்டும். ஆம் ஆத்மியின் எண்ணங்களை பிரதிபலித்ததால்தான் அவர்களுக்கு இந்த வெற்றியை கொடுத்திருக்கிறாரக்ள் டெல்லி மக்கள். வெளியே இருந்து குறை கூறிக் கொண்டிருந்தவர்கள் ஆட்சியின் உள்ளே வந்தவுடன் குட்டையில் ஊறிய மட்டையாய் ஏற்கனவே இருந்த சாக்கடைக்குள் உழல வேண்டிய கட்டாயம் இருக்குமென்பதால் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய காலமிது. அப்போதுதான் ஆம் ஆத்மியின் குரலுக்கு மதிப்பு கிடைக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
கடந்த ரெண்டு வாரமாய் வெளியான தமிழ் படங்கள் எதுவுமே பெரிதாய் சொல்லிக் கொள்ளும் படியாய் அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். என்ன தான் மாய்ந்து மாய்ந்து இண்டெர்நெட்டில் ஆஹாஓஹோ என்று விமர்சனம் வந்தாலும், தியேட்டர் என்னவோ காத்து வாங்கத்தான் செய்கிறது. மக்களைப் பொறுத்தவரை பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு மட்டுமே முதல் மூன்று நாட்கள் கூட்டம் கூடுகிறார்கள். மற்ற படங்களுக்கு பெரியதாய் கூட்டம் வருவதேயில்லை. படம் நன்றாக இருக்கிறது என்று ஏகோபித்த வரவேற்பு இருந்தாலேயன்றி செல்ப் எடுக்க மாட்டேன் என்கிறது. இது ஒரு பக்கம் என்றால் சென்னையில் வீக் எண்ட் ரிசல்டை மட்டுமே வைத்துக் கொண்டு ஹிட் ஹிட் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களின் படங்கள் பெரும்பாலும் சிட்டியைத் தாண்டி ரெண்டாவது ஷோ கூட போவதில்லை என்பது அவர்களுக்கே தெரிவதில்லை. வருஷக்கடைசி நெருங்க நெருங்க.. வரிசையாய் படங்கள் வெளியாகிக் கொண்டேயிருக்கிறது. பார்ப்போம் இந்த வருடக் கடைசி ஒரு ஹிட் படத்தோடு முடிகிறதா என?
@@@@@@@@@@@@@@@@@@@@
தயாரிப்பாளர் கவுன்சிலும், இயக்குனர் கவுன்சிலும், பெஸ்சியும் சேர்ந்து பேசி ஒரு சிறந்த முடிவை எடுத்திருப்பதாய் கேள்வி. இது எந்த அளவிற்கு உண்மையென்று தெரியவில்லை. ஆனால் இது நடந்தால் தமிழ் சினிமாவிற்கு ஒரளவுக்கு நல்லது என்றே தோன்றுகிறது. சின்ன படமோ, பெரிய படமோ.. விளம்பரம் 25 லகரங்களுக்கு மேல் செய்யக்கூடாது என்றும், எந்த சேனல் ப்ரைம் டைமில் சினிமாவிற்கான விளம்பரம் செய்ய அனுமதிக்கிறார்களோ. .அவர்களோடு மட்டுமே டைஅப் என்றும், ஒத்துழைக்காத சேனல்களுக்கு நடிகர் நடிகைகள் பேட்டி, மற்றும் பாடல்கள் ஒளிபரப்ப கட்டணம் என்று ஏகப்பட்ட பாஸிட்டிவ் விஷயங்கள் தயாரிப்பாளர்களுக்கு சாதகமாய் பேசி முடித்திருப்பதாகவும், அதற்கு எல்லா குழுவிலிருந்தும் ஒரிரண்டு பேரை தெரிவு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இது நடந்தா.. குமுதா ஹேப்பியோ இல்லையோ... தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் ஹேப்பியாவாரக்ள் என்று தோன்றுகிறது பார்ப்போம்..
@@@@@@@@@@@@@@@@@@@@
தொட்டால் தொடரும்
இன்னும் ஒர் பாடல் காட்சியும், ஒர் ஆக்‌ஷன் ப்ளாக்கும் மட்டுமேதான் பாக்கியிருக்கிறது. எடுத்தவரை எடிட் செய்து பார்த்ததில் தயாரிப்பாளர் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறார். வருகிற வாரம் முதல் மீதமிருக்கும் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. 
@@@@@@@@@@@@@@@@@@
வலைப்பூக்கள்
இன்னும் கொஞ்ச வருடங்களில் வலைப்பூக்கள் இருக்குமா? என்ற சந்தேகம் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. ஏனென்றால் வலைத்தளங்களில் எழுதுவதற்கு பதிலாய் ஃபேஸ்புக், கூகுள் +, ட்விட்டர் போன்ற தளங்களில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்து அதில் முக்கியத்துவம் பெற்றவர்களாகவும் ஆக முடியும் என்பது நிருபணமாகிக் கொண்டிருக்கும் வேலையில் அகஸ்மாத்தாய் தமிழ்மண தளத்தில் சென்ற போது அதில் தினமும் எழுதப்படும் பதிவுகள் வெறும் 175 பதிவுகள் மட்டுமே என்ற தெரியவருவதை பார்த்த பிறகு நான் நினைத்தது உண்மைத்தான் என்று தோன்றுகிறது. ம்ஹும்.. பார்போம் இன்னும் எத்தனை நாளைக்கென்று..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
சந்தமாமா என்கிற தெலுங்கு படத்திலிருந்து இந்த பாடல். பாடல் முழுக்க முத்தம் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள். இபப்டம் தமிழில் அ..ஆ..இ..ஈ என்று தமிழில் எடுத்தார்கள் ஒன்றும் வேலைக்காகவில்லை. பட் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். ம்ஹும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
தோத்தாலும் தமிழ் நாட்டு மக்கள் கவனம் பூராவும் என் பக்கம் இழுத்திட்டேனில்லை.. ஆழ்ந்த அனுதாபங்கள் மக்களுக்கு#விஜய்காந்த்
  • பெட்டு மேல பூ போட்டு அதுல படுத்தா அது பர்ஸ்ட் நைட். நம்மள படுக்க வைத்து நம்ம மேல பூ போட்டா.. அது லாஸ்ட் நைட்டுஉன் போக்கில் போ, நீ நினைத்ததை பேசு அப்புறாம் உலகம் சொல்லும் அவன் யார் பேச்சையும் கேட்க மாட்டான் தறுதலைன்னு.. # அவதானிப்பூஊஊஊ

  • ஒவ்வொருனுடய முதல் பீர் அவன் காசில் வாங்கியதல்ல.#அவதானிப்பூஊஊஊ

  • எல்லா போலீஸ்காரர்களிடமும் ஒர் கதையிருக்கிறது.# அவதானிப்பூஊஊஊ
    • காங்கிரஸின் தோல்வி பாராளுமன்ற தேர்தலை பாதிக்காது.நாராயணசாமி # ஆமா பதினைஞ்சு நாள்ல மாறிரும்
      • தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு பின்னடைவுதான். கலைஞர் # யாருக்கும் தெரியாத விஷயம்தான்.
    • @@@@@@@@@@@@@@@@@@@@@
  • அடல்ட் கார்னர்

  • Q. What's the difference between a new husband and a new dog. A. After a year, the dog is still excited to see you
  • கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

குரங்குபெடல் said...

"கடந்த ரெண்டு வாரமாய் வெளியான தமிழ் படங்கள் எதுவுமே பெரிதாய் சொல்லிக் கொள்ளும் படியாய் அமையவில்லை என்றே சொல்ல வேண்டும் "

ஈகோ பாராமல் ஒத்துக்கொண்ட நீங்கள்


ரொம்ப நல்லவர் அண்ணே . . .

MMESAKKI said...

உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன். தொட்டால் தொடரும் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி மு.இசக்கி, நெல்லை.

Unknown said...

பதிவு அருமை...

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் பரோட்டா அருமை...